Search This Blog

Feb 20, 2011

உதயமான விடியலை எவராலும் பின்னோக்கி இழுக்கவியலாது – தஹ்ரீர் சதுக்கத்தில் டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி



20/02/2011
சர்வதேச இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும் உலகின் பிரபல முஸ்லிம் அறிஞருமான டாக்டர் யூசுஃப் அல்கர்தாவி நேற்று கெய்ரோ தஹ்ரீர் சதுக்கத்தில் 30 லட்சம்பேர் பங்கேற்ற ஜும்ஆ தொழுகையில் பங்கேற்று உரைநிகழ்த்தினார்.
டாக்டர் கர்தாவி எகிப்து நாட்டைச் சார்ந்த மார்க்க அறிஞராவார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், இஸ்லாத்தின் எதிரிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுப்பவர்.
கடந்த 1981 ஆம் ஆண்டு எகிப்தை விட்டு வெளியேறிய அவர் கத்தர் நாட்டில் வசித்துவருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி எகிப்தில் மக்கள் எழுச்சிப் போராட்டம் உருவானது. இப்போராட்டம் துவங்கிய நாளிலிருந்தே தொடர்ந்து ஜும்ஆ உரைகளில் ஹுஸ்னி முபாரக்கின் கொடுங்கோல் ஆட்சிக்கெதிராக குரல் எழுப்பி வந்தார் கர்தாவி. மேலும் எகிப்திய மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனையும் நடத்தினார்.
எகிப்தில் ஹுஸ்னி முபாரக் ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) வெற்றித்தினமாக கொண்டாடினர். இதனையொட்டி தஹ்ரீர் சதுக்கத்தில் நடந்த ஜும்ஆ தொழுகையில் பங்கேற்க 30 ஆண்டுகளுக்கு பிறகு கர்தாவி எகிப்து மண்ணில் காலடி எடுத்துவைத்தார். ஜும்ஆ தொழுகையில் 30 லட்சம் பேர் கலந்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கர்தாவி கடைசியாக 1981.ஆம் ஆண்டு கெய்ரோ அதிபர் மாளிகைக்கு வெளியே ஆபிதீன் மைதானத்தில் நடந்த தியாகப் பெருநாளில் ஜும்ஆ உரையை நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்தாவி நேற்று ஜும்ஆ குத்பாவில் கூறியதாவது: “அரபுலக ஆட்சியாளர்கள் தங்களது குடிமக்களின் கோரிக்கைகளை கேட்க தயாராகவேண்டும். மக்களுக்கு எதிராக செயல்படுவதல்ல. மாறாக அவர்களுடன் ஆரோக்கியமான பேச்சுவார்த்தையை நடத்த தயாராக வேண்டும். வெற்றுப் பேச்சுவார்த்தைகள் தேவையில்லை.
உதயமாகும் விடியலை எவராலும் பின்னோக்கி இழுக்கவியலாது, உலகம் மாறிவருகிறது. உலகம் முன்னேறுகிறது. அரபுலகிலும் மாற்றம் உருவாகிவிட்டது. (The world has changed, the world has progressed, and the Arab world has changed within) பதவி விலகிய ஹுஸ்னி முபாரக்கின் ஆதரவாளர்கள்தாம் தற்போது அதிகாரத்தில் தொடர்கின்றனர். ராணுவ ஆட்சி அல்ல. மக்கள் ஆட்சிதான் எகிப்தில் வரவேண்டும். அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டும். காஸ்ஸாவிற்கான ரஃபா எல்லை திறக்கப்பட வேண்டும். எகிப்தின் உண்மையான புரட்சியில் முஸ்லிம்கள் மட்டுமல்ல. கிறிஸ்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.
வரலாற்றில் நடந்தேறிய ருமேனிய, சிலுவை போர்களில் கிறிஸ்தவர்கள் நடத்திய தாக்குதலில் முஸ்லிம்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளார்கள். ஆனால், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் பரஸ்பரம் ஒத்துழைத்துள்ளனர். இந்த வெற்றிக்காக எல்லா மத நம்பிக்கையாளர்களும் இறைவனுக்கு சாஷ்டாங்கம் செய்து நன்றித் தெரிவிக்கவேண்டும்.
சாஷ்டாங்கம் (ஸுஜூது) எல்லா மதத்திலும் அங்கீகரிக்கப்பட்ட வழிபாடுதான். உலக முழுமைக்கும் எகிப்திய புரட்சி பாடமாகவும், உத்வேகமளிப்பதாகவும் அமைந்துள்ளது.
அநீதிக்கும், மோசடிக்கும், ஏகாதிபத்தியத்திற்குமெதிரான வெற்றி இது. ஒரே லட்சியத்திற்காக எகிப்திய மக்கள் வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட்டது முன்மாதிரியாகும். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் ஐக்கியத்தின் காட்சி தஹ்ரீர் சதுக்கத்தில் அரங்கேறியது. இந்த ஐக்கியமும், ஒத்துழைப்பும் தொடர்ந்து நிலைபெறவேண்டும்.
முதலில் மக்கள் எழுச்சியை மோசமாக விமர்சித்துவிட்டு பின்னர் வேறுவழியில்லாமல் போராட்டத்தில் கலந்துகொண்ட கபட எண்ணங் கொண்டோரைக் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
14 நூற்றாண்டுகளாக இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் தத்துவத்தின் மையமாக விளங்கிய எகிப்து தனது பாரம்பரியத்தை மீட்டெடுக்கும். ‘ஜனவரி 25′ புரட்சிக்கு உயிர்தியாகிகளை அர்ப்பணித்த தஹ்ரீர் சதுக்கத்திற்கு ‘உயிர் தியாகிகளின் சதுக்கம்’ எனப் பெயரிட வேண்டும் என விரும்புகிறேன்.
காஸ்ஸாவிற்கான ரஃபா எல்லையை ராணுவம் திறந்துவிட வேண்டும். எகிப்து ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்றதுபோல் ஃபலஸ்தீனின் குத்ஸ் விடுதலையடைந்து அல் அக்ஸா மஸ்ஜிதில் இன்ஷா அல்லாஹ் தொழுகை நடத்தவும், ஜும்ஆ உரை நிகழ்த்தவும் எனக்கு ஆர்வமாக உள்ளது.
புரட்சி முழுமையாக வெற்றிப்பெறும் வரை அனைவரும் பொறுமையோடு உறுதியாக நிற்கவேண்டும்.” இவ்வாறு கர்தாவி உரை நிகழ்த்தினார்.
கர்தாவி முன்னதாக இளைஞர்களை வாழ்த்தியவாறு தனது உரையை துவக்கினார். அவரது உரையை தஹ்ரீர் சதுக்கத்தில் ஜும்ஆ தொழுகையில் கலந்துகொண்ட 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆரவாரத்துடனும், தேசிய கொடியை வீசியும் ஆதரித்தனர்.
கர்தாவியின் உரையை எகிப்திய மக்கள் மிக்க கவனத்தோடு கேட்டனர். எகிப்திய தேசிய தொலைக்காட்சி சேனல் உள்பட ஏராளமான அரபு தொலைக்காட்சிகள் கர்தாவியின் ஜும்ஆ உரை மற்றும் தொழுகையை நேரடியாக ஒளிபரப்பின.

Feb 18, 2011

எகிப்தின் இஃவானுல் முஸ்லிமீன்!! இமாம் ஹஸனுல் பன்னாஹ் (ரஹ்…) !! ஒரு வரலாற்று பார்வை!!



எகிப்தில் இஃவானுல் முஸ்லிமீன் என்ற லட்சிய இயக்கத்தை தோற்றுவித்த இமாம் ஹஸனுல் பன்னாஹ் (ரஹ்…) அவர்கள், 12 பிப்ரவரி 1949, சனிக்கிழமை இரவு 8.00, அன்று ஷஹீதாக்கப்பட்டு நேற்றுடன் 63-வது வருடம் நிறைவுறுகிறது. எகிப்தில் தற்போது ஏற்பட்டுள்ள சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் புரட்சியில் இஃவான்களின் பங்கு முக்கியத்துவமானதாகும். நபியவர்கள் கூறினார்கள்; அல்லாஹுத்தாலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த மார்க்கத்தை புனர் நிர்மாணம் செய்கின்ற ஒருவரை அனுப்பி வைக்கிறான்"(அபூதாவூத்)

புனர் நிர்மாணம் என்றால் என்ன? என்பதற்கு ஆரம்பகால அறிஞர்கள் விளக்கம் தருகின்ற போது, மார்க்கத்தில் புதிதாக நுழைந்த நூதனங்கள் அகற்றப்படுதல், மார்ர்க்கத்தில் மறக்கப்பட்ட அல்லது இல்லாது செய்யப்பட்டவற்றை மீண்டும் கொண்டு வருதல் போன்ற விளக்கங்களை அளித்துள்ளனர்.(பத்ஹுல் பாரி). அது போன்றே நவீன கால அறிஞர்கள் இதர்கு விளக்கம் அளிக்கின்ற போது, மார்க்கத்தை குறித்து காலத்தின் பண்புகளுக்கு ஏற்ப விளங்கி நடைமுறைப்படுத்தல் என்றனர்.

இப்பொழுது புனர்நிர்மாணம் ஒன்று அவசியப்படுகிறது. அதன் இலக்கு என்ன? நபியவர்களது அதே இலக்குதான் அதனுடைய இலக்காகவும் இருக்கும். அதிகாரத்துடன் தலைமையை வழங்க இங்கும் ஒரு கிலாபத் அவசியப்படுகிறது. 1928ம் ஆண்டு மார்ச் மாதம், நபியவர்களது அதே இலக்குடன் அதே வழிமுறையுடன்; காலத்திற்குரிய இயல்புடனும் பாஷையுடனும் ஒரு புனர்நிர்மாணப் பணி ஆரம்பிக்கின்றது. நபியவர்கள் தனது முதல் பணியை ஆரம்பித்தபோது, எவ்வாறு விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் அதுவும் பெரிய சமூக அந்தஸ்தற்ற மனிதர்களுடன் ஆரம்பித்தார்களோ அதேபோன்று, சில மனிதர்களுடன் பெரிய சமூக அந்தஸ்தற்ற மனிதர்களுடன் அந்தப்புனர் நிர்மாணப்பணி ஆரம்பிக்கின்றது. அதுதான் இன்று பரந்து விரிந்து உலகின் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் அல் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கமாகும்.

இந்த இயக்கம் ஸூஹைபுர்ரூமி போன்ற பிலால் போன்ற சமூக அந்தஸ்தற்ற ஆறு நபர்களுடன்தான் ஆரம்பித்திருக்கிறது. இமாம் ஹஸனுல் பன்னாவின் உரைகளினால் கவரப்பெற்ற இவர்கள் இமாமவர்களின் வீட்டுக்கு வந்து நீங்கள் குறிப்பிடுவதுப் போன்று பலப் பிரச்சனைகளைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகள் தீர என்ன வழி? நாங்கள் அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் என்னச் செய்வது என்பதுதான் தெரியாமல் இருக்கிறது. நீங்கள் எங்களுக்கு வழிக்காட்டுகிறீர்களா? என்றுக் கேட்டார்கள். அவர்களது உணர்வுகளால் கவரப்பட்ட இமாமவர்கள் அவர்களுக்கு வழிக்காட்டும் பணியை ஆரம்பித்தார்கள். அன்றே அவர்கள் தமக்கு வைத்துக்கொண்ட பெயர்தான் அல் இஃவானுல் முஸ்லிமூன் என்பது.

இந்த நிகழ்வு 1928ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வுகள் நடந்து முடிந்து 79 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்று சுமார் 90 நாடுகளில் இந்த தாஃவக் காணப்படுகிறது. இன்னும் 21 வருடங்களில் 2028 ஆகின்றபோது இந்த புனர்நிர்மாணப் பணி அதன் உச்சத்தை அடைந்திருக்க வேண்டும். அதாவது முழு மனித சமுதாயத்திற்கும் வழிக்காட்டுகின்ற, அதற்குத் தலைமையை வழங்குகின்ற இடத்திற்கு இஸ்லாம் வந்து சேர்ந்திருக்கும்.

இன்னும் 21 வருடங்களில் இது சாத்தியப்படுமா? இன்ஷா அல்லாஹ் நிச்சயம் சாத்தியப்படப் போகிறது. அல்லாஹ்த்தாஅலா அல்குர் ஆனில் கூறுவதைக் கேளுங்கள்: "அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்."( அல்குர் ஆன்2:261)

இஸ்லாமிய தாஃவா என்பது, அதனது ஒரு முயற்சி எழு நூறு மடங்கு பரகத் பொருந்தியது. எழு நூறு மடங்கு விளைவைத் தரக்கூடியது. இதுதான் மேற்கூறிய வசனத்தின் பொருள். சுமார் 90 நாடுகளில் பரவியுள்ள இந்த தஃவாவின் மொத்த அங்கத்தவர்களை எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தால் எத்தனை பேர் இருப்பார்கள்? அவர்கள் ஒவ்வொருவரும் இந்த தாவாவுக்காக செலவுச் செய்யும் நாணயங்களை எழு நூறு மடங்கால் அதிகரித்துப் பார்த்தால் எவ்வளவு தொகை காணப்படப்போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக எவ்வளவு தொகை காணப்படப் போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தோம் எனின், இஸ்லாமிய கிலாபத் தோன்றுவதும் உலகிற்கு தலைமையை வழங்கும் சக்தியாக மாறுவதும் அசாத்தியமான ஒன்றாகத் தோன்றவில்லை.

எவ்வளவு தொகை காணப்படப் போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தோம் எனின், இஸ்லாமிய கிலாபத் தோன்றுவதும் உலகிற்கு தலைமையை வழங்கும் சக்தியாக மாறுவதும் அசாத்தியமான ஒன்றாகத் தோன்றவில்லை. எனவே இன்னும் இருபத்தியொரு வருடங்களில் 2028ம் ஆண்டில் உலகிற்கு வழிகாட்டும் சக்தியாக, தலைமையை வழங்கும் சக்தியாக இஸ்லாம் தான் இருக்கப்போகிறது. அதற்கான பணி பலமாகவும் வேகமாகவும் முன்னெடுக்கப்படுகிறது. அன்றைய நாள் அந்த அதிசயத்தை கண்களால் காணும் பாக்கியத்தை அல்லாஹ் எங்களுக்கும் தரவேண்டும் என பிரார்த்திப்போம்.

நன்றி:மீள்ப்பார்வை

Feb 13, 2011

ஆஜன்டீனா ஹிஜாப் உடை அனுமதி சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது



ஆஜன்டீனா முஸ்லிம் பெண்கள ஆஜன்டீனாவின் எந்த பொது இடங்களும்  இஸ்லாமிய உடையுடன் நடமாட அனுமதிக்கும் சட்டம் ஒன்றைநடைமுறை படுத்தியுள்ளது இந்த சட்டத்தின் மூலம் பெண்கள்  ஆஜன்டீனா நாட்டின் கடவு சீட்டு, தேசிய அடையாள அட்டை போன்ற அனைத்து ஆவணங்களிலும்  இஸ்லாமிய உடைகளில் தோன்றவும் அனுமதி வழங்கியுள்ளது
ஆஜன்டீனா ௨ வீதமான முஸ்லிம்கள் உள்ளனர் தொகையில் இவர்கள் ௮ இட்ச்சம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன அங்கு பல நகரங்களிலும் மஸ்ஜிதுகள் அமைக்கப்பட்டுள்ளது என்பதுடன் ௧௯௯௬ ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்ட அதிநவீன மஸ்ஜித் ஒன்றுக்கான காணி அந்த நாட்டின் ஜனாதிபதியால் வழங்கபட்டது என்பது அந்த மஸ்ஜித் ஒரு நூலகம் , இரண்டு பாடசாலை விளையாட்டு , பார்க் என்பனவற்றையும் கொண்டு முழுமையான இஸ்லாமிய முறையில் அமைக்கபட்டுள்ளது குறிபிடத்தக்கது 

தடைகளையும் மீறி டாக்டார் சாகிர் நாயிக் ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்றினார்


சர்வதேசரீதியாக  ஜனரஞ்சகமாக மதங்களுகிடையிலான உறவு மற்றும் ஒப்பீட்டு ஆய்வுகள் மூலம் பிரபல்யமான பேச்சாளரான டாக்டார் சாகிர் நாயிக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கடந்த வருடம் ஜூன் மாதம் தடை விதித்தது  இந்த தடை நேரடியாக பிரிட்டிஷ் ‘ஹோம்’ செயலாளர் தெரஸாவினால் விதிக்கப்பட்டது        இதை தொடர்ந்து அந்த  தடையை சட்டரீதியாக எதிர்கொள்ள  சாகிர் நாயிக் பிரிட்டனில் மிக  சிறந்த சட்ட ஆலோசகர்கள் , மற்றும் சட்டத்தரணிகள் மூலம்  நுழைவு தடையை நீக்க தேவையான நடவடிகளைகளை மேற்கொண்டுவருகின்றார்.
இந்த நிலையில் நேற்று வெள்ளிகிழமை சாகிர்  நாயிக்  ஒக்ஸ்போட் பல்கலை கழகத்தின்  ஒக்ஸ்போட் யூனியன் சட்டலைட் மூலம்   ஏற்பாடு செய்யதிருந்த கேள்வி பதில் நிகழ்வில் கலந்து கொண்டு பல்கலை கழக சமூகத்தினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் இதன்போது ஒக்ஸ்போட் பல்கலை கழகத்தின்  ஒக்ஸ்போட் யூனியன் தலைவருக்கு தனது நன்றிகளை தெரிவித்த    Dr. சாக்கிர் நாயிக்  தனது  பிரிட்டிஷ் நுழைவு தடை நீக்கப் பட்டதும் நேரடியாக வந்து சந்திபதாகவும் தெரிவித்தார் 


Feb 5, 2011

ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் “Day of Departure” என்ற ஆர்பாட்டம் தொடங்கியுள்ளது



ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் எகிப்தில் “Day of Departure”. என்று அழைக்கபடும் ஆர்ப்பாட்டம் பல இலட்சம் மக்களுடன்தொடங்கியுள்ளது இன்று முபாரக் அதிகாரத்தை விட்டும் அகற்றப்படும் நாள் என ஆர்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் நம்புவதாக அங்கிருக்கும் சர்வதேச செய்தியாளர்கள் தெரிவிகின்றனர்
முபாரக் அரசுக்கு ஆதரவாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை எந்த பகுதிலும் காணவில்லை என்று எகிப்திய செய்திகள் தெரிவிக்கின்றன அதேவேளை நான் எகிப்தின் மண்ணில்தான் மரணிப்பேன் நான் நாட்டைவிட்டும் ஓடமாட்டேன் நான் ௬௨ ஆண்டுகள் சமூகசேவையில் ஈடுபட்டுள்ளேன் எனக்கு இப்போது வெறுப்பு ஏற்பட்டுள்ளது நான் இன்று பதவி துறப்பேன் ஆனால் பெரும் கலவர் ஏற்பட்டுவிடும் விரிவாக 
ஒபாமா ஒரு சிறந்த மனிதர் ஆனால் அவருக்கு எகிப்தின் இயல்பு தெரியாது நான் பதவி நீங்கினால் இஸ்லாமிய வாதிகள் -இஹ்வானுல் முஸ்லிமீன்- அதிகாரத்தை பிடித்து விடுவார்கள் என்று ABC செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார் ஆனால் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு தாம் மறு சீரமைபையும் யாப்பு ரீதியான கவ்ரவமான உரிமைகளையும் கோருவதாகவும் அதிகாரத்தை எதிர்பார்க்க வில்லை என்றும் தாம் ஜாதிபதிக்கான தேர்தலிலும் பங்குகொள்ள போவதில்லை என்றும் அறிவித்துள்ளது
அதேவேளை சற்று முன்னர் எகிப்து அல் ஜஸீரா தலமையத்துக்குல் புகுந்த கும்பல் ஒன்று அதன் உபகரணங்களை அடித்து உடைத்துள்ளது


ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்




இலங்கைவாழ் மக்கள் அனைவரும் 63வது தேசிய சுதந்திர தினத்தை பெருமதிப்புடன் நினைவுகூரும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.  இலங்கைத் தீவின் சுதந்திரத்திற்காகவும் விடுதலைக்காகவும் செய்யப்பட்ட எல்லையற்ற அர்ப்பணங்கள் இன்றைய சுதந்திர தினக் கொண்டாட்டங்களை மிகுந்த பெருமைக்குரியதாக ஆக்கியுள்ளது.
இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மிகப் பெரும் தியாகங்களைச் செய்து வெற்றி கொண்ட சுதந்திரத்தை அர்த்தமிக்கதாக ஆக்க வேண்டும் என்பதே இன்று முழு தேசத்தினதும் அபிலாஷையாகும் விரிவாக
இனம், கட்சி அல்லது சமயம் என்ற எந்த வேறுபாடுகளுமின்றி மக்களின் கவலையைப் போக்கி மனநிறைவை அதிகரிப்பதற்காகவே சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதாக சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் அமரர் டி. எஸ். சேனாநாயக்க அன்று தேசத்தைப் பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார்.
இதுவே சுதந்திரத்தை எதிர்பார்க்கும் எந்தவொரு தேசத்தினதும் நோக்கமாகும். அந்த நோக்கத்தை அடைந்து கொள்ள வேண்டுமானால் தேசத்தைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டங்களைத் துரிதப்படுத்த வேண்டும். அபிவிருத்தியை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு எட்டும் சுதந்திரத்தை நோக்கி எடுத்து வைக்கப்படும் எட்டுக்களாகும் என்ற வகையில் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக ஆக்குகின்ற பயணம் மென்மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
மிகபெரும் சுதந்திரத்தை நோக்கிய இந்தப் பயணத்தில் கடந்த கால, நிகழ்கால தவறுகளை நாம் சரிசெய்து கொள்ள வேண்டும்.
பிரிவினைகளினூடாக நாம் எந்த வெற்றியையும் பெற்றதில்லை. பிரிவினை எம். எல்லோருடைய சுதந்திரத்தையும் பறித்துவிடக் கூடியதாகும்.
னவே ஐக்கிய இலங்கை தேசமொன்றைக் கட்டியெழுப்புவதே சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் அதனை அர்த்தம் நிறைந்ததாக ஆக்கவும் உள்ள சிறந்த வழியாகும். நாட்டைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் நாம் செய்த அர்ப்பணத்தைகப் போன்றே ஐக்கிய தேசமொன்றைக் கட்டியெழுப்பு வதிலும் நாம் ஒன்றுபட்டு அர்ப்பணத்துடன் செயற்பட வேண்டியுள்ளது.
நாம் ஒரு மேன்மைமிக்க வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களாவோம். அந்த வரலாறு சுதந்திரத்திற்காக மிகப்பெரும் அர்ப்பணங்க ளைச் செய்த வீரர்களால் நிரம்பியுள்ளது.
இந்த எல்லா தேசப்பற்றாளர்களுக்கும் நான் இச்சந்தர்ப்பத்தில் எனது கெளரவத்தை சமர்ப்பிக்கின்றேன்.- தினகரன்

முபாரக்கை அமெரிக்கா ஆதரிக்கக் கூடாது - இஃவானுல் முஸ்லிமீன் கோரிக்கை


எகிப்து நாட்டு மக்களுக்கு தேவையில்லாத முபாரக்கை அமெரிக்கா ஆதரிக்கக் கூடாது என எகிப்து நாட்டின் முக்கிய எதிர் கட்சியான இஃவானுல் முஸ்லிமீன் வலியுறுத்தியுள்ளது.

எகிப்திய மக்களைத்தான் அமெரிக்கா ஆதரிக்க வேண்டும். சிவிலியன்களை அடக்கி ஒடுக்கி கொலைச்செய்த அரசுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ளாத ஐ.நாவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது இவ்வமைப்பு.

புதிய அரசை உருவாக்குவதற்கு முஹம்மது அல்பராதி போன்ற எந்த சுதந்திர வேட்பாளர்களையும் ஆதரிக்க தயார் எனவும் இஃவானுல் முஸ்லிமீன் அறிவித்துள்ளது.


செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

المشاركات الشائعة