லிபியாவின் மக்களின் நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிகின்றன இது வரை 1000பேராவது கொல்லப்பட்டுள்ளனர் என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன என்று பிரஸ்டிவி தெரிவிக்கின்றது லிபியாவின் ராஜதந்திரிகள் பலரும் தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதுடன் கடாபி பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளனர்.
ஆர்பாட்டம் செய்யும் மக்கள் நேரடியாக சுட்டு கொல்லப்படுகின்றனர் கடாபிக்கு ஆதரவான இராணுவம் மக்கள் வீதிக்கு இறங்கவேண்டாம் என்று ஒலி பெருக்கில் மூலம் அறிவித்து வருகின்றது.யுத்த களங்களில் பயன்படுத்தப்படும் விமானங்கள் திரிபோலி நகரங்களில் குண்டுகளை வீசி வருகின்றது இந்த நிலை தொடர்பாக அல் ஜஸீராவுக்கு கருத்துரைத்துள்ள சர்வதேச முஸ்லிம் புத்திஜீவிகள் அமைப்பின் தலைவரும் உலக புகழ்பெற்ற இஸ்லாமிய புத்ஜீவியுமான டாக்டர் யூசுப் அல் கர்ழாவி ‘லிபிய இராணுவத்தில் யாருக்கு கடாபி மீது சுட முடியுமோ அவர் அவ்வாறு செய்யவேண்டும்’ என்றும் பொதுமக்களை கொலை செய்ய பிறப்பிக்கப்படும் கட்டளைகளுக்கு இராணுவம் அடிபணிய வேண்டாம் என்றும் லிபிய இராணுவத்தை கோரியுள்ளார்.
No comments:
Post a Comment