Search This Blog

Oct 30, 2010

இப்படிக்கு உன் அண்ணன்.........,


burka

பெண்ணாக பிறந்திருந்தால்
பெற்றிருப்பேன்
முதிர்க்கன்னிப் பட்டம்;
ஆணாக பிறந்ததினால்
உன்னை ஆளாக்க
அயல்நாட்டில் நான்!
என் வியர்வையை
உரமாக்கி அதில்
உன்னை உருவாக்க
கடன் கனத்ததால்
கடல் கடந்து
கடமை சுமந்து
எட்டாக்கனி கல்வியை
உனக்கு வளைத்துக் கொடுக்க
வளைகுடா வந்திருக்கேறேன்!
உன் கல்லூரிக்  கனவை;
நினைவாக்கிய நெகிழ்ச்சியில்
கனமானது மகிழ்ச்சியில் என் மனம்!
வட்டமிடும் வண்டுகள்
வாலிபத்தை நோக்கி
படையெடுக்கும் உன்னைச்சுற்றி
பல்லாங்குழி விளையாட!
மயங்கிவிடும் இளமையில்
கிறங்கி விடாதே பர்தாவை
கழட்டிவிடாதே!
மரணமே வந்தாலும்
கர்ணம் போடாதே ;
மார்க்கத்தில் புது
வர்ணம் தீட்டாதே!
குழந்தையல்ல உனக்கு
கதைச் சொல்லி வளர்க்க;
ஓடிப்போகும் குமரிகளின்
கதைகேட்டு கண்ணீர் வடிக்கும்
அண்ணன்கள் உண்டு ஏராளம் இங்கே!
சந்தேகமா என்று
சாட்டிவிடாதே என் மீதுக்
குற்றத்தை;
தரையில்கிடக்கும் தேனை
தடவிப்பார்த்து ருசிச்சொல்லும்
விஷமுள்ள வயது!
இரத்த நாளங்களில்
ஓடிக்கொண்டிருக்கும் ஷைத்தானை
வெல்வதற்கு பிடித்துகொள் ஈமானை!
by: யாசர் அரஃபாத்

No comments:

Post a Comment

المشاركات الشائعة