Search This Blog

Mar 1, 2011

இஹ்வானுல் முஸ்லிமீன் எகிப்திய அரசாங்கத்தில் பங்குகொள்வதை எதிர்ப்போம் : இஸ்ரேல்




அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் எழுச்சி தொடர்பில் இஸ்ரேல் மிகுந்த கவலையும் அச்சமும் கொண்டுள்ளது அதன் காரணமாக அதன் சதி நாசகார திட்டங்களில் தீவிரமாக இயங்கிவருகின்றது மொசாத் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருவதுடன் அதன் முக்கிய அதிகாரிகளுக்கான விடுமுறைகளை இரத்து செய்துள்ளது எகிப்தில் முபாரக் நீக்கப்பட்டதும் இஹ்வானுல் முஸ்லிமீன் பிராந்தியத்தில் சக்திமிக்க அரசியல் சக்தியாக பிராந்திய அரசியலில் இடம்பெறபோவது இஸ்ரேலின் தூக்கத்தை கலைத்து வருகின்றது
எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் ஒரு அரசியல் கட்சியாக  அரசாங்கத்தில் பங்குகொள்ளவுள்ளது தொடர்பாக கருத்துரைத்துள்ள இஸ்ரேலின் துணை வெளிநாட்டு அமைச்சர் டன்னி அய்லோன் எகிப்தில் அமையபோகும் எதிர்கால அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இஹ்வானுல் முஸ்லிமீன் இருப்பதை இஸ்ரேல எதிர்க்கும் என்றும் எகிப்தின் எந்தவொரு தேர்தலிலும் இஹ்வானுல் முஸ்லிமீன் பங்குகொள்ளவதை தடை செய்ய இஸ்ரேல வேலைசெய்யும் என்றும் தெரிவித்துள்ளார் விரிவாக
தற்போது எகிப்தை நிர்வகிக்கும் இராணுவ நிர்வாகம் எகிப்தின் யாப்பை திருத்த நியமிக்கப்பட்டுள்ள 10 பேர் கொண்ட குழுவில் இஹ்வானுல் முஸ்லிமீன் பிரதிநிதி ஒருவரையும் நியமித்துள்ளதுடன்   நீதிக்கும் சுதந்திரதுக்குமாகான கட்சி   “Freedom and Justice party ”  என்ற அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளது  குறிபிடத்தக்கது

லிபியாவின் நிலை மோசமடைகின்றது அமெரிக்க துருப்புகள் லிபியாவுக்கு அண்மையில் நிறுத்தபட்டுள்ளது




லிபியாவின் மேற்கு ஆயுத மோதல்கள் இடம்பெற்று வருவதாக் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன கடாபி லிபிய தலைநகரானதிர்போலியில் கடாபிக்கு விசுவாசமான இராணுவமும் நிலை கொண்டுள்ளது அதேவேளை கிழக்கு பகுதியில் பல ஆயுத கிடங்குகள் விமானம் மூலம் தாக்கப்பட்டுள்ளது , மேற்கு பகுதியான அஸ் சவியாஹ் என்ற திரிபோலிக்கு 50 கீ.மீ தூரத்திலுள்ள பிரதேசத்திலும் மிஸ்ரதா என்ற  திரிபோலிக்கு 200 கீ.மீ தூரத்திலுள்ள பிரதேசத்திலும்  கடாபிக்கு விசுவாசமான படைகளின் விமான தாக்குதல்கள் இடம்பெறுள்ளதுடன் துப்பாக்கி மோதலும் இடம்பெற்று வருகின்றது கடாபி தொடராக பல நகரங்களை இழந்தபோதும் திர்போலியை சூழவுள்ள பிரதேசங்களை தற்போதும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுள்ளதாக வேறு செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது ஏற்பட்டுவரும் கள மாற்றங்கள் பாரிய மோதல் ஒன்றுக்கு வழிசமைக்கும் என்று லிபிய மக்கள் தெரிவித்துள்ளனர் கடாபி சர்வதேச செய்தி ஊடகமான CBS க்கு வழங்கியுள்ள நேர்காணலில் கடாபியை மக்கள் விரும்புவதாகவும் தான் பதவி விலகபோவதில்லை என்றும் தனக்காக மக்கள் மரணிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் விரிவாக
உங்களை விரும்பும் மக்கள் ஏன் கிளர்ச்சியில் ஈடுபடுகின்றனர் என்று கேட்கப்பட்டபோது அது அல் காயிதா,  அது அல் காயிதா- அல் கைதா – வின் வேலை அது மக்களல்ல என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கடை படை யுத்த கப்பல்கள் , மற்றும் விமானபடையின் விமானங்கள லிபியாவுக்கு அண்மையில் கொண்டு நிறுத்தபட்டுள்ளது அதேவேளை பிரிட்டன் உட்பட மேற்கு நாடுகள் கடாபியின் கையை விட்டு நழுவிய பகுதிகளுக்கு உதவிகளை விமானங்கள் மூலம் அனுப்பதயாராகிவருகின்றனவாம் ஏற்கனவே பிரான்ஸ் பென்காசியில் இரண்டு விமானங்களை மருத்துவ மற்றும் அவரச உதவிகளுடன் தரையிரக்கியுள்ளது, அமெரிக்க ஜனாதிபதி மற்றும்  வெளிநாட்டு  செயலாளர் கிலாரி  கிளிங்டன் கடாபி உடனடியாக பதவி விலகவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்துரைத்துள்ள அமெரிக்கா பாதுகாப்பு பெண்டகன் அதிகாரி அமெரிக்க துருப்புகள் லிபியாவுக்கு அண்மையில் நகரத்தப்பட்டுள்ளதாகவும் அதேவேளை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகத்தில் லிபியாவுக்கான திட்டம் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார் இதேவேளை சர்வதேச இஸ்லாமிய இயக்கங்களான இஹ்வானுல் முஸ்லிமீன், ஹிஸ்புத் தஹ்ரீர் ஆகியன மேற்கு நாடுகளின் தலையிட்டை எதிர்த்து வருகின்றது மேற்கு நாடுகள் தலையிட்டால் லிபியாவின் நிலை மேலும் மோசமடையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் மேற்குலகம் லிபியாவில் எந்த மாதிரியை கையாளும் ஆப்கான்மாதிரியா ? அல்லது துனூசியா மற்றும் எகிப்தின் மாதிரியா ?


முபாரக் எகிப்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது !



எகிப்தின் முன்னாள் ஜனாதிபதியும் சர்வாதிகாரியுமான ஹுஸ்னி முபாரக் மற்றும் அவரின் மனைவி ,பிள்ளைகள் பிள்ளைகளின் மனைவியர் ஆகியோருக்கு எகிப்தை விட்டு வெளியேற எகிப்தின் சட்டமா அதிபர் தடை விதித்துள்ளார் கடந்த 21 ஆம் திகதி இவர்களின் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்குமாறு வெளிநாடுகளுக்கு வேண்டுகோள் விட்டுக்கப்பட்டமை குறிபிடத்தக்கது முபாரக் எகிப்திலும் வெளிநாடுகளும் பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான சொத்துகள் மற்றும் பணம் என்பன வற்றை கொண்டுள்ளதாக அறிவிக்கபடுகின்றது
இந்த பிரயாண தடை தொடர்பாக கருத்துதெரிவித்துள்ள சில முபாரக் மீதான இந்த தடை காலம் கடந்த நிலையில் வந்துள்ளது என்றும் முபாரக் தனது பெறுமதியான சொத்துக்கள் பலவற்றை சவுதிக்கு, இஸ்ரேலுக்கும் அனுப்பிவிட்டார் என்று தெரிவித்துள்ளனர் எனினும் இந்த பிரயாண தடை அறிவிப்பு முக்கியத்துவம் பாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது


அரபு முஸ்லிம் பிராந்தியத்தில் மக்கள் எழுச்சியின் ஊக்க சக்தி இஸ்லாம்தான்


M.ரிஸ்னி முஹம்மட்
 இன்று  அரபு முஸ்லிம் பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் மக்கள் எழுச்சியை பலரும் தமக்கு சாதகமாக சித்தரித்து வருகின்றனர் மேற்கு நாடுகளின் பிரதான மிடியாக்கள் நடைபெறும் மக்கள் எழுச்சிக்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சித்தரிக்கினறது.
மேற்கு நாடுகளின் பிரதான மீடியாக்களும் மற்றும் வேறு பல மீடியாக்களும் அரபு முஸ்லிம் நாடுகளில் மக்கள் எழுச்சி அடக்குமுறைகளுக்கு எதிரானதும் முற்றிலும் ஜனநாயக தாகம் கொண்டதுமாகும் இந்த எழுச்சி ஒரு வகையில் இஸ்லாத்தின் சமூக கட்டுப்பாடுகளுக்கு எதிரானது என்றும் இந்த எழுச்சிதான் மேற்குலகின் வரைவிலக்கணதுக்கு அமைவான சுதந்திரம், விடுதலை என்பதை அரபி உலகம் அனுபவிக்க வாயல்களை திறக்க போகின்றது இந்த எழுச்சி செய்யும் மக்களுடன் கலந்துள்ள இஸ்லாமிய சக்திகள் இந்த மக்கள் எழுச்சியை களவாட முயற்சிக்கின்றன அது பற்றி கவனமான நடவடிக்கைகள் வேண்டும் என்று கூறிவருகின்றது விரிவாக
உண்மையில் இந்த அரபு முஸ்லிம் பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் மக்கள் எழுச்சி இஸ்லாமிய அடித்தளங்களை கொண்டது அது உடனடியான இஸ்லாமிய அரசியல் எழுச்சியாக உடனடியாக வெளிவராவிட்டாலும் இஸ்லாமிய இயக்கங்களில் தீர்மானங்களுக்கும் அப்பால் இந்த பிராந்திய மக்களின் உள்ளங்களில் தமது ஆட்சியாளர்கள் தொடர்பான இஸ்லாந்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக பதிந்துள்ளது அந்த பதிவை ஏற்படுத்தியவர்கள் இந்த பிராந்தியத்தில் உழைக்கும் இஸ்லாமிய அமைப்புகள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் அந்த பதிவுகள் அமைப்புகளின் உறுப்புரிமைகளுக்கு அப்பால் சென்று மக்களை அல்லாஹு அக்பர் என்ற கோசத்துடனும், யாஹ் குத்ஸ் இதோ நாங்கள் உன்னை மீட்க வருகின்றோம் , அல்லாஹ்வின் எதிரி கடாபி போன்ற கோசத்துடனும் மக்களை இஸ்லாமிய சிந்தனைதான் இயக்கிவருகின்றது.
இந்த இஸ்லாமிய ஊக்க சக்தி தொடர்பான தகவல்கள் திட்டமிட்டு மூடிமறைக்கப்படுகின்றது இந்த ஆர்பாட்டங்களில் பெரியளவில் பங்கு கொண்டுள்ள இஹ்வானுல் முஸ்லிமீன் இஸ்லாத்தின் எந்த அடையாளங்களையும் வெளிப்படுத்தாமல் களத்தில் செயல்பட்டமையும் இதற்கு ஒரு காரணமாகி விட்டுள்ளது இன்று மேற்கு உலகின் இந்த ஊடக நிலைபாட்டிற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் ஒரு இஸ்லாம் இவர்களின் உந்து சக்தியாக செயல்பட்டுள்ளது என்பதை ஊடகப்படுத்துவதால் இஸ்லாமிய எழுச்சியலை மேலும் வலுவடையும் என்பதாலும் துருக்கி போன்ற நாடுகளில் இஸ்லாம் மேலும் வலுவான இடத்தை பிடித்து கொள்ளும் என்பதும் ஈரானில் அரசுக்கு எதிரான சிறியளவிலான ஆர்பாட்டங்கள் செயலற்று போகும் என்பதுடன் இந்த பிராந்திய எழுச்சியை இஸ்லாத்துக்கு எந்த தொடர்பும் இல்லாத வெறும் அடக்கு முறைகளுக்கு எதிரானது என்று மட்டும் காட்டுவதன் ஊடாக ஈரானின் கிளர்சிகளுக்கு வலுசேர்க்க முடியும் என்பதாலும் இந்த ஊடக சந்திரத்தை கையாளுகின்றது மேற்கு என்றுதான் கூறமுடியும்.
நடந்து வரும் மக்கள எழுச்சியை அவதானித்தால் இஸ்லாமிய இயக்க சக்தியின் உண்மைகளை கண்டுகொள்ளமுடியும் இது தொடர்பாக கடந்த 25 ஆம் திகதி நான் அரசியல் ஆய்வாளர் M.ஷாமில் முஹம்மட் அவர்களை நேர்காணல் செய்து ஒரு ஆக்கத்தை வழங்கியிருந்தேன் அதற்கு வலுசேர்ப்பதாக PressTv யில் வெளியான ஒரு அரசியல் ஆய்வாளர்களின் ஆவணம் ஒன்றை இங்கு பார்க்கலாம் – அரபு முஸ்லிம் பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் மக்கள் எழுச்சியின் ஊக்க சக்தி இஸ்லாம்தான் என்பதை அவர்களின் கருத்துகளில் இருந்தும் தெரிந்து கொள்வோம் இந்த ஆவணத்தில் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பின் ஆய்வாளர்களும் பங்குகொண்டுள்ளனர்


அஸ்மா பாதிமா என்ற பாகிஸ்தான் சகோதரிகள் !!




பாகிஸ்தானிய யுவதிகளான அஸ்மா , பாத்திமா என்ற இரு சகோதரிகள் தமது பெற்றோர் தம்மை  கொடுமைப்பத்துவதா கூறி தற்போது இலங்கையில் தங்கியுள்ளனர் இந்த இரண்டு பேரும் அவர்களின் பெற்றோரிடமிருந்து தப்பி இலங்கையில் தஞ்சம் கோரி வந்திருப்பதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
தமது பெற்றோர் தம்மை கொடுமைப்படுத்துவதாக கூறியே அவர்கள் இலங்கையில் அடைக்கலம் தேடி வந்துள்ளார்கள் என்றும் இவர்களுக்கு வெளிநாடுகளில் புகலிடம் வழங்க சிராரிசு செய்யும்  சான்றிதழ் ஒன்றையும் ஐநா மனித உரிமைகள் அலுவலங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது தாம் பாகிஸ்தானியர்கள் என்றும் தாம் அபூதாபில் பிறந்ததாகவும் தமது 8 மற்றும் 6 வயதுகளில் பாகிஸ்தான் வந்ததாகவும் அங்கு தமக்கு வதைகள் ஆரம்பமானதாகவும் தெரிவிகின்றனர் இவர்களின் தந்தை பாகிஸ்தானில் ஒரு இராணுவ பொறியலாளர் என்றும் தாய் பாகிஸ்தான் மகளிர் கிளம் ஒன்றின் தலைவர் என்றும் இவர்களின் குடும்பம் பாகிஸ்தானில் அரசியல் செல்வாக்கு பெற்ற குடும்பம் என்றும் அறிய முடிகின்றது விரிவாக
இவர்கள் தொடர்பாக இலங்கை ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ள தகவல்களில் இருவரும் பெற்றோரின் மத ரீதியான அடக்குமுறைகளை எதிர்த்து தப்பிவந்துள்ளதாகவும் இந்த இரு யுவதிகளும் ஏதீஸ்ட் இறைவன் பற்றிய நம்பிக்கை அற்றவர்கள் என்றும் இவர்களுக்கு எதிரான கொடுமைகள் மத அடிப்படையாக கொண்டது என்றும் இவர்களின் தாய் மற்றும் உறவினர் இலங்கையில் முன்னாள் கொழும்பு மாநகர சபை தலைவர் ஆசாத் சாலியின் உதவியுடன் இவர்களை அழைத்து செல்ல முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளது
இவர்களின் தாயார் இலங்கையின் சுற்றுல்லா போலீஸ் பிரிவில் தமது குழந்தைகளை காணவில்லை என்று கூறி உதவி கோரியுள்ளார் இதை தொடர்ந்து இவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனினும் இவர்கள் வெளிநாட்டவர்கள் சிலர் ஏற்பாடு செய்துள்ள சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் தற்போது நீதிமன்றம் சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சில முஸ்லிம் பெற்றோர்கள் தாம் முழுமையாக மேற்கு வாழ்க்கை முறைகளுக்கு முழுமையாக உட்பட்டு வாழ்வதுடன் குழந்தைகளையும் மேற்கு வாழ்க்கை முறைகளுக்கு முழுமையா உட்படும் கல்வி , கலை , பொது வாழ்க்கை என்பன வற்றுக்கு உட்படுத்தி வாழ கற்பிகின்றனர் இதன் காரணமாக குழந்தைகள் பருவ வயதை அடைந்ததும் பெற்றோரின் அரவணைப்பை விட்டும் துரமாக முற்படும் போது பெற்றோர் என்ன செய்வது என்று தெரியாது இஸ்லாமிய போதனைகளுக்கு மாற்றமாக அவர்களை அல்லாஹ்வின் பெயரால் , இஸ்லாத்தின் பெயரால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர் இதன் ஒரு விளைவாக குழந்தைகள் இஸ்லாத்தையும் வெறுத்து பெற்றோரையும் வெறுத்து வாழ முற்படுகின்றனர்
30-40 வயதில் இருக்கும் பெற்றோர் தமது குழந்தைகளுக்கு முழுமையான மேற்குலக கல்வியை பெரும் தொகை கொடுத்து வழங்கிவருகின்றனர் இவர்கள் 50 -55 வயதாகும்போது மேற்குலக கல்வியை முழுமையாகக் கற்றுக்கொண்ட குழந்தைகள் பெற்றோரை விட்டு விலக ஆரம்பிக்கின்றனர் இதன் போது உணர ஆரம்பிக்கும் பெற்றோர் சிலர் சற்று இஸ்லாத்தின் பக்கம் தாம் திரும்புவதுடன் இஸ்லாம் தெரியாமையால் குழந்தைகளை மிகவும் கடுமையைக அடக்க முற்படுகின்றனர் இதன் விளைவுகளைத்தான் ஆஸ்மா பாத்திமா போன்றவர்களின் சம்பவங்கள் எடுத்து காட்டுகின்றது.
எமது நாட்டிலும் இதேநிலைதான் இலங்கையிலும் இஸ்லாத்தின் எந்த பெருமானங்களையும் கருத்தில் கொள்ளாத முஸ்லிம் பெற்றோர் சிலர் தமது பெண் குழந்தைகளையும் அரை கவுனுடன் சர்வதேச பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர் இந்த நிலையை கொழும்பிலும் , கண்டியிலும் வேறு சில நகரங்களிலும் காணமுடியும் இதன் விளைவுகள் அஸ்மா களாகவும், பாத்திமாகளாகவும் வரலாம்

லிபியாவில் இறுதி கட்ட மோதல்



லிபியாவின் கிழக்குப் பகுதியை ஏற்கனவே கைப்பற்றிய கடாபி எதிர்ப்புப் புரட்சிப் படைகள் நேற்று முன்தினம் முக்கிய நகரங்களான ஜாவியா மற்றும் மிஸ்ரட்டாவைக் கைப்பற்றிவிட்டன.
தொடர்ந்து தலைநகர் டிரிபோலியை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. டிரிபோலியில் எந்நேரமும் கடாபி ஆதரவு மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கு இடையில் இறுதிக் கட்ட மோதல் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
பெங்காசி, அல்பைடா, டெர்ணா உள்ளிட்ட நாட்டின் கிழக்குப் பகுதிகளை கடாபி எதிர்ப்பாளர்கள் ராணுவத்தின் துணையுடன் கைப்பற்றினர். பெங்காசியில் முன்னாள் நீதித் துறை அமைச்சர் முஸ்தபா முகமது அப்த் அல் ஜலீல் தலைமையில் இடைக்கால அரசு உருவாக்கப்பட்டது.
இதற்கிடையில் நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரங்களான ஜாவியா மற்றும் மிஸ்ரட்டாவில் கடாபி ராணுவம் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கு இடையில் மோதல் நடந்தது. இறுதியில் ஜாவியா நகரம் எதிர்ப்பாளர்கள் கைகளில் வீழ்ந்தது. ஜாவியா நகரைச் சுற்றியுள்ள ரிபாத், கபா, ஜடோ, ரோக்பன், ஜென்டன் உள்ளிட்ட பல்வேறு சிறு நகரங்களையும் எதிர்ப்பாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
எனினும் ஜாவியா நகரின் வெளிப் பகுதியில் 2000 ராணுவ வீரர்கள் எதிர்ப்பாளர்களைத் தாக்கத் தயார் நிலையில் உள்ளனர். மிஸ்ரட்டாவின் பெரும் பகுதியையும் எதிர்ப்பாளர்கள் கைப்பற்றி விட்டனர். டிரிபோலிக்கு வெளியே 28 கி.மீ., தூரத்தில் தற்போது எதிர்ப்பாளர்கள் நிலை கொண்டுள்ளனர்.
அந்நகரில் உள்ள அரசு வானொலி கட்டடம் மீது குண்டு வீசித் தாக்கிய விமானம் ஒன்றை எதிர்ப்பாளர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்கினர். இதனால் அந்த விமானம் வேறு வழியின்றித் தரையில் இறங்கியது. அதில் இருந்தவர்களை எதிர்ப்பாளர்கள் சிறை பிடித்தனர்.
பெங்காசியில் உள்ள ராணுவப் பிரிவின் தலைவர் கர்னல் ரமாதான், டிரிபோலியை நெருங்கிச் செல்லும் எதிர்ப்பாளர்களுக்கு உதவத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் டிரிபோலியில் எந்நேரமும் பயங்கர மோதல் ஏற்படலாம். டிரிபோலியின் புறநகர்ப் பகுதியான டஜோராவில் கடாபி ஆதரவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிரிபோலியின் சில பகுதிகளில் பொதுமக்கள் தடுப்புகளை ராணுவ வீரர்கள் மீது தூக்கி எறிந்தனர். சிலர் ராணுவப் படைத்தளங்களைச் சூறையாடி ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்து வரும் ஐ.நா., மனித உரிமை அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கடாபியை உடனடியாக லிபியாவில் இருந்து வெளியேற்றுவது குறித்து பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையில் லிபியா மீது ஆயுதப் பரிமாற்றம், சொத்து முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய யூனியனும் நேற்று விதித்தது. லிபியாவின் மிக நெருங்கிய நட்பு நாடான இத்தாலி, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கடாபி உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தியுள்ளன.

துனிஷிய பிரதமர் பதவி ராஜினாமா



வட ஆப்ரிக்க நாடான துனிஷியாவில் பிரதமர் முகமது கன்னவுச்சிக்கு எதிரான போராட்டம் வலுவடைந்ததை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அல் செப்சி என்பவர் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. துனிஷியாவில் தான் அரசுக்கு எதிராக முதலில் மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து அங்கு 20 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஜைன் அல் அபிதின் பென் அலி சவுதிக்கு ஓடி விட்டார்.
அதையடுத்து அவரது கூட்டாளியும் அப்போதைய பிரதமருமான முகமது கன்னவுச்சி தலைமையில் புதிய அரசு அமைந்தது. கன்னவுச்சியே புதிய பிரதமராகத் தொடர்ந்தார். ஆனால் முன்னாள் அதிபர் அலியின் கூட்டாளிகள் எவரும் புதிய அமைச்சரவையில் இடம் பெறக் கூடாது என்று துனிஷிய மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களாக போராட்டம் வலுவடைந்தது. கடந்த 25, 26 மற்றும் 27 தேதிகளில் தலைநகர் துனிஷில் நடந்த போராட்டத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு நெருக்கடி முற்றியது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பிரதமர் கன்னவுச்சி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அரசு தொலைக்காட்சியில் பேசிய அவர்,"நான் எனது பொறுப்பில் இருந்து ஓடவில்லை. எனது பதவி விலகல் புதிய பிரதமருக்கு வழி வகுக்கும். மேலும் போராட்டங்களில் ஏற்படும் இறப்புகளைத் தடுக்கும் வகையில் முடிவுகளை எடுக்க நான் தயாராகவில்லை" என்றார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் அல் பாஜி காயித் அல் செப்சி புதிய பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. கன்னவுச்சியின் ராஜினாமா குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றம் தான் என்றாலும் அதுவே போராட்டக்காரர்களை திருப்திப்படுத்தி விடாது. அமைச்சரவையில் முன்னாள் அதிபர் அலியோடு தொடர்புடையவர்கள் இருக்கும் வரை போராட்டம் நிற்காது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில் போராட்டத்தின் போது சிலர் பலியானது தொடர்பாக 188 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். முன்னாள் அதிபர் அலியின் நெருங்கிய அதிகாரிகள் சிலர் இவர்களுக்குப் பணம் கொடுத்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் கலவரம் ஏற்படுத்தி அதன் மூலம் சிலரை கொன்றுள்ளனர். இது குறித்து விசாரணை நடக்கிறது.

المشاركات الشائعة