Search This Blog

Mar 3, 2011

லிபியா ஜனாதிபதி கடாபியை அமெரிக்கா கொலை செய்யுமா ?


லிபியாவின் கடாபி எதிர்பாளர்களின் கையில் இருந்து எண்ணெய் வளம் கொண்ட கிழக்கு பிரதேசத்தை மீட்கும் நோக்கில் கடாபிக்கு விசுவாசமான படை விமான குண்டு தாக்குதல்களையும் நேரடி இராணுவ தாக்குதல்களையும் ஆரம்பித்து நடத்தி வருகின்றது இந்த நிலையில் கடாபிக்கு எதிரான மக்கள் படை அதை எதிர்ந்து போராடிவருகின்றது இது வரை 2000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது லிபியாவின் எண்ணெய் வளம் கொண்ட கிழக்கு பிரதேசம் நோக்கிய கடாபியின் நகர்வுகள் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளால் அவதானமாக பார்க்கப்படுகின்றது
ஏற்கனவே அமெரிக்காவின் கடற் படை யுத்த கப்பல்கள் , மற்றும் விமானபடையின் விமானங்கள லிபியாவுக்கு அண்மையில் கொண்டு நிறுத்தபட்டுள்ளது அதேவேளை பிரிட்டன் உட்பட மேற்கு நாடுகள் கடாபியின் கையை விட்டு நழுவிய பகுதிகளுக்கு உதவிகளை விமானங்கள் மூலம் அனுப்பியுள்ளது அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு செயலாளர் கிலாரி கிளிங்டன் கடாபி உடனடியாக பதவி விலகவேண்டும் என்று தெரிவித்துள்ளனர் விரிவாக
இந்த நிலையில் கடாபி அமெரிக்காவின் உளவு விமானங்கள் ஊடாக குண்டு வீசி கொலை செய்யப்படலாம் அல்லது லிபியாவின் இராணுவம் ஊடாக கடாபியை சுட்டு கொலைசெய்ய அமெரிக்கா தனது உளவு பிரிவின் உதவியுடன் முயற்சிக்கலாம் என்று ஒரு சாராரும் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் லிபியாவின் மனிதாபிமான உதவி என்ற பெயரில் படை இறக்கம் செய்யலாம் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்

சிலர் பாகிஸ்தான் கிரிக்கட் விளையாட்டு அணிக்கு ஆதரவளித்ததன் எதிரொலி !!



பாகிஸ்தான் அணியை இலங்கையர்கள் ஆதரிப்பது கவலைக்குரியது: திலங்க-இலங்கையர்கள் அனைவரும் ஒற்றுமையை வெளிப்படுத்துமாறும் இவ்வருட உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணிக்கு ஆதரவு வழங்குமாறும் இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால கூறியுள்ளார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியின்போது இலங்கையர்கள் சிலர் பாகிஸ்தான் அணியை ஆதரித்தமை கவலைக்குரியது எனவும் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் கூறினார் விரிவாக
தேசிய நிகழ்வுகள் நடைபெறும்போது அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி பறக்கவிடப்பட வேண்டும் எனக் கூறிய அவர், அரச வீடமைப்புத் திட்டங்களில் வசிப்போரும் இப்போட்டியின்போது பாகிஸ்தான் அணியை ஆதரித்தமை கவலைக்குரியது என்றார். தமிழ் மிரர் (யொஹான் பெரேரா)
அதேவேளை டெய்லி மிரர் ஆங்கில இணையத்தளம் இந்த செய்தியை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளதுடன் அதன் இன்றைய படங்கள்- images- பகுதியின் முன்பகுதியில் ஆப்கானிஸ்தானில் 1997 ஆம் ஆண்டு பாமியான் புத்தர் சிலை தாலிபான்களால் உடைக்கப்பட்ட காட்சி மற்றும் குண்டுகள் மூலம்  உடைக்கப்பட முன்னர் இருந்த புத்தர் சிலையையும் படங்களாக பதிவு செய்துள்ளது இதற்கு பலர் பலவிதான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்குமான கிரிகட் போட்டியின்போது  முஸ்லிம்கள் சிலர் பாகிஸ்தானுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த போட்டி இடம்பெறமுன்னார் அகில இலங்கை ஜம்மிஇயத்துல் உலாமா முஸ்லிம்களில் உள்ள பாகிஸ்தான் அணியின் ஆதரவாளர்களுக்கு  பாகிஸ்தான் அணியை ஆதரிப்பதை தவிர்க்குமாறு வேண்டு கோள் ஒன்றை விடுத்திருந்தமை குறிபிடத்தக்கது -



Mar 2, 2011

லிபியா மக்கள் எழுச்சிக்கு சவூதி மார்க்க அறிஞர்கள் ஆதரவு

http://nimg.sulekha.com/others/original700/malta-libya-protest-2011-2-26-6-50-21.jpg

லிபியா நாட்டின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபிக்கு எதிராக அந்நாட்டில் கிளர்ந்தெழுந்துள்ள மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு சவூதி அரேபிய நாட்டின் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
லிபியாவில் மக்கள் எழுச்சிப் போராட்டம் துவங்கிய சில தினங்களில் சவூதி அரேபியாவைச் சார்ந்த மார்க்க அறிஞர்கள் லிபியாவுக்கு வருகைத் தந்து கத்தாஃபிக்கு எல்லாவித ஆசீர்வாதங்களும் வழங்கியதாக அவரது ஸைஃபுல் இஸ்லாமின் அறிக்கையை மறுத்த மார்க்க அறிஞர்கள் லிபியா முழுவதும் நடைபெறும் போராட்டத்திற்கு தங்களது பரிபூரண ஆதரவை தெரிவித்துள்ளனர்.
சவூதி அரேபியாவின் மார்க்க அறிஞர்கள் சபையின் உறுப்பினரான ஷேக் ஸாலிஹ் அல் லெய்தான், தான் லிபிய மக்கள் எழுச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார். மக்களுடன் கலந்துரையாடல் நடத்துவதற்கு லிபியாவுக்கு சென்றதாகவும், கத்தாஃபிக்கு புகழாரம் சூட்டுவதற்கல்ல எனவும் இன்னொரு மார்க்க அறிஞரான ஷேக் ஆதில் அல் கர்னி தெரிவித்துள்ளார்.
லிபியாவில் நடைபெறும் மக்கள் எழுச்சிப் போராட்டம் குறித்து ஷேக் ஸாலிஹ் அல் லெய்தான் தெரிவிக்கையில்,கத்தாஃபியின் ஆட்சி இஸ்லாமிய ஆட்சி அல்ல. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஸன்னூஸி மன்னரை கிளர்ச்சியின் மூலம் அகற்றிவிட்டு ஆட்சியை கைப்பற்றிய கத்தாஃபி அதற்கு பின்னர் மக்களின் அங்கீகாரத்தை பெறவேயில்லை எனக்கூறினார். இச்செய்தியினை பிரபல உள்நாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ளது.
நபிகளாரின் பொன்மொழிகளை நிராகரிக்கும் கத்தாஃபியை அங்கீகரிக்க முடியாது என்பது சவூதி மார்க்க அறிஞர்களின் கருத்தாகும். திருக்குர்ஆன் மட்டும் போதும் என கத்தாஃபி கூறியுள்ளார். மார்க்க அறிஞர்களின் ஏகமனதான தீர்மானத்தை(இஜ்மாஃ) கத்தாஃபி அங்கீகரிக்கவில்லை. உண்மையான முஸ்லிமோ அல்லது இமாமாகவோ(தலைவர்) இல்லாத அறிவுக்கெட்ட பதூவிய தலைவர்தான் கத்தாஃபி என மார்க்க அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி:மாத்யமம்

Ireland Great Win vs Englad & scored up to 329


புத்தளத்தில் ஜமாஅதே இஸ்லாமி அரசியல் களத்தில் குதித்துள்ளது




இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் புத்தளம் கிளை இன்று புத்தள நகர சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள், வாக்காளர்கள் ஆகியோருக்கான இஸ்லாமிய வழிகாட்டல் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து தற்போது புத்தளம் ஹுதா மஸ்ஜித் மைதானத்தில் நடத்திகொண்டிருகின்றது என்று எமது lankamuslim.org புத்தளம் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசியல் வாதிகள் , மற்றும் வாக்காளர்களுக்கான இஸ்லாமிய வழிகாட்டல் பொதுக்கூட்டம் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் புத்தளம் கிளையின் புதிய ஒரு முயற்சியாகும் என்றும் இதற்கு முன்னர் தேர்தல் காலங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் இவ்வாறான வழிகாட்டல் சந்திப்புகளை செய்து வந்துள்ள ஜமாஅதே இஸ்லாமி இந்த முறை முதல் தடவையாக பொதுக்கூட்டம் என்று களம் இறங்கியுள்ளது என்றும் இந்த பொதுக்கூட்டத்தில் இஸ்லாமிய நோக்கியில் அரசியல் வழிகாட்டல்கள் அடங்கிய கைநூல் பிரசுரம் ஒன்றும் விநியோகிக்கப்பட்டுள்ளது, அரசியலை இபாதத்தாக கொள்வோம் என்றும் இஸ்லாம் இல்லாத அரசியல் ஜாஹிலியத் என்றும்  விரிவாக
புத்தள நகரசபையை இலங்கைக்கு முன்மாதியாக நகரமாக மாற்றுவோம் அதற்கான தூய இஸ்லாமிய எண்ணத்துடன் தேர்தலை சந்திக்கவேண்டும் என்றும் துருக்கி வடிவிலான இஸ்லாமிய அரசியலை முன்மாதிரியாக கொள்வோம் என்றும் உருவாக போகும் முஸ்லிம் நகர சபை முழு நாட்டுக்கும் முன்மாதிரி மிக்க நகரசபையாக மாறவேண்டும் என்றும் வேட்பாளர்கள் தேசிய கட்சிகளை திருப்தி படுத்தும் நோக்கில் செயல்படக் கூடாது என்றும் அங்கு பேசிய பேச்சாளர்கள் உரையாற்றி உள்ளனர் ஆரோக்கியம் ,சுத்தம் , அமைதி ஆகியவற்றை கொண்ட நகர் என்ற கருப்பொருளுடன் உரையாற்றி வருகின்றனர் விவரண ஆவணம் ஒன்றும் அந்த பொதுகூட்டத்தில் திரையிடப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் முதுகில் குத்திவரும் இந்திய நீதிமன்றங்கள்


M.ரிஸ்னி முஹம்மட்
இந்திய குஜராத் மாநிலத்தின் கோத்ராவில் 2002 ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதியன்று  நிகழந்த ரயில் தீ விபத்தை ஒரு முஸ்லிம் பயங்கரவாதமாக திட்டமிட்டு சித்தரித்து முஸ்லிம்களின் மீது பழிபோட்டு “சபர்மதி எக்ஸ்பிரசை எரிக்க நான் தான் பெட்ரோல் வழங்கினேன் ” என ஒரு முஸ்லிம் வாலிபரை மிரட்டி வாக்குமூலம் கொடுக்க வைத்தது பெட்ரோல் நிலையத்தில் வேலைசெய்யும் ஊழியர் ஒருவருக்கு பணம் கொடுத்து 140 லீட்டர்களை அந்த முஸ்லிம் வாலிபன் வாங்கினான் என்று சாட்சியை போலியான உருவாக்கியது உள்ளிட்ட படுபயங்கர சதித்திட்டங்களை இரு ஆண்டுகளுக்கு முன் தெஹல்கா ஏடு அம்பலப்படுத்தியது.
ஆனாலும் 2002 ஆம் ஆண்டு  சபர்மிதி எக்ஸ்பிரஸ் எரிக்கப்பட்டது 59 பேர் கொல்லப்பட்டனர் என்று தொடரப்பட்ட வழக்கில் 250 வரையான முஸ்லிம்கள் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்றது இதில் நேற்று அந்த வழக்கில் குஜராத் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வெளியிட்டது அதில் 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து குஜராத் சிறப்பு கோர்ட் தீர்ப்பை வெளியிட்டது. இந்த தீர்ப்பை ஏற்கமுடியாது என்று முஸ்லிம் தரப்பும் சட்டத்தரணிகளும் தெரிவித்துள்ளதுடன் மேல்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளனர் விரிவாக
இந்திய குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு திட்டமிட்டு நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை பயங்கரவாதத்துடன் நரேந்தி மோடி நேரடி தொடர்பு இருப்பதாக  ‘தெஹல்கா’ என்ற இந்திய சுதந்திர ஊடகம் அம்பலப்படுதியது எனினும் அவை இந்திய சட்டங்களின் பிரகாரம் நடவடிகளை எடுக்க போதுமானது இல்லை என்ற சாட்டு போக்கு முன்வைக்கப்பட்டு அரச அதிகார வர்க்கத்தினால் முஸ்லிம்கள் மீதான இரட்டை நிலைப்பாடு கடைபிடிக்கப்பட்டது.
குஜராத் இனகலவரம் என்று தெரிவிக்கபட்டாலும் உண்மையில் நரேந்திர மோடி அரசினால் திட்டமிடப்பட்ட அரச பாசிச பயங்கரவாதம் இந்த முஸ்லிம்களின் மீதான வெறியாட்டத்துக்கு 3000 பேர் படுகொலையானதாவும் மற்றுமொரு தகவலின் பிரகாரம் 5000 பேர் படுகொலையானதாவும் தெரியவருகின்றது தெஹல்கா நடத்திய இரகசிய ஊடக புலனாய்வுகளில் கொலைகளை செய்த காவி பயங்கரவாதிகள் தாம் செய்தவற்றை பெருமையுடன் இவர்களை ஊடகவிலாளர்கள் என்று தெரியாமல் கக்கியவைகள் தெஹல்கா வெளியிட்டு உலகின் அதிர்வலை ஒன்றை ஏற்படுத்தியது.
அதில் ‘ முஸ்லிம் பெண்கள் பழங்கள் போல் இருந்தார்கள் அவர்களை நாங்கள் சளைக்காமல் ருசித்தோம், பின்னர் உயிருடன் எரித்தோம்’ என்றும் கிராமம் கிராமமாக சென்று ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை தொடரான வன்புணர்ந்து பின்னர் மார்பகங்களை அறுத்து சித்திரவதை செய்து கொலைசெய்தோம் என்றும் மஸ்ஜிதுகளில் கூட்டம் கூட்டமாக முஸ்லிம்களை குவித்து கொலைசெய்து விட்டு பெட்ரோல் பவுசர்கள் மூலம் அவர்களை மஸ்ஜிதுகளுடன் எதிர்த்தோம் என்றும் தமது வீர சாகசங்களை பெருமையுடன் கூறினர் நரேந்தி மோடியின் காவி பயங்கரவாத வெறியர்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினருக்கு கூட ஜனநாயக இந்தியாவில் எந்த பாதுகாப்பும் இருக்கவில்லை.
உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன்னாள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இஹ்சான் வீட்டுக்குள் தஞ்சமடைந்த முஸ்லிம் சிறுவர், சிறுமியர், பெண்கள் வயோதிபர் என்ற பாகுபாடு இன்றி அந்த பாராளுமன்ற உறுப்பினர் உட்டபட 72 பேரை பயங்கரமான முறையில் ஜனநாயக இந்தியாவில் போலீஸ் படையின் உதவியுடன் காவி பயங்கரவாதிகள் கொன்று குவித்தனர் இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் இஹ்சானின் உறவினர்கள் இந்திய உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தனர் தொடுத்த வழக்கை அடுத்து
உச்சநீதி மன்றம் கலவர வழக்கை – முஸ்லிகள் மீதான அரச பயங்கரவாத வழக்கை- விசாரணைக்கு எடுத்துக்கொண்டு SIT  என்னும் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்தக்குழு விசாரணை நடத்தி 600 பக்க அறிக்கையை  உச்சநீதி மன்றத்தில் மே 2010ல் ஒப்படைத்துள்ளது .
இந்த அறிக்கை நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட மறுநாள் மோடி குற்றமற்றவர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக பாஜகவினர் காவி பயங்கரவாதிகள் பொய்ப்பிரச்சாரம் செய்தனர்.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட 600 பக்க அறிக்கையை தெஹல்கா இணையதளமும் ஹெட் லைன் டுடே தொலைக்காட்சியும் அதன் நகலை வெளியுட்டுள்ளனர்.  நரேந்திர மோடிக்கு கலவரத்தில் பங்கு உண்டு என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பதுடன் 13 ஆதாரங்களையும் SIT வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர் வரும் நான்காம் திகதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மோடியை கைது செய்யகோரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது இந்திய நீதிமன்றங்களும் முஸ்லிம்களின் முதுகில் தொடர்ந்தும் குற்றிவருகின்றது ஆனால் பாவன் இந்திய முஸ்லிம்கள் இன்றும் நீதிமன்றங்களை நாடிநிற்கின்றார்கள்

ஆர்ப்பாட்ட கோசம்
தூக்கிலிடு! தூக்கிலிடு!
நரேந்திர மோடியை தூக்கிலிடு!
மரண வியாபாரி மோடிக்கு
உதவியாக இருந்தவர்கள்
குஜராத் அரசு செயலர்கள்
காவல்துறையின் ஓநாய்கள்
அத்தனை பேரையும் உடனடியாய்
பதவி நீக்கம் செய்து விடு!
சட்டப் படியாய் அவர்கள் மீது
வழக்குப் பதிவு செய்து விடு!
கயவர்கள் சேர்ந்த சொத்தை எல்லாம்
உடனே ஜபதி செய்திடு!
காவி கும்பலின் ரவுடித்தனத்தால்
வெட்கிக் குனியுது மனிதஇனம்!
பசுவதைக்கெதிராய் கோஷம் போட்டு
மனிதனைக் கொல்லும் பாதகனே!
இரக்கமற்ற அரக்கனே! இரக்கமற்ற அரக்கனே!
இரக்கம் என்பது மனிதப் பண்பு
மிருகத்திற்கும் அது உண்டு
நீ மனிதனுமில்லை மிருகமுமில்லை
என்ன இனம் நீ சொல்லடா?
கயவர் குலம் தான் உன் குலமா?
மௌனமென்ன மௌனமென்ன?
ஜெயலலிதா அம்மையே
போயஸ் தோட்டம் அழைத்து வந்து
விருந்து கொடுக்கப் போறாயா?
மௌனமென்ன மௌனமென்ன?
கருனாநிதி முதல்வரே
டெல்லி சென்று மோடியோடு
போஸ்கொடுக்க தெரியுதோ?
எமதருமை ஹிந்து மக்களே! எமதருமை ஹிந்து மக்களே!
காவி என்ற சொல்லுக்கு
களங்கம் சேர்க்க விடவேண்டாம்
சாது என்ற பேரிலே சூது செய்ய விடவேண்டாம்
டிஸ்மிஸ் செய்! டிஸ்மிஸ் செய்!
மத்திய அரசே டிஸ்மிஸ் செய்!
அரசியலமைப்பிற் கெதிராய் நடந்த
மோடி அரசை டிஸ்மிஸ் செய்!
சுப்ரீம் கோர்ட்டே! சுப்ரீம் கோர்ட்டே!
வெட்கமாக இல்லையா?
எட்டு ஆண்டு ஆன பின்னும்
விசாரணை இன்னும் முடியலையா?
ரகசியம் என்ன ரகசியம் என்ன?
சுப்ரீம் கோர்ட்டே ரகசியம் என்ன?
சிறப்பு புலனாய்வு அறிக்கையை
மறைக்கும் அளவிற்கு ரகசியம் என்ன?
நீதியும் உண்மையும் ரகசியத்தோடு
ஒன்று சேர முடியாதே!
முஸ்லீம்கள் மீது எத்தனையோ
பொய்வழக்கு போட்டீர்கள்
அத்தனை வழக்கிலும் உடனடியாய்
கைது செய்து அடைத்தீர்கள்!
மோடி என்றால் தனிநீதி
முஸ்லீம்களுக்கு எது நீதி!
அத்துல் பிஹாரி வாஜ்பாயி
அத்வானி, மோடி, கட்காரி
ஆர் எஸ் எஸ் அயோக்கியர்கள் அனைவரும்
இரத்தம் குடிக்கும் கட்டேரி!
வேதம் ஓதும் சாத்தான்கள்
சுப்ரமனிய சாமியே, இரட்டை வேட சோவே
எரிக்கபட்ட உயிர்களுக்கும்
துடிதுடித்த உயிர்களுக்கும்
பரிதவித்த உறவினருக்கும்
பதில் சொல் பதில் சொல்
பயங்கரவாத அமெரிக்காவே
உன்னை பயங்கரவாதி என்றதுவே
வெட்கமாக இல்லையா வெட்கமாக இல்லையா
திருப்பி அனுப்பட்டாயே
அனுமதி மறுக்கப்பட்டாயே
செருப்படிகள் பட்டாயே
வெட்கமாக இல்லையா வெட்கமாக இல்லையா?

Mar 1, 2011

ஐக்கிய அமெரிக்க நாட்டுப் படைகள் லிபியாவைச் சுற்றிவளைக்க உள்ளன: ஹிலாரி கிளிண்டன்



தரை மற்றும் கடல் வழியாக லிபியாவைச் சுற்றிலும் அமெரிக்கப் படைகளை நிறுத்த அந்நாடு தீர்மானித்துள்ளது.
அவசர நிலைமைகள் ஏற்படும் போது அதற்கு முகம் கொடுக்கத்தக்க வகையில் அவ்வாறு இராணுவம் நிலைப்படுத்தப்பட்டு உள்ளதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.
லிபியாவின் உள்நாட்டு நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதும் அதன் இன்னொரு நோக்கம் என்று கூறப்படுகின்றது. ஆயினும் கடாபியை ஆட்சியிலிருந்து அகற்றும் நோக்குடன் இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளவே அமெரிக்கப் படைகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
செங்கடல் அருகே அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பல்கள் நகர்த்தப்பட்டுள்ளதுடன், இத்தாலியின் சிசிலியா தீவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படைக் கமாண்டோக்கள் முகாமிட்டுள்ளனர்.
அவர்களுக்கென விசேட முகாம்கள் இரண்டும் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கிடையே லிபியாவைச் சுற்றியுள்ள வான்பரப்பை தடைசெய்யப்பட்ட வலயமாக அறிவிப்பது குறித்தும் அமெரிக்காவின் கவனம் திரும்பியுள்ளது.
அதன் மூலம் வான் வழியாக கடாபி வெளிநாட்டுக்குத் தப்பியோடுவதைத் தடுப்பது அமெரிக்காவின் நோக்கம் என்று கருதப்படுகின்றது.

المشاركات الشائعة