வடமாகாண முஸ்லிம்களும் 20வது கருப்பு ஒக்டோபரும்
1990 ஒக்டோபர் மாதம் 18ம் திகதியிலிருந்து 30ம் திகதிக்கிடைப்பட்ட காலப்பகுதியில் வடமாகாணத்தின் முக்கிய மாவட்டங்களான யாழ்ப்பாணம் மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் வவுனியா பிரதேசத்தை சோர்ந்த அப்போதைய கணக்கின்படி 85000க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் பாசிஸ புலிகளால் வெளியேற்றப்பட்டனர். இது இலங்கை முஸ்லிம்களின் முதல் இடம்பெயர்வல்ல. இதற்கு முன்பும் 10ம் நூற்றாண்டில் கீரிமலை பகுதிக்குள் நுழைந்த துலுக்கர் மொழி பேசும் முஸ்லிம்கள் தீட்டை ஏற்படுத்தி விட்டார்கள் எனக்கூறப்பட்டு பொலநறுவையை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிசெய்த இந்நிய அரசன் ராஜசோளனின் பணிப்பின் பேரில் வெளியேற்றப்பட்டார்கள்.
13ம் நூற்றாண்டில் மாதகல் தொடக்கம் நவாலி வரை வாழ்ந்த முஸ்லிம்கள் இடம்பெயர்ந்தார்கள் அல்லது இறந்துவிட்டார்கள் என சொல்லப்படுகிறது. இதன் பிறகு 1470களில் கனகசு+ரிய சிங்கையாரியனால் ஜாவகர் வழிவந்த முஸ்லிம்கள் சாவகச்சேரி மிருசுவில் பளை போன்ற பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர் விரிவாக பார்க்க
1560களில் போர்த்துக்கீஸரால் யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களும் கொழும்பு பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர். 1740களில் ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூரில் வாழ்ந்த முஸ்லிம்கள் கன்னியாகுமாரி மாவட்டத்திலிருந்து வந்து குடியேறியிருந்த இந்து பிராமணர்களால் வெளியேற்றப்பட்டனர்.
இவ்வாறு வடக்கில் ஏற்கனவே ஐந்து இடப்பெயர்வுகளைச் சந்தித்த யாழ் முஸ்லிம்கள் ஆறாவது இடப்பெயர்வை முழு உலகமும் பார்த்துக்கொண்டிருக்க சந்தித்தனர். ஆனால் இம்முறை அவர்களுடன் ஏனைய ஐந்து வடமாநில மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களும் அனைத்து உடமைகளும் பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். 1990 ஐப்பசி மாதம் 18 முதல் 30 ம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கில் இருந்து 85000 ககும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் அனைத்து பாரம்பரிய தலைமுறை உழைப்பையும் சொத்துக்களையும் பறித்தெடுத்த பின்பு, சொந்த மண்ணில் இருந்து ஈவிரக்கமின்றி புலிகளால் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டனர். முஸ்லிம் மக்கள் சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டு பல வருடங்கள் கடந்த நிலையிலும், எந்தவிதமான அடிப்படை உரிமைகளும் இன்றி வாழ்விழந்து ஒடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் தமிழ் அடிமையாக உயிர்வாழ்கின்றனர். முஸ்லிம் மக்களுக்கு இழைத்த துரோகம், தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணயத்துக்கான விடுதலைப் போராட்டத்தை இன்று சீரழித்து விட்டது.
சொந்த மண்ணில் இருந்து வேரோடு பிடுங்கப்பட்டு, எந்தவிதமான காரணத்தையும் முன்வைக்காது இரவோடு இரவாக ஆயுத முனையில் துரத்திய நிகழ்வு, தமிழ் மக்களின் வரலாற்றிலும், உலக வரலாற்றிலும் ஒரு கறைபடிந்த கறுப்புநாட்கள் தான். இந்த வரலாற்றுக் கொடுமையை வடக்கு முஸ்லிம்கள் முஸ்லிம் கருப்பு ஒக்டோபராக அனுஷ்டிக்கின்றனர். முஸ்லிம் மக்களுக்கு இந்த நிலைமை ஏற்படவும், இழைக்கப்பட்ட கொடூரத்தை முடிவுக்கு கொண்டு வரமுடியாத ஒரு நிலைமை தொடர்வதற்கும், தமிழ் அரசியல் வாதிகளே பொறுப்பாளிகள்.
அதைப்பற்றி பெயர்குறிப்பிட விரும்பாத ஒருவர் www.tamilislam.com என்ற இணையத்தளம் மூலமாக கூறுகையில் இலங்கையில் தமிழர் தம் அரசியல் அதிகாரத்துக்காக மேலாதிக்கம் பெறும் நோக்குடன் மேற்கொண்ட பொய்யான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட பரப்புரைகளை முன்னெடுத்த வரலாற்றுத் தொடர்ச்சியில் தான், தமிழ் விடுதலைப் போராட்டம் என்ற கோஷம் ஆயுத போராட்டமாக மாற வழிவகுத்தது. இந்த தமிழ் தேசியவாதம், மற்றைய இனங்களை எதிhpயாக அடையாளம் காட்டியே தன்னைக் கட்டமைத்தது. இந்த குறுந்தேசிய இனவாத கண்ணோட்டம் மட்டுமே, அதன் பிரதான மையமான அரசியல் கோசமாக இருந்தது. மற்றைய இன மக்களை எதிரியாக காட்டிய அரசியல், மற்றைய இன மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கவும், அவர்களை எதிரியாக காட்டி ஒடுக்கவும், அழிக்கவும் வழிகாட்டியது. தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய அமைப்புகளின் அரசியல் வரையறை இதுவாகவே இருந்தது. பிந்திய காலத்தில் இதன் வளர்ச்சிப் போக்கில் புலிகள் தமது இராணுவ வலிமையில் உயர்ந்த அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்குவதில், ஈவிரக்கமற்ற மனிதவிரோதத்தை கையாண்டனர்.
இந்த வகையில் சிங்கள மற்றும் முஸ்லிம் அப்பாவி மக்கள் மீதான இனப் படுகொலை தாக்குதல்கள், கூட்டம் கூட்டமாக கொன்று குவிப்பதில் வளர்ச்சி பெற்றது.
தமிழ் மக்கள் இந்தக் கறையை துடைக்க முனையாத வரை, அக்கறை அவர்களின் முகத்திலும் கையிலும் அப்பிக்கிடக்கும் வரலாற்றுத் தொடர்ச்சியை இன்று நாம் மீளவும் சுட்டிக் காட்டுகின்றோம். இந்த வரலாற்று கறையை துடைக்க போராடும் வரலாற்று கடமையை செய்யத் தவறுகின்ற யாரும், ஜனநாயகவாதிகளாக நோர் மையான சமாதானவாதிகளாக இருப்பதில்லை.
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் மற்றும் சொந்த மண்ணில் இருந்து துரத்திய கொடூரத்துக்கான அடிப்படைகளை கண்டறிவது மற்றும் தீர்வுகளை முன்வைப்பது வரை தமிழ் அரசியல்வாதிகளுக்கோ தலைவர்களுக்கோ புலம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கோ தமிழர் பக்கச் சார்பு பத்திரிகைகளுக்கோ அக்கறையில்லை. முஸ்லிம் மக்களின் துயரத்தையும் அந்த வரலாற்றையும் தமது பிழைப்புவாத அரசியலுக்கு பயன்படுத்துபவர்கள், அந்த மக்களுக்கான தீர்வை முன்வைப்பதில்லை. இன்றும் கூட வவுனியாவில் இடம்பெயர்ந்து சில மாதங்களாக அகதிமுகாம்களில் இருப்பவர்களை மீளக்குடியமர்த்த நாளுக்கொரு போராட்டம் நடத்துகிறார்கள் அறிக்கை விடுகிறார்கள். ஆனால் வடக்கிலிருந்து பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு உடுத்த உடையுடன் தமது சமூகத்தால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியமர்த்த ஒரு அறிக்கையை சரி இவர்கள் விடுவதில்லை. சில தமிழ் அரசியல்வாதிகள் வடக்கு முஸ்லிம்களும் மீளக்குடியமர்வதில் தமக்கு ஆட்சேபனையில்லை என்று மேலாதிக்க சிந்தனைப்போக்கில் வெளிப்படும் கருத்துக்களையே கூறுகின்றனர். வடக்கு முஸ்லிம்கள் மீளக்குடியமர்வதற்கு இவர்களின் அனுமதி அவர்களுக்குத் தேவையில்லை. மாற்றமாக எஞ்சியுள்ள ஆயுதக்குழுக்களால் மீண்டும் அட்டூழியங்கள் இடம்பெறாத சு+ழ்நிலையை தாமாக முன்வந்து உருவாக்குமாறே முஸ்லிம்கள் வேண்டுகிறார்கள். சுயமான ஆயுதக் கையளிப்புகள் பிரதேச ரீதியான அரசியல் கட்சி மற்றும் ஆயுதக்குழு பெயர்கள் என்பன நீக்கப்பட்டு ஆயுதக்குழுக்கள் கலைக்கப்படவேண்டுமென்ற கருத்தையே 2010ல் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த தமிழ் முஸ்லிம் மக்களில் பெரும்பாலானவர்களின் கருத்தாகவுள்ளது.
வடபகுதியில் வாழ்ந்து வந்த குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றவேண்டுமென்பது பொறாமைகொண்ட வகுப்புவாத சிந்தனை கொண்ட பலரது கனவாகவிருந்தது. இவர்களில் பலர் ஆயுதமேந்தியதும் அந்த சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கமுயன்றனர். அதை செயல்படுத்தியதில் பாசிஸ புலிகள் மட்டும் பரிபு+ரண வெற்றிகண்டனர். இதற்கு சில வெளிநாட்டு சக்திகளும் துனைபோயுள்ளன. சில மேற்கத்திய நாடுகளுக்கும் வேறுசில கத்தோலிக்க நாடுகளுக்கும் தென்ஆசியாவில் கத்தோலிக்க நாடு ஒன்றை அமைக்கவேண்டிய திட்டமிருந்தது. அதனைச் செயல்படுத்த விடுதலைப்புலிகள் அமைப்பு துனைபோயிருந்தது. ஆதனால் தான் பல கத்தோலிக்க நாடுகளும் அரச சார்பற்ற வெளிநாட்டு உதவி நிறுவனங்களும் வடக்கு கிழக்குப்பகுதியில் முனைப்புடன் செயல்பட்டனர். தமிழீழம் அமைந்திருந்தால் அது ஒரு கத்தோலிக்க நாடாக இருந்திருக்கும். அவ்வாறான ஒரு திட்டத்தின் வெளிப்பாடே வடபகுதி முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது மேற்கு வெளிநாடுகள் கண்டன குரல் கொடுக்காமல் இருந்ததன் உள்நோக்கமாகும்.
முஸ்லிம்களை வெளியேற்ற திட்டமிட்ட புலிகள் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் இளைஞர்களையும் செல்வந்தர்களையும் 1990 செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் கடத்தினர். புலிகளுக்கு யாழ்ப்பாண மன்னார் பகுதி முஸ்லிம்கள் மீது ஒரு பயமிருந்தது. இதனால் வெளியேற்றத்தை கட்டம் கட்டமாக நிறைவேற்ற புலித்தலைமை திட்டம் தீட்டியது. இதனடிப்படையில் சாவகச்சேரி வர்த்தக நிறுவனத்தின் முஸ்லிம் உரிமையாளர் ஒருவரை கடத்தி கப்பம் பெற்றதுடன் அவருடைய கடையில் வாள்களும் வயர்லஸ் கருவியும் இருந்ததாகக்கூறி சாவகச்சேரி பகுதி முஸ்லிம்களை 1990 ஒக்டோபர் 16ம் திகதி அறிவித்து 18ம் திகதி வவுனியாவுக்கு அப்பால் துரத்திவிட்டனர். புலிகளின் ஏ.கே 47க்கு முன்பு இந்த வாள்களால் முஸ்லிம்கள் என்ன செய்துவிட முடியும் என டி.பி.எஸ். ஜெயராஜ் ஒரு கட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதுமாத்திரமின்றி சாவகச்சேரி கடை உரிமையாளருக்கு ரேடியோவைக்கூட முறையாக இயக்கத்தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து முல்லைத்தீவில் ஒருவரைக் கடத்தி அவர் இராணுவத்துக்கு தகவல் கொடுப்பவர் எனக்கூறி முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேறுமாறு 1990 ஒக்டோபர் 22ஆம் திகதி கட்டளையிட்டனர்.
அதன் அடுத்த கட்டமாக மன்னாரில் சிலரைக் கடத்தி இராணுவ உளவாளிகள் முத்திரை குத்தினர். பிறகு 1990 ஒக்டோபர் 23ஆம் திகதி மறிச்சுக்கட்டி முஸ்லிம்களை வெளியேற்றி ஒக்டோபர் 28ஆம் திகதி மன்னாரில் இருந்த முஸ்லிம்களை முழுமையாக இனச் சுத்திகரிப்பு செய்தனர். 1990 ஒக்டோபர் 23ஆம் திகதி கிளிநொச்சி நாச்சிக்குடா வட்டக்கச்சி பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்களையும் ஆயுத முனையில் வெளியேற்றினர்.
1990 ஒக்டோபர் 30ஆம் நாள் யாழ்ப்பாண முஸ்லிம்களை ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். விபரீதத்தை அறியாத முஸ்லிம்கள் தமது வழமையான கடமைகளில் ஈடுபட்டனர். திடீரென எல்லோரையும் ஜின்னா மைதானத்துக்கு வருமாறு அழைத்து இரண்டு மணி நேரத்துக்குள் அனைவரும் வெளியேற வேண்டுமென கட்டளையிடப்பட்டது.
இந்தக் கட்டளையை புலிகளின் அப்போதைய யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் ஆஞ்சநேயர் என்ற இளம்பருதி ஒலிபெருக்கி மூலம் சொல்லிக் கொண்டிருக்க சரிகாலன் தலைமையிலான குழுவினர் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கத் தொடங்கினர். ஓவ்வொரு குடும்பமும் தலா 200 ரூபாய்களை மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். சிலருக்கு அந்த தொகையும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் வீதிகள் தோறும் சோதனைச் சாவடிகளை நிறுவி அனைவரையும் உடல் பரிசோதனையிட்டு 200 ரூபாய்க்கு மேற்பட்ட பணம், நகை, உடுப்பு, உடமைகள் என்பவற்றை அபகரித்து தமிழ் இனத்துக்கே வெட்கம் தேடித்தந்த ஒரு செயலைச் செய்தனர். கைப்பிள்ளைகளின் விரல்களில் அணிவிக்கப்பட்டிருந்த மோதிரங்கள் கூட இழுத்து எடுக்கப்பட்டன. சில சிறுமிகளின் காது அணிகலன்கள் இழுத்து அறுக்கப்பட்டன. இதனால் பல சிறுவர் சிறுமியர் கைவிரல்களில் காயங்களோடும் காதுகள் கிழிந்தவர்களாகவும் தென்பகுதியை அடைந்தனர்.
1990 நவம்பர் டிசம்பர் காலப்பகுதியில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் வாழ்ந்த பல்வேறு முகாம்களில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வடமாகாண முஸ்லிம்களின் அப்போதைய சனத்தொகை பின்வருமாறு. மன்னார் மாவட்டம்- 54000 போ; யாழ்ப்பாணம்- 20000 பேர் முல்லைத்தீவு-7000 பேர் வவுனியா- 4000 பேர்கிளிநொச்சி – 400 பேர். இன்று 2010களில் இவர்களின் சனத்தொகை 120000 க்கும் அதிகமாகும்.
முஸ்லிம்களின் வெளியேற்றத்தை புலிகள் அத்துடன் நிறுத்தவில்லை. அனைத்து சொத்துக்களையும் பறித்து துரத்தப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் தொழிலின்றி இருந்தனர். வசதியாக வாழ்ந்த பலர் கூலித் தொழிலுக்கு சென்றனர். சிலருக்கு கையேந்தும் நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் வவுனியாவில் தாண்டிக்குளத்தின் ஒரு பகுதி இராணுவக்கட்டுப்பாட்டிலும் மறுபகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலுமிருந்தது. இவையிரண்டுக்குமிடைப்பட்ட இடத்தை மக்கள் கால்நடையாகவே கடக்க வேண்டியிருந்தது. அவர்களில் வயோதிபர்களையும் அவர்களின் பொருட்களையும் சைக்கிளில் ஏற்றி மறுபக்கத்துக்கு கொண்டு சென்று விட்டுவரும் தொழிலை இடம்பெயர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர் செய்தனர். ஒரு வழிப்பயணத்துக்கு 20 ரூபாய் அவர்களுக்கு கிடைத்தது. மாதமொன்றுக்கு கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை கொண்டுவந்து புத்தளத்திலுள்ள அவர்களின் குடும்பத்தினரிடம் செலவுக்கு ஒப்படைத்து விட்டு இரண்டு நாட்களில் மீண்டும் வந்து அத்தொழிலை செய்வர். இவ்வாறு ஒருமாத காலம் பிழைப்பு நடாத்திய யாழைச் சோந்த 7 பேரும் மன்னாரைச் சோர்ந்த 2 பேரும் 1991 மே 23ம் நாள் புலிகளால் தாண்டிக்குளத்தில் வைத்து கடத்திச்செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு மரங்களில் கண்கள்கூட தோண்டியெடுக்கப்பட்ட நிலையில் கட்டப்பட்டிருந்ததாக அப்பகுதியிலிருந்து வந்த தமிழர்கள் அப்போது தெரிவித்திருந்தனர். இவர் திருமணம் முடித்திருந்த குடும்பஸ்தர்கள் என்பதுடன் எல்லோருமே இரண்டுக்குமேற்பட்ட குழந்தைகளை கொண்டிருந்தனர் என்பது நெஞ்சை நெகிழவைக்கும் தகவல்.
வடக்கு முஸ்லிம்களின் பொருளாதார இழப்புகள் சம்பந்தமான மதிப்பீடு ஒன்று வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பினால் (NMRO) திரட்டப்பட்டு வெளியிடப்பட்டது. ஆதனடிப்படையில் மாவட்டம் தோறும் ஏற்பட்ட சொத்து மற்றும் உடமைகளின் இழப்புகள் பின்வருமாறு:
மன்னார்
மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது 7500 கல் வீடுகளையும் 700 க்கும் மேற்பட்ட வயல் மற்றும் தோட்டக்காணிகளையும் கொண்டிருந்தனர். இவற்றின்; பெறுமதி 1990இல் 7,500 மில்லியன் ரூபாய்களாகும் (65 மில்லியன் டாலர்கள்). இவர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகை பணம் வாகனம் மற்றும் அசையும் சொத்துக்களின் பெறுமதி 1500 மில்லியன் ரூபாய்களாகும் (25 மில்லியன் டாலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது. மன்னாரின் சில ஊர்களில் குறிப்பாக மன்னார் நகர் தாராபுரம், மற்றும் எருக்கலம்பிட்டி போன்ற பிரதேசங்களில் சில குடும்பங்கள் 2005 க்குப் பிறகு மீளக்குடியேறியுள்ளனர்.
மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது 7500 கல் வீடுகளையும் 700 க்கும் மேற்பட்ட வயல் மற்றும் தோட்டக்காணிகளையும் கொண்டிருந்தனர். இவற்றின்; பெறுமதி 1990இல் 7,500 மில்லியன் ரூபாய்களாகும் (65 மில்லியன் டாலர்கள்). இவர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகை பணம் வாகனம் மற்றும் அசையும் சொத்துக்களின் பெறுமதி 1500 மில்லியன் ரூபாய்களாகும் (25 மில்லியன் டாலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது. மன்னாரின் சில ஊர்களில் குறிப்பாக மன்னார் நகர் தாராபுரம், மற்றும் எருக்கலம்பிட்டி போன்ற பிரதேசங்களில் சில குடும்பங்கள் 2005 க்குப் பிறகு மீளக்குடியேறியுள்ளனர்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது 2431 கல் வீடுகளையும் 20க்கும் மேற்பட்ட தோட்டக்காணிகளையும் கொண்டிருந்தனர் இவற்றின்; பெறுமதி 1990இல் 2500 மில்லியன் ரூபாய்களாகும் (42 மில்லியன் டாலர்கள்). இவர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகை பணம் வாகனம் மற்றும் அசையும் சொத்துக்களின் பெறுமதி 700 மில்லியன் ரூபாய்களாகும் (12 மில்லியன் டாலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது 2431 கல் வீடுகளையும் 20க்கும் மேற்பட்ட தோட்டக்காணிகளையும் கொண்டிருந்தனர் இவற்றின்; பெறுமதி 1990இல் 2500 மில்லியன் ரூபாய்களாகும் (42 மில்லியன் டாலர்கள்). இவர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகை பணம் வாகனம் மற்றும் அசையும் சொத்துக்களின் பெறுமதி 700 மில்லியன் ரூபாய்களாகும் (12 மில்லியன் டாலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது 552 கல் வீடுகளும் 994 தோட்டக்காணிகளையும் கொண்டிருந்தனர். இவற்றின்; பெறுமதி 1990இல் 200 மில்லியன் ரூபாய்களாகும் (3.5 மில்லியன் டாலர்கள்). இவர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகை பணம் வாகனம் மற்றும் அசையும் சொத்துக்களின் பெறுமதி 240 மில்லியன் ரூபாய்களாகும் (4 மில்லியன் டாலர்கள்) என NMRO தரவுகள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது 552 கல் வீடுகளும் 994 தோட்டக்காணிகளையும் கொண்டிருந்தனர். இவற்றின்; பெறுமதி 1990இல் 200 மில்லியன் ரூபாய்களாகும் (3.5 மில்லியன் டாலர்கள்). இவர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகை பணம் வாகனம் மற்றும் அசையும் சொத்துக்களின் பெறுமதி 240 மில்லியன் ரூபாய்களாகும் (4 மில்லியன் டாலர்கள்) என NMRO தரவுகள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது 236 கல் வீடுகளையும் 40 க்கும் மேற்பட்ட வயல் மற்றும் தோட்டக்காணிகளையும் கொண்டிருந்தனர். இவற்றின்; பெறுமதி 1990இல் 60 மில்லியன் ரூபாய்களாகும் (1 மில்லியன் டாலர்கள்). இவர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகை பணம் வாகனம் மற்றும் அசையும் சொத்துக்களின் பெறுமதி 45 மில்லியன் ரூபாய்களாகும் (0.75 மில்லியன் டாலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது 236 கல் வீடுகளையும் 40 க்கும் மேற்பட்ட வயல் மற்றும் தோட்டக்காணிகளையும் கொண்டிருந்தனர். இவற்றின்; பெறுமதி 1990இல் 60 மில்லியன் ரூபாய்களாகும் (1 மில்லியன் டாலர்கள்). இவர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகை பணம் வாகனம் மற்றும் அசையும் சொத்துக்களின் பெறுமதி 45 மில்லியன் ரூபாய்களாகும் (0.75 மில்லியன் டாலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியா
வவுனியா மாவட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது 2106 வீடுகளையும் 100 க்கும் மேற்பட்ட வயல் மற்றும் தோட்டக்காணிகளையும் கொண்டிருந்தனர். இவற்றின்; பெறுமதி 1990இல் 2000 மில்லியன் ரூபாய்களாகும் (34 மில்லியன் டாலர்கள்). இவர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகை பணம் வாகனம் மற்றும் அசையும் சொத்துக்களின் பெறுமதி 120 மில்லியன் ரூபாய்களாகும் (2 மில்லியன் டாலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது 2106 வீடுகளையும் 100 க்கும் மேற்பட்ட வயல் மற்றும் தோட்டக்காணிகளையும் கொண்டிருந்தனர். இவற்றின்; பெறுமதி 1990இல் 2000 மில்லியன் ரூபாய்களாகும் (34 மில்லியன் டாலர்கள்). இவர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகை பணம் வாகனம் மற்றும் அசையும் சொத்துக்களின் பெறுமதி 120 மில்லியன் ரூபாய்களாகும் (2 மில்லியன் டாலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல்களையெல்லாம் இங்கு தரக்காரணம் இவை கடந்த மூன்று தசாப்தங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற உண்மையான சம்பவங்களாகும். இனிவரும் சமுதாயம் தமது முன்னோர் செய்த அநீதிகளை அறிந்து அவ்வாறு தொடர்ந்தும் இடம்பெறாமல் பாதுகாப்பதிலேயே சமாதானம் சமத்துவம் ஐக்கியமான சந்தோஷமான எதிர்கால வாழ்க்கை இரு இனத்தவர்களுக்குமிருக்கிறது. மாறாக காலத்துக்கு காலம் தமது கொள்கைகளை மாற்றி கட்சி தாவிக்கொண்டு பொய்களை அவிழ்த்து விடுவோரின் பேச்சுக்களை நம்பி தற்காலிகத்தை நம்பி நிரந்தரமாக தேவைப்படும் நிம்மதியான வாழ்வை அழித்துவிடக்கூடாது.
மேலும் பரம்பரை பரம்பரையாக கி.பி. 633களில் இருந்தே அரபி முஸ்லிம்கள் தமிழர்களுடன் வியாபார தொடர்புகளை கொண்டிருந்துள்ளனர். முஸ்லிம்களின் நன்னடத்தை நேர்மை என்பவற்றைக் கண்ட தமிழர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதுடன் தமதின பெண்களை அரபி முஸ்லிம்களுக்கு மணமுடித்துக் கொடுத்துள்ளனர். மேலும் முஸ்லிம்கள் தம்மை சீண்டாத வரை இன்னொருவரை தீண்டுவதில்லை. அவர்கள் நீதியாக நேர்மையாக நடக்கவேண்டும் என மாநேர்க்கத்தில் பணிக்கப்பட்டுள்ளதுடன் சமாதானமே இருப்பதே அவநேர்களின் விருப்பமாக இருந்து வந்துள்ளது. இவ்வாறே அவர் கள் வாழ்ந்து வந்த போதிலும் இலங்கையில் சிங்களவர் முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழும் போது தமிழர்கள் மட்டும் முஸ்லிம்கள் மீது வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் வெளியேற்றங்களையும் கட்டவிழ்த்து விட்டு வந்துள்ளனர்.
தமிழர்களின் இவ்வாறான ஒரு போக்குக்கு இறை விசுவாசத்தில் காணப்படும் வேறுபாடுகளே காரணமாக நம்பப்படுகிறது. இந்துக்கள் பலதெய்வ வழிபாடுகளை கொண்டிருக்க முஸ்லிம்கள் ஏகஇறைவன் கொள்கையை கொண்டிருப்பதை இந்துக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் முஸ்லிம்களை அழித்துவிட வேண்டுமென்ற எண்ணத்துடன் அவர்கள் செயல்படுகின்றனா;. உண்மையில் இஸ்லாமும் இந்துமத வேதங்களும் கூறும் கடவுள் கொள்கை ஒரே மாதிரியானவை தாம். இந்து மத வேதங்களான ரிக் அதர்வண சாம யசுர்போன்றவற்றில் இறைவன் ஒருவனே என்றும் அவனுக்கு பல பண்புப் பெயர்கள் உள்ளன. முஸ்லிம்களும் இறைவனுக்கு 99 பண்புப் பெயர்கள் உள்ளதாக நம்புகின்றனா;. ஆனால் இந்துக்கள் இறைவனின் பண்புப் பெயர்களுக்கெல்லாம் ஒரு விக்கிரகத்தை உருவாக்கி அவற்றையெல்லாம் வெவ்வேறு கடவுள்கள் ஆக்கி அவர்களுக்கு குட்டி கடவுள்களையும் உருவாக்கியுள்ளனர். யூதர்கள் வணங்கும் மாட்டையும் எலி மயில் யானை போன்ற விலங்குகளையும் நெருப்பையும் இன்னும் காளி அம்மன் போன்ற வற்றையும் வணங்குகின்றனர் .
அவர்களுடைய வேதங்களில் கூறப்பட்டுள்ள ஓரிறைக்கொள்கைக்கு மாற்றமாக உலகம் முழுவதும் மக்கள் வணங்கக்கூடிய விக்கிரகங்களை தமது கடவுள்கள் ஆக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் தமது வேதங்களை படிப்பதே கிடையாது. சம்பிரதாயம் என்ற பெயரில் மூதாதையர் செய்துவந்ததை தாமும் செய்கின்றனர். அதற்கு எதிரான கருத்தை யார் சொன்னாலும் அவர்களை எதிரிகளாக பார்க்கின்றனர். அத்துடன் நில்லாமல் அவ்வினத்தை அழிக்கவும் துணிகின்றனர்.
இந்த நிலமை மாற வேண்டும். ஓவ்வொரு இந்துவும் தங்கள் வேதங்களான ரிக் மற்றும் இதர வேதங்களில் கூறப்பட்டுள்ளவற்றை படிக்கவேண்டும் அறியவேண்டும். அவற்றில் கூறப்பட்டுள்ள கடவுள் கொள்கையை எடுத்து நடக்கவேண்டும். அப்போது இந்து வேதங்களில் கூறப்பட்டுள்ளவையும் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள ஏகதெய்வ கொள்கையும் ஒரே மாதிரியானவை என்பதை புரிந்து கொள்ளலாம். இதன் மூலமாக ஓரினத்தை இன்னொரு இனம் புரிந்து கொள்ளலாம். ஆதன் மூலம் நாம் எதிர்பார்க்கும் சமாதானமான சௌபாக்கிய வாழ்வு எமக்கு கிடைக்கும். இதுவே வடக்கு முஸ்லிம்கள் தமது 20வது கருப்பு ஒக்டோபர் வெளியேற்றத்தின் ஞாபகார்த்தமாக வடக்கு கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களிலும் நாடுகளிலும் வாழும் தமிழ் அன்பர்களுக்கு விடுக்கும் செய்தியாகும்.
lankamuslim.org
No comments:
Post a Comment