![]() | ![]() |
![]() லிபியாவின் நிலைமைகளை குறித்து ஆராய கூடிய அரபுலீக்கின் ஆலோசனைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இத்தகவலை அல்ஜஸீரா முதன்முதலில் வெளியிட்டுள்ளது. லிபியாவின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபி நேற்று தேசியத் தொலைக்காட்சியில் தோன்றி பேட்டியளித்திருந்தார். கடைசிமூச்சு இருக்கும்வரை போராடுவேன். நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான பேச்சே இல்லை. தேசத்திற்கெதிராக போராடும் கடைசி மனிதன் இருக்கும்வரை கொலைச் செய்வோம் என்ற கத்தாஃபியின் வெறித்தனமான பேட்டி வெளிவந்ததையடுத்து போர் விமானங்கள் மக்கள் மீது குண்டுவீசித் தாக்குதலை நடத்தின. பதவியை ராஜினாமாச் செய்யமாட்டேன், சொந்த நாட்டு குடிமக்களை கொன்றுக் குவிப்பேன் என கத்தாஃபி தெரிவித்தது எல்லை மீறியச் செயலாகும் என அம்ரு மூஸா தெரிவித்துள்ளார். |
No comments:
Post a Comment