Search This Blog

Sep 29, 2011

ஓபாமா: அமெரிக்காவின் முதல் யூத ஜனாதிபதியா ?


அஷ்ஷெய்க் எஸ் .எம்  மஸாஹிம் (இஸ்லாஹி)
 பலஸ்தீன அபாஸ் நிர்வாகம் ஐ.நா. பொது சபையில் பலஸ்தீனை இறைமையுள்ள சுதந்திர தனி நாடாக “sovereign, independent state” அங்கீகாரம் வழங்குமாறு கடந்த 16 ஆம் திகதி கோரியுள்ளது அந்த கோரிக்கை பெரும்பாலும் அமெரிக்கா, மற்றும் பிரிட்டனின் முயற்சியால் அமெரிக்காவின் வீட்டோவை பயன்படுத்தாமலேயே நிராகரிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கபடுகின்றது. இன்னும் சில தினங்களில் அதன் முடிவு தெரிந்து விடும். அமெரிக்காவும் பிரிட்டனும் மற்ற நாடுகளை குறிப்பாக ஐ.நா பாதுகாப்பு சபை அங்கத்துவ நாடுகளை கோரிக்கையை நிராகரிக்குமாறு அழுத்திவருகின்றது.
ஐ.நா வுக்கு வெளியில் 120 நாடுகள் பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்துள்ளது என்றாலும் ஐ.நா. பொது சபையில் பலஸ்தீனை 1967ஆம் ஆண்டு எல்லையை தற்போதைய பலஸ்தீன நாட்டின் எல்லைகளாக கொண்டு சுதந்திர நாடக அங்கீகரிக்க அப்பாஸ் நிர்வாகம் கெஞ்சி கொண்டிருகின்றது.ஆனால் அமெரிக்கா அந்த முயற்சியை நிராகரித்தும் அவ்வாறான எல்லை மற்றும் தனி நாட்டுக்கான அங்கீகாரம் பேச்சின் ஊடாக இஸ்ரேல்தான் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஐ.நா. அதை வழங்க கூடாது வழங்க முற்பட்டால் வீட்டோவை பயன்படுத்துவேன் என்று அமெரிக்கா தெரிவித்துவருகின்றது.
பலஸ்தீன் சுதந்திர நாடு என்பதை எவரிடமும் மண்டியிட்டு கெஞ்சி கொண்டிருக்க வேண்டியதில்லை என்று ஹமாஸ் தனது நிலைப்பாட்டிலும், செயல்பாட்டிலும் உறுதியாகவுள்ளது. இது அப்பாஸின் தனிப்பட்ட முயற்சி பலஸ்தீனர்களின் தேசிய தீர்மாங்கள் அதில் உள்வாங்கப் படவில்லை இடையில் நின்று விட்ட பலஸ்தீன்- இஸ்ரேல் போச்சை மீண்டும் ஆரம்பிக்க தேவையான முயற்சி மட்டும்தான் இது என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக ஸ்தம்பித்து போயுள்ள பலஸ்தீன் – இஸ்ரேல்  சமாதானப் பேச்சு வார்த்தையை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பாக அமெரிக்காவும் பிரிட்டனும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேலையில் இஸ்ரேலின் உள்நாட்டு அமைச்சு புதிதாக 1100 யூத குடியிருப்பு தொகுதிகளை ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலத்தில் நிர்மாகிக்கப் போவதாக நேற்று 28.09.2011 அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் அடாவடிதனங்களை கண்டுகொள்ளதா அமெரிக்காவும் , பிரிட்டனும் பலஸ்தீனர்கள் கையை கட்டிகொண்டு பேச்சு மேசைக்கு போகவேண்டும் என்பதில்தான் குறியாக இருக்கிறது இந்த நியாயமற்ற அழுத்தங்களுக்கு ஹமாஸ் போன்ற போராட்ட அமைப்புகள் உடன்படாவிட்டாலும் அம்பாஸ் தலைமயிலான PLO நிர்வாகம் உடன்பட்டு போவது கடுமையான விமர்சனங்களை பெற்றுவருகின்றது.
இந்த நிலையில் இஸ்ரேலின் உள்நாட்டு அமைச்சின் 1100 யூத குடியிருப்பு தொகுதிகள் தொடர்பான அறிவிப்பை சமாளிக்கும் முகமாக அமெரிக்காவின் வெளிநாட்டு செயலளர் ஹிலாரி கிளிங்டன் இந்த குடியிருப்பு நிர்மான திட்டம் நேரடி பேச்சுக்கான தமது முயற்சிக்கு எதிர் விளைவை தருவதாக தெரிவித்துள்ளார். மேற்கு நாடுகள் சில தமது செல்லப் பிள்ளையை கண்டிப்பது போன்று கண்டித்துள்ளது.
அதேவேளை ஹமாஸ் இன்று 28.09.2011 வெளியிட்டுள்ள   அறிக்கையில் குடியேற்றங்களை இஸ்ரேல் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும்  நிலையில் பேச்சு என்பது பயனற்றது இஸ்ரேல் பலப்பிரயோகம்  என்ற மொழியைமட்டும்தான் விளங்கிக்கொள்ளும் என்று  தெரிவித்துள்ளது.
கிழக்கு ஜெருசலம் பலஸ்தீனர்களின் தலைநகரம் என்று பலதீனர்கள் கோரிவருகின்றனர். அதேவேளை இஸ்ரேல் ஜெருசலம் முழுவதும் தனது தலைநகரம் என்பதில் எந்த விட்டுக்கொடுப்பும் செய்யமுடியாது என்று உறுதியாக தெரிவித்து வருகின்றது. கிழக்கு ஜெருசலத்தில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றுவதும் அவர்களின் குடியிருப்புகளை தகர்த்து அந்த இடங்களில் யூத குடியுருப்புகளை நிர்மாணிப்பதுமாக ஆக்கிரமிப்பு வேட்டையில் உள்ளது இஸ்ரேல்.
மேற்கு கரை பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேறவேண்டும் என்று பலஸ்தீனர்கள் தெரிவிக்கின்றனர் ஆனால் இஸ்ரேல் அது ஒருபோதும் முடியாத விடையம் என்று உறுதியாக கூறுகின்றது. மேற்கு கரை பகுதியில் புதிய இராணுவ குடியிருப்புகளையும் உருவாக்கி தொடர்ந்து நிர்மாணித்து வருகின்றது. மறுபுறத்தில் அமெரிக்காவும் பிரிட்டனும் போசுங்கள் என்ற அழுத்தத்தை அப்பாஸ் நிர்வாகத்துக்கு கொடுத்து வருகின்றது. இந்த நிலையில் மீண்டும் தொடரபோகும் பேச்சு எந்த பலனை தரபோகின்றது என்பது விடைதெரிந்த கேள்வி.
அப்பாஸ் நிர்வாகமும் இஸ்ரேலும் பலஸ்தீனர்களை ஏமாற்றி பலஸ்தீனர்களின் பல நிலங்களை இஸ்ரேலுக்கு விட்டு கொடுக்கும் வாக்குறுதிகளை வழங்கியதுடன் பலஸ்தீன போராளிகள் பலரையும் இஸ்ரேலுக்கு காட்டி கொடுக்கும் வேலையையும் செய்தமை அல் ஜசீரா ஆதாரங்களுடன் வெளிபடுத்தியிருந்தது என்பது குறிபிடத்தக்கது.
கடந்த திங்கள் கிழமை 26.09.2011 இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமோன் பெரெஸ் கருத்துரைகையில் பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ்தான் இஸ்ரேல் பேச்சு வார்த்தை செய்வதற்கு மிக சிறந்த தலைவர் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது
இந்த நிலையில் மீண்டும் ஏற்படபோகும் பேச்சு பலஸ்தீனர்களுக்கு பயன் உள்ளதாக அமையாது என்பதைத்தான் நிகழ்வுகள் காட்டுகின்றது .ஆரம்பிக்க போகும் பேச்சு இதுவரை ஆக்கிரமிப்பு இஸ்ரேல் அரசாங்கம் மேற்கொண்டு வரும் எந்த நடவடிகையையும் பாதிக்காது அவைகள் தொடர்ந்தும் இடம்பெறும். இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு கிழக்கு ஜெருசலத்தில் மேற்கொண்டு வரும் எந்த அகழ்வு நடவடிக்கைகளையும் பாதிக்காது என்பதுடன் பேச்சு எந்த வகையிலும் சட்டவிரோத ஜெருசலத்தின் நில அகழ்வையும் தடுத்து நிறுத்தாது என்பது குறிபிடதக்கது.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு ஜெருசலம் பிரதேசத்துக்கு கீழாக கடந்த 40 ஆண்டுகளாக பலஸ்தீனர்களின் குடியிருப்புக்கள் , மஸ்ஜிதுகள் போன்ற வற்றை கீழால் ஊடறுத்து நிலத்தை அகழ்ந்து குடைந்து வருகின்றது. ஜெருசலத்தில் இதுவரை அகழப்பட்டுள்ள சுரங்கங்களை ஒன்றாக இணைத்து ஒரு பாரிய சுரங்க வலையமைப்பை துறக்கவும் வேலைகள் செய்துவருகின்றது .
இந்த சட்டவிரோத நில அகழ்வு மஸ்ஜிதுல் அக்ஸா பகுதியையும் விட்டுவைக்கவில்லை. இந்த அகழ்வினால் மஸ்ஜிதுல் அக்ஸா பகுதியில் ஆபத்தான நில வெடிப்புகளும் குழிகளும் தோன்றி வருகின்றது. தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு மஸ்ஜிதுல் அக்ஸாவின் அருகிலும் 65 மற்றும் 22 மீட்டர் அகலம் கொண்ட இரு நிலச் சுரங்க வழிகளை ஏற்கனவே அகழ்ந்துள்ளது. அதற்கு மேலதிகமாக பல இடங்களில் மறைமுகமாக அகழ்ந்து வருகின்றது. இவற்றை தொடங்கபோகும் அந்த பேச்சால் இடைநிறுத்தக் கூட முடியாது என்பது குறிபிடத்தக்கது. அப்படியான எந்த நிபந்தனைக்கும் இஸ்ரேல் உடன்படாது என்பதுடன் அமெரிக்கா அத்தகைய நிபந்தனைகளை ஏற்றுகொள்ளாது என்பது இஸ்ரேல் பலஸ்தீன் பேச்சுவார்த்தைகள் செல்லும் வரலாற்று செய்தி .
பலஸ்தீன அப்பாஸ் தலைமயிலான அரசாங்க அதிகாரிகள் இஸ்ரேலுடன் பலஸ்தீன மக்களுக்கு துரோகமிழைக்கும் வகையிலான பலஸ்தீன மக்கள் உரிமைகளை விற்பனை செய்யும் விதமாக கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் முன்னால் வெளிவிவகார செயலாளர் கோண்டோலீசா ரைஸ், இஸ்ரேல் வெளிநாட்டு அமைச்சர் லிவ்னி, பலஸ்தீன் முன்னால் பிரதமர் அஹ்மத் குரெய், பலஸ்தீன் பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் சாயிப் எறேகட் ஆகியோர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையில் PA_PLO அதிகாரிகள் மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலம் ஆகிய பகுதிகளில் பெரும் பகுதியை இஸ்ரேலுக்கு தாரை வார்க்க முன்வந்துள்ளனர் என்ற நம்பகமான இரகசிய தகவல்கள் வெளியானமை குறிபிடத்தக்கது.
இந்த செய்திகள் ஏன் அமெரிக்காவும் பிரிட்டனும் அப்பாஸ் நிர்வாகத்துடன் இஸ்ரேல் பேசவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது என்பதற்கு சிறந்த எடுத்து காட்டு. இதேவேளை கடந்த திங்கள் கிழமை 26.09.2011 இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமோன் பெரெஸ் பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ்தான் இஸ்ரேல் பேச்சு வார்த்தை செய்வதற்கு மிக சிறந்த தலைவர் என்றும் அவரை தனது நண்பர் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது .
அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா அமெரிக்காவில் இயக்கும் இஸ்ரேலிய முக்கிய அரசியல் அழுத்த அமைப்பான அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார அமைபப்பு- American Israel Public Affairs Committee (AIPAC) யின் வருடாந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஐநா சபையின் ஊடாக பலஸ்தீன் தேசத்தை உருவாக்க பலஸ்தீனர்கள் மேற்கொள்ளும் முயற்சியை நிராகரித்ததுடன் இஸ்ரேலை பாதுகாக்கும் இருபு அரணாக-ironclad- வொசிங்டன் இருக்கும் என்றும் தெரிவித்து தனது முழு விசுவாசத்தை இஸ்ரேலுக்கு காட்டினார்.
இப்படி உரையாற்ற சில தினங்களுக்கு முன்னர் ஒபாமா இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டில் தான் கொண்டிருந்த தனது எல்லைப் பகுதிக்கு திரும்பி செல்லவேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இஸ்ரேலிய அரசியல் அழுத்த குழுவின் முன்னாள் அவரின் சொந்த கருத்தில்  சில தினங்கள் கூட அவரால் இருக்க முடியவில்லை . இஸ்ரேலினால் வழிநடத்தப்படும் அரசியல் அழுத்த குழுவின் ஆளுமைக்கு உட்பட்டு தனது இஸ்ரேல் பக்கசார்பு விசுவாசத்தை AIPACயில் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டில் தான் கொண்டிருந்த தனது எல்லைப் பகுதிக்கு திரும்பி செல்லவேண்டும் என்ற அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தமைக்கு இஸ்ரேல் பிரதமர் பின்யமின் நேதன்யாஹு தனது கண்டனத்தை தெரிவித்ததுடன் இஸ்ரேலிய ஆதரவு அமைப்புகள் தமது வலுவான எதிர்ப்பை தெரிவித்தன விளைவு தனது தேர்தல் நடவடிக்கைகளுக்கு பெரும் பங்களிப்பு வழங்கிய யூதர்களின் அவையில் மீண்டும் ஒபாமா தனது இஸ்ரேல் விசுவாசத்தை நிரூபித்தார் என்பது குறிபிடதகக்து. தவறியிருந்தால் எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி இன்றி தவிக்க ஏன் தோல்வி காண நேரிடும் என்பது ஒபாமாவுக்கு தெரிந்த விடயம்.
இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாட்டை அமெரிக்காவும் , சியோனிசமும் உருவாக்கியது தற்போது அமெரிக்காவை சியோனிசம்தான் நிர்வகித்து வருகின்றது என்பதைத்தான் மேகண்ட சம்பவம் எடுத்து காட்டுகின்றது. அமெரிக்காவில் வெளிவரும் சர்வதேச மட்டத்திலும் பிரபல்யமான நியூ யோர்க் சஞ்சிகை Obama: America’s ‘first Jewish president’? ஓபாமா அமெரிக்காவின்    முதல் யூத ஜனாதிபதியா ? என்ற தலைமயில் ஒரு கட்டுரையை பதிவு செய்துள்ளது அந்த கட்டுரையை அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவுக்கு பிரதான நிதி வசூலிப்பவரான John Heilemann என்பவர் எழுதியுள்ளார். அந்த கட்டுரையில் அமெரிக்க ஜனாதிபதிகளில் இஸ்ரேலுக்கு கடும் போக்கு ஆதரவாளரான முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷை விஞ்சிவிட்டார் ஒபாமா என்று தெரிவித்துள்ளார் .
அரசியல் ராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்க படவேண்டும் அதேவேளை இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம் தொடரவேண்டும் என்ற உறுதியானதும் பொருத்தமானதுமான நிலைப்பாட்டிலும் செல்பாட்டிலும் ஹமாஸ் தொடந்து உறுதியா இயங்கிவருகின்றது. இரகசிய விட்டுகொடுப்புகளுக்கு உடன்படுவது பலஸ்தீனர்களுக்கு மட்டும் செய்யும் துரோகம் அல்ல முழு முஸ்லிம் உம்மாவுக்கும் செய்யும் துரோகம் என்று ஹமாஸ் நம்புகின்றது.
எல்லா ஒடுக்கு முறைகளையும் துப்பாக்கியில் இருந்து புறப்பட்டு  வரும் குண்டுகளினால் அடக்கி விடலாம் என்பதும். எல்லா அடக்கு முறைகளையும் வட்டமேசைப்  பேச்சுக்களினால் வென்றுவிடலாம்  என்பதும்  இஸ்லாமிய சிந்தனையல்ல.
Thanks: OurUmmah

வடக்கு பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தில் தீர்வு


முஹம்மத் ஜான்ஸின்
யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தொடர்ச்சியாக கூறி வருகின்றார். இந்த விடயத்தை சமுதாய நலன் விரும்பிகள் அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
யுத்தங்கள் மூலம் பாரிய உயிரழிவுகளை சந்தித்த ஒவ்வொரு நாடும் பிரதேசமும் இவ்வாறான வன்முறைகளை எதிர் நோக்கியதையே வரலாறு நமக்கு கற்றுத் தந்துள்ளது. முதலாம் உலக யுத்தத்தின் பின்னரும் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னரும் இவ்வாறான நிலமைகள் ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவையும் ஆட்கொண்டிருந்தன. இந்த யுத்தங்களில் பல மில்லியன் ஆண் படை வீரர்கள் மாண்டனர்.
இதனால் யுத்தத்தில் பங்கு பற்றிய நாடுகளில் ஆண்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் விபச்சாரம் தலை தூக்கியது. ஆண் துணையின்றி வாழ்ந்த பெண்கள் வல்லுறவுகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஆணுக்குப் பதில் குடும்ப சுமைகளை சமாளிக்க பெண்கள் வேலைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். வேலை செய்யுமிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்கள். இவ்வாறாக பெண்கள் மீதான தொடர் வன்முறைகள் தலைமுறை தலைமுறையான மேற்படி நாடுகளில் காணப்பட்டதால் பெண்கள் சமூகத்தில் தமக்கான அந்தஸ்தை இழந்து விட்டிருந்தனர். இந்த அடக்குமுறைகள் இறுதியில் பெண்களை பணிய வைத்து அவர்களின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளுக்கு வித்திட்டது. இன்று ஐரோப்பாவில் பெருமளவிலான பெண்கள் திருமணம் முடித்துக் கொள்ளாமல் காலத்துக்கு காலம் ஒவ்வொரு நபர்களுடன் குடித்தனம் நடத்துகின்றனர். பாடசாலை மாணவிகள் பாடசாலை காலங்களிலேயே கருவுற்று பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றனர்.
இன்று அமெரிக்காவில் இரண்டு நிமிடத்துக்கு ஒரு பெண் வல்லுறவு புரியப்படுகின்றாள். ஒரு நாளைக்கு 720 பேரும் ஒரு வருடத்தில் 263000 பேரும் பாலியல் வல்லுறவு புரியப்படுகின்றனர். இங்கிலாந்தில் இது நாளொன்றுக்கு 230 பேராகவுள்ளது. இலங்கையில் வருடமொன்றுக்கு 26000 முறைப்பாடுகள் கிடைப்பதாக பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் யுத்த அழிவுகள் கட்டுப்பாடற்ற கலாச்சாரம் மனித உரிமை என்ற பெயரில் ஆண்களை பாதுகாக்கும் சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டங்கள் போன்றனவாகும்.
இந்த நிலமை இன்று இலங்கையையும் ஆட்கொண்டுள்ளது. வடக்கு கிழக்கில் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் ஆயுதமேந்தி சண்டையிட்டு மாண்டனர். அதே போன்று ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களும் தமது உயிரை இழந்துள்ளனர். வடக்கு கிழக்கில் ஏறக்குறைய எழுபதாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் வாலிபர்களும் சிங்கள பிரதேசங்களில் அதேயளவிலான சிங்கள வாலிபர்களும் இறந்துள்ளனர். மேலும் ஏராளமானவர்கள் ஊணமுற்றவர்களாக திருமணம் முடிக்க முடியாத ஒரு நிலையில் வாழ்கின்றனர். யுத்த காலத்தில் நிலவிய அமைதி இன்மை காரணமாக ஆறு இலட்சம் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளிலும் கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குடியேறியுள்ளனர். அவர்களில் அரைவாசிப் பேர் திருமணமாகாதவர்கள். இவ்வாறான யுத்த உயிரிழப்புகள் மற்றும் புலம் பெயர்வுகளினால் உள்நாட்டில் ஆண்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. மறுபுறம் குடும்பங்கள் ஆண் தலைமையின்றி காணப்படுகின்றன.
இந்நிலையில் ஆண்களின் வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்களின் நிலமையினை ஆராய்ந்தால் தனியாக இருக்கும் பெண்களே அதிகமாக வன்முறைகளுக்கு உள்ளாவதைக் காணலாம். தனியாக அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்கள் தனியாக வீட்டிலிருப்பவர்கள் வீட்டில் ஆண் துணையின்றி இருப்பவர்கள் இவ்வாறான பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்கள் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ளவே செய்யும். அப்படியானால் தீர்வு என்ன என்று பார்த்தால் படிமுறையில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட வேண்டும்.
முதலாவதாக தனியாக இருக்கும் பெண்கள் விதவைகள் என்பவர்களுக்கு சட்டரீதியான துணைகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். புலம் பெயர் தமிழர்கள் அர்ப்பணிப்புடன் இந்த விடயத்தில் செயல்பட வேண்டும். வடக்கில் ஐந்து இலட்சம் பெண்களும் மூன்று இலட்சத்துக்கு சற்று கூடிய தொகையிலேயே ஆண்கள் உள்ளனர். எனவே தகுதியுள்ள வசதியுள்ள சில ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணமுடிக்க முடியும் .
இரண்டாவதாக இந்துக் கலாச்சாரத்தில் ஆண்களும் பெண்களும் அதிகளவில் 30 வயதுக்கு பின்பே திருமணம் முடித்துக் கொள்கின்றனர். ஆனால் பெண்களினதும் ஆண்களினதும் உணர்ச்சி நரம்புகள் 15 வயதிலேயே வேலை செய்யத் தொடங்கிவிடுவதுடன் அந்த உணர்ச்சிகளை அடக்குவதற்கான வாய்க்கால்களையும் அவை தேடவைக்கின்றன. அதனால் தான் சிறு வயதிலேயே பெண் பிள்ளைகள் முறைகேடாக நடந்து கொள்ள முயற்சிக்கின்றனர். எனவே காலம் தாழ்த்திய திருமணங்கள் தவறுகளுக்கு காரணமாக அமைந்து விடக்கூடியவை. எனவே 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் இருபது வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் திருமணத்தை முடிப்பதற்கு தகுதியானவர்களாக காணப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக திருமணத்தை முடித்து வைப்பதே சிறந்தது.
மூன்றாவதாக பெண்கள் தனியாக அலுவலகங்களில் வேலை செய்வதையே தனியாக பிரயாணங்கள் செய்வதையோ தவிர்க்க வேண்டும். வேலை வாய்ப்பை பெறும் அவசரத்தில் அதிகமான பெண்கள் தமது பாதுகாப்பு பற்றிய விடயங்களை மறந்துவிடுகிறார்கள். மேலை நாடுகளில் வல்லுறவு புரியப்படும் பெண்களில் 7 வீதமானோர் அலுவலகங்களில் வைத்தே வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
அடுத்ததாக பாடசாலைக்கும் தனியார் வகுப்புகளுக்கும் செல்லும் பெண் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் வகுப்புகளுக்கு ஒழுங்காக செல்கிறார்களா அவர்களது நண்பர்கள் யார் என்று ஆராய்ந்து அவர்கள் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறாக பெண்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள பல விதிமுறைகளை பின்பற்றும் அதேவேளை ஆண்கள் பெண்கள் விடயத்தில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். குற்றம் செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இஸ்லாத்தில் வல்லுறவு புரிபவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதால் அத்தண்டனைக்கு பயந்து பலர் குற்றங்களில் ஈடுபடுவதில்லை. விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண் பெண் இருபாலாருக்கும் பகிரங்கமாக வைத்து கசையடிகள் வழங்கப்படுகின்றன. ஆண்கள் நான்கு வரையான பெண்களை திருமணம் முடிக்க அனுமதிக்கப்படுவதால் விதவைகள் தனியாக உள்ள பெண்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கின்றது. முஸ்லிம் ஆண்கள் பெண்களுக்கு மஹர் எனும் மணமகள் கொடை கொடுப்பதால் பெண்களைப் பெற்ற குடும்பங்கள் வரதட்சனை பிரச்சினைகளை எதிர் நோக்குவதில்லை.
இந்து கலாச்சாரம் பலதார மணம்புரிதலை ஏற்றுக் கொள்வதில்லை. விதவைகளும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். ஆனால் இஸ்லாத்தில் விதவைக்கும் மறுமணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் முடிப்பதனூடாக விகிதாசார அடிப்படையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள நாடுகளில் அது ஒரு தீர்வாக அமைகின்றது. யுத்தம் என்பது இனியெப்போதும் வேண்டாம். இரண்டாம் உலக மகாயுத்தத்தில் அதிகமாக பிரித்தானிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதால் அங்கு ஆண்கள் குறைவடைந்து பெண்கள் அதிகமாகி அதனால் விபச்சாரம் போன்ற சமூகச் சீரழிவுகள் தலை தூக்கின. இதனால் ஆண்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து வரவழைக்கப் பட்டு பிரித்தானிய பெண்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டனர்.. மேலதிக பற்றாக்குறையை நிரப்பவே இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் திருப்பியழைக்கப்பட்டனர். இதனால் தான் இலங்கையும் இந்தியாவும் 1948இல் சுதந்திரம் பெற்றன.
இன்று அவ்வாறானதொரு நிலை தான் யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும் காணப்படுகிறது.எனவே இஸ்லாமிய வழிமுறைகளை இப்பிரதேசங்களில் உள்வாங்குவதன் மூலமாக அதிகரித்து வரும் பெண்கள் தொகையாலும் ஏனைய காரணங்களாலும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்பது நோக்கப்பட வேண்டும்.

thanks: Lankamuslim

المشاركات الشائعة