Search This Blog

Feb 28, 2011

எகிப்தின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் பிரிட்டன் - முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் கண்டனம்


எகிப்தில் மக்கள் புரட்சிக்கு பின்னர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பிரதமர் எகிப்தின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் விதமாக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான எஸ்ஸாம் அல் எரியான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: "௦65 ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டனின் ஆதிக்கம் எகிப்தில் முடிந்து போய்விட்டது. எகிப்தியர்களுக்கு அவர்களுடைய பிரச்சனையை எப்படி நிர்வகிக்க வேண்டுமென்பது நன்றாகவே தெரியும்." எனத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் எகிப்து சுற்றுப்பயண வேளையில் ராணுவ ஆட்சியாளர்கள் மற்றும் தேர்வுச் செய்யப்பட்ட சில எதிர்கட்சியினரை சந்தித்துப் பேசினார். ஆனால், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத் தலைவர்களை சந்திப்பதை அவர் தவிர்த்தார். மேலும் பிரிட்டன் பிரதமர் காமரூன், எகிப்து உள்பட அரபுலகத்தில் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப பிரிட்டன் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

பிரிட்டன் பிரதமர் காமரூனின் மத்தியக்கிழக்கு சுற்றுப்பயணம் பிரிட்டனிலும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அவர் தனது சுற்றுப்பயணத்தின் போது எட்டு ஆயுத தயாரிப்பாளர்களை அழைத்துச் சென்றது வெட்கக்கேடு என அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

News:ப்ரஸ் டிவி

இலங்கை – இந்தியா பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்



கொழும்பு துறைமுகத்திற்கும் தென் இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத் திற்கும் இடையிலான முதலாவது பயணிகள் கப்பல் சேவை இன்று திங்கட்கிழமை தூத்துக்குடியில் இருந்து ஆரம்பமாகின்றது. 500 பயணிகளை அவர்களின் பொதிகளுடன் மிகவும் சிறந்த முறையில் ஏற்றிச் செல்லக் கூடிய வசதிகளைக் கொண்ட இந்த கப்பலை இந்தியாவில் தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகின்றது.
தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள பாரிய களஞ்சிய சாலையொன்றை பயணிகளின் தங்குமிடமாக மாற்றியமைத்துள்ளார்கள். இங்கு பொதிகளை சோதனையிடல், சுங்க பரிசோதனைகள், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கரும பீடங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இப்போதைக்கு கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையில் நடைபெறும் கப்பல் சேவை விரைவில் இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் 2 வது கப்பல் சேவையாக விஸ்தரிக்கப்படும். பல்லாண்டு காலமாக இராமேஸ்வரத்துக்கும் தலை மன்னாருக்கும் இடையில் நடைபெற்று வந்த பயணிகள் கப்பல் சேவை 80 ஆம் ஆண்டு தசாப்தத்தின் ஆரம்பத்தில் பயணிகள் அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்டது.
கொழும்பு துறைமுகத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான இடைவெளி 282 கிலோ மீற்றர் ஆகும். இது 152 கடல் மைல்களாகும். கொழும்பிலிருந்து தூத்துக்குடி செல்ல 10 முதல் 12 மணித்தியாலங்கள் எடுக்கும். ஆரம்ப கட்டத்தில் இரு தேசங்களுக்கும் இடையில் வாரத்திற்கு 2 கப்பல் சேவைகள் இடம்பெறும். பின்னர் வாரத்திற்கு 3 ஆக அதிகரிக்கப்படும்
இலங்கை கப்பல் போக்குவரத்து கூட்டுத்தாபனம் 500 முதல் 600 வரையிலான பயணிகளையும் பயணிகள் ஒவ்வொருவரின் 100 கிலோகிராம் பொதிகளையும் உடன் எடுத்துச் செல்வதற்கான வசதிகளையும் கொண்ட கப்பல்களை வாங்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
பயணிகள் போக்குவரத்திற்கான கப்பல் கட்டணங்கள் விமான கட்டணங்களை விட கணிசமான அளவு குறைவாகயிருப்பது குறிப்பிடத்தக்கது.
News: தினகரன்

தன் நாட்டு மக்களை தாக்க கூலிப்படையை ஏவிய அதிபர்



லிபியாவில் மக்கள் கிளர்ச்சியை ஒடுக்க அந்நாட்டு தலைவர் கடாபி கூலிப்படையினரை பயன்படுத்தினார். அந்த கூலிப்படையினர் யார் என்பது பற்றிய சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் ஏற்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சியை அடக்க கடாபி வித்தியாசமான ஒரு வழியைக் கையாண்டார். அண்டை நாடுகளான சாட் மற்றும் நைஜரில் இருந்து நூற்றுக்கணக்கான ஆப்ரிக்கர்களை வரவழைத்து அவர்களின் கைகளில் நவீன ரக துப்பாக்கிகளை கொடுத்து தன்னை எதிர்க்கும் மக்களை கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளும்படி கூறினார்.
இதற்கு லிபியா ராணுவமும் உதவியது. இந்த கூலிப்படையினரில் சிலர் அல்பைடா நகரில் மக்களுடன் மோதலில் ஈடுபட்ட போது அவர்களில் 200 பேரை மக்கள் சிறைபிடித்தனர். சிறை பிடிக்கப்பட்ட அவர்கள் அல்பைடாவின் ஷெகட் பகுதியில் பள்ளி ஒன்றில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தப்பித்து விடாமல் இருக்க பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் டைம் நாளிதழ் இவர்களை நேரில் சந்தித்து பேட்டி எடுத்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மொத்தம் 325 பேர் அண்டை நாடுகளான சாட் மற்றும் நைஜரில் இருந்து திரட்டப்பட்டு லிபியாவின் தென் மேற்கில் உள்ள சபாநகருக்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கு கடாபி கட்சியின் இளைஞர் அணி பிரிவு தலைவர் அலி உஸ்மான் என்பவர் டிரிபோலியில் நடக்க உள்ள கடாபி ஆதரவு பேரணிக்கு அழைத்து செல்வதாக அவர்களிடம் கூறியுள்ளார். பின் அவர்கள் அனைவரும் ஒரு விமானம் மூலம் டிரிபோலிக்கு புறப்பட்டனர்.
விமானம் சென்ற இடமோ லபார்க் என்ற நகரம். இது அல்பைடாவுக்கும், டெர்ணாவுக்கும் இடையில் உள்ளது. கடந்த 16ம் திகதி அல்பைடாவில் நடந்த கடாபி ஆதரவு போராட்டத்தில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது எதிர்ப்பாளர்களும் பேரணி நடத்தினர். சிறிது நேரத்தில் இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
அப்போது ராணுவம் ஆப்ரிக்கர்களின் கைகளில் துப்பாக்கிகளை கொடுத்து,"நீங்கள் அனைவரும் கூலிப்படையினர் என்று எதிர்ப்பாளர்கள் நினைத்து உங்களை கொல்ல திட்டமிட்டுள்ளனர். தற்காப்புக்காக அவர்களை தாக்கி பிழைத்து கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டது. இந்தச் சண்டை நடந்து இரு நாட்கள் கழித்து 18ம் திகதி ராணுவப் பிரிவு பொதுமக்களுடன் சேர்ந்து கொண்டது.
அப்போது கூலிப்படையினரிடம் லிபியா ராணுவத்தினர்,"உயிர் பிழைக்க வேண்டும் என்றால் இங்கிருந்து சென்றுவிட வேண்டும். இல்லையெனில் கொல்லப்படுவீர்கள்" என்று பீதியூட்டியது. ராணுவம் சொன்னபடி சிலர் தப்பித்தனர். 200 பேர் மாட்டிக் கொண்டனர். முதலில் பிடிப்பட்டவர்களில் 15 பேர் அல்பைடாவில், கோர்ட் வாசலில் பொதுமக்களால் தூக்கில் இடப்பட்டதாக கடாபி அமைச்சரவையில் இருந்து வெளியேறிய முன்னாள் நீதித்துறை அமைச்சர் முகமது அப்த் அல் ஜலீல் தெரிவித்தார்.
இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அடையாள அட்டை மூலம் சாட் மற்றும் நைஜர் நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களில் சிலர் லிபியாவில் பிறந்து சாட் மற்றும் நைஜரில் குடியேறியுள்ளனர். பலர் அந்த நாடுகளை சேர்ந்தவர்கள். சிலர் கடாபி மகன் கமீசின் ராணுவப் பிரிவை சேர்ந்தவர்கள். இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

பஹ்ரைனில் நாடாளுமன்றம் முற்றுகை


பஹ்ரைனில் அரசு நிர்வாகத்துக்கு எதிராகப் போராடி வரும் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்நாட்டின் நாடாளுமன்றத்தை இன்று முற்றுகையிட்டனர்.
சன்னி முஸ்லீம்களையும், சன்னி அரசகுடும்பத்தாரையும் எதிர்த்து போராடும் ஷியா முஸ்லீம்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யும் படி கேட்டுக் கொண்டனர். மத்திய மனாவில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் முன்பு கூடியுள்ள 500 பேர் கொண்ட போராட்டக் குழுவினரில் ஒருவரான மிர்சா அல் சிகாபி நாங்கள் இந்தப் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு வந்தது எங்களை பிரதிநிதித்துவபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளத் தான்.
இராணுவத்தினர் சுட்டுக் கொன்றவர்களின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார். வெளிநாடுகளைச் சேர்ந்த சன்னி முஸ்லீம்களுக்கு இராணுவம், காவல் துறையில் பணியிடங்கள் தரப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு பலவித சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஷியா முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்புகள் தராததையும், மருத்துவ உதவிகளும் மற்ற சலுகைகளும் தங்களுக்கு மறுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏமன், பாகிஸ்தான் மற்றும் ஜோர்டன் நாட்டினர் காவல்துறையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால் எங்கள் குழந்தைகளுக்கோ வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எதுவும் செய்யாத பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று உம் ஜாசர் என்பவர் கூறினார்.
பஹ்ரைன் ஆட்சியாளர்களும் அமைதியாக போராட்டங்கள் நடத்தவும், பேச்சு வார்த்தைக்கு இசைவு தெரிவித்தும் உள்ளனர். சென்ற ஆண்டு கைது செய்யப்பட்ட 300 பேரை விடுதலை செய்தும் 4 புதிய அமைச்சர்களை நியமித்தும் மன்னர் உத்தரவிட்டிருந்தார்.
பேர்ல் ஸ்கோயர் மனாமா நீதிமன்ற வளாகப்பகுதிகளில் அரசு எதிர்ப்பாளர்கள் போராட்டம் தொடர்கிறது. அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஆதரவு தரப்பினரும் தெருக்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.

ஓமனில் மீண்டும் போராட்டம்: துறைமுகச் சாலையை முற்றுகையிட்டனர்


ஓமனில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தினை ஒடுக்குவதற்காக பொலிசார் நடாத்தியத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
இதனைக் கண்டித்து ஆயிரம் எதிர்ப்பாளர்கள் கடலோர நகரமான சோகரில் முற்றுகையிட்டனர். ஓமனில் ஆட்சி மாற்றம், வேலை வாய்ப்புகள் மற்றும் நல்ல சம்பளம் ஆகியவற்றை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் நகர பொலிஸ் நிலையத்தையும், 2 அரசு அலுவலகங்களையும் எரித்தனர். ஓமனின் முக்கிய தொழில் துறை மையமான சோகரில் பதட்ட நிலை நீடிக்கிறது. ஜனநாயகப் போராட்டம் அரபு உலகத்தில் எழுச்சிக் கொண்டுள்ள நிலையில் ஓமனிலும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
சோகர் நகரின் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதுடன் தீ வைத்தும் எரிக்கப்பட்டது. சோகர் நகர் முழுவதும் துருப்புகள் பாதுகாப்புப் பணியில் இருந்தன.
சோகர் துறைமுகச் சாலையில் டிரக்குகள் நிறுத்தப்பட்ட போதும் துறைமுகத்தில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டது என துறைமுகச் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த பதட்டத்தை தணிக்க அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.

Feb 27, 2011

துனீசிய இடைக்கால பிரதமரும் பதவி விலகினார் !



துனீசிய ஜனாதிபதியாக இருந்த ஜைனுல் ஆபிதீன் பின் அலி மக்களால் விரட்டப்பட்ட பின்னர் துனிசியாவில் ஏற்படுத்தப் பட்டுள்ளஇடைக்கால தேசிய அரசாங்கத்தில் நாட்டை விட்டும் மக்களால் விரட்டப்பட்ட துனீசிய ஜனாதிபதி ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் நிர்வாகத்தில் இடம்பெற்ற பிரதமரான முஹம்மத் அல் -கானநொசி – Mohamed al-Ghannouchi- பிரதமாராக பதவி வகித்தார் இவருக்கு எதிரான மக்கள் ஆர்பாட்டங்கள் தொடர்ந்தன இதன் விளைவாக தான் பதவி விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்
துனீசிய ஜனாதிபதி ஜைனுல் ஆபிதீன் பின் அலி நாட்டை விட்டு தப்பி சென்றபின்னார் பிரதமர் பதவிவகித்கித்த அல் -கானநொசி நடத்தப்பட்ட அரசியல் மாநாட்டின் பின்னர் எதிர்கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் இடைக்கால அரசாங்கமாக செயல்படும், 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார் விரிவாக பார்க்க இந்த அறிவிப்பை ஆர்ப்பாட்டகாரர்கள் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் விரட்டப்பட்ட துனீசிய ஜனாதிபதி ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் கட்சியும் தேசிய இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை எதிர்த்து ஆரப்பாடங்களில் ஈடுபட்டு வந்தனர்
இந்த நிலையில் டொக்டர் யூசுப் அல் கரழாவி அல் -கானநொசியினால் புதிய தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதைதான் விரும்பவில்லை என்றும் அல் -கானநொசியியை பிரதமராக கொண்டடிருந்த கடந்த அரசாங்கம் பேரவலம் மிக்கது என்று தெரிவித்துடன் கடந்த அரசாங்கத்தின் எந்த உறுப்பினரையும் உள்ளடக்காத இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறும் அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக அவர் விடுத்திருந்த அழைப்பில் பல சிலைகளையும், சர்வாதிகாரியான பெரிய சிலையையும் வீழ்த்திய துனீசிய மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்ததுடன் கடந்த அரசாங்கத்தில் இருக்கும் அனைந்து எச்சசொச்சங்களையும் வீழ்த்திவிடுமாரும் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது

கடாபி தலைநகரில் முடக்கப்படுகின்றார் !!



 கடாபி லிபிய  தலைநகர் திரிபோலியில் முடக்கப்பட்டுள்ளார் தொடர்ந்தும் பல நகரங்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் மக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த வண்ணமுள்ளது மேற்கு பகுதியின் இரண்டு நகரங்கள் நேற்று இன்னும் மக்களின் கைக்கு வந்துள்ளது என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன
அதேவேளை சவியாஹ் என்ற   திரிபோலிக்கு 50 கீ.மீ தூரத்திலுள்ள  பகுதியை கடாபிக்கு விசுவாசமான் படைகள் யுத்த டாங்கிகள் சகிதம் சுற்றி வளைத்துள்ளதாகவும் அவர்கள் அங்கு தாக்குதல்கள் நடத்தலாம் என்றும் அல் ஜஸீரா தெரிவிக்கின்றது.
லிபிய ஆர்பாட்டங்கள் தொடர்பான வீடியோ
கடாபி அல்லாஹ்வின் எதிர் என்று கூறும் அமெரிக்க ஆர்பாட்டம்
லிபிய ஆர்பாட்டங்கள் தொடர்பான வீடியோ


நஜுமுதீன் அர்பகான் வபாத்தானார்



துருக்கியின் இஸ்லாமிய அரசியல் எழுச்சிக்கு முக்கிய பங்காற்றிய டாக்டர் நஜுமுதீன் அர்பகான் வபாத்தாகியுள்ளார் இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன் இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று தனது 85 வயதில் வபாத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது இவர் ரபாஹ் என்ற இஸ்லாமிய அரசியல் இயக்கம் தோன்ற முக்கிய பங்காற்றியதுடன் துருக்கியின் முதல் இஸ்லமிய சிந்தனை கொண்ட பிரதமராகவும்  பதவி வகித்துள்ளார்.
இவர் துருக்கியில் ஒருவருடகாலம் பிரதமராக பதவி வகித்தார் 1996ஆம் ஆண்டு துருக்கிய இராணுவம் இவரை யாப்பை மீறி இஸ்லாமிய மாதிரிகளை துருக்கியில் புகுத்துகின்றார் என்று கூறி பலவந்தாக பதவி நீக்கியது இவர் ஒரு பொறியல்  பேராசிரியரும் Phd பட்டம் பெற்ற இஸ்லாமிய புத்திஜீவியுமாவார்   விரிவாக தற்போது துருக்கியில் அதிகாரத்தில் இருக்கும் கட்சியான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி -Justice and Development பார்ட்டி துருக்கியில் பேராசிரியர் நஜ்முத்தீன் அர்பகானினால் ஆரம்பிக்கப்பட்ட ரபாஹ் இயக்கத்தின் சிந்தனை முகாமில் வளர்ந்த கட்சியாகும், நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி -Justice and Development Party- 2007 ஆண்டு நடந்த தேர்தலில் 341 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது இவரின் இழப்பு முழு முஸ்லிம் உம்மாவுக்கும் பெரும் இழப்பாகும்

OurUmmah.org




வியூகம் வகுக்காத அநுராதபுர முஸ்லிம் அரசியல்



அநுராதபுர முஸ்லிம்களின் அவலநிலை நூறுக்கு மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களையும் மஸ்ஜிதுக்களையும் பாடசாலைகளையும் கொண்டுள்ள அனுராத புர மாவட்டத்தில் 42000 வாக்காளர்களும் உள்ளபோதும் ஒரு பாராளுமன்ற பிரதிநிதியோ அல்லது போதுமான மாகான சபை பிரதிநிதிகளோ இல்லாமை சுட்டிகாட்டப் படுகின்றது.
இங்கு வாழும் முஸ்லிம்கள் போதுமான விழிப்பூட்டல் இன்றி இருப்பதாக தெரிவிக்கபடுகின்றது இங்கு முஸ்லிம்கள் மிக குறைந்த அளவில் அரச அதிகாரிகளாக , ஆசிரியர்களாக இருப்பதுடன் பிரதான பதவிகளில் எவரும் இல்லாத நிலையம் கானப்படுவதாகும் சில கிராமங்களில் மத்ரஸாக்கள் இயங்குகின்றபோதும் அங்கு போதுமான ஆசிரியர்கள் குறைவாக காணப்படுவதாகவும் தெரிவிக்கபடுகின்றது  இது தொடர்பாக எமது lankamuslim.org அனுராதபுர செய்தியாளர் ஒருவருடன் தொடர்பு கொண்டபோது  விரிவாக படித்தவர்கள் இஸ்லாமிய கல்வியை பூர்த்தி செய்து பதவிகளை பெற்றவர்கள் ஊரை விட்டும் வெளியேறி கொழும்பு போன்ற பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும்  அவர்களுக்கும் ஊருக்கும் இடையான உறவு மிகவும் மட்டுப்படுத்த பட்ட நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.
அநுராதபுர பிரதேசத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைகளை இஸ்லாமிய அமைப்புகள் குறிப்பாக ஜமாஅதே இஸ்லாமி அமைப்பு செய்து வந்தாலும் அது போதுமானதாக இல்லை என்றும் வன்னி மாவட்ட முஸ்லிம்கள்  அநுராதபுர முஸ்லிம் வாக்காளர்கள் தொகைக்கு சமமாக வாக்கு வங்கியை கொண்டு மூன்று பாராளுமன்ற பிரதிநிதிகளை வெள்ளமுடியுமானால் ஏன்vஅநுராதபுர முஸ்லிம் வாக்காளர்  வாக்கு வங்கியை பயன்படுத்தி அதனை செய்யமுடியாதுள்ளது ? என்ற கேள்விக்கு தீர்வாக எந்த விழிப்பூட்டல் நடவடிக்கைகளும் மேற்கொள்ள படாத நிலையில் முஸ்லிம் வாக்கு வங்கி பயனற்று இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
News:-Lankamuslim

புஷ் மீது ஷூ வீசிய முன்ததிர் மீண்டும் கைது

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஆவேசத்துடன் ஷூவை வீசியெறிந்ததற்காக சிறைத் தண்டனையை அனுபவித்த முன்ததிர் பாக்தாதில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தும் வேளையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
பாக்தாதில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடுச் செய்திருந்தார் முன்ததிர்.


கடந்த 2008-ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் வேளையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வைத்து புஷ்ஷின் மீது ஆவேசத்துடன் ஷூவை வீசியெறிந்த முன்தழிரின் துணிச்சல் ஏகாதிபத்திய அமெரிக்காவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக முஸ்லிம்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களும் அவரைப் பாராட்டினர்.


ஷூ எறிந்த சம்பவத்திற்கு பிறகு முன்ததிர் பத்திரிகை தொழிலை விட்டுவிட்டு சமூகப் பிரச்சனைகளில் பங்கேற்று வருகிறார்.

கத்தாஃபியை சுட்டுத் தள்ளுங்கள் – லிபியா ராணுவத்தினருக்கு யூசுஃப் அல் கர்தாவி வேண்டுகோள்

qaradawi

சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும், பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞருமான டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி அல்ஜஸீராவுக்கு அளித்த நேர்முகத்தில், லிபியாவின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபியை சுட்டுக் கொல்லுமாறு அந்நாட்டு ராணுவத்தினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுத்தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தின் சாரம்சம் வருமாறு: தனது சொந்த நாட்டு மக்களுக்காக ஏவுகணகளை பயன்படுத்தி போராடுவது ஹீரோயிஸம் அல்ல. நான் எனது லிபியா ராணுவத்தைச் சார்ந்த எனது சகோதரர்களுக்கும், மக்களுக்கு கூறிக்கொள்கிறேன், நீங்கள் மக்களைக் கொல்வதற்கான கட்டளைகளுக்கு கீழ்படியாதீர்கள். ராணுவத்தினரில் எவருக்காவது முடியுமானால் அவர் கத்தாஃபியை கொல்லட்டும் என ஃபத்வா(மார்க்கத்தீர்ப்பு) வழங்குகிறேன்.
அவரைச் சுட்டு வீழ்த்துங்கள். அவரின்(கத்தாஃபி) தீங்கிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ இவ்வாறு கர்தாவி கூறியுள்ளார்.
Courtesy- UPI

அரபு முஸ்லிம் பிராந்திய இஸ்லாமிய அரசியல் எழுச்சி ஒரு ஆய்வுப் பார்வை



அரசியல் மற்றும் இஸ்லாமிய துறைகளில் தகமைகளை கொண்ட ஆய்வு துறையில் அனுபவம் கொண்ட அரசியல் ஆய்வாளர் M.ஷாமில் முஹம்மட் யிடம் அரபு முஸ்லிம் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் ஆர்பாட்டங்கள் தொடர்பாக எமது இணையதளத்தின் மற்றுமொரு கட்டுரையாளர் M. ரிஸ்னி முஹம்மட்அவர்கள் ஒரு நேர்காணலை செய்துள்ளார் இந்த நேர்காணலில் எமது கட்டுரையாளர் கேட்கும் கேள்விக்களுக்கு அவர் பதில்களை வழங்கியுள்ளார்.
அவை இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமான பயனுள்ள தகவல்களை கொண்டுள்ளது அதில் லிபியாவில் செயல்படும் இஸ்லாமிய இயக்கம் , எகிப்து, துனீசியா, லிபியா ஆகிய நாடுகளின் இஸ்லாத்தின் எதிர்காலம் நவீன இயக்கங்களான இஹ்வானுல் முஸ்லிமீன், ஹிஸ்புத் தஹ்ரீர் ஆகியவற்றின் பங்களிப்புகள் போன்ற விடையங்களை கொண்டுள்ளது அந்த நேர்காணல் இங்கு பதிவு செய்யப்படுகின்றது எமது கேள்விகளுக்கு அவர் வழங்கியுள்ள பதிகள் நேற்று வரையும் இடம்பெற்றுள்ள அரசியல் கள நகர்வுகளை அடிப்படையாக கொண்டது என்பது குறிபிடத்தக்கது
கேள்வி: கடந்த சில மாதங்களாக அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் மக்கள் ஆர்பாட்டங்கள் பற்றி உங்களின் பார்வை அவ்வாறு அமைந்துள்ளது ? விரிவாக பார்க்க
பதில்: துனீசியா, எகிப்து , லிபியா, ஜோர்டான் , அல்ஜீரீயா, யெமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் மக்கள் ஆர்பாட்டங்கள் என்பது இஸ்லாத்தை ஆன்மீக பலமாக கொண்ட விடுதலை , மற்றும் சுதந்திர முழக்கம், இந்த நாடுகளில் மக்கள் தொடரான அடக்கு முறைகளை எதிர்கொண்டுள்ளார்கள் இந்த நாடுகளில் அரசாங்கத்தின் ஊழல், மக்களின் வறுமை , இஸ்லாத்தை போதிக்கும் சக்திகள் மீதான மிகவும் மோசமாக ஒடுக்குமுறை , இஸ்லாத்தின் எதிரிகளுடன் அரச அதிகாரிகளின் உறவு என்பனதான் இந்த அரபு முஸ்லிம் நாடுகளின் எழுச்சிக்கான முக்கிய காரணங்கள்
கேள்வி: ‘சுதந்திரம்’ ‘விடுதலை’ என்ற பதங்கள் அதிகம் இந்த ஆர்பாட்டங்களில் ஒலிக்கின்றது இந்த ,சுதந்திரம்’ ‘விடுதலை’ என்ற பதங்கள் எவ்வாறு மேற்கு நாடுகள் பயன்படுத்தும் ,சுதந்திரம்’ ‘விடுதலை’ என்ற பதங்களில் இருந்து வேறுபடுகின்றது ?
பதில்: மேற்குநாடுகள் சித்தரிக்கும் ‘சுதந்திரம் ‘ என்ற கண்ணோட்டத்தில் இதை பார்க்க முடியாது மேற்சொன்ன நாடுகளில் உள்ள மக்கள் சுதந்திரத்தை முதன்மையானதாக மதிக்கின்றனர் ஆனால் மேற்கு நாடுகள கூறும் சுதந்திரம் என்ற பதப் பிரயோகத்துக்கும், இந்த நாடுகில் உள்ள மக்கள் உணரும் ‘சுதந்திரம்’ ‘விடுதலை’ என்ற பதப் பிரயோகத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு இவர்கள் இரவு நேர கேளிக்கை விடுதிகளை திறப்பதற்கும், அரை, முழு நிர்வாணமாக நடமாடவும் , கடற் கரைகளில் நிர்வாணமாக சூரிய குளியலில் ஈடுபடவும், கட்டுபாடற்ற பாலியல் உறவு கொள்ளவும் கூடிய சுதந்திரத்தை கோரவில்லை
அவைகளை துனீசியா மற்றும் எகிப்து அரசாங்கங்கள் ஏற்கனேவே செய்து வைத்துள்ளது இரவு நேர களியாட்ட விடுதிகளையும் , பார்களையும், விபச்சார விடுதிகளையும் , நிர்வாண கடற் கரையையும் எகிப்தில் மேற்கு நாடுகளுக்கு நிகராக ஹுஸ்னி முபாரக் அரசு ஷாம் அல்ஷெயிக் கடற்கரை பிரதேசத்தில் பல ஆண்டுகளாக நிர்வகித்து வந்துள்ளது அந்த ஷாம் அல்ஷெயிக் கடற்கரையில் தான் பலஸ்தீனர்களை கொலை செய்துவிட்டும், அவர்களின் வீடுகளை உடைத்து தகர்த்து விட்டு வரும் இஸ்ரேலிய படை அதிகாரிகளும் , ஆப்கானிஸ்தானிலும் , ஈராக்கிலும் கற்பழிப்பு கொலை , கொள்ளை என்ற உழைத்து களைத்து வரும் அமெரிக்கா , மற்று பிரிட்டன் படை அதிகாரிகளும் ஓய்வு எடுத்து வருகின்றனர்.
அதேபோன்று துனுசியாவின் நகரங்கள் முழுவதும் பிரான்ஸ் பாரிஸ் நகருக்கு நிகரான நிர்வாண பெண்கள் நடனமாடும் விடுதிகள் , பார்கள் என்று குவிந்து இருக்கின்றது ஏன் லிபியாவிலும் இந்த நிலை கடந்த 7 வருடங்களாக தலை தூக்க தொடங்கியிருந்தது லிபியாவின் எண்ணெய் கிணருகளை கொண்டுள்ள பகுதிகளில் இந்த விடுதிகள் உருவாக்க பட்டுவருகின்றது இவற்றை இந்த நாடுகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் பாவமாக தமது சமூக நீதிக்கு விரோதமாக பார்க்கின்றனர் இவர்கள் கோரும் சுதந்திரம் வேறு அதை மேற்கு நாடுகள் சித்தரிக்கும் விதமும் வேறு இந்த அரபு முஸ்லிம் நாடுகளில் மக்கள் ஆர்பாட்டங்கள் இந்த நாடுகளின் அரசாங்கங்களின் பொதுதன்மைக்கு எதிரானது பொதுத் தன்மையா அரசாங்கத்தின் ஊழல், மக்களின் வறுமை , இஸ்லாமிய விரோத போக்கு , மக்கள் எதிரியாக கருதும் இஸ்ரேல், அமெரிக்காவுடனான கள்ள மற்றும் பகிரங்க உறவு என்பன வற்றை குறிப்பிடலாம்.
கேள்வி : நீங்கள் உங்களில் ஒரு கட்டுரையில் ‘ஒன்றின் வீழ்ச்சி அதன் வழியில் அதன் அருகில் அதன் மாதிரிகளை கொண்டு விளங்கும் மேற்குலக சார்பு சர்வாதிகாரம் மீது சுழல் சூறாவளியாய் வீசுகின்றது’ என்று குறிபிட்டுள்ளீர்கள் இந்த சூறாவளியின் சொந்தகாரர் யார் ?
பதில்: ஒரு சொல்லில் விடை சொல்வதானால் இந்த சூறாவளியின் சொந்தக்கார சக்தி இஸ்லாம் என்றுதான் சொல்லமுடியும் , நான் மேற்சொன்ன நாடுகளில் பல இஸ்லாமிய சக்திகள் பல ஆண்டுகளா மக்கள் மத்தியில் வேலை செய்து வருகின்றது இந்த நவீன இயக்கங்களில் தோற்றத்துக்கு முன்பிருந்து இந்த பிராந்திய முஸ்லிம்களின் உள்ளங்களில் இஸ்லாம் பிரதான சக்தியாக வாழ்ந்து வருகின்றது இந்த நாடுகில் உள்ள கிராமங்கள் தோறும் இரண்டு நேரம் சாப்பிட மட்டும் முடியுமான மக்கள் ஐந்து தடைவைகள இறைவனை தொழுவதற்கு பின் நிற்பதில்லை லிபியாவில் 1913 ஆம் ஆண்டு தொடக்கம் இத்தாலிய ஆக்கிரமிப்பு படைகளுடன் உமர் முக்காதர் தலைமயிலான இஸ்லாமிய போராளிகள் படைத்த வீர காவியங்கள் லிபிய மக்கள உள்ளங்களில் இன்னும் பசுமையா இருக்கிறது அதேபோன்று மற்ற நாடுகளிலும் இந்த நிலை தொடந்து வந்துள்ளது இஸ்லாமிய இயக்கங்கள் வேலைத் திட்டங்களை நிறுவனப்படுதியுள்ளது இந்த இஸ்லாமிய இயக்கங்களுக்கு முன்பிருந்தே இந்த பிராந்திய மக்களின் உள்ளங்களை இஸ்லாம் ஆட்சி செய்து வருகின்றது என்பதுதான் உண்மை.
இந்த பிராந்தியங்களில் இஸ்லாம் என்பது அந்த பிராந்திய மக்களுடன் பிறந்து வளர்ந்து வளரும் வாழ்க்கை முறை இந்த மக்கள் மத்தியில் செயல்படும் இஸ்லாமிய நிறுவங்கள் அமைப்புகள் , இயக்கங்கள் என்பன இந்த மக்களை சரியா நெறிப்படுத்தும் வேலையை செய்துவருகின்றது இங்கு செயல்படும் குறிபிடத்தக்க சர்வதேச இஸ்லாமிய இயக்கங்களான இஹ்வானுல் முஸ்லிமீன், ஹிஸ்புத் தஹ்ரீர் போன்றவையும் பிராந்திய மற்றும் குறித்த நாடுக்கில் மட்டும் செயல்படும் இயக்கங்களான , ஸலபிகள் இயக்கம் , மாற்றத்துக்கான லிபிய இஸ்லாமிய இயக்கம் , அல் அந்நஹ்ழா துனீசியா இஸ்லாமிய இயக்கம் போன்றவகைகள் இந்த பிராந்திய எழுச்சிக்கு பின்னால் உள்ள இஸ்லாமிய இயக்கங்களாகும் இது அல்லாமல் வேறு பல இயக்கங்களுக்கும் ஆர்பட்டயங்களின்  களத்தில் வேலைசெய்துள்ளது ஆக பிராந்தியத்தின் எழுச்சி என்பது இஸ்லாத்தை அரசியல் சக்தியாக கொண்டுள்ள எழுச்சி என்பதை விட ஆன்மிக சக்தியாக கொண்ட எழுச்சி என்று தான் கூறமுடியும்.
கேள்வி : லிபியாவில் நடைபெற்று வரும் எழுச்சியின் பின்னணி பற்றி சற்று விளக்கமாக கூறமுடியுமா ?
பதில்: லிபியாவை பொறுத்த வரையில் இராணுவத்தின் ஒரு சாரரும் கடாபியின் கூலி படையான ‘மக்கள் இராணுவமும்’ மக்களை கொன்று வருகின்றது கடாபி மிகவும் கொடுரமானவர் கடந்த 1996  ஆம் ஆண்டிலும் தலைநகரான திரிபோலியில் அமைந்துள்ள அபூ சலீம் சிறைச்சாலையில் ஒரு இரவில் 1200 கைதிகளை எந்தவித கருணையும் இன்றி படுகொலை செய்துள்ளார் இதுவரையுள் பல ஆயிரகணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளானர் பல ஆயிரக்கான இஸ்லாமிய புத்திஜீவிகள பல்கலை கழகங்களிலும் ஆய்வு மையங்களிலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் மிக தெளிவான அல்லாஹ்வின் எதிரியாக லிபிய மக்கள் பார்கின்றனர் இங்கு ஆர்பாட்டங்களில் ஈடுபடும் பல இஸ்லாமிய கோத்திரங்களை இணைக்கும் இயக்கமாக ‘மாற்றத்துக்கான லிபிய இஸ்லாமிய இயக்கம்’ பார்க்க படுகின்றது. இந்த இயக்கம்   சனூசி என்ற இம்மாமால் சுடான் ,மற்றும் லிபியாவில் இஸ்லாமிய அரசியல் , மற்றும் ஆன்மீக சிந்தனைகளை போதிக்க    1836 ஆம் ஆண்டு மக்காவில்   உருவாக்கப்பட்டது தற்போது இயங்கும் ‘மாற்றத்துக்கான லிபிய இஸ்லாமிய இயக்கம்’   சனூசி இயக்க  சிந்தனையும் தற்கால இயக்கங்களுடைய சிந்தனை போக்கையும் கொண்டுள்ளதாக பார்க்கபடுகின்றது. அன்றைய சனூசிய  அமைப்பை 1836 ஆம் ஆண்டு உருவாக்கிய  இமாமின் முழுப்பெயர் சயித்  முஹம்மது  இப்ன்  அலி  அஸ் சனூசி என்பதாகும்.
இந்த  இஸ்லாமிய  அரசியல் இயக்க பின்னணிகளை கொண்ட  மாற்றத்துக்கான லிபிய இஸ்லாமிய இயக்கம் தற்போது லிபியாவில் ஆர்பாட்டங்களை வழிநடத்துவதாக அறிய முடிகின்றது  சனூசி இயக்கம் இவர்கள்  மேற்கின்  ஆக்கிரமிப்புகளை எதிர்த்து 1902 ஆம் ஆண்டு தொடக்கம் 1913 ஆம் ஆண்டு வரை  போராடியுள்ளது 1913 க்கு பின்னர்  லிபியாவில் எழுச்சி பெற்ற உமர் முக்தாரின் போராட்டமும் இந்த பின்னணிகளை கொண்டுள்ளது இந்த இயக்கத்தின் வளர்ச்சி தொடர்    1969  ஆம் ஆண்டு கடாபினால் பதவி கவிழ்க்க பட்ட மன்னர் இத்ரீஸ் காலம் வரையும் நீடித்துள்ளது கடாபி இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் சுமார் 1500 பேரை சிறை பிடித்து ஒரு மூடிய சிறையினுள் வைத்து தனது கூலிப்டை மூலம் கொலை செய்யதுள்ளார் அதன் பின்னரா காலங்களில் அந்த இயக்கம் மிகவும் இரகசியமாக இயங்கி வந்ததாக ஊகிக்கப் படுகின்றது   சனூசி இயக்க இறுதி ஆட்சியாளரான  இத்ரீஸ் கால கொடியுடன் மக்கள் அல்லாஹு அக்பர் என்ற கோஷங்களுடன் தற்போது தமது ஆர்பாட்டங்களை மக்கள் நடத்துகின்றனர்.
இத்ரீஸ் மன்னர் லிபியாவை ஆண்ட ஒரே மன்னராகவும் ஒரு இஸ்லாமிய சிந்தை கொண்டவராகவும் பார்க்கப் படுகின்றார் லிபியாவை பொறுத்த வரை மேற்கு உலகம் கடுமையான பயத்தில் இருக்கிறது துனீசியா , எகிப்து, ஜோர்டான் ,யெமன் போன்று இங்கு அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளின் மேற்குலகிற்கு விசுவாசமான நிறுவனங்கள மிகவும் குறைவாக இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் இதனால் துனீசியா , எகிப்து போன்ற நாடுகளின் இவர்கள் நிம்மதி பெருமூச்சு விடமுடியாது அதன் காரணமாக முழுமையா தமது உளவு நிறுவங்களின் கையில் நடவடிக்கைகளை கொடுத்து விட்டு முடிவுகளுக்காக காத்திருகின்றனர்.
இந்த நிலை மிகவும் ஆபத்தானது ஆப்கானித்தான் ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்காவின் உளவு நிறுவங்கள் செய்யும் அனைத்து அழிவு வேலைகளையும் இங்கும் இவர்கள் மேற்கொள்ள முயன்று வருவதாக தெரிகின்றது  இங்கு அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் இயற்கைக்கு புரம்பாகதான் அமைப்பும் கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு எதிராக சாத்விக முறைகளை பயன்படுத்தி போராடவும், ஆயுதங்கள் மூலம் போராடவும் எமது பலம் பெரும் இமாம்கள் அனுமதி அளிகின்றனர்  இமாம் அபூஹனிபா போன்ற இமாம்கள் கொடுமையான முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு அவர்கள் தொழும் நிலையிலும் ஆயுதம் ஏந்தி போராட முடியும் என்று கூறியுள்ளானர்.
மற்ற இமாம்களான இமாம் ஷாபி , இமாம் மாலிக் , இமாம் அபூ ஹனிபா போன்றவர்கள் கொடுமையான முஸ்லிம் ஆட்சியாளர்ககள்   தொழும் நிலையில் அவர்களுக்கு எதிராக ஆயுதம் தரிக்காமல் அனைத்து அமைதியான வழிமுறைகளையும் பயன்படுத்தி போராட முடியும் என்று தெரிவித்துள்ளனர் இங்கு களம் தான் போராட்ட  வடிவத்தை தீர்மானிக்கின்றது என்பது உண்மை அனுமதிகள் உண்டு என்பதற்காக பொருத்தமற்ற வழிமுறைகளை தெரிவு செய்வதை இஸ்லாம் ஏற்று கொள்ளாது என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும்
கேள்வி : இந்த அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் எழுச்சிகள் புரட்சியாக மாறிவிட்டதா ?
பதில்: துனீசியா, எகிப்து , லிபியா, ஜோர்டான் , அல்ஜீரீயா, யெமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் துனீசியா, எகிப்து ஆகிய இரண்டு நாடுகளிலும் மக்கள் ஆர்பாட்டங்கள் இடம்பெற்று மேற்கு உலகம் சார்பான சர்வாதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர் ஆனால் இன்னும் எந்த புரட்சியும் அங்கு இடம்பெறவில்லை காரணம் அந்த நாடுகள் இன்னும் அமெரிக்காவினதும் , மேற்கு உலகினதும் வலுவான கட்டுபாட்டின் கீழ் தான் இன்னும் இருக்கிறது.
துனீசியாவில் பின் அலியின் அரசாங்கம் தான் தொடந்து இடைக்கால அரசாங்கத்தை கையில் வைத்துள்ளது அதேபோன்று எகிப்திலும் இராணுவம் கையில் வைத்துள்ளது இவை யாப்பு மாற்றம் சட்ட மறுசீரமிப்பு என்று நகர்ந்து செல்கின்றது இதன் மூலம் சுதந்திரமான தேர்தல் ஒன்றை விரைவில் நடத்தபோவதாக தெரிகின்றது ஆனாலும் எதிர் தரப்பில் செல்வாக்கான தலைவர்கள் மக்களால் இனம் கனப்படாத நிலையிலும் எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பும் , துனீசியாவில் அந்நஹ்ழா இஸ்லாமிய அமைப்பும் ஜனாதிபதி தேர்தலில் தாம் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளது இந்த நிலையில் அரசியல் களம் மேற்குலகுகிற்கு சுதந்திரமாக் திறந்து விடப்பட்டுள்ளது இதனால் மீண்டும் மேற்கின் மேலாதிக்கம் இந்த இரண்டு நாடுகளிலும் இலகுவாக அமர்ந்து கொள்ளும் அதானால் ஆர்பாட்டங்கள் மாற்றங்களை கொண்டுவருகின்றது என்றாலும் அது புரட்சி என்ற தரத்தை கொண்டு பார்க்க முடியாது உள்ளது  எதிர்கால இஸ்லாமிய புரட்சி ஒன்றுக்கான வாயல்களை திறந்துள்ளது என்று கூறலாம்.
துனீசியா, எகிப்து ஆகிய இரண்டு நாடுகளிலும் மிகவும் கடுமையா இஸ்லாமிய விரோத அரசுகள் இஸ்லாம் பேசும் மக்களின் குரல் வளையை திரிகிக்கொண்டு இருகின்றன இந்த இஸ்லாமிய வாதிகள் சிறையில் அடைக்கபட்டார்கள் , கொலை செய்யப்பட்டார்கள், நாடு கடத்தப்பட்டார்கள், ஆயிரக் கணக்கான மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் வாடுகின்றனர் , பலர் காணாமல் போயுள்ளனர் எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் உட்பட பல இஸ்லாமிய இயக்கங்கள் தடைசெய்யப்பட்டது, மஸ்ஜிதுகளில் உரையாற்ற முடியாது பெரும்பாலான் புத்திஜீவிகள் தடை செய்யபட்டார்கள் நாட்டின் மஸ்ஜிதுகளின் உரைகள் கூட உள்நாட்டு அமைச்சின் கண்காணிப்பில் இருந்தது பல நூறு மஸ்ஜித் இமாம்கள் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள் இன்னும் பலர் சிறைகளில் இன்னும் எந்த குற்றசாட்டுகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இன்னும் பல மனிதர்கள் முபாரக் அரசுக்கு எதிராக பேசியதிற்காக கடத்தப்பட்டு விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கற்களை உடலில் கட்டி உயிருடன் கடலில் வீசப் பட்டார்கள் என்று தகவகள் தெரிவிக்கின்றன.
ஆகவே இந்த நாடுகளின் இஸ்லாமிய இயக்கங்கள் முதலில் இந்த அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைகின்றது அது மேற்கு சார்பான அரசாக இருந்தாலும் மக்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கும் யாப்பு , அரசாங்கம் என்பனவற்றை அனுமதிக்க முற்படுகின்றது அந்த நிலை ஏற்படுத்தப் பட்டால் அது இஸ்லாத்தின் வளர்சிக்கு பெரிதும் துணை புரியும் என்று நம்புகின்றனர் ஆக தொடர்ந்தும் மேற்கு ஆசான்கள்தான் இந்த இரண்டு நாடுகளிலும் நிர்வாக ஆசனங்களில் இருக்கபோகின்றனர் இது இந்த இரண்டு நாடுகளிலுமுள்ள ஒரு ஒற்றுமை
கேள்வி : எகிப்தை பொறுத்தவரை இது உடனடியா கிலாபத் நோக்கிய இஸ்லாமிய அரசியல் எழுச்சியா வடிவம் பெறவும், தோன்ற போகும் அரசாங்கம் இஸ்லாமிய அரசாங்கமாக தோற்றுவிக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் நேரடியாக எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது இந்த அரபு முஸ்லிம் நாடுகளின் எழுச்சி இஸ்லாமிய அமைதி புரட்சி ஒன்றாக பரிமாணம் பெறுமா ?
பதில்: இந்த எழுச்சி எகிப்து, துனீசியா ஆகிய நாடுகளை பொறுத்தவரை உடனடியாக இஸ்லாமிய புரட்சி ஒன்றாக பரிமாணம் பெறாது ஆனால் விரைவாக இஸ்லாமிய புரட்சி ஒன்றை நோக்கி பரிணாம வளர்ச்சி அடையும் என்றுதான் களம் சொல்கின்றது இஸ்லாமிய இயக்கங்களை பொறுத்த வரையில் பிராந்தியத்தில் மக்கள் எழுச்சிக்காக கடுமையாக பாடுபட்டுள்ளார்கள் ஆனால் ஆர்பாட்டங்களில் பங்கு பற்றினார்கள் அவற்றை வழிநடாத்த வில்லை அதேபோன்று அந்த எழுச்சி இஸ்லாமிய புரட்சியாக மாற்றம் பெற எந்த வியூகங்களையும் அவர்கள் அமைக்கவில்லை அதற்கு காரணம் பிராந்தியத்தில் தற்போது ஒரு இஸ்லாமிய புரட்சி என்பதை அதன் பருவத்காலத்துக்கு முந்தியதாக பார்கின்றனர் இஸ்லாமிய புரட்சி ஒன்றுக்கான பருவகாலத்துக்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று கருதுகின்றனர் என்பதாக தெரிகின்றது .
கேள்வி : இந்த அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் எழுச்சிக்கிடையான ஒற்றுமை வேற்றுமை என்ன ?
பதில்: துனீசியா ஆகிய நாடுகளை பொறுத்தவரை அனைத்து மக்களும் கந்துகொண்ட அனைத்து தரப்பினரும் ஒன்று பட்டு ஒரு இலக்குடன் மிகவும் அமைதியான முறையில் சர்வாதிகாரிகளை வெளியேற்றியுள்ளனர் அதன் பின்னரான நிலை பல மாற்றங்களுடன் மக்கள் விரும்பும் விடுதலை , சுதந்திரம் சட்டரீதியாக உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுடன் மேற்கு உலகின் வரம்பற்ற அதிகாரங்கள் ஓரளவு மட்டுபடுத்தபடுத்த நிலையில் மேற்கு மீண்டும் மேலாதிக்கம் செலுத்தும் நிலையில் இது வரை இந்த இரண்டு நாடுகளிலும் வித்தியாசங்களை காணமுடியாதுள்ளது
ஆர்பாட்டங்கள் நடைபெற்றுவரும் நாடுகளில் குறிப்பாக லிபியா தவிர்ந்த மற்றைய நாடுகளான , ஜோர்டான் , அல்ஜீரீயா, யெமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் எதிர் கட்சிகள் ஒத்த குரலில் நாட்டின் அதிகாரிகளை வெளியேற்றும் ஆர்பாட்டங்களில் முழுமையாக் ஈடுபடவில்லை குறிப்பாக , அல்ஜீரீயாவில் இஸ்லாமிய இயக்கங்கம் நாட்டின் அடுத்த தேர்தல் வரையும் தற்போது இருக்கும் அரசாங்கத்துக்கு அவகாசம் கொடுக்கவேண்டும் என்று கேட்டுள்ளதால் அதன் வேகம் சற்று குறைந்து வருகின்றது அதிரடியாக அல்ஜீரீயா நாட்டில் பல ஆண்டுகள் பழமை பாய்ந்த அவசரகால சட்டம் நேற்று நீக்கப்பட்டது மக்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றபடும் என்று அரசாங்கள் அறிவித்துள்ளதும் அதற்கு சில இஸ்லாமிய சக்திகளின் ஆதரவு இருப்பதாலும் ,களம் இங்கு வித்தியாசப்படுகின்றது
(நன்றி: OruUmmah.org)

Feb 25, 2011

இன்று கடாபியை வெளியேற்றும் ஆர்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது



லிபியாவின் ஆர்பாட்டங்கள் 11 ஆவது தினமாக தொடர்கின்றது ஆர்பாட்டகாரர்களுக்கு உஸாமா பின் லாதின் கட்டளைகளை பிரப்பிக்கின்றார் அல் கைதாவின் உறுப்பினர்கள் லிபியாவின் வாலிபர்களை தமது வலையில் சிக்கவைகின்றனர் இவர்கள் மஸ்ஜிதுகளும் எல்லா இடங்களிலும் இருந்தும் இயங்குகின்றனர் லிபிய வாலிபர்கள் போதை மாத்திரை கொடுக்கப்படுகின்றனர் பொதுமக்கள ஆர்பாட்டகாரர்களை பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் என்று மறைவிடம் ஒன்றில் ஒளிந்திருந்து லிபியாவின்தேசிய தொலை காட்சிக்கு தெரிவித்துள்ளார்
இதேவேளை லிபியாவின் கிழக்கு பகுதியிலும் லிபியாவின் மேற்கு பிரதேசங்கள சிலதிலும் இராணுவத்தினர் ஆயுதங்களையும் யுத்த தாங்கிகள் போன்ற கனரக ஆயுதங்களையும் கைவிட்டு சென்றுள்ளதாகவும் அவற்றை ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் கைப்பற்றியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன  இதேவேளை லிபிய மேற்கு பகுதியில் அமைந்துள்ள தலைநகர் திரிபோலியை சூழவுள்ள பகுதிகளில் கடாபியின் ஆதரவு இராணுவத்திற்கும் ஆர்பாட்டகாரர்களுக்கும் இடையில் துப்பாகிகள் , மோட்டார் குண்டுகள் என்பனவற்றை பயன்படுத்தி சண்டை நடைபெற்றுவருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன
இராணுவம் ஆயுதங்களை விட்டு சென்றுள்ளமை சந்தேகம் பார்வை ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் இன்று வெள்ளிகிழமை ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் பாரிய கடாபியை வெளியேற்றும் ஆர்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

லிபியாவில் மேற்கு எண்ணெய் மற்றும் ஆயுத மாபியாக்களின் ஊடாக களம் அமைக்கின்றதா ?


M.ஷாமில் முஹம்மட்
OurUmmah: லிபியாவில் தனது அதிகாரத்தை தக்கவைக்க போராடிக்கொண்டு இருக்கும் கடாபி லிபியாவின் கிழக்கு பிரதேசத்தை இழந்துள்ளதுடன் தலைநகரானதிரிபோலியிலும் ஆர்பாட்டங்களை எதிர்கொண்டு வருகின்றார் கிழக்கின் இராணுவ யுத்த டாங்கிகள்   கனரக வாகனங்கள், ஆயுதங்கள் என்பன வற்றை ஆர்பாட்டகாரர்கள் கைபற்றியுள்ளதாக சர்வதேச செய்திகள் காட்டுகின்றன FoxNews போன்ற சில செய்திகளில் இஸ்லாமிய ஆயுததாரிகள்  ஆயுதங்களுடன் முன்னேறி வருவதாகவும் அவர்கள் இராணுவத்தின் ஆயுத கிடங்குகள் என்பனவற்றை   கைப்பற்றும் ஆபத்து   இருப்தாகவும்   கூறுகின்றது.
அமெரிக்காவினதும் பிரிட்டனினதும் எண்ணெய் கம்பனிகள் தாம் எண்ணெய் அகழ்ந்து சுத்திகரிப்பதை நிறுத்தியுள்ளது லிபியா ஆபிரிக்காவின் கூடிய எண்ணெய் வளம் கொண்டநாடு இங்கு எண்ணெய் உற்பத்தி  செய்வதில் அமெரிக்கா , பிரிட்டன் முன்னணி உற்பத்தி நிறுவனங்கள் லிபியாவின் எண்ணெய் வளத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது  விரிவாக  நேற்று லிபிய தொலை காட்சியில் தோன்றிய கடாபி லிபியாவின் ஆர்பாட்டங்கள் அல் கைதா பயங்கரவாதிகள் வழிநடத்துவதாகவும் ஆர்பாட்டகாரர்களுக்கு உஸாமா பின் லாதின் கட்டளைகளை பிரப்பிக்கின்றார் என்றும் அவர்களின் வலையில் லிபியாவின் போதை பொருட்களுக்கு அடிமையாகியுள்ளவர்கள் சிக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ள்ளார்
லிபியாவின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா உட்டபட மேற்கு நாடுகள் தமது சர்வதேச கம்பனிகள்  ஊடாஉறிஞ்சி வருகின்றன  2004ஆம்  ஆண்டு அமெரிக்க புஷ் நிர்வாகம் லிபியாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை அறிவித்தது இதை தொடர்ந்து கடாபி தான் அணுவாயுத உற்பத்திக்கான முயற்சிகளை கைவிடுவதாகவும் War on terror  நடவடிக்கையில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்தாகவும் அறிவித்தார் அதை தொடர்ந்து அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளில் எண்ணெய் மற்றும் ஆயுத வர்த்தக கம்பனிகள் லிபியா மீது படையெடுத்தன   அமெரிக்காவினதும் மேற்கு நாடுகளினதும் சர்வதேச  எண்ணெய் மற்றும் ஆயுத உற்பத்தி மாபியாக்கள் கடாயின்  மகன் சைபுல் இஸ்லாம்  -இஸ்லாத்தின் உருவிய வால்- என்ற கருத்தை தரும் பெயர் கொண்ட கடாயின் மகனை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர் இந்த கம்பனிகள் தமது  ஹொலி வூட் படங்கள , பல்கலைகழக புத்ஜிவிகள் ,   ஊடகங்கள் போன்றவற்றின் ஊடாக  மேற்குலகின் மாதிரிகை மதிக்கும் விரும்பும் மனிதராக சைபுல் இஸ்லாத்தை   உலகிற்கு காட்டி வந்தனர் என்பதுடன் அமெரிக்காவின் சர்வதேச உளவு நிறுவனமாக CIA முக்கிய அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்புகளை கொண்டு இருக்கின்றார் என்ற தகவல்கள் மேற்கின் மீடியாக்களில் வளம் வந்தன
பிரிட்டன் கடந்த வருடம் இறுதி பகுதில் 2010  செப்டெம்பர் மாதத்தில் 55 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சினைப்பர் துப்பாகிகள் , மக்கள் ஆர்பாட்டங்களை அடங்கும் கருவிகள்  , குண்டு துளைக்காத வாகனங்கள்  போன்ற நடைபெறும் ஆர்பாட்டங்களுடன் மிகவும் தொடர்புடைய ஆயுதங்கை விற்பனை செய்துள்ளது என்பது குறிபிடத்தக்கது
பிரிட்டன் கடந்த 2007 ஆம் ஆண்டு  900 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான எண்ணெய் அகழ்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது என்பதுடன் பிரிட்டன் லிபியாவுடன் வருடம் ஒன்றுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான  வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது அமெரிக்காவின் எண்ணெய் வியாபாரத்தில் முதல் தரத்தில் உள்ள நிறுவனங்களான  CONOCOPHILLIPS, MARATHON OIL CORP, HESS CORP, OCCIDENTAL PETROLEUM CORP என்பனவும் அமெரிக்காவின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனங்களும்  தமது மாபியா வியாபார கோட்டையாக   லிபியாவை கொண்டுள்ளது
கடாபி ஆரம்ப கலங்களில் மேற்கு நாடுகளுடன் முரண்பட்ட போக்கை கையாண்டாலும் 2004  ஆம் ஆண்டின் பின்னர்  மேற்கு நாடுகளின் குறிப்பாக அமெரிக்கா பிரிட்டன் ஆகிய நாடுகளின் நண்பனாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளார் கடந்த  2010 ஆம் ஆண்டு  லிபிய தேசிய தொலை காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியில்  அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா தனது நண்பன் என்றும் அவர் ஆபிரிக்காவின் மகன் என்றும் தெரிவித்திருந்தார்  ஒபாமா அமெரிக்காவின் மற்ற தலைவர்களால் தலைவர்கள் போன்று அல்ல
என்று தெரிவித்தார்   உண்மை லிபியாவின் வளங்களை மேற்கு நாட்டு நிறுவனங்கள் உறுஞ்சி வருகின்றது மேற்கு நாடுகளுக்கு லிபியா முக்கியமான நாடு அதனால் அங்கு நடைபெறும் அரச படுகொலைகள பற்றி மிகவும் மந்த கதியில் மேற்கு செயல்பட்டு வருகின்றது ஐநா பாதுகாப்பு சபை தலைவர் தாம் லிபியாவின் உள்நாட்டு விடயத்தில்  தலையிட மாட்டோம் என்று அறிவித்துள்ளார் இந்த நிலையில் மேற்கு நாடுகள் என்னவிதமான அரசியல் நகர்வுகளை மேற்கொள்கின்றன என்பது ஆராயப்படவேண்டும்
தற்போது லிபியாவை கட்டுபாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டிய கட்டமைப்புகளை ஏற்படுத்த ஏற்கனவே லிபியாவில் கால்பதித்துள்ள மேற்கு நாட்டு எண்ணெய் மற்றும் ஆயுத மாபியாக்கள் மாபியக்களின்  ஊடாக  அமெரிக்காவும் மற்றைய மேற்கு நாடுகளும் முயன்று வருவதாக தகவகள தெரிவிகின்றன லிபியாவின் எண்ணெய் மற்றும் ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நிறுவங்கள மேற்கின் பெரும் வியாபர மாபியாக்கள் இவர்கள் சோமாலியாவின் ஆயுத கிளர்ச்சிகளுடன் தொடர்பு பட்டவர்கள் சோமாலிய மற்றும் சூடான் போன்ற நாடுகளின் இந்த அமெரிக்க மற்றும் மேற்கு வியாபார மாபியாக்கள் தமது நலன்களை பாதுகாக்க பெரிய ஆயுத குழுக்களை உருவாக்கி வழிநடாத்தி வருகின்றன என்பது லிபியாவில் என்ன நடைபெறபோகின்றது என்பதை விளங்கி கொள்ள உதவியாக இருக்கிறது
இதன் ஒரு அங்கமாகத்தான் லிபியாவில் நடைபெறும் ஆர்பாட்டங்களுக்கு கடாபி அல் காதாவை – அல் கைதா – சம்மந்தப் படுத்தி கதை சொல்லியிருப்பதும், இரவு வேளையில்  ஆயுதங்களுடன் ஆயுததாரிகள் நடமாடுவதாகவும் , கிழக்கின் பல பகுதிகளில் லிபிய இராணுவத்தின் யுத்த டாங்கிகள் கனரக வாகனங்கள் ஆர்பாட்டகாரர்கள் கைப்பற்றி வருவதாகவும் அதற்கு மேலாக லிபிய தலைநகரான திரிபோலியில் பிரதான மஸ்ஜித் ஒன்றின்  மினாரத் கடாயின் விசுவாசிகளை கொண்ட படைபிரிவான ஹம்சா படையணியின் தாக்குதலுக்கு இலக்கானதும் ,  அமெரிக்க  Wall Street Journal கடாபியிடம் மிகவும் ஆபத்தான  Mustard gas மற்றும் இரசாயன ஆயுதங்கள் ,  ஏவுகணைகள் , 1000 மெற்றிக்  தொன் யுரேனியம் ஆகியவற்றை தம் வசம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளதும் மேற்கு நாடுகள் தமது மேலாதிக்கத்தை இருக்க நியாயமான  காரனங்களை உலகிற்கு காட்ட போதுமானதாகக் தெரிகின்றது
சாட் மற்றும் எத்தியோப்பியா , சூடான்  போன்ற நாடுகளின் கூலி ஆயுத குழுக்களின் நடமாட்டம் லிபியாவில் குறிப்பாக கிழக்கு லிபியாவில் இருப்பதாக தெரிவிக்கபடுகின்றது, மேற்கு லிபியாவில் கிளர்ச்சிகளை ஏற்படுத்தி அதில் இலாபம் அடை முடியும் அல்லது கடாபியிடம் நாசகார ஆயுதங்கள் இருக்கிறது பொதுமக்களுக்கு ஆபத்தானது என்று கூறி அல்லது கடாயின்  ஆயுதங்கள பயங்கரவாதிகளின் கைக்கு சென்றால் மனித குலத்துக்கு பேராபத்து ஏற்படும் என்று கூறி லிபியாவில் நேரடியாக கால்பதிக்க முயற்சிக்கலாம்  தற்போதைய நிலையில் லிபியாவை ஒரு ஆப்கானிஸ்தானாக சித்தரித்து கட்ட  மேற்கு நாடுகள்  முயற்சிப்பதாக  கருதத் துண்டுகின்றது  தற்போது லிபியாவின் பல நகரங்களில் இரவு நேரங்களில் ஆயுதங்களுடன் பல மொழிகளில் உரையாடும் ஆயுததாரிகள் நடமாடுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிகின்றன எனினும் அவர்கள் கடாபிக்கு விசுவாசமான கூலி படைகள என்று மக்கள் தெரிவித்துள்ளனர்  ஆனால் அமெரிகாவின் FoxNews போன்ற ஊடகங்கள் அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிள் என்று முத்திரை குத்த முயல்கின்றது
செறிவான எண்ணெய்  வளங்களை கொண்ட லிபியாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க மேற்கு லிபியா வீதிகளில் நாடகங்களை அரங்கேற்ற தொடங்கியுள்ளது என்று தெரிகின்றது லிபியா சர்வதேச வியாபார மாபியாகளினதும் , புலனாய்வு  பயங்கரவாதிகளினதும் சத்திர சிகிச்சைகளமாக மாறிவருகின்றது  துனிசியா எகிப்து போன்ற நாடுகளில் மேற்கின் மேலாதிக்க நகர்வுகள் புறம்பானதாகவும் லிபியாவில் ஆப்கான ஈராக் மாதிரிகளிலும் அமைய வாய்ப்புள்ளது போன்று தெரிகின்றது

லிபியா கலவரம்: 2 முக்கிய நகரங்களை போராட்டக்காரர்கள் பிடித்தனர். குண்டுவீச விமானப்படை மறுப்பு



லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமாகி இருக்கிறது. தலைநகரம் திரிபோலியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் திரண்டு நின்று போராடி வருகின்றனர். அவர்கள் மீது அதிபர் கடாபி ராணுவத்தை ஏவிவிட்டு உள்ளார். ஆனாலும் பொது மக்கள் பயப்படாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.



இதை தவிர முக்கிய நகரமான மிஸ்ரதா, சப்ரதா, பென்காசி ஆகிய நகரங்களிலும் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது. இதில் மிஸ்ரதா நகரை போராட்டக்காரர்கள் தங்கள் பிடியில் கொண்டு வந்து உள்ளனர். அங்கிருந்த அரசு படைகள், மற்றும் போலீசார் வெளியேறி விட்டனர். அரசு அலுவலகங்கள் அனைத்தும் பொது மக்கள் கட்டுப் பாட்டில் உள்ளது.

இதே போல இன்னொரு முக்கிய நகரமான பென்காசியையும் பொது மக்கள் பிடித்தனர். அவர்கள் மீது ராணுவம் விமானத்தில் பறந்தபடி குண்டுகளை வீசி வருகிறது. பதவி விலக மறுக்கும் அதிபர் கடாபி ராணுவ அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கருதுகிறார்.

எனவே சொந்த நாட்டு மக்கள் என்றும் பாராமல் அவர்களை ராணுவம் மூலம் கொன்று குவித்து வருகிறார். இதனால் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆனால் இப்போது பல இடங்களில் பொது மக்ககள் மீது தாக்குதல் நடத்த ராணுவ வீரர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். விமானப் படையினரும் குண்டு வீச மறுக்கின்றனர்.

பென்காசி நகரில் போராட்டக்காரர்கள் மீது குண்டு வீசுவதற்கு 2 போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இந்த விமானத்தை ஓட்டிய 2 பைலட்டுகளும் குண்டு வீச மறுத்து விட்டனர். மேலும் அவர்கள் இருவரும் நடுவானில் பறந்த போது விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்துவிட்டு விமானத்தை கீழே விழ செய்தனர். இதில் 2 விமானங்களும் கீழே விழுந்து நொறுங்கின.

அந்த பைலட்டுகளில் ஒருவர் பெயர் அலி ஏமர் கடாபி. இவர் அதிபர் கடாபியின் பழங்குடியின ஜாதியை சேர்ந்தவர். ஆனாலும் கூட அவர் கடாபிக்கு எதிராக நடந்து கொள்வது ஆச்சரியம் அளிக்கிறது. ராணுவத்திலும் கடாபிக்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் கடாபி அரசு வீழ்ந்து விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஒபாமா பொது மக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அதிபர் கடாபி போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்ற அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சர்வதேச விதிமுறைகளை பின்பற்றி கடாபி உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

லிபியாவில் கலவரம் உச்ச கட்டத்தில் இருப்பதால் உயிருக்கு பயந்த மக்கள் பக்கத்து நாடான இத்தாலிக்கு அகதிகளாக செல்ல முயற்சிக்கின்றனர். 3 லட்சம் பேர் இத்தாலிக்கு செல்ல தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இத்தாலிக்கு அகதிகள் வந்தால் அந்த நாட்டுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று இத்தாலி வெளியுறவு மந்திரி பிராத்தினி கூறியுள்ளார்

நலத்திட்டங்களை அறிவித்தார் சவுதி மன்னர்



சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா மூன்று மாத கால மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் நாடு திரும்பியுள்ளார்.
அவரின் வருகையை ஒட்டி வீதிகள் எங்கும் தேசிய கொடி பறந்து கொண்டிருந்தன. அரச ஊடகம் உற்சாக மிகுதியில் காணப்பட்டது.
மத்திய கிழக்கு பகுதியில் உள்ள நாடுகள் சிலவற்றில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் உலுக்கி கொண்டிருக்கும் நேரத்தில் சவுதி மன்னர் நாடு திரும்பியுள்ளார்.
சவுதி அரேபியாவின் நீண்ட நாள் கூட்டாளியான எகிப்தின் ஹோஸ்னி முபாராக் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டார்.
பஹ்ரைன் மற்றும் யெமனில் நடைபெறும் வீதி போராட்டங்கள் அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சிலர், அரசியல் சுதந்திரம் இல்லாத சவுதி அரேபியாவிலும் பிரச்சனை வெடிக்கலாம் என எண்ணுகின்றனர். சவுதி அரேபியாவை பல பல காலமாக ஆண்டு வருபவர்கள் அங்கு அரசியல் சுதந்திரத்தை அனுமதித்ததே கிடையாது.
இதையெல்லாம் உணர்ந்து தான் என்னவோ, 87 வயதான சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா யாரும் எதிர்பாராத பல அதிரடி நல திட்டங்களை தற்போது அறிவித்துள்ளார். இவர் அறிவித்த திட்டங்களின் மதிப்பு கிட்டதட்ட 3700 கோடி அமெரிக்க டாலர்கள்.
பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு, வேலை வாய்ப்பிலாமல் உதவுவதற்கு மற்றும் குடும்பங்களுக்கு நியாய விலையில் குடியிருப்பு போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் உதவி மற்றும் கடன் தள்ளுபடி போன்ற சலுகைகள் கூட மன்னரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மன்னரால் அறிவிக்கப்பட்ட நல திட்டங்களில் அரசியல் சீர்திருத்தம் குறித்து எவ்விதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
உலகத்தில் மிக பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடான சவுதி அரேபியா மன்னராட்சி முறையிலேயே ஆளப்பட்டு வந்துள்ளது. இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றமோ, அரசியல் கட்சிகளோ கிடையாது.
எதிர்வாதங்களை வைப்பவர்களை சவுதி அரேபியாவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும், அரசியல் முறை முற்றாக மாற்றப்பட வேண்டும் என கூறி வருகின்றனர்.
வேலைவாய்ப்பின்மை மற்றும் வீடு பற்றாக்குறை ஆகியவை சவுதி அரேபியாவில் மிகப்பெரிய பிரச்சனை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் சவுதி அரேபியாவின் பெரும்பாலான நிலப்பகுதி மன்னர் குடும்பத்தின் சொத்தாக இருப்பதால், இந்த நிலத்தை விற்க போகிறார்களா அல்லது தானமாக கொடுக்க போகிறார்களா என்பது தெரியவில்லை.

அரபு லீக்கிலிரு​ந்து லிபியா நீக்கம்


அச்சிடுகமின்னஞ்சல்

அரசுக்கெதிராக போராட்டத்தை தொடரும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு சொந்த நாட்டுமக்களை கத்தாஃபியின் அரசு கொன்று குவித்து வரும் சூழலில் அந்நாட்டை அரபு லீக்கிலிருந்து வெளியேற்றியதாக அரபுலீக்கின் பொதுச்செயலாளர் அம்ரு மூஸாதெரிவித்துள்ளார்.
லிபியாவின் நிலைமைகளை குறித்து ஆராய கூடிய அரபுலீக்கின் ஆலோசனைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இத்தகவலை அல்ஜஸீரா முதன்முதலில் வெளியிட்டுள்ளது.

லிபியாவின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபி நேற்று தேசியத் தொலைக்காட்சியில் தோன்றி பேட்டியளித்திருந்தார். கடைசிமூச்சு இருக்கும்வரை போராடுவேன். நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான பேச்சே இல்லை. தேசத்திற்கெதிராக போராடும் கடைசி மனிதன் இருக்கும்வரை கொலைச் செய்வோம் என்ற கத்தாஃபியின் வெறித்தனமான பேட்டி வெளிவந்ததையடுத்து போர் விமானங்கள் மக்கள் மீது குண்டுவீசித் தாக்குதலை நடத்தின.

பதவியை ராஜினாமாச் செய்யமாட்டேன், சொந்த நாட்டு குடிமக்களை கொன்றுக் குவிப்பேன் என கத்தாஃபி தெரிவித்தது எல்லை மீறியச் செயலாகும் என அம்ரு மூஸா தெரிவித்துள்ளார்.

சகோதரி சாரா மாலினி பெரேரா விடுதலை: பஹ்ரைன் சென்றடைந்தார்!




பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சாரா மாலினி பெரேரா கடந்த வாரம் அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலுமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள அவர் கடந்த 10 ஆம் திகதி இலங்கையிலிருந்து பஹ்ரைனைச் சென்றடைந்துள்ளதாக 'அல்முஸ்லிமாத்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பௌத்த குடும்பம் ஒன்றில் பிறந்த சாரா மாலினி பெரேரா பல வருடங்களுக்கு முன்னர் புனித இஸ்லாத்தைத் தழுவி பஹ்ரைனில் குடும்ப சகிதம் வசித்து வருகிறார்.


இந் நிலையில் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 மாத விடுமுறையில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். விடுமுறையை முடித்துக் கொண்டு மீண்டும் 2010 மார்ச் மாதம் பஹ்ரைன் செல்லத் தயாரான நிலையில் இலங்கை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினாரால் கைது செய்யப்பட்டார்.

சாரா மாலினி பெரேராவால் சிங்கள மொழி மூலம் எழுதப்பட்ட இஸ்லாமிய பிரசார நூல்கள் பஹ்ரைனிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அதன் மூலம் இலங்கையில் தீவிரவாத சிந்தனைகளை பரப்ப முற்படுவதாகவும் ஹெல உருமய போன்ற சி;ங்கள கடும்போக்குவாதிகள் செய்த முறைப்பாட்டையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சில வாரங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சாரா மாலினி பெரேரா 2010 ஏப்ரல் மாதம் 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் வழக்கு விசாரணைகள் முடியும் வரை பஹ்ரைன் செல்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

சுமார் 10 மாதங்களுக்கும் மேலாக இவர் தொடர்பான வழக்கு விசாரணைகள் நீடித்த நிலையிலேயே தற்போது அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதோடு மீண்டும் பஹ்ரைன் சென்று குடும்பத்தோடு இணைந்து கொள்ளவும் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சகோதரி சாரா மாலினி பெரேரா வழக்கு விசாரணைகள் காரணமாக இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் கொழும்பிலுள்ள அல்முஸ்லிமாத் நிறுவனத்துடன் இணைந்து பல பணிகளில் பங்கெடுத்திருந்தார். அத்துடன் பல சட்டத்தரணிகளும் சகோதரர்களும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் சாரா மாலினி பெரேராவை விடுவிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Feb 24, 2011

புரட்சி அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் பரவும் - அஹ்மத் நஜாத்




மேற்காசியாவிலும், வட ஆப்பிரிக்காவிலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் உருவான மக்கள் புரட்சி அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் பரவு காலம் வெகுதூரத்தில் இல்லை என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களை அடக்கி ஒடுக்குவதில் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் பிரசித்திப் பெற்றவையாகும். அமெரிக்கா ஆதரவு பெற்ற அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கெதிராகத்தான் தற்போதைய எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

1979-ஆம் ஆண்டில் ஈரானில் அமெரிக்க ஆதரவுப் பெற்ற மன்னர் ஆட்சியை மண்ணைக் கவ்வச் செய்த புரட்சியைத்தான் இன்றைய புரட்சியாளர்கள் முன்மாதிரியாக காண்கிறார்கள் என அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.
News:-மாத்யமம்

வடமாகாணத்தில் உறங்கும் முஸ்லிம் வாக்காளர் தொகை அதிகரிக்கும் ஆபத்து !



வடமாகாண முஸ்லிம் வாக்களர்கள் தமது வாக்குரிமையை உரிய முறையில் பயன்படுத்துவார்களா ? என்பது கேள்வியாகியுள்ளது காரணம் இந்த முறை உள்லூராச்சி தேர்தல்களில் கொத்தணி வாக்கு சாவடிகள் ஏற்படுத்தப் படமாட்டாது என்று தெரிகின்றது இதன்காரணமாக கடந்த தேர்தல்கள் போன்று  இந்த முறை ஏனைய பிரதேசங்களில் வாழும்  வடமாகாண  மக்கள்    200 தொடக்கம் 400 கி மீ பிரயாணம் செய்து இயல்பாக வாக்குரிமையை பயன்படுத்துவார்களா ? என்பதும் தொடர்ந்தும் இவர்களின் ஒரு சாராரின் வாக்கு பலம் பயன்படுதபடாமல் போகும் ஆபத்தான நிலையும் தோன்றியுள்ளது இன்றைய நிலையில் வடமாகாண முஸ்லிம்களின் வாக்கு வங்கி மூன்று பிரிவாக உடைந்துள்ளது என்பது பற்றி இந்த கட்டுரையில் ஆராய்வோம்
வடமாகணத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு புலிகளினால் வெளியேற்றபட்ட முஸ்லிம்கள்  இலங்கையின் பல பகுதிகள் சிதறியும்  புத்தளத்தில் செறிவாகவும் கடந்த இருபது ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் இவர்கள் வடமாகணதுக்கு வெளியே 5 பாராளுமன்ற தேர்தல்களை சந்திதுள்ளர்கள் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேத்தலில் வடமாகாண முஸ்லிம்களுக்கு முதல் முறையாக கொத்தணி  வாக்கு சாவடிகளை அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுத்தது இந்த கொத்தணி வாக்கு சாவடிகளை பயன்படுத்தி வடமாகாண முஸ்லிம் இரண்டு பாராளுமன்ற ஆசனங்களை வென்றார்கள் இதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் இல்யாஸ் யாழ்ப்பாண முஸ்லிம்களால் தெரிவு செய்யப்பட்டார்  இவர் புத்தளத்தை சேர்ந்தவர் என்பது குறிபிடத்தக்கது அதேபோன்று வன்னி மாவட்டத்தில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எஸ்.எம். அபூபக்கர் வன்னி மாவட்ட முஸ்லிம்களால் தெரிவு செய்யபட்டார் இவர் வன்னி மாவட்டத்தில் பிறந்த தமிழ் இனத்தை சேர்ந்தவர் என்பதும் பின்னர் இஸ்லாத்தை ஏற்றுகொண்டதுடன்  இவர் முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதியாக முஸ்லிம்களால் தெரிவு செய்யபட்டார்  என்பதும்  குறிபிடத்தக்கது .
அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற  நான்கு பாராளுமன்ற  தேர்தல்களிலும் , மற்றும் உள்ளுராச்சி , மாகாண சபைகள் தேர்தல்களிலும் வடமாகாண முஸ்லிம்கள்   கொத்தணி  வாக்கு சாவடிகளை பயன்படுத்து பிரதிநிதிகளை தெரிவு செய்து வந்துள்ளனர்  கடைசியாக கடந்த வருடம் 2010 ஆம் ஆண்டு  இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் கொத்தணி சாவடி  முறை நடைமுறையில் இருந்தது என்பதுடன் வன்னி மாவட்ட முஸ்லிம்கள் மூன்று முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளை பெற்றுகொண்டார்கள் ஆனால் தற்போது இடம்பெற்றுவரும் மாற்றங்கள வடமாகாண முஸ்லிம்களின் தேர்தல்கள் மூலம் பெறப்படும் பிரதிநிதுவதுக்கு பெரும் சவாலாக வளர்ந்து வருகின்றது
இலங்கையில் இனி நடைபெறபோகும் எந்த தேர்தல்களிலும் கொத்தணி வாக்கு சாவடிகள் இடம்பெறாது என்பது தெரிகின்றது அப்படி எதிர் வரும் உள்ளுராச்சி தேர்தல்களில் அவை இடம்பெற்றாலும் அது தற்காலிகமானது இந்த  முறை மட்டும்தான் அவை இடம்பெறபோகின்றது,   சில மாதங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையாளர் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தம்மை  தமது நிரந்தர இடங்களில் பதிவு செய்துகொள்ளவேண்டும் அதாவது தமது சொந்த பிரதேசத்தில் அல்லது தாம் வசித்து வரும் பிரதேசத்தில் தம்தை அந்த பிரதேச வாக்காளராக பதிந்து கொள்ளவேண்டும்  தவறினால்  வாக்குரிமையை இலங்கும் நிலை ஏற்படலாம் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு ஏற்ப புத்தளம் , நீர் கொழும்பு , கொழும்பு , கண்டி , மாத்தளை போன்ற பகுதிகளில் வாழ்ந்து வரும் அதிகமான வடமாகாண முஸ்லிம்கள்  தம்மை தாம்  வாழும் பிரதேசதங்களில் பதிவு செய்துள்ளனர் இந்த அறிவிப்புக்கு முன்பும் பல குடும்பங்கள தாம்  வாழும் பிரதேசத்தில் பதிவுகளை செய்துள்ளனர்  இன்னும் பலர் தமது சொந்த பிரதேசங்களுக்கு சென்று பதிவுகளை மேற்கொண்டுள்ளனர் எனினும் தமது சொந்த பிரதேசங்களுக்கு திரும்பி சென்றவர்களில் அதிகமானவர்கள் போதுமான மீள் குடியேற்ற ஏற்பாடுகள் இல்லாமையால் பதிவுகளை மேற்கொண்ட பின்னர் திரும்பி சென்றுள்ளனர் இந்த தேர்தல் பதிவு நிலை தேர்தல்களில் வடமாகாண முஸ்லிம்களை  மூன்று   பிரிவுகளாக பிரித்து  விட்டுள்ளது  ஒன்று தம்மை தாம் கடந்த 20 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பிரதேசங்களின வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டவர்கள் இவர்கள் இனி அந்தபிரதேசங்களின் வாக்காளர்களாக மட்டும் பார்க்கப்படுவர் இதில் குறிப்பாக புத்தளம் பிரதேசத்தில் வாழந்து வரும் முஸ்லிம்கள்  புத்தள மாவட்ட வாகாளர்களாக தம்மை பதவு செய்துள்ளனர் இந்த நிலை வடமாகாணம் என்ற பார்வையில் வடமாகாண முஸ்லிம் வாக்கு வங்கிக்கு பாதிப்புக்களை  ஏற்படுத்தினாலும் புத்தளம் முஸ்லிம் வாக்கு வங்கி பலம் பெறுகின்றது இது இன்னும் பல அனுகூலங்களை தரக்கூடியது என்பதுடன் இந்த விடையம்  தனியாக ஆராயப்படவேண்டியது,
இரண்டாவது பிரிவினர் வடமாகாணத்தின் தமது சொந்த பிரதேசகளில் சென்று மீள் குடியேறியுள்ளவர்கள் இவர்கள் வடமாகணத்தில் வசிப்பதுடன் வடமாகாண தேர்தல் பதிவுகளையும் செய்துள்ளனர்  இவர்கள் மற்றைய  இரண்டு பிரிவினருடன் ஒப்பிடும்போது சிறிய தொகையினர் இவர்கள்தான் வடமாகான முஸ்லிம்களின் சமூக கட்டமைப்புகளை பாதுகாத்து வருபவர்கள்   மூன்றாவது பிரிவினர் வடமாகணத்தில்  மீள் குடியேறும் நோக்குடன் சென்றபோதும் போதுமான வசதிகள்இல்லாமையால்  தேர்தல்  பதிவுகளை அங்கு மேற்கொண்ட பின்னர் மீள் குடியேற முடியாது மீண்டும் திரும்பி வந்தவர்கள் என்று மூன்று பிரிவாக வடமாகாண முஸ்லிம்களின் வாக்கு வங்கி பிரிந்துள்ளது   தற்போது நடைபெறபோகும் தேர்தல்களில் தாம் வாழும் பிரதேசங்களில் தம்மை பதிவு செய்துகொண்டவர்கள் அந்த பிரதேசத்தில் அந்த பிரதேச மக்களுடன் வாக்களிப்பர் உதாரணமாக புத்தளத்தில் தம்மை பதிவு   செய்து  கொண்டவர்கள் புத்தளம் வாக்காளர்களாக மாறிவிட்டனர் அடுத்து  தமது சொந்த பிரதேசத்தில் மீள்குடியேறி அங்கு வாழந்து வரும் மக்கள் அங்கு தமது வாக்குகளை பயன்படுத்துவர்,    மூன்றாவது பிரிவினர் பதிவுகளை வடமாகாணத்தில் மேற்கொண்ட பின்னர் வேறு பிரதேசங்களில் வசிப்பவர்கள் இவர்கள் வாக்குகள் வடமாகாண முஸ்லிம் வாக்கு வங்கிக்குரியது என்பதும்  கொத்தணி வாக்கு சாவடிகள் இல்லாமையால்  இவர்கள் தற்போது வாழும் இடங்களில் இருந்து வாக்களிக்க பலர் 200 கி.மி, சிலர் 300 கி.மி , இன்னும்சிலர் 400 கி.மி களும் பிராயணம் செய்து வாக்களிக்க வேண்டியுள்ளது.
தற்போது இவர்கள் வாக்களிக்க வடமாகணம் செல்ல பிரயாண ஏற்பாடுகளை செய்து தருமாறு முஸ்லிம் கட்சிகள் தேர்தல் ஆணையாளரை கோரிவருகின்றது என்பதுடன் குறித்த கட்சிகள் பல வாக்குறுதிகளை வழங்கி ஆர்வமூட்டி தற்காலிகமாக இவர்களை அழைத்து செல்ல முடியும் ஆனால் அது எப்போதும் இலகுவாக அமைந்து விடாது என்பதுடன் தாமும் வாழும் பிரதேசங்களில் வாக்களிக்கும் இலகு தன்மைக்கு நிகராக அமையாது இது வாக்குகளை பயன்படுத்துவதில் மந்த நிலையை கண்டிப்பாக ஏற்படுத்தும்  கொத்தணி சாவடி முறை நடைமுறையில் இருந்த போது இலங்கையில் ஒரு தூரக் கிராமத்தில் இருக்கும் வடமாகாண  வாக்காளர் ஒருவருக்காக  இரண்டு போலீஸ் அதிகாரிகளும் ஒரு தேர்தல் வாக்கு பெட்டியும் அரசாங்கத்தால் அனுப்பப்பட்டது உதாரணமாக மாத்தளை உக்குவளை ரைத்தலாவளை கிராமத்தில் வசிக்கும் முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை மேயர் அபூசாலி ஹாஜியாரின்   மனைவி 83 வயது அவர் வாக்களிக்க  இரண்டு போலீஸ் அதிகாரிகளும் ஒரு தேர்தல் வாக்கு பெட்டியும் வழங்கப் பட்டுவந்தது என்பதை தற்போதைய நிலையுடன் ஒப்பிட்டால் அவர் 83 வதில் 293 கி மீ பிரயாணம் செய்து வாக்களிக்க வேண்டும் இது நிச்சயமாக வடமாகாண முஸ்லிம் வாக்காளர்களில் உறங்கும் வாக்காளர் பிரிவு ஒன்றை உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
புத்தளத்தில் வாழும் வடமாகாண முஸ்லிம் வாக்களர்கள் பலர் தம்மை புத்தள வாக்களர்களாக பதிவு செய்திருப்பது நான் மேற்சொன்னது போன்று முஸ்லிம்களுக்கு பல அனுகூலங்களை ஏற்படுத்த வழிசமைக்கும் என்பதுடன் வடமாகணத்தில் மீள் குடியேறியுள்ள முஸ்லிங்களின் வாக்கு வங்கி மீள் குடியேராது வடமாகணத்தில் தேர்தல் பதிவுவை மாட்டும் செய்துள்ள வாக்களர்களினால் பலம் பெறவில்லை இந்த வக்களர்கள் உறங்கும் வாக்காளர் நிலைக்கு வரைவாக சென்றுவிட வாய்ப்புகள் உள்ளது இவ்வாறான நிலை வடமாகாண முஸ்லிம் வாக்கு வங்கியில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் காணப்டுகின்றது இவர்கள் விரைவா முடிவுகளுக்கு வருவது வடமாகாண மற்றும் புத்தளம் முஸ்லிம் வாக்கு வங்கியின் பலத்தை அதிகரிக்க செய்ய உதவும் இந்த விடயங்கள் நிறுவனமயப்படுத்தி  சிந்து செயல்படாவிட்டால் எதிர்கால வடமாகாண முஸ்லிம் பராளுமன்ற உறுப்புரிமை கனவாகிவிடும்

المشاركات الشائعة