Search This Blog

Oct 30, 2010

இப்படிக்கு உன் அண்ணன்.........,


burka

பெண்ணாக பிறந்திருந்தால்
பெற்றிருப்பேன்
முதிர்க்கன்னிப் பட்டம்;
ஆணாக பிறந்ததினால்
உன்னை ஆளாக்க
அயல்நாட்டில் நான்!
என் வியர்வையை
உரமாக்கி அதில்
உன்னை உருவாக்க
கடன் கனத்ததால்
கடல் கடந்து
கடமை சுமந்து
எட்டாக்கனி கல்வியை
உனக்கு வளைத்துக் கொடுக்க
வளைகுடா வந்திருக்கேறேன்!
உன் கல்லூரிக்  கனவை;
நினைவாக்கிய நெகிழ்ச்சியில்
கனமானது மகிழ்ச்சியில் என் மனம்!
வட்டமிடும் வண்டுகள்
வாலிபத்தை நோக்கி
படையெடுக்கும் உன்னைச்சுற்றி
பல்லாங்குழி விளையாட!
மயங்கிவிடும் இளமையில்
கிறங்கி விடாதே பர்தாவை
கழட்டிவிடாதே!
மரணமே வந்தாலும்
கர்ணம் போடாதே ;
மார்க்கத்தில் புது
வர்ணம் தீட்டாதே!
குழந்தையல்ல உனக்கு
கதைச் சொல்லி வளர்க்க;
ஓடிப்போகும் குமரிகளின்
கதைகேட்டு கண்ணீர் வடிக்கும்
அண்ணன்கள் உண்டு ஏராளம் இங்கே!
சந்தேகமா என்று
சாட்டிவிடாதே என் மீதுக்
குற்றத்தை;
தரையில்கிடக்கும் தேனை
தடவிப்பார்த்து ருசிச்சொல்லும்
விஷமுள்ள வயது!
இரத்த நாளங்களில்
ஓடிக்கொண்டிருக்கும் ஷைத்தானை
வெல்வதற்கு பிடித்துகொள் ஈமானை!
by: யாசர் அரஃபாத்

ரிஷானாவின் கருணை மனு விவகாரம்:சவூதி மன்னரின் அதிகாரிகளிடம் ஜனாதிபதியின் கடிதம் கையளிப்பு


இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நஃபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி சவூதி அரேபிய மன்னருக்கு எழுதிய கருணை மனு மன்னரின் அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி கையெழுத்திட்ட கருணை மனு சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக கருணை மனுவை ஏற்கும் மன்னரின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு விட்டதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார். இது தொடர்பில் சவூதி அரசிடமிருந்து பதிலை எதிர்பார்த் திருப்பதாகவும் அவர் கூறினார்.திருகோணமலை மூதூரைச் சேர்ந்த ரிஷானா நஃபீக் சவூதியில் பணிப் பெண்ணாகத் தொழில் புரிந்த வீட்டு எஜமானரின் கைக்குழந்தையைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டி அவருக்கு சவூதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
இதனையடுத்து ரிஷானாவின் மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு பல மனித உரிமை அமைப்புகள் மனுச் செய் திருந்தன.
இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இவற்றை நிராகரித்த சவூதி உயர் நீதிமன்றம் ரிஷானாவுக்கான மரண தண்டனையை ஊர்ஜிதம் செய்துள்ளது. இந்நிலையில், ரிஷானா எந்தவேளையிலும் தூக்கிலிடப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
எனவே, இது விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு ரிஷானாவை மன்னிக்குமாறு சவூதி மன்னருக்கு கருணை மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளார். இந்த மனு இலங்கையிலுள்ள சவூதி தூதரகத்திற்கும் சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
சவூதியிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள், மன்னரின் அதிகாரிகளிடம் கையளித்து விட்டதாகவும் அவர் கூறினார்.
Thinakaran.

Oct 29, 2010

பிரிட்டனில் பிறக்கும் குழந்தைகளுக்கு இடும் பெயர்களில் 'முஹம்மது' என்ற பெயர் முதல் இடத்தைப் பிடித்திருக்கி ன்றது.


பிரிட்டனில் பிறக்கும் குழந்தைகளுக்கு
 இடும் பெயர்களில் 'முஹம்மது' என்ற
 பெயர் முதல் இடத்தைப் பிடித்திருக்கி
ன்றது.
டெய்லி மெய்ல், 28 அக்டோபர்
 2010 ல் வெளியான செய்தி:
பிரிட்டனில் பிறக்கும் குழந்தைகளுக்கு
 இடும் பெயர்களில் 'முஹம்மது' என்ற
 பெயர் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.
 
கடந்த 2008-ம் வருடத்தில் மூன்றாவது இடத்தில்
 இருந்த இந்த பெயர் 2009 ல் அதுவரை
 முதன்மையாக இருந்து வந்த 'ஜாக்' மற்றும்
 'ஹாரி' போன்ற பெயர்களை புறந்தள்ளிவிட்டு
 முதலாவது இடத்திற்கு உயர்ந்திருக்கின்றது.

2009ல் பிறந்த குழந்தைகளில் 7549
 குழந்தைகளுக்கு இறைத்தூதரான 'முஹம்மது'
 (ஸல்) அவர்களின் பெயர்இடப்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் சர்வதேச புத்தகக் கண்காட்சி

October 28, 2010, AL-IHZAN World News
ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி (http://www.sharjahbookfair.com/) ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் நேற்று துவங்கியது. இது அடுத்த மாதம் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த புத்தகக் கண்காட்சியை நேற்று காலை 10 மணி அளவில் ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி திறந்து வைத்தார். இதனை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இக்கண்காட்சியில் உலகெங்கிலும் இருந்து 789 புத்தக நிறுவனங்களின் புத்தககங்களும், 53 நாடுகளில் இருந்து 200,000 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் உள்ள புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.

இதில் இந்தியாவிலிருந்து மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் தன்னாட்சியுடன் செயல்பட்டு வரும் தேசிய புத்தக நிறுவனம்
 (http://www.nbtindia.org.in/), கேரளாவைச் சேர்ந்த புத்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இந்திய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

தேசிய புத்தக நிறுவனத்தின் துணை இயக்குநர் அனில் கண்ணா அவர்கள் இந்தக் கண்காட்சிக்கு இந்திய மக்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் வருகை தந்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பொழுதுபோக்கு அம்சங்கள், இலக்கியச் சங்கமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இக்கண்காட்சியினையொட்டி நடைபெற்று வருகின்றன.




Oct 28, 2010

ஆமினா அசில்மி பெண் சாதனையாளர்


ஆமினா அசில்மி பெண் சாதனையாளர்



ஆமினா அசில்மி (Aminah Assilmi), மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞர். அமெரிக்காவைச் சார்ந்த சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர் (International Union of Muslim Women ).
ஆமினா அசில்மி, இந்த பெயரை கேட்டாலே இவரைப்பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு புது உற்சாகம் பிறக்கும். ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்ட பிறகு கடந்த 33 ஆண்டுகளாக இவர் செய்து வரும் இஸ்லாமிய சேவைகள் அளப்பறியது. சொல்லி மாளாதது. பல முஸ்லிம்களுக்கு இவருடைய வாழ்கை பயணம் ஒரு பாடம். அதைத்தான் இங்கு காண இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.
“நான் முஸ்லிம் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன். இஸ்லாம் என்னுடைய இதயத்துடிப்பு. இஸ்லாம் என்னுடைய பலம். இஸ்லாம் இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை. அல்லாஹ், அவனுடைய மகத்தான கிருபையை என்னிடம் காட்டாவிட்டால் என்னால் வாழ முடியாது” —– ஆமினா அசில்மி
ஆமினா அசில்மி அவர்கள் கிறிஸ்துவ பின்னணியில் (Southern Baptist) இருந்து வந்தவர், தன் கல்லூரி காலங்களில் ஒரு மிகச்சிறந்த மாணவியாக திகழ்ந்தவர், பல விருதுகளை பெற்றவர்.
ஒரு கணினி கோளாறு இவருடைய வாழ்க்கையை திருப்பி போட்டது.
அது 1975ஆம் ஆண்டு. முதன் முதலாக ஒரு வகுப்புக்கு முன்பதிவு செய்ய கணினி பயன்படுத்திய நேரம். ஆமினா அவர்கள் தான் சேர வேண்டிய வகுப்புக்கு தன் பெயரை முன் பதிவு செய்து விட்டு தன் தொழிலை கவனிப்பதற்காக ஒக்ளஹோமா (Oklahoma) சென்று விட்டார். திரும்பி வர தாமதமாக, வகுப்பு துவங்கி இரண்டு வாரம் சென்ற பிறகே வந்து சேர்ந்தார். விட்டு போன வகுப்புகளை வெகு சீக்கிரமே கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஏனென்றால், கணினி தவறுதலாக வேறொரு வகுப்பில் அவரை முன்பதிவு செய்திருந்தது. அந்த வகுப்பு தியேட்டர் (Theatre) வகுப்பு என்று அழைக்கபட்டது, அந்த வகுப்பில் அடிக்கடி அனைத்து மாணவர்கள் முன்பு பேச வேண்டிருந்தது. இயல்பாகவே ஆமினா அவர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டிருந்ததால் இந்த வகுப்பில் சேர மிகவும் அஞ்சினார்.மிகவும் தாமதம் என்பதால் இந்த வகுப்பை புறக்கணிக்க முடியாத நிலை. மேலும் இந்த வகுப்பை அவர் புறக்கணித்தால் அவர் பெரும் ஸ்காலர்ஷிப்பை இழக்க வேண்டிய நிலை வரலாம். ஆகவே இந்த வகுப்பில் சேருவதென முடிவெடுத்தார்.
அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற அவருக்கு மாபெரும் அதிர்ச்சி. அந்த வகுப்பு முழுவதும் அரேபிய மாணவர்கள். அவ்வளவுதான். இனிமேல் வகுப்பிற்கு செல்ல கூடாதென முடிவெடுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்
“அந்த நாகரிகமற்ற அரேபியர்களுடன் படிக்க மாட்டேன்”
ஆமினா அவர்களின் கணவர் அவருக்கு ஆறுதல் கூறினார், இறைவன் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்குமென்று. அமீனா அவர்கள் இரண்டு நாட்கள் வீட்டின் அறையில் அடைந்து இருந்தார். அறையை விட்டு வெளியே வந்த அவர் சொல்லியது
“நான் அவர்களுடன் சேர்ந்து படிப்பேன். மேலும் அவர்களை கிறிஸ்துவராக்குவேன்”
இறைவன் இந்த அரேபியர்களை மதம் மாற்றுவதற்காகவே தன்னை அவர்களுடன் சேர வைத்ததாக நம்பினார். அரேபியர்களுடன் சேர்ந்து படிக்க தொடங்கினார். அவர்களுக்கு கிருஸ்துவத்தை எடுத்துரைத்தார்.
” நான் அவர்களிடம் சொல்லுவேன், ஏசுவை மீட்பராக ஏற்காவிட்டால் எப்படி அவர்கள் நரகத்தில் வதைக்க படுவார்கள் என்று…நான் சொல்வதை அவர்கள் கவனமாக கேட்டுக்கொண்டார்கள். மிகுந்த கண்ணியம் காட்டினார்கள். ஆனால் மதம் மாறவில்லை. பிறகு நான் அவர்களிடம் ஏசு கிறிஸ்து எவ்வளவு ஆழமாக அவர்களை நேசிக்கிறார் என்று விளக்கினேன். அப்பொழுதும் அவர்கள் என் பேச்சை சட்டை செய்யவில்லை”
பிறகு ஆமினா அசில்மி அவர்கள் ஒரு முடிவெடுத்தார்கள்…
“நான் அவர்களுடைய புனித நூலை படிப்பதென முடிவெடுத்தேன், இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கம், முஹம்மது ஒரு பொய்யான தூதர் என்று நிரூபிப்பதர்க்காக”
ஆமினா அசில்மி அவர்களின் வேண்டுதலின் பேரில் ஒரு மாணவர் குரானையும் மற்றுமொரு இஸ்லாமிய புத்தகத்தையும் கொடுத்தார். இந்த இரண்டு புத்தகங்களையும் அடிப்படையாக வைத்து தன் ஆராய்ச்சியை தொடங்கினார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் முடிவில் மேலும் பதினைந்து இஸ்லாமிய புத்தகங்களை படித்து முடித்திருந்தார். அப்பொழுதெல்லாம் குரானில் தான் எது சர்ச்சைக்குரியதோ என்று நினைக்கிறாரோ அதையெல்லாம் குறிப்பெடுத்து கொள்வார், இஸ்லாம் பொய் என்று நிரூபிப்பதர்க்காக. ஆனால் குரானின் மூலம் தனக்குள் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.
” நான் மாறி கொண்டிருந்தேன், சிறிது சிறிதாக, என் கணவர் சந்தேகம் படுமளவிற்கு. நாங்கள் ஒவ்வொரு வெள்ளியும் சனியும் பார் (BAR) மற்றும் பார்ட்டிகளுக்கு சென்று கொண்டிருந்தோம். ஆனால் நான் இனிமேலும் அங்கு செல்ல விரும்பவில்லை. அது போன்ற இடங்களில் இருந்து என்னை தனிமை படுத்தினேன்.”
பன்றி இறைச்சி மற்றும் குடியை நிறுத்தி விட்டார். இது அவருடைய கணவரை சந்தேகம் கொள்ள செய்தது. தன்னை விட்டு செல்லும்படி சொல்லிவிட்டார். ஆமினா அசில்மி அவர்கள் தனி வீட்டில் வசிக்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது மேலும் இஸ்லாத்தை பற்றி ஆராயச் செய்தார்கள்.
அப்பொழுது அவர்களுக்கு அப்துல் அஜீஸ் அல் ஷேய்க் என்பவரது அறிமுகம் கிடைத்தது.
“அவரை என்னால் மறக்க முடியாது. நான் இஸ்லாத்தை பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மிக பொறுமையாக அறிவுப்பூர்வமாக பதிலளித்தார். அவர், என்னுடைய கேள்வி தவறானது என்றோ, முட்டாள்தனமானது என்றோ ஒரு பொழுதும் கூறியதில்லை. சிறிது சிறிதாக என்னுடைய சந்தேகங்கள் விலகின”
1977, மே 21இல், அப்துல் அஜீஸ் மற்றும் அவரது தோழர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை அமீனா அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
” இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்”
“நான் முதன்முதலாக இஸ்லாத்தை படிக்க தொடங்கியபோது, எனக்கு இஸ்லாத்தினால் தேவை என்று ஒன்று இருந்ததாக நினைவில்லை. இஸ்லாமும் என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் முன்பிருந்ததைவிட இப்பொழுதோ என் மனதில் சொல்லமுடியாத ஒரு வித அமைதி, மகிழ்ச்சி. இதற்க்கெல்லாம் காரணம் இஸ்லாம் தான்”
இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. ஆமினா அசில்மி அவர்களின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப் பார்த்தார். அவரது தந்தையோ ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள்.
குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப் அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும் சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும் அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே.
இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே.
ஆமினா அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால் ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.



Lauren Booth

லண்டன்: இங்கிலாந்து [^] முன்னாள் பிரதமர் [^] டோனி பிளேரின் மைத்துனியான லாரன் பூத் இஸ்லாமுக்கு மதம் மாறியுள்ளார். இதை அவரே அறிவித்துள்ளார்.Ads by Google
Free Islamic Content  www.yuumuslim.com
1 week free directly to your mobile 28 SAR Max pm, in KSA

பிளேரின் மனைவி செரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரிதான் இந்த பூத். பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆவார். சமீபத்தில் ஈரான் சென்றிருந்த அவர் அங்கு இஸ்லாம் மதத்தின்பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாமியராக மாறியுள்ளார்.

உலக அளவில் பிரபலமாகி வரும், ஈரான் தொடங்கியுள்ள 24 மணி நேர ஆங்கில சர்வதேச தொலைக்காட்சியான பிரஸ் டிவியில் இவர் பத்திரிக்கையாளராகப் பணியாற்றுகிறார். அமெரிக்க, இங்கிலாந்து ஆதரவு சிஎன்என், பிபிசி போன்றவற்றுக்குப் போட்டியாக அறிமுகமான பிரஸ் டிவி தற்போது உலக அளவில் பிரபலமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பூத் ஒரு மனித உரிமை ஆர்வலரும் கூட.

சமீபத்தில், இஸ்லாமியர்கள் பலரும் கலந்துகொகண்ட உலக அமைதி மற்றும் ஒற்றுமை என்ற பெயரிலான பேரணியில், பூத்தும் கலந்து கொண்டார். அப்போதுதான் அவர் மதம் மாறியிருக்கலாமோ என்ற பேச்சு எழுந்தது. தற்போது அதை உறுதிப்படுத்தியுள்ளார் பூத்.

43 வயதாகும் பூத், இதுகுறித்து இங்கிலாந்து மீடியாக்களிடம் கூறுகையில், ஈரானில் உள்ள ஒரு தர்காவில் ஆறு வாரங்களுக்கு முன்பு எனக்கு அருமையான இறை அனுபவம் கிடைத்தது. அதன் பின்னரே நான் இஸ்லாம் மார்க்கத்தின் பால் ஈர்க்கப்பட்டேன். இப்போது நான் தினசரி ஐந்து வேளை தொழுகிறேன். சில சமயம் மசூதிக்கும் போகிறேன். கடந்த 45 நாட்களாக நான் ஆல்கஹால் கலந்த பானம் எதையும் அருந்தவில்லை என்றார்.

தற்போது வெளியில் செல்லும்போது முஸ்லீம் பெண்களைப் போல தனது தலையைச் சுற்றிலும் துணி கட்டிக் கொள்கிறார் பூத். எதிர்காலத்தில் புர்க்கா அணியவும் முடிவு செய்துள்ளாராம். குரானை தினசரி படிக்கிறாராம்.

தனது இந்த மதமாற்றம் சர்ச்சைகளை ஏற்படுத்தலாம் என்பது தனக்குத் தெரியும் என்று கூறும் பூத், ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினையுண்டு என்பதை நான் அறிவேன் என்கிறார்.

பூத்தின் மதமாற்றம் குறித்து செரி பிளேரும், டோனி பிளேரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

டோனி பிளேரே 2007ம் ஆண்டு வரை சர்ச் ஆப் இங்கிலாந்தில் உறுப்பினராக இருந்தவர்தான். அதன் பின்னர்தான் அவர் ரோமன் கத்தோலிக்கராக மாறினார். செர்ரி பிளேர் ஆரம்பத்திலிருந்தே ரோமன் கத்தோலிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பூத், மார்னிங் ஸ்டார் என்ற கம்யூனிஸ்ட் நாளிதழில் ஒரு கட்டுரை [^] எழுதியிருந்தார். அதில், டோனி பிளேரை கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், பாலஸ்தீனத்தின் ரபா, நபுலஸ் ஆகிய நகரங்களில் இஸ்ரேலின் தாக்குதல்களில் உயிரிழந்து போன தங்களது உறவினர்களின் உடல்கள் மீது விழுந்து அழும் தாய்மார்களி்ன் கண்ணீரை டோனி பிளேர் மறந்து விட்டார். குறைந்தபட்சம், இந்த நகரங்களின் பெயர்களாவது அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. இந்த நகரங்களைச் சேர்ந்த எத்தனையோ தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை இழந்து பரிதவித்து கண்ணீரில் மூழ்கியுள்ளனர். இஸ்ரேலின் இந்த ராட்சத கொடூரத் தாக்குதல்களை அங்கீகரிக்கிறீர்களா பிளேர் என்று காட்டமாக கேட்டிருந்தார்.
Ads by Google Thank: Thatstamil.onindia.in/

ரிசானாவின் உயிரைக் காக்கக் கோரிக்கை.

ரிசானாவின் உயிரைக் காக்கக் கோரிக்கை


ஒக்டோபர் 27, 2010 சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா நஃபீக்குக்கு மன்னிப்பு வழங்கக் கோரும் மனுவொன்றில் கையொப்பங்கள் பெறும் செயற்றிட்டமொன்று இன்று கண்டியில் நடைபெறவுள்ளது.

கண்டி நகரத்திலுள்ள பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடம் ரிஸானாவை விடுதலை செய்வதற்கான மனுவில் கையொப்பங்கள் பெறப்படவுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினரும் சிரமசக்தி அமைப்பின் தலைவியுமான சாந்தினி கோங்காகே குறிப்பிட்டுள்ளார்.

இன்று மஹியாவைக் கிராமத்தில் அவரின் விடுதலை வேண்டி மத வழிபாடொன்றும் நடைபெறவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

ரிசானாவினால் உயிரிழந்ததாகக் கூறப்படும் குழந்தையின் பெற்றோரிடம் அவரின் உயிரைக் காப்பாற்றுமாறு மஹியாவை மக்கள் இன மத வேறுபாடின்றி வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை சவூதி அரேபிய உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப் பெண்ணான ரிஸானாவுக்கான தண்டனை தொடர்பில் கருணை காட்டுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடித மூலம் கோரியுள்ளார்.

இக்கடிதத்தை நேற்றுக் காலை சவூதி அரேபிய மன்னர்அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஷுக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ளார் என அரச தகவல் திணைக்களம் கூறுகிறது.

2005 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சவூதி சென்ற மூதூரைச் சேர்ந்த ரிஸானா நஃபீக் தனது எஜமானரின் குழந்தைக்குப் புட்டிப்பால் கொடுக்கும் போது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது.

குழந்தையை ரிஸானா கொலை செய்துவிட்டதாகச் சம்பந்தப்பட்ட எஜமானர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கை விசாரணை செய்த சவூதியிலுள்ள தவாமி மேல் நீதிமன்றம் இவருக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

இதனை ரியாத் உயர்நீதிமன்றமும் அங்கீகரித்திருந்தது.

இந்தத் தீர்ப்புத் தொடர்பாக ரிசானாவின் குடும்பத்தினர் முன்வைத்த மேன் முறையீட்டு மனு சவூதி உயர் நீதி மன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சட்டரீதியாக ரிசானா சார்பில் மேலும் மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லாது போயுள்ளன.

இந்நிலையிலேயே ரிஸானா விடயத்தில் கருணை காட்டுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னரிடம் வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார்.
Thanks :http://www.shakthienews.com/index.php?option=com_content&view=article&id=4031:2010-10-27-05-51-21&catid=85:news-item-1

Oct 27, 2010

Lauren Booth இஸ்லாத்தை ஏற்றுகொண்டுள்ளார் ?


பலஸ்தீன விடுதலைக்கு குரல் கொடுக்கும்  மேற்கு உலக பெண்களில் மிகவும் பிரபல்யமானவர்களின் ஒருவரான Lauren Booth இஸ்லாத்தை ஏற்றுகொண்டுள்ளதாக அறிவித்துள்ளார் இவர் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமரான டோனி பிளயர் -Tony Blair-மனைவியின் சகோதரியாவார், இவர்  பலஸ்தீன் காஸா மீதான இஸ்ரேல்  ஆக்கிரமிப்பு முற்றுகைக்கு எதிராக  பலமாக குரல் கொடுத்து வருபவர் என்பது குறிபிடத்தக்கது  லண்டனில் நடைபெற்றுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொண்டு தான் ஒரு முஸ்லிம் என்று தெரிவித்துள்ளார் இவரின் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது -Lauren Booth பலஸ்தீன் பற்றிய வீடியோ


பணிக்கனும் பணத்தாளும்: ஒரு சுவையான தகவல்


பணிக்கனும் பணத்தாளும்: ஒரு சுவையான தகவல்

எச்.எம்.எம்.பஷீர்
ஆயிரம் ரூபாய் நாணயத்தாளின் பின்னாலுள்ள ஆச்சரியகரமான விஷயம் என்ற தலைப்போடு ஒரு செய்தி பெப்ரவரி மாதம் இலங்கை தொடர்பான இணையத்தளமொன்றில் பிரசுரமாகியிருந்தது. ஆனால் அதற்கு முன்னரே ஏறாவூர் வரலாறு பற்றி  எழுதப்பட்ட நூலொன்றில் (2005) இது பற்றி விரிவாகவே எழுதப்பட்டுள்ளது என்பதுடன் ஆங்கிலத்தில் வெளியான செய்திகுறிப்பும் அன்னூலில் வெளியான தமிழ் குறிப்பின் ஆங்கில மொழியாக்கமாகவே காணப்பட்டது. ஆங்கிலத்தில் வெளியான அக்குறிப்புரையை இங்கு மொழிபெயர்த்து உங்களின் வாசிப்புக்கு விட்டுவிட்டு அது பற்றிய சில செய்திகளையும் பார்ப்போம்.
“ஆவினங்கள் வாழ அறமுயர்ந்து சாவி எழப்
பாவானர் பாடப் பல்லுரெல்லாம் வாழ்க!
மாத்தில் மூன்று மழை மட்டுநகர் பெய்துவர
என்றார் பணிக்கர் குலத்திப னேந்திடம்
கண்டறிந்து மாயவன் கருணைதனை யுண்மை யென்று
‘விமலதரு மனென்’ னும் வேந்தனாக மகிழ்ந்து
கமல விழிக் கண்ணன் கருணை தங்குமிப்பதிக்கு
வேண்டும் வயல் நிலமும் வெள்ளிக் களஞ்சியமும்
தூண்டு திகிழி தந்தம் சோதியெழ யீந்து மன்னன்
‘கண்டி நகர்’ சென்றான் காசினியோர் தாமறியப்
பண்டு முற்ற என்றென்றுர் காசினியோர் தாமறியப்
பண்டு முற்ற என்றென்றுர் பார்”.
( தாதன் கல்வெட்டு )
“எங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ஆயிரம் (இலங்கை)  ரூபாய் நாணயத்தாளில் பிரசுரிக்கப்பட்டுள்ள யானையுடன் பக்கத்தில் தொப்பி அணிந்து காணப்படுபவருக்கு பின்னால் ஒரு ஆச்சரியமான கதை உண்டென்று யாருக்காவது கற்பனை பண்ணமுடியுமா அந்த யானையும் அதனருகே தொப்பி அணிந்து நிற்கும் மனிதனும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்த மனிதன் ஒரு முஸ்லிம் என்றும்  ஆம் அந்த கொம்பன் யானையும் மனிதனும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களே. அந்த மனிதர் மாட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர் என்ற இடத்தை சேர்ந்த உமறு லெப்பை பணிக்கர்; அந்த நாணயத்தாளிலுள்ள கொம்பன் யானை 1925ம் ஆண்டு ஏறாவூர் காட்டுபகுதியில் பிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதாகும்.
உமர் லெப்பை பணிக்கர் இந்த கொம்பன் யானையை தலதா மாளிகாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சிறிது காலத்திற்குள் அந்த யானை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் அது அங்கிருந்து ஏறாவூருக்கு அவரை (உமர் லெப்பை பனிக்கரை) தேடிச் சென்றதாக சொல்லப்படுகிறது. அந்த யானையை மீண்டும் அங்கிருந்து அவர் மீண்டும் தலதா மாளிகாவுக்கு கொண்டு வந்து கொடுத்தார்.
ஜனாதிபதி ஜே .ஆர். ஜெயவர்த்தனா அந்த கொம்பன் யானையின் நீண்ட கால சேவைக்காக அதனை கவுரவிக்கும் முகமாக யானையை தேசிய சொத்தாக பிரகடணப்படுத்தினார்.ராஜா என்று பெயரிடப்பட்ட இந்த கொம்பன் யானை கண்டியில் எசல பெரஹர பவனிகளின் போது அலங்கரித்தமைக்காக தேசிய பிரபலம் பெற்றதுடன் தேசிய ரீதியிலும் கவுரவிக்கப்பட்டது,
தலதா மாளிகாவையில் சேவையாற்றிய கொம்பன் யானை ராஜா தனக்கு மட்டுமல்ல தன்னை அன்பளிப்பு செய்த நபருக்கும் அவரது கிராமாமான ஏறாவூருக்கும்  பிரபலத்தையும் கவுரவத்தையும் கொண்டு வந்து  ஐம்பது வருடங்களுக்கு மாளிகாவையில் சேவையாற்றி  15 ஜூலை 1988ல்   இறந்துபோனது.
அதன்பிறகு ஆட்சியிலுள்ள அரசு தலதா மாளிகாவுக்கு அந்த கொம்பன் யானையை தலதா மாளிகை பெற்றுக்கொள்ள காரன‌மான  நபரை கவுரவிக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள் , அதற்காக அந்த கொம்பன் யானையையும் அதற்கருகில் உமர் லெப்பை பணிக்கரையும் ஆயிரம் ரூபாய் தாளில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் ஏறாவூர் கிராமமும் கவுரமும் பெற்றது. இப்போதும் இவ்வாயிரம் ரூபாய் புழக்கத்தில் இருந்து வருகிற‌து.
காடுகளில் யானையை பிடித்து வளர்த்து பாரமான பொருட்கள் மூலப்பொருட்கள் என்பவற்றை எடுத்துச்செல்லும் அல்லது இடம் பெயரச் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு விற்கின்றவர்களே பணிக்கர் எனப்படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது. அவர்களின் சந்ததியினர்  இன்றும் “பணிக்கர் தத்தி” அல்லது “பணிக்கர் கத்தற”  (பணிக்கர் குடும்பத்தினர் அல்லது பரம்பரை) என்று ஏறாவூரில்  அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஏறாவூரில் அவர்களின் பெயரால் பணிக்கர் வீதி என்று   ஒரு வீதி ஏறாவூரில் உள்ளது
இந்த யானை பன்னிரெண்டு வயதில் உமர் லெப்பை பணிக்கரால் பிடிக்கப்பட்டதென்றும்  முறையாக அதனை விற்பனை செய்யும் சட்ட விற்பனைக்கான ஆவணம் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகை பணத்துக்காக அந்த கொம்பன் யானை ஆனால் அதை வாங்கிய நீதி திறை நிர்வாகியான கண்டி யட்டினுவர திஸ்ஸாவ  டிக்கிரி பன்டா மாம்பிட்டிய என்பவர் 1937ம் ஆண்டு ஆகஸ்து மாதம் 22ம் திகதி அதனை தலதா மாளிகாவையின் பொறுப்பாளரான தியவதன நிலமேயிடம் சம்பிரதாயபூர்வமாக  அன்பளிப்பு செய்தார். இந்த யானயை கேகால்ல வரை கொண்டு செல்ல அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருப்பதனை அறியமுடிகிற‌து.  உமர் லெப்பை பணிக்கர் விற்ற இன்னுமொரு யானையான கன்டா எனப் பெயரிடப்பட்ட யானையும் அதே காலப்பகுதியில் டிக்கிரி பன்டா வாங்கியிருந்தார் என்பதுடன் அந்த யானையையும் அவர்  அந்த நிகழ்விலே தலதா மாளிகாவுக்கு அன்பளிப்பு செய்துள்ளார் என்ற குறிப்பு ஆங்கில பிரயான எழுத்தாளர் ஒருவரின் குறிப்புரையில் காணப்படுகிறது  மேலும் இவ்யானைகள் புகையிரதம் மூலமே  கடுகண்ணாவைக்கு  கொன்டுவரப்பட்டன என்றும் சில குறிப்புகள் உள்ளன. எது எப்படி இருப்பினும் இந்த யானை தப்பி ஓடி உமர் லெப்பை பணிக்கரை தேடி ஏறாவூர் சென்ற கதை குறித்து ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை ஆனால் நான் விசாரித்தறிந்த தகவலின்படி யானை பிடித்த சில நாட்களிள் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டதாகவும் அதனால் உமர் லெப்பை பனிக்கரின் தந்தையார் சினம் கொன்டு தந்து மகன் உமர்லெப்பை பணிக்கரை மீன்டும் அதனை எப்படியாயினும் பிடித்துவர வேன்டும் என்று வற்புறுத்தியதாகவும் யானை தப்பி ஓடிய உடனேயே காட்டிற்குள் தேடிச்சென்று பிடித்து வந்ததாகவும் ஒரு கதை உண்டு.
இலங்கையில் சிவில் யுத்தம் முடிந்து பயங்கரவாத புலிகள் அழிக்கப்பட்டபின் யுத்த வெற்றியை முன்னிட்டு அரச அதிபர் மகிந்த ராஜபக்ச ஒரு பக்கத்தில் தனது உருவமும் மறு புறத்தில் இராணுவ வீரர்கள் கொடி நாட்டுவதுமான படத்துடன் கூடிய ஆயிரம் ரூபாய் நானயத்தாள் வெளியிட்டார்.
கண்டி ஆட்சி நிர்வாகத்தின் கீழேயே திருகோணமலை மட்டக்களப்பு உட்பட்ட கிழக்கு கரையோரப் பிரதேச பகுதிகள் இருந்துவந்துள்ளன.மட்டக்களப்புக்கு மாருத சேனனுடைய புத்திரன் எதிர்மன்னசிங்கம் சிற்றரசனாக இருந்த காலத்தில் பட்டிருப்பு திரெளபதை அம்மன் ஆலயத்தை பற்றிய இன்னுமொரு கல்வெட்டுக் குறிப்பும் காண‌ப்படுகிறது. அதன்படி எதிர்மன்னசிங்கம் ஒரு பணிக்கன் என்பதையும் அவனின் ஆட்சி காலத்தில் கி.பி 1600 பிற்பகுதிகளில் கண்டிய அரசனாகவிருந்த விமலதர்மசூரியன் 1 ( கோனப்பு பன்டார , டொன் ஜுஆன் எனவும் இவன் கண்டி அரசனாக முடிசூட முன்னர் அறியப்பட்டவன்) இவனே பட்டிருப்பு ஆலயத்திற்கும் காணி மற்றும்  பல நண்கொடைகளை வழங்கியிருந்தான் என தாதன் கல்வெட்டுப்பாடல் ஒன்றை திரெளபதை அம்மன் இணையத்தளம் குறிப்பிடுகிறது.
எனவே இங்கு சொல்லப்படும் பணிக்கர் குல அரசன் யுத்த பயிற்சியாளனாகவோ அல்லது யானையை பிடிக்கும் தொழில் செய்பவர்களில் ஒருவனாகவிருக்கலாம். ஆனால் மட்டக்களப்பில்  பணிக்கனாகுடி, பணிக்கனர்குலம் என்பன சாதி அடிப்படியிலான சமூகப்பிரிவாகவிருந்தன என்பதையே அவதானிக்க முடிகிறது , ஆயினும் அவை யானை பிடிக்கும் தொழில் செய்பவரின் சமூக பிரிவினரைக் குறித்து சொல்லும் சொல்லாக பாவிக்கப்படவில்லை.
பொன்னியின் செல்வன் என்ற கல்கியின் நாவலில் பொன்னியின் செல்வன் ( இளவரசன் ) யானைப்பாகனாக மாறு வேடமிட்டு இருப்பதை அவனது இரு உதவியாளர்களில் ஒருவர் அடையாளம் கண்டவுடன் இளவரசனை பாகன் என்று அழைப்பதை மரியாதைக்குறைவாக கருதி அதன் படைப்பாளி கல்கி “பாகர்” என்று ஆள் பார்த்து தகுதி பார்த்து மரியாதைப்படுத்தி குறிப்பிட்டுள்ளார் போல் தோன்றுகிறது. பணிக்கன் என்றும் பணிக்கர் என்றும்  என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கும் பனிக்கர் குலத்தில் அரசர்கள் இருந்ததும் ஒரு காரனமாக இருந்திருக்கலாம்.  என்பது ஒருபுறம் இருக்கட்டும். பாகன் என்பவன் யானையை தன் சொற்படி கேட்டு நடக்கப் பழக்கிவைத்திருப்பவர் மட்டுமே குறிக்கும். ஆனால் பணிக்கன் யானையை சாதுரியமாக பிடிப்பவன் , பிடித்து அதனை மனித உபயோகத்திற்கு பயிற்றுவிப்பவன் வர்மம் எனும் தற்காப்பு கலையில் (Martial Art) தேர்ச்சி பெற்றவனையும் பயிற்றுவோனையும் ஆசானையும் (Trainer)  யுத்த பயிற்சி அளிக்கும் பயிற்றுனரையும் கூட பணிக்கர்  அல்லது பணிக்கன் என்று சொல்லப்படுவதுன்டு.  . ஏனெனில் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் ( வடக்கிலும் கிழக்கிலும்)  யானை பிடித்து பராமரித்தவர்கள் பணிக்கன் என்ற குலமாக  அழைக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. ஆனால் யானை பிடித்த சமூகத்தினர் தமிழர்களோ முஸ்லிம்களோ பொதுவாக பணிக்கர் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வரவேண்டி உள்ளது
தென்பாண்டி நாட்டில் மாநாடு என்ற பகுதியை கி.பி எட்டாம் நூற்றாண்டளவில் ஆண்ட செண்பக பெருமாள் எனும் குறுநில மன்னன் வர்மக்கலையில் தேர்ச்சி பெற்றவன் என்றும் அதனால் பணிக்கன் எனவும் அழைக்கப்பட்டுள்ளான். இவனுடைய காலத்தில் பராக்கிரமவாகு சபையிலிருந்த மலையாளப் பணிக்கன் ஒருவனின் மகனாகிய யுத்தவீரன் செண்பகப்பெருமாள் சிங்களப் படையுடன் யாழ்ப்பாணத்தை வென்று கனகசூரியனைத் துரத்தினான். இவன் யாழ்ப்பாணத்திற் 17 வருடங்கள் ஆட்சி செய்தான். இவனே நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டுவித்தான். பல வருடங்களின் பின்னர் கனகசூரியன் யாழ்ப்பாணத்தை கைபற்றியதாகவும் (ராகவன்)கதை உண்டு. எனவே இது வெறுமனே குலம் மதம் மொழிசார் நிலம்  என்ற வர்த்தமானங்களுக்கு அப்பால் பணிக்கர் என்ற சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது என்பதை புலப்படுத்துகிறது.. அந்த வகையில் கொம்பன் யானை (ராஜாவை) பிடித்து அது தலதா மாளிகாவையில் பணியாற்ற வழி சமைத்த பணிக்கரும் இலங்கையின்  நாணானயத்தாளில் மிடுக்குடன் நின்று வரலாறு படைத்துள்ளார்.
(22 10.2010)
sbazeer@yahoo.co.uk

المشاركات الشائعة