Search This Blog

Jan 29, 2011

இலங்கையில் புதிதாக நாணயத்தாள்கள்: முதல்தடவையாக ஐயாயிரம் ரூபா பெறுமதியிலும் பணநோட்டு



எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு புழக்கத்தில் இருக்கும் நாணயத்தாள்களுடன் ஐயாயிரம் ரூபா நாணயத் தாளொன்றையும் அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தீர்மானத்தின் பிரகாரம் தற்போதைக்கு புழக்கத்தில்  இருக்கும் 20,50,100,500, 1000,2000 ரூபா பெறுமதியான நாணயத்தாள்களுக்கும் புதிதாக நாணயத்தாள்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
அதனுடன் இணைந்ததாக இலங்கையில் இதுவரை புழக்கத்தில் இல்லாத ஐயாயிரம் பெறுமதியான ரூபா நோட்டும் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ரூபா நோட்டுகள் எதிர்வரும் சுதந்திர தினத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.
இலங்கையின் அபிவிருத்தி, சுபீட்சம், கலைகள், பறவைகள் என்பன புதிய ரூபா நோட்டுகளில் இடம்பெற்றுள்ளன.

Jan 28, 2011

எகிப்தில் ஆர்ப்பாட்டம் தொடர்கின்றது இன்று வெள்ளிகிழமையும் பாரிய ஆர்பாட்டம்



கடந்த 25 திகதி தொடக்கம் எகிப்து நாடு முழுவதும் மிக பாரிய ஆர்பாட்டம் தொடங்கி நடைபெற்றுவருகின்றது. போலீஸ் காவல் நிலையங்கள் தீவைக்கப்பட்டுள்ளது தொடரும் ஆர்பாட்டம் நாடு முழுவதிலுமுள்ள சிறிய, பெரிய நகரங்கள் என்ற வித்தியாசமின்றி நடைபெற்றுள்ளதுடன் இரவு வேலைகளிலும் பல நகரங்களில் தொடர்ந்தும் மக்கள் ஆர்பாட்டயங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று வெளிக் கிழமை ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் மிக பாரிய ஆர்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்டுள்ளது தொடந்து நடைபெற்று ஆர்பாட்டங்களை கலைக்க ஹுஸ்னி முபாரக் அரசு சுவாசத்தடுப்பு புகை குண்டு, ரப்பர் துப்பாக்கி குண்டுகள் , குண்டான் தடிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியும் அளவற்ற கைதுகளை செய்தும் வருகின்றது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் தாக்குதல்களில் ஒரு போலீஸ் சிப்பாய் உட்டபட ஐந்து பேர் கொல்லபட்டுள்ளனர். இதேவேளை எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் அவரது மகன் கமால் முபாரக் குடும்பத்துடன் பிரிட்டனுக்குச் சென்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன ஆனால் அவர் நாட்டில் இருப்பதாக வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.


Jan 26, 2011

துரோகம்:கிழக்கு ஜெருசலத்தை இஸ்ரேலிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்ட ஃபலஸ்தீன் அரசு – அம்பலப்படுத்தும் அல்ஜஸீரா



27/01/2011
al-jazeeraமுஸ்லிம்களின் புண்ணிய நகரமான பைத்துல் முகத்தஸ் என்றழைக்கப்படும் மஸ்ஜிதுல் அக்ஸா நிலைப்பெற்றிருக்கும் கிழக்கு ஜெருசலத்தில் பெரும்பாலான பகுதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைக்க ஃபலஸ்தீன் அரசு ஒப்புக்கொண்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையின் போது ஃபலஸ்தீன் அரசு இந்த வாக்குறுதியை இஸ்ரேலுக்கு அளித்தது என அல்ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி கூறுகிறது.
ஃபலஸ்தீன் மத்தியஸ்தர் ஸஈப் எரகாத் அன்றைய இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் சிபி லிவ்னி, அன்றைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் காண்டலிசா ரைஸ், முன்னாள் ஃபலஸ்தீன் பிரதமர் அஹ்மத் க்வரியா ஆகியோர் பங்கேற்ற பேச்சுவார்த்தையின் போதுதான் ஃபலஸ்தீன் மக்களின் விருப்பங்களுக்கு மாற்றமான முறையில் இஸ்ரேலுக்கு அடிபணியும் விதமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாக அல்ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
“யூத வரலாற்றில் மிகப்பெரிய ஜெருசலத்தை உங்களுக்கு தருவதாக நாங்கள் வாக்குறுதியளிக்கிறோம்”- இது எரகாத் லிவ்னியிடம் கூறிய வார்த்தைகள்.
1967-ஆம் ஆண்டு நடந்த போரில் இஸ்ரேல் சட்டத்திற்கு புறம்பாக அபகரித்து பின்னர் தொடர்ந்து குடியேற்றங்களை கட்டிவந்த ஜெருசலத்தில் ஒரு பகுதியைத் தவிர இதர பகுதிகள் அனைத்தையும் இஸ்ரேலுக்கு தாரை வார்ப்பதாக இந்த ஒப்பந்தத்தில் முடிவெடுக்கப்பட்டது.
ஜபல் அபூ கனீம் என்ற பகுதியை மட்டும்தான் ஃபலஸ்தீன் அரசு கோரியுள்ளது.
1948-49 போர்காலத்தில் அகதிகளை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வது தொடர்பானது இரண்டாவது ஒப்பந்தம். ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் ஃபலஸ்தீனர்கள் வீதம் 10 வருடங்களில் ஒரு லட்சம் பேரை ஏற்றுக்கொள்கிறோம் என இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. ஆனால், போர் காலக்கட்டத்தில் இஸ்ரேலிலிருந்து வெளியேறியவர்களும், அவர்களின் வாரிசுகளான பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபலஸ்தீன் அகதிகள் உள்ளனர். இவர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஃபலஸ்தீன் பிரதிநிதிகள் கூறியபொழுதும் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கும்விதமாக ஒப்பந்தம் ஏற்பட்டது.
கடந்த 2000-ஆம் ஆண்டிற்கும், 2010 ஆம் ஆண்டிற்குமிடையே இஸ்ரேல், ஃபலஸ்தீன், அமெரிக்க தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் 16,076 ஆவணங்கள் அல்ஜஸீராவுக்கு கிடைத்துள்ளன. நான்கு பகுதிகள் அடங்கிய இதன் ஒரு பகுதி மட்டும்தான் அல்ஜஸீரா நேற்று முன்தினம் வெளியிட்டது. மீதமுள்ள பகுதிகள் வருகிற நாட்களில் வெளியாகும்.
ஆனால், அல்ஜஸீரா வெளியிட்ட ஆவணங்கள் குறித்து மறுப்பு தெரிவிக்கிறார் எரகாத். நாங்கள் ஒன்றையும் மறைக்கவில்லை எனவும், இதில் பெரும்பாலும் இட்டுக்கட்டப்பட்டது எனவும் அவர் தெரிவிக்கிறார். இது ஃபலஸ்தீன் அரசுக்கெதிரான சதித்திட்டம் என அஹ்மத் க்வரியா தெரிவித்துள்ளார். இஸ்ரேலுடன் நடத்திய அனைத்து பேச்சுவார்த்தைகள் குறித்தும் அரபுலீக்கிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவிக்கிறார்.
2008 ஆம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தை காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மூலம் தோல்வியை சந்தித்தது. தாக்குதல் நடத்தும் விபரத்தை இஸ்ரேல் முன்னரே மஹ்மூத் அப்பாசுக்கு தெரிவித்திருந்ததாகவும் இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை நடந்த விபரத்தை அன்றைய இஸ்ரேல் பிரதமர் எஹூத் ஒல்மர்ட் உறுதிச்செய்துள்ளார்.
ஃபலஸ்தீன் மக்களின் விருப்பங்களுக்கு எதிராக அப்பாஸும் அவருடைய கூட்டாளிகளும் இஸ்ரேலுடன் ஒத்துழைப்பதற்கான ஆதாரம்தான் இவை என ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஸமி அபூஸுஹ்ரி தெரிவித்துள்ளார்.
செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

Jan 23, 2011

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அரசியலிலும் களமிறங்குகின்றது !



இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி எதிர்வரும் உள்ளூராச்சி சபைகளுக்கான தேர்தலில் முதல் முறையாக அரசியல் களம் இறங்க தீர்மானித்துள்ளது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 50ஆண்டு கால வரலாற்றில் இந்த தீர்மானம் ஒரு புதிய பாதையில் பயணிக்க தயாராகியுள்ளதை காட்டுவதாக அமைந்துள்ளது மட்டுமல்லாது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு இஸ்லாமிய இயக்கம் அரசியலில் குதிப்பது இதுதான் முதற்தடவையாகும்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நகர சபைக்கான தேர்தல் களத்தில் சுயேச்சை குழுவாக குதிக்க முடிவு செய்துள்ளது  திருகோணமலை மாவட்டம் இலங்கைக்கு மட்டுமின்றி சர்வதேசத்தின் 
கண்களுக்கும் பிரதான பிரதேசமாக விளங்கும் பகுதி, திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்களின் தொகை 15,1692 (45.4%) ஆகவும் தமிழ் மக்கள்தொகை 95,652 – (28.6%) ஆகவும் சிங்கள மக்கள்தொகை 84,766 -(25.4%) ஆகவும் பதிவாகியுள்ளது.

கிழக்கு இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாக கிண்ணியா அமைத்துள்ளது . மாவட்டத்தின் பிரதான நகரமான திருகோணமலைப் நகரில் இருந்து சுமார் 20 கி.மி தூரத்திலும்  தலைநகரான கொழும்பில் இருந்து சுமார் 240 கி.மி தொலைவிலும் இந்த நகரம் அமைத்துள்ளது.
நகரத்தின் 35,000 சனத் தொகையில் பெரும்பாண்மையினராக முஸ்லீம் இனத்தவரும் குறைந்தளவில் தமிழர்களும், சிங்களவரும் வசித்து வருகின்றனர். இலங்கையின் அதிக நீளமான மேம் பாலம் இந்த நகரத்திலேயே கடந்த வருடம் நிர்மாணிக்கபட்டுள்ளது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அடுத்த அரசியல் களம் புத்தளமா? என்று வினா எழுப்பப்பட்டுள்ளது.
News: Lankamuslim

Jan 16, 2011

ஸ்ரீ லங்கா முஸ்லிம் தகவல் மையத்தின் தலைவர் ஆணைக்குழு முன் சாட்சியம்


ஸ்ரீ லங்கா முஸ்லிம் தகவல் மையத்தின் தலைவர் எஸ்.எம்.எம்.பஷீர் கற்றறிந்த பாடங்கள் மீளிணக்க ஆணைக்குழுவின் முன் அளித்த சாட்சியம்
கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை சென்ற மாதம் 7ம திகதி வெள்ளிக்கிழமை 2011ல் புத்தளம் கச்சேரியில் நடைபெற்றபோது அங்கு இலண்டனிலுள்ள முஸ்லிம் தகவல் மையத்தின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.பஷீர் சட்டத்தரணி (இலங்கை) சொலிசிட்டர் (இங்கிலாந்து) சாட்சியமளித்தார். அவரின் சாட்சியத்தில் ஒரு எடுபகுதி (excerpt) இங்கு பதிவிலிடப்பட்டுள்ளது விரிவாக பார்க்க
இலங்கை மக்கள் அதிகளவில் புலம் பெயர்ந்து வாழும் ஐரோப்பிய நாடான ஐக்கிய ராச்சியத்தில் கடந்த இரு தசாப்தங்களாக வாழ்ந்ததுடன் அங்கும் புலிப் பயங்கரவாதத்தின் செயற்பாடுகளை எதிர்ர்கொள்ள நேரிட்டது. புலிகளை பயங்கரவாதிகள் என்று வெளிப்படையாக நான் பல்வேறு சபைகளில் ஊடகங்களில் கூறி வந்ததன் காரணமாக எனது வாழ்வுக்கு அச்சுறுத்தல் இருந்தது
புலிப் பயங்கரவாதிகளின் தனிமங்கள் (elements) என்னை அல்கைடா பயங்கரவாதி என தங்களின் ஊடகங்களில் எனக்கெதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டனர் என்பதுடன் எனது வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்தனர் , அதனால் நான் இலண்டலில் உள்ள ஸ்கோட்லாந்து போலீஸ் நிறுவனத்துடன் எனது பாதுகாப்பு கருதி முறைப்பாடு செய்ய நேரிட்டதுடன் அவர்கள் எனக்கு பாதுகாப்பும் வழங்கினார்கள். ஆனால் இந்நிலைமை மே பதினெட்டாம் திகதி 2009க்கு பின்னர் மாற்றமடைந்தது. அம்மாற்றமானது அண்மையில் புலிகளின் சார்பு தனிமங்கள் ஊடகங்களின் தீவிர எதிர்ப்பு காரணமாக ஜனாதிபதி அவர்களின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (Student Union of Oxford University) நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது
இச்செயற்பாடு மீண்டும் புலிகளின் தனிமங்களை உசுப்பேத்தியிருக்கிறது. புலிகளின் ஆதரவுத் தளங்கள் மிகப் பலமாகவே ஐக்கிய ராச்சியத்தில் இருந்து வந்துள்ளது. தமிழ் தேசியவாதிகளும் அவ்வாறே இங்கு பலமாக செயற்பட்டுள்ளனர்.. அந் நிகழ்வில் புலம் பெயர்ந்து வாழும் முஸ்லிம் சமூகம் சார்பாக நானும் அங்கு உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். ஆனால் அவ்வாறான எதிப்பும் மீளினக்கத்துக்கு எதிரான செயற்பாடுகளும் இலங்கையில் காணப்படும் யதார்த்த சூழ்நிலைக்கு ஒத்திசைவாகவில்லை, இங்கு காணப்படும் சூழல் முற்றிலும் மாறுபட்டதுடன் இங்கு காணப்படும் மீளிணக்க சூழ்நிலைக்கு புலம் பெயர் புலி ஆதரவாளர்கள் , தமிழ் தீவிர தேசிய வாத செயட்பாட்டளர்களின் இவ்வாறான செயற்பாடுகள் எதிர்வினையையே உண்டாக்கும் என்பதை இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.
நான் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வந்தவன் . எனக்கு அங்கு அடிமனதில் பதிந்த நினைவுகள் இன்னும் கிளர்கின்றன. 1972ம் ஆண்டில் நான் சிங்களம் படிக்கக் கூடாதென்று நிர்பந்திக்கப் பட்டேன். எமது பாடசாலை சிங்கள ஆசிரியர் திரு .லயனல் எவ்வாறு மனக் கிலேசத்துடன் வெளியேறினார் என்பதும் எனது ஞாபகத்தில் உறைந்திருக்கிறது. முஸ்லிம்கள் கிழக்கிலே தமிழ் பேசும் மக்கள் என தமிழ் கட்சிகளால் கருதப்பட்டனர். இதனை எம்.எச்.எம்.அஸ்ரபின் அரசியலிலும் சான்றாகவிருந்திருக்கிறது. அவர் தமிழர் கூட்டணியுடன் 1977 தேர்தலில் கூட்டமைத்து தமிழர் தாயகம் பெற போராட உறுதி மேற்கொண்டார்.
ஆனால் கிழக்கு முஸ்லிம்கள் அவரையும் அவரது சகாக்களையும் அவர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் கொண்டிருந்த கூட்டு காரணமாக நிராகரித்தனர். முஸ்லிம் எப்போதும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் ஐக்கியத்துக்கும் ஆதரவாகவே செயற்பட்டுள்ளனர்.
சற்று பின்னோக்கி பார்த்தால் சமாதானத்தை கண்காணிப்பதில் தவறுகளை விட்டமைக்காக நோர்வேயின் கண்கானிப்பாளர்களை (Norwegian Monitors) நாங்கள் பொறுப்பாக்க வேண்டும். இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தான உடனேயே முஸ்லிம்கள் கிழக்கின் மூதூர், வாழைச்சேனை போன்ற பல பாகங்களிலும் குறி வைத்து தாக்கப்பட்டனர். யுத்த நிறுத்த ஒப்பந்தம் தனது முன்னுரையில் ” முரண்பாடுகளில் தரப்பினர் அல்லாத குழுவினரும் முரண்பாட்டு விளைவுகளினால் துயருற்று வருகிறார்கள் என்பதனை தரப்பினர் உணர்கிறார்கள்.
இதுதான் முஸ்லிம் பிரஜைகளை பொறுத்தவரை உள்ள நிலைமையாகும். ஆகவே இந்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகள் குடிமக்களின் அவர்களின் உடைமைகளின் பாதுகாப்பு எல்லா வதிவிடத்தோருக்கும் ஏற்புடைத்ததாகும். என்பதற்கு எதிராகவே செயற்பட்டனர்.
( “The Parties further recognise that groups that are not directly party to the conflict are suffering the consequences of it. This is particularly the case as regards the Muslim population. Therefore, the provisions of this Agreement regarding the security of civilians and their property apply to all inhabitants”).
2006 ம ஆண்டு மூதூரில் குடிமக்களின் பாதுகாப்பு குறித்து தேவை எழுந்த போதும் ; அவ்வாறே புலிகளிலிருந்து பிரிந்த சென்ற கிழக்கு முன்னாள் புலி உறுப்பினர்கள் மீது பிரதான புலி அமைப்பினர் தாக்குதல்களை மேற்கொண்டு முன்னூற்றுக்கும் அதிகமானவர்களை கொன்றபோதும் கண்காணிப்பு குழுவினர் அப்பிரதேசத்தை விட்டு நீங்கிச் சென்றதுடன் புலிகளின் மிலேச்சதனத்துக்கு ஆதரவளித்தனர், தமது கண்காணிப்பு கடமைகளிருந்து தவறினர். கண்காணிப்பு குழுவினர் வேண்டுமென்றே 2006 ஆம் ஆண்டில் மூதூரிலிருந்து வெளியேறினார்கள்
போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த காலத்தில் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் செயற்பட்ட கண்காணிப்புக் குழுவினர் அப் பகுதிகளில் வாழ்ந்த மக்களின் இருப்பைப் பலி கொடுத்துத்தான் தமது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டார்கள்.
புலிகளினால் யுத்த நிறுத்த உடன்பாடுகள் மீறப்பட்ட போதெல்லாம் வடக்கு கிழக்கில் முஸ்லிம்களே தங்களின் உயிர்களையும் உடைமைகளையும் பலியிட வேண்டி நேரிட்டது. இந்திய சமாதானப் படை இலங்கையை விட்டு வெளியேறத் தொடங்கியபோதும் இதுவே முஸ்லிம்களுக்கு நடந்தது. 1980 களின் பிற்பகுதிகளில் தமிழ் ஆயுத குழுக்களான ஈ.பீ ஆர் .எல் எப் ;,(E.P.R.L.F) ஈ .என். டி .எல். எப்; (E.N.D.L.F) புளட்,; (PLOTE) ஈரோஸ் (EROS) என எல்லா இயக்கங்களும் முஸ்லிம்களை பதம் பார்த்தனர்.
இந்நிலையிலே புலிகள் தாங்கள் முஸ்லிம்களின் நண்பர்கள் என்று பாவனை செய்து கொண்டு கிழக்கில் காலூன்றினார். ஆனால் அவர்களின் நட்பின் நிறம் மெதுவாக வெளிறத் தொடங்கியது அவர்களின் கொடூரங்கள் முஸ்லிம்களை கொன்றொழிப்பதிலும் வடக்கிலே வெளியேற்று வதிலும் உச்சநிலை அடைந்தது.
புலிகளுக்கும் பிரேமதாசா அரசுக்குமிடையிலான யுத்த நிறுத்தம் முறிவடைந்த போதும் முஸ்லிம்கள் பெரும் விலையை கொடுத்தனர். 1990களில் முஸ்லிம்களை கிழக்கிலிருந்தும வடக்கிலிருந்தும் நீக்கி விடும் தீர்மானத்தை புலிகள் எடுத்தனர் என்பதை அவர்கள் முஸ்லிம்களை கிழக்கில் மிலேச்சதனமாக படுகொலை செய்ததிலும் வடக்கில் வெளி ஏற்றத்திலும் துலாம்பரமானது.
மனித உரிமைகளுக்காகப் போராடும் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் அனைத்தையும் நான் ஆவணப்படுத்தி வைத்துள்ளேன். நான் புலிகளின் கொடூரத்திற் கெதிராக இலங்கையிலும் ஐக்கிய இராச்சியத்திலும் செயற்பட்டேன். புலிகள் சபாலிங்கம் போன்றோரை பிரான்சில் கொன்றது மாத்திரமல்ல அவர்களுக் கெதிராக செயற்பட்டோர் பலருக்கு உலகின் பல பாகங்களிலும் தீங்குமிழைத்தனர்.
இலங்கையில் ஆயுத போராட்டம் காரணமாக சகல சமூகங்கள் பாரியளவில் தங்களின் உயிர்கள் உடைமைகள் வாழ்விடங்கள் வாழ்வாதாரங்கள் என பலவற்றை இழந்து துன்புற்றுருக்கின்றன ஆகவே அவர்கள் யாவரும் தகுந்த முறையான நஷ்டவீடுகள் வழங்கப்பட வேண்டும், அவ்வாறு பாதிக்க பட்டோரின் மனத்தாங்கள்களை உடனடியாக ஆவனசெய்ய வேண்டும். சந்திரிகா அரசின் போது பிரேரிக்கப்பட்ட அரசியலமைப்பு சட்ட சீர்திருத்த சட்ட முன்வைப்பில் கூறப்பட்ட ஜூலை 1983 தொடங்கிய காலப் பகுதியிலிருந்து உள்நாட்டு யுத்தத்தினாலும் இன வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டோர் சகலருக்கும் உடனடி நிவாரணம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் தகவல் நடுவத்தின் தலைவர் என்ற கோதாவில் நான் பல சர்வதேச தொண்டர் நிறுவனங்களுடனும் ஐக்கிய இராச்சியத்திலுள்ள அரசியல்வாதிகளுடனும் கருத்துப்பகிர்வு செய்யும் சந்தர்ப்பங்கள் எனக்கு கிடைத்தன. எனது செயற்பாடுகளின் போது பல சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள் புலிகளின் மீதும தமிழ் போராட்டம் மீதும் அனுதாபம் காட்டுவதையும் ஏனைய தமிழ் மாற்று கருத்தாளர்கள் புளிகளுககெதிராக அவர்கள் கொண்டிருந்த கருத்துக்காக எதிர் கொண்ட பிரச்சனைகளை கண்டு கொள்ளதிருந்ததையும் நான் பார்த்தேன். அதேவிதமான கொள்கையையே நோர்வேயின் கண்காணிப்பாளர்களும் அனுசரித்தது போல் தோன்றியது.
தமிழ் குறுந் தேசிய வாதம் இலங்கையின் அமைதிக்கும் இறைமைக்கும் சவாலாக அமைந்திருந்தது. மூன்று தசாப்தங்களாக குறுந் தமிழ் தேசியவாத அரசியலாலும் ஆயுதப் போராட்டங்களாலும் பாதிக்கப்படிருந்த கிழக்கு வாழ் மூவின மக்களும் கிழக்கின் தலைமைத்துவங்கள் அரசியல் தலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது தமிழ் தேசிய வாத அரசியல் மண்டியிட வேண்டி நேரிட்டது. யாழ் மைய வாத சிந்தனைகளால் கட்டமைக்கப்பட்ட தமிழ் குறுந் தேசியவாதம் பல்லின சமூக சூழலை கிழக்கிலே சிதைவடையச் செய்ததது.
தெற்கிலே ஏற்பட்ட இரண்டு ஆயுதப் புரட்சிகளில் பங்கேற்ற இளைஞர்கள் இன்று தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து அரசியல்வாதிகளாகவும் எழுத்தாளர்களாகவும் ஊடகவியலாளர்களாகவும் மாறியுள்ளனர். அதேபோன்றுதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் உள்ளீர்க்கப்பட்டு அவர்களும் இந்த நாட்டின் வளர்ச்சியின் பங்காளர்களாக மாற்றப்பட வேண்டும் என விரும்புகிறோம்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒரு தமிழராக இருக்கிறார். இன்று இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை தோற்றுவிக்கும் செயற்பாடுகளில் உண்மையுடன் ஈடுபட்டுவருகிறார். இது கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்குப் புது அனுபவமாகும். இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் மூலமாக தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என அங்கு வாழும் மக்கள் நம்புகின்றனர். அந்தளவுக்கு நிலைமை மாற்றமடைந்துள்ளது என்றார். அம்மக்களின் அக்கறைகளும் சாட்ட பூர்வமாக உறுதி செய்யப்பட்டு அனைவரும் இலங்கையர் என்ற உணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
சம உரிமை இன்மை, வறுமை, வேலையின்மை .அதிகார சமநிலை பேணப்படாமை, மனித வலு பறிப்பு (Deprivation of human resources) என்பன தெற்கில் இரண்டு ஆயுதப்போராடங்களுக்கு வழி கோலின. அவ்வாறே வட கிழக்கிலும் ஆயுதப் போராட்டங்கள் இடம் பெற்றன ஆனாலும் புலிகள் உலகின் எந்த பயங்கரவாத இயக்கத்துடன்னும் ஒப்பிடமுடியாத அளவு பயங்கரவாதத்தை நாடியது. வட மாகாணத்தமிழர்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தை கிழக்கு தமிழர்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் “ஆயுதபோராட்டம்” முகிழ்க்கும் வரை செலுத்தினர் , அவ்வாறே ஆயுதப் போராட்டம் தொடங்கியவர்களும் ஆயுதத்தின் மூலம் அவ்வாறான அடக்கு முறையை அதே மக்கள் மீது மேற்கொண்டனர்.
நாங்கள் நாட்டின் நலனில் அக்கறை கொண்டோர் அனைவரையும் வெறுமனே இனப் பிரச்சினை அல்லது பிரச்சினை என்று கூறிக் கொண்டிராமல் பிரச்சினைகள் எவை என்று அடையாள படுத்தி கொள்ள வேண்டும் ஏற்கனவே சொல்லப்படுகின்ற பிரச்சினைகளுக்கு மூல காரணமாக விருந்த அல்லது அவ்வாறான பிரச்சினைகளாக இருந்தவை அல்லது அவ்வாறு இருப்பதாக நம்பப்பட்டவை இப்போதும அதே பரிமாணத்தில் இல்லை. இன்றைய பயங்கரவாதமற்ற சூழ்நிலையும் சமூகங்களுக்கிடையே நிலவும் பரஸ்பர புரிந்துணர்வும் ஐக்கியத்துக்காகவும் சமாதன சக வாழ்வுக்காகவும் ஊக்குவிக்கப் படுவதுடன் முன்னெடுத்து செல்லப்பட வேண்டும். இனவாத குறுந் தேசிய வாத அரசியலில் இன்னும் நம்பிக்கை கொண்டிருப்போர் இந்நாட்டு மக்களை தமது இனவாத அரசியலுக்கு பயன்படுத்த முனைவதற்கு இடமளிக்கக் கூடாது. பலர் இந்நாட்டில் இனங்களுக்கிடையே சமத்துவமின்மை தான் மிக அடி நாதமான பிரச்சினையாக இருக்கிறதென்று நம்புகிறார்கள். இனங்களுக் கிடையிலான தவறான புரிதலுக்கு காரணமாகும் காரணிகளை அடையாளம் கண்டு அரசியல் அமைப்பு சட்டவாக்கம் மூலம் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் அதன் மூலம் நாங்கள் அனைவரும் இலங்கையர்கள் என்ற உணர்வினை உருவாக்க வேண்டும். நாங்கள் நம்புகிறோம் ஜானாதிபதி அவர்களின் நோக்கமும் எதிர்பார்ப்பும் இவ்வாறுதான் இருக்கின்றதென்று. அவர் போதித்ததை செயலில் காட்டவேண்டிய தருணம் இதுவென்று நம்புகிறோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் தகவல் மைய ஊடக பிரிவு. மின்னஞ்சல்: slmic@hotmail.co.uk

Jan 15, 2011

ஃபலஸ்தீனை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் முதல் மேற்கத்திய நாடு நார்வே




ஃபலஸ்தீனை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக நார்வே அறிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் ஃபலஸ்தீனை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் முதல் நாடு நார்வேயாகும்.

ரமல்லாவில் ஃபலஸ்தீன் பிரதமர் ஸலாம் ஃபாயதுடன் நடந்த சந்திப்பிற்கு பிறகு நார்வேயின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜொனாஸ் கர் ஸ்டோரி இதனை தெரிவித்தார்.

ஃபலஸ்தீனை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதற்கான ஃபலஸ்தீன் அரசின் முயற்சிகளுக்கு ஆதரவை பிரகடனப்படுத்துகிறோம். அடுத்த செப்டம்பரில் தற்போதைய சூழல்கள் மாறும். சர்வதேச சமூகத்தின் ஒருபகுதியாக ஃபலஸ்தீன் மாறும் என எதிர்பார்ப்பதாக ஸ்டோரி தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்கு உதவுவதற்கான ஐரோப்பிய நாடுகளின் கமிட்டி அடுத்த ஏப்ரல் மாதம் கூடி ஃபலஸ்தீனுக்கு பொருளாதார, அரசியல் ஆதரவு கிடைக்க உதவுவோம் என ஸ்டோரி தெரிவித்தார்.

ஃபலஸ்தீன் பூமியில் இஸ்ரேலின் சட்டத்திற்கு புறம்பான குடியேற்ற நிர்மாணங்களை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் என ஸலாம் ஃபய்யாத் கோரிக்கை விடுத்துள்ளார்


அருகம் குடா பாலம் – (அருகம்பை பாலம்)



2004இல் சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுள் பொத்துவில் அறுகம் குடா சார்ந்த உல்லைப் பகுதியும் அடங்கும். இங்கு உறுதியாக அமைந்திருந்த பாலம் சிறிய சேதங்களுக்கு மட்டுமே உள்ளானது. ஆனால் பாலத்தின் தொடர்ச்சியாய் அமைந்த பாதை பொங்கியெழுந்த கடல் நீரினால் கழுவிச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னர் பாதைகள் அழிந்த இடங்கள் ஒரு தற்காலிக பாரிய புதிய இரும்புப் பாலமொன்றினால் ஈடு செய்யப்பட்டது. அது தொடர்புகளை பரந்து விரியச் செய்தது. போக்குவரத்தினை வழமை நிலைக்கு கொண்டு வந்தது. அந்த புதிய பாலத்தின் தோற்றமே இது.
New Bridge
சுனாமியின் பின்னரும் உறுதியாக நிலைத்து நின்று தன் பணி தொடரும் பழைய பாலத்தினையும் பார்த்துவிடல் அவசியமல்லவா? ஆம், இதோ பழைய பாலத்தின் தோற்றமொன்று. குறிப்பு: இந்த நிழற்படம் சுனாமிக்குப் பின்னர் (2005.07.13ஆம் திகதி) எடுக்கப்பட்டது.

பொத்துவில் மண்மலை


இனிய இயற்கை காட்சிகள் நிறையவே நிறைந்த பொத்துவிலின் அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இயற்கையாய் அமைந்ததே மண்மலை என்றால் மிகையில்லை. இது பொத்துவிலின் கிழக்கே அமைந்துள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் உறுதியுடன் நிமிர்ந்து நிற்கக் காணலாம். மண் ஒன்று சேர்ந்து மலையாக உருவெடுத்துள்ளது, ஓர் ஆச்சரியமான விடயம்தான். இதன் உயரம் 32 அடியையும் விஞ்சி நிற்பதை அங்கு செல்லும் எவரும் உணர்ந்து கொள்வர். இதன் உச்சியில் நின்று திக்கெல்லாம் நோக்கும் போது, அலை பாயும் கடல், செழித்து வளர்ந்த தென்னைகள், அடக்கமாய் வீற்றிருக்கும் அறுகம் களப்பு என அமைந்த இயற்கை எழில்கள் விழிகளுக்கு விருந்தாகும். மண் சேர்ந்து மலையானது மட்டுமல்லாது, அதனிடையிடையே பச்சைப் பசேலென வளர்ந்து விரிந்த பாரிய மரங்கள் பார்வைக்கு பக்குவமாய் திகழும். முழு நிலவில் பலரும் இங்கு தங்கள் பொழுதை இனிதாகக் களித்துவிட கூடிடுவார்கள். பௌர்ணமி நாளில் மண்மலையின் உச்சியிலிருந்து கடலை பார்க்கும் போது, நிலவின் விம்பம் கடல் நீர்ப்பரப்பில் தெரியும் காட்சி இருக்கின்றதே, அக்காட்சியின் அழகை வர்ணிக்க சொற்களே இல்லை. குளிர் காற்று சில்லென்று வீசுகையில் நிலவினை மேகம் மறைத்து பின்னர் அதனைத் தாண்டிச் செல்லுகையில் மண்மலையில் ஒளி மாற்றங்கள் கொண்ட விழாக் காட்சி போல் இரம்மியமான பொழுதுகள் மாறி மாறி வரும்
manmalai3.jpg

மண்மலையின் தெற்காக ஜலால்தீன் சதுக்க பிரதேசமும், கிழக்காக கடற்கரையும், மேற்காக மதுரஞ்சேனை பிரதேசமும், வடக்காக சின்னப்புதுக்குடியிருப்பு பிரதேசமும். எல்லைகளாக அமைந்து காணப்படும். கடந்த 2004இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது, மண்மலையானது ஒரு தடைச்சுவராக செயற்பட்டு அப்பிரதேசத்தில் சூழ வாழ்ந்த மக்களை பாதுகாத்ததையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
பொத்துவில் மண்மலை எப்போது, எவ்வாறு உருவாகியது? என்பதற்கான தெளிவான பதில்களோ, விளக்கங்களோ கிடைக்கப்பெறவில்லை. ஆனாலும் பண்டைய காலத்தில் கடற்கோள் போன்ற ஓர் பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள போதே மண்மலை உருவாகியிருக்கக்கூடும் என வரலாற்றில் ஆர்வம் கொண்டோர் சொல்வார். ஆயினும் பொத்துவில் அறுகம் குடா, மிகவும் முக்கியமான துறைமுகமாகக் திகழ்ந்ததாகவும் அறுகம் குடா என்பது Lithus Magnus எனும் பெயரில் வழங்கப்பட்டதாகவும் கி.பி 140 காலப்பகுதியில் தொலமியினால் வரையப்பட்ட வரைபடமும் குறிப்புகளும் குறிப்பிடுகின்றன. அறுகம் குடா சிறந்த துறைமுகமாக திகழ்வதற்கு அவ்விடம் அமைந்திருந்த மண்மலை பெரிதும் காரணமாக அமைந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ஏனெனில் துறைமுகத்திற்கு வரும் கப்பல்களை பாதுகாப்ப வைக்க ஒரு தளமாக மண்மலை அமைந்நதாக தெரிவிக்கின்றனர்.
manmalai3.jpg
இவ்வாறான பழம் பெரும் வரலாற்றினைக் கொண்ட மண்மலை இன்னும் அமைதியாய் ஏன் அடக்கமாய் நிமிர்ந்து நின்று மக்களுக்கு ஓய்வெடுக்கும் களமாக அமைந்துள்ள நிலையை எண்ணுகையில் இயற்கையின் படைப்புகளுக்கு ஏது நிகர் என வினவத் தோன்றுகின்றது

Jan 12, 2011

கல்லடியில் வெளிவந்த பாம்புகளும், கிழக்கின் வெள்ளமும்



கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழையின் காரணமாக ஒன்பது லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதோடு 132 ஆயிரம் பயிர்ச்செய்கை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. காரணமில்லாமல் காரியம் நடக்காது என்ற கோட்பாடு எனக்குள் மிதக்கிறது. கவியெல்லாம் பாட்டென்றான், பாட்டெல்லாம் வாழ்க்கை என்றான் மனிதன், பிதட்டினால் மயங்கும் உலகுக்குள் வாழும் நாம் ஏன், எவ்வாறு , எப்படி என்று சிந்திப்பதில்லை.
எவ்வளவோ மக்கள், எத்தனை உடமைகள் எங்கே. நீரில் முழ்கிவிட்டது, வெள்ளமும், கடலும் எம்மை சீண்டிப் பார்த்தது. அதற்கு முன் அந்த இறைவன் நமக்கு எச்சரிக்கை விடுத்தான். எம் புலன்களுக்கு விளங்கவில்லை. அகங்களுக்கும் புரியவில்லை.
கடந்த 2004.12.26 ம் திகதி ஞாயிறு காலை 8.59 மணிக்கு சீண்டிய சுனாமியின் கதை என்ன? அது ஏன் நம்மை சீண்டிப்பார்த்தது. இன்று பரிதவிக்கும் வெள்ளம் ஏன் கிழக்கை மாத்திரம் கூடுதலாக தாக்குகிறது, சிந்திக்கிறோமா? இல்லையா?.
சுனாமி வரும் முன்னும் பாம்பு வந்தது, வெள்ளம் வருமுன்னும் கல்லடிப்பாலத்தின் கீழ் பாம்பு வந்தது.
நாம் செய்கின்ற வினையினை இப் பூவுலகிலே அனுபவித்தாகவேண்டும். என்பது என் கருத்து. நாங்கள் செய்கின்ற ஒவ்வொரு கெட்டசெயலுக்கும் பலன் அனபவித்தாக வேண்டும். நம் உணர்வுகள் என்னவிதமாய் சிந்திக்கிறது என நாம் சிந்தித்தோமா. இல்லை எது செய்தோம் என்று பார்த்தோமா இல்லையே.
இறைவன் தண்டிக்கிறான் என்றுதான் சொல்லவேண்டும். இனியாவது திருந்துவோம் என்று எத்தளைமுறை எழுதுவது. போதும். போதும்.
யோசித்து நம்மை நாம் திருத்திக்கொள்ளுவோம். அறிகுறிகளை கண்டறிவோம். வாழப் பழகுவோம்.
பஹத்.ஏ.மஜீத்
பிரதம ஆசிரியர்

SRI LANKA WEATHER CONDITION COMING 10 DAYS

Jan 10, 2011

சூடான் இரண்டாக உடைக்கப் படுகின்றது மேற்கின் திட்டம் வெற்றிபெறுகின்றது


M.ரிஸ்னி முஹம்மட்
ஒரு தொகுப்பாக: டொக்டர் யூசுப் அல் கரழாவி சூடானின் தென்பகுதியில் வாழும் முஸ்லிம்கள் சூடான் வடக்கு , தெற்காக பிரிவதற்கு ஆதரவாகவாக்களிக்க கூடாது என்று மார்க்க தீர்ப்பு வழங்கியுள்ளார் இந்த பிரிவினை அமெரிக்காவும் ,மேற்கு நாடுகளும் முஸ்லிம் உலகின் ஒற்றுமையை உடைக்கும் இலக்குடன் ஆதரவளிக்கும் பிரிவினை இன்று தெற்கு பிரிவினை நாளை சூடானிலிருந்து டார்பூரை பிரிக்கும் பிரிவினை தொடரும் முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும் இன்று மேற்கு நாடுகள் ஒன்றாக இருக்கின்றன நாம் பிரித்து போய் இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்க நாடுகளில் பெரிய நிலபரப்பை கொண்ட நாடான சூடானின் விளங்குகின்றது சூடானில் கடந்த 16 வருடங்களாக சூடுபிடித்துள்ள சூடான் அரசுக்கும் தென்பகுதி ஆபிரிக்கப் பழங்குடியின சூடான் மக்கள் விடுதலை இராணுவம்-SPLA- இடையிலான 2005 ஆம் ஆண்டு வரை நடந்த கலகத்தில் பல ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் விரிவாக பார்க்க
வடக்குச் சூடானில் முஸ்லிம்களும் தெற்குச் சூடானில் ஆபிரிக்கப் பண்டைய மதநம்பிக்கைகளை, மரபுப்பழக்கங்களை பின்பற்றி வருகின்ற இனக்குழுக்களும் வாழ்கின்றன இன்று BBC போன்ற மீடியாக்களில் கூறப் படுவது போன்று தெற்குச் சூடானில் கிறிஸ்தவம் பெரும்பான்மையாக இன்றும் என்றும் இருந்ததில்லை BBC போன்ற ஊடகங்கள் தென்பகுதியில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்வதா உண்மைக்கு புறம்பான தகவல்களை முன்வைக்கின்றது என்பது குறிபிடத்தக்கது.
19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூட்சி சூடானிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர் முஸ்லிம்களையும் பழங்குடியின மக்களையும் எப்போதும் ஒன்று சேர்ந்து விடாது பார்த்து கொண்டனர் இதற்கான முஸ்லிம்களை கொண்ட வட சூடானில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்டும்போது அவை தெற்கில் மேற்கொள்ளப்படவில்லை தெற்கில் திட்டமிட்டு கிறிஸ்தவ மிசசொனரிகளிடம் பழங்குடியின மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் பணி ஒப்படைக்கப்பட்டது வறுமையில் முழ்கி இருந்த மக்ககளை கிறிஸ்தவ மிசசொனரிகள்- மிசநரிகள்-  பொருளாதார உதவி திட்டங்களின் ஊடாக பாரிய அளவில் கிருஸ்தவர்களா மாற்றியதுடன் வட பகுதி முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்வுகளையும் வளர்த்தது.
அந்த கால பிரிவில் ஆங்கிலேயரின் கட்டுபாட்டில் இருந்த அரபு முஸ்லிம் தலைமைகள் இதனை விளங்கிகொள்ளவிலை அல்லது அது பற்றி அலட்டிக்கொள்ளவில்லை இதனால் தென்பகுதி, வடபகுதி என்ற பாரிய இடைவெளி ஏற்பட்டு வந்தது இந்த சூழ்ச்சி வலையில் சிக்குண்ட வடக்கு முஸ்லிம் அரசியல் தலைமையும் பெரிதாக அபிவிருத்திகளை தென்பகுதியில் மேற்கொள்ளவில்லை அங்கு தேற்று விக்கப்பட்ட கலகமும் அதற்கு இடம்கொடுக்கவில்லை .
இந்த நிலை தொடர்ந்த போது சூடானில் திடீர்ச் சதிப்புரட்சி மூலம், 1969 ல், கேர்ணல் நிமேரி ஆட்சிக்கு வந்தார். 1980 வரை சர்வாதிகார ஆட்சி நடாத்திய நிமேரி அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் நண்பராகவிருந்தார். ஆனால் 1983 ல் நிமேரியின் அரசு தீடிரென இஸ்லாமிய “ஷரியா” சட்டத்தை அமுல்படுத்துவதாக கூறியது இது முஸ்லிம்கள் அல்லாத தென்சூடானியர் மத்தியில் மேலும் எதிர்ப்பலைகளைத் தூண்டிவிட்டது “பொர்” என்ற நகரிலிருந்த இராணுவ முகாம் அரசுக்கெதிராகக் கலகம் செய்தது. இக்கலகத்தை அடக்கவென அரசால் அனுப்பப்பட்ட  ஜோன் கரெங் என்ற இராணுவத் தளபதி கலக்காரர்களுடன் சேர்ந்து விடுதலை இராணுவத்தை உருவாக்கினார் அந்த போராட்டம் இன்று பிரிவினையாக விஸ்வரூபம் எடுத்து தென் பகுதி மக்களின் தேர்தல் மூல தீர்மானத்தின் மூலம் சூடானை வடக்கு , தெற்கு என்று இரண்டு தேசங்களாக பிரிப்பதா இல்லையா என்ற மேற்குலகின் சதிகளின் முடிவை காண சூடான் காத்திருக்கின்றது .
இன்று ஜனாதிபதி உமர் பஷீர் இவற்றை மாற்றி தென்பகுதியில் அபிவிருத்திகளை மேற்கொள்ள பல திட்டங்களை முன்வைத்தாலும் அவற்றை மேற்கொள்ளமுடியாத பொருளாதார நிர்பந்தங்களை எதிர்நோக்கி வந்தார் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்
தற்போது ஜனதிபதிய இருக்கும் உமர் பஷீர் ஜூன் மாதம் 1986 ஆம் ஆண்டு அமைதியான இராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியைப்பிடித்து இராணுவ அரசை அமைத்ததுடன், சூடானை இஸ்லாமிய கோட்பாடுகளை நோக்கி நகர்த்த முற்பட்டார் இதற்கு முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு அதன் தலைவரான பிரான்சில் சட்டக்கல்வி பயின்ற ஹசன் துராபியும் பஷீருக்கு துணையாக இருந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது
பஷீர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 75 வீதத்துக்கும் அதிகபடியான வாக்குகளால் ஜனாதிபதியாக தெரிவானார் பின்னர் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது தேர்தலிலும் 86 வீதத்துக்கும் அதிகபடியான வாக்குகளால் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானார் மேற்கு நாடுகளில் சதி நாசவேலைகளை புரிந்து கொண்ட பஷீர் 1997 ஆம் ஆண்டு அமெரிக்காவினதும் மேற்கு நாடுகளினதும் ஆதிக்கத்திலிருந்த வர்த்தகம் அனைத்தையும் தடை செய்ததுடன் கிறிஸ்தவ மிசசொனரிளின் நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றாக தடை செய்தார்.
இதனால் கோபம் கொண்ட அமெரிக்கா  உஸாமா பின் லாடனுக்கும் அவரது போராளிகளுக்கும் சூடானில் அடைக்கலம் வழங்கியுள்ளது என்று குற்றம் சுமத்தி , ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் சூடானுக்கெதிரான பொருளாதாரத்தடைகளை விதித்தது. 1998 ம் ஆண்டு சூடானில் மலேரியாத் தடுப்பு மருந்து தயாரிக்கும் – Al-Shifa pharmaceutical factory தொழிற்சாலையொன்றில் இரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்க அரசு ஏவுகணை வீசி அத்தொழிற்சாலையை அழித்தது. இதன் விளைவாக பத்தாயிரம் நோயாளிகள் மருந்து கிடைக்காமல் மலேரியாவால் இறந்துபோனார்கள் என்பது வேறுவிடையம்
பொருளாதார இலாபங்களை இழந்தமையாலும் புதிய சூடானின் இஸ்லாமிய கோட்பாடுகள் நோக்கிய நகர்வினாலும் கோபம் கொண்ட அமெரிக்காவும் ,மேற்கு நாடுகளும்  தமது வழமையா பிரித்தாளும் உளவு சதி நாசவேலைகளை பெரிய அளவில் சூடானில் அரங்கேற்றினர் இதன் விளைவாக தென்பகுதியில் மட்டுமின்றி மேற்கு மாகாணமான டார்பூரிலும் கலகங்கள் உருவாக காரணமாக இருந்தது என்று குற்றசாட்டுக்கள் பலமாக உண்டு தற்போது சூடானின் தென்பகுதியை பிரிக்க போடப்பட்ட திட்டங்களை போல் எதிர்காலத்தில் டார்பூர் பிராந்தியத்தையும் பிரிக்கும் வேலைத் திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்
சூடானின் டார்பூரை-Darfur- நகரில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை அதிபர் உமர் அல்-பஷீர் தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டதற்கு உரிய ஆதாரம் உள்ளதாக கூறி மேற்கு நாடுகளின் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்-பஷீருக்கு 2009 ஆம் ஆண்டு பிடி ஆணை பிறப்பித்து எனினும் குறிப்பிட்ட இனங்கள் இலக்கு வைத்து அழிக்கப்பட்டமைக்கு ஆதாரங்கள் போதாமையால் இன ஒழிப்பு குற்றச்சாட்டு குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படுவதை நீதிமன்றம் நிராகரித்து.  இவை உண்மைக்கு புரம்பாகசோடிக்கபட்டவை என்று உமர்  அல்-பஷீர் தெரிவித்திருந்தார் இந்த அனைத்து நாடகங்களையும் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் அரங்கேற்றிய நாடகமாக பார்கபடுகின்றது
தென்பகுதியில் 1995 ஆம் ஆண்டளவில் அமெரிக்க , பிரித்தானிய , இஸ்ரேலிய கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ஜோன் கரெங் தலைமையிலான “சூடான் மக்கள் விடுதலை இராணுவம்- SPLA- அரசுக்கெதிரான கலகத்தை ஆயுதப்போராட்டமாக தீவிரப்படுத்தியது. அமெரிக்கக் கிறிஸ்தவ சபைகளுடன் கொண்ட உறவினால் பலத்தால் அமெரிக்கா தனது திட்டத்தை செய்து முடிக்க கென்யா வழியாக ஆயுதத் தளபாடங்களை அனுப்பியது.
சூடான் பல அழிவுகளை சந்தித்தது இறுதியாக 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தோடு உள்நாட்டு கலகம் முடிவுக்கு வந்தது இந்த ஒப்பந்தத்தில் சூடானின் வடக்கும் , தெற்கும் ஒரு நாடாக இருப்பது அல்லது சுதந்திரத்தை தெரிவு செய்வது தென்பகுதியின் விருப்பம் மற்றும் உரிமை என்று ஒப்பந்தம் ஏற்றுகொள்ளப்பட்டது .
இதற்கமைய சூடான் வடக்கு தெற்கு என்று இரண்டு நாடாக பிரிவது தொடர்பான மக்கள் வாக்கெடுப்பு எதிர்வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறவுள்ளது. குறைந்தப்பட்சம் 90 சதவீதம் பேராவது நாடு இரண்டாக பிரிய ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று BBC  தெரிவிக்கின்றது இந்த நிலையில் இந்த வாரம் தென்பகுதியின் ஜூபா நகரத்திற்கு சென்று இருந்த சூடான் அதிபர் உமர் அல் பஷீர், சூடான் பிரிவது வருத்தமாக இருந்தாலும் மக்கள்   விரும்பினால் அதனை தான் ஏற்று கொள்வதாக கூறியுள்ளார் ஞாயிற்றுக்கிழமையன்று ஆரம்பிக்கும் வாக்கெடுப்பு ஒரு வார காலத்திற்கு இடம்பெறும். வாக்கெடுப்பில் பதிவு செய்த வாக்காளர்களில் குறைந்தப்பட்சம் 60 சதவீதத்தினராவது வாக்களித்தால் மட்டுமே தீர்மானம் செல்லுபடியாகும்.
இந்த நிலையில் அரபு நாடுகள் சுடானுக்கு போதுமான எந்த உதவிகளையும் செய்யவில்லை என்று குற்றம் சுமத்த படுகின்றது இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு ஐந்து வருடங்களில் வடபகுதியால் தென்பகுதிக்கு எந்த பெரிய அபிவிருத்திகளையும் செய்யமுடிய வில்லை அவ்வாறு செய்திருந்தால் இந்த பிரிவினையை தடுக்க முடியுமாக இருக்கும் ஒரு முஸ்லிம் தேசம் பிரியபோகின்றது அதுவும் வளம் கூடிய பகுதி முஸ்லிகளின் கையை விட்டும் போகபோகின்றது.
இதன் குற்றங்கள் அனைத்தும் முஸ்லிம் நாடுகளின் மீதுதான் ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர் காரணம் குறைத்து கடந்த ஐந்து ஆண்டுகளிலாவது போதுமான அபிவிருத்திகளை தென்பகுதியில் செய்து மக்களின் மனதை வெல்லும் எந்த முயற்சிக்கும் முஸ்லிம் நாடுகள் சூடானுக்கு உதவவில்லை என்பதுதான்.
டொக்டர் யூசுப் அல் கரழாவி சூடானின் தென்பகுதியில் வாழும் முஸ்லிம்கள் சூடான் வடக்கு , தெற்காக பிரிவதற்கு ஆதரவாக வாக்களிக்க கூடாது என்று மார்க்க தீர்ப்பு வழங்கியுள்ளார் இந்த பிரிவினை அமெரிக்காவும் ,மேற்கு நாடுகளும் முஸ்லிம் உலகின் ஒற்றுமையை உடைக்கும் இலக்குடன் ஆதரவளிக்கும் பிரிவினை இன்று தெற்கு பிரிவினை நாளை சூடானிலிருந்து டார்பூரை பிரிக்கும் பிரிவினை தொடரும் முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும் இன்று மேற்கு நாடுகள் ஒன்றாக இருக்கின்றன நாம் பிரித்து போய் இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு முஸ்லிம் தேசம் மேற்கின் சதிகளால் உடைக்கப்படுமா சில நாட்களில் தெரியும் இன்ஷா அல்லாஹ்




பொருளாதார நெருக்கடி:பாதுகாப்பு பட்ஜெட்டை வெட்டிக் குறைக்கும் அமெரிக்கா

Dollar Mushroom by GrapefruitTea
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா பாதுகாப்பு பட்ஜெட்டை பெருமளவில் குறைக்கிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 7800 கோடி டாலர் குறைக்க தீர்மானித்ததாக பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. தரைப்படை, கப்பற்படை ஆகியவற்றில் படைவீரர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் கோடிக்கணக்கான டாலரை செலவுச் செய்த அமெரிக்கா கடந்த 10 ஆண்டுகளுக்கிடையே முதன்முறையாக பாதுகாப்புச் செலவை வெட்டிக் குறைத்துள்ளது.

எல்லாத் துறைகளிலும் செலவை குறைக்கும் ஒரு பகுதியாகத்தான் பாதுகாப்புத்துறையிலும் செலவு குறைக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புத்துறை செயலர் ராபர்ட் கேட்ஸ் தெரிவிக்கிறார்.

மிக அத்தியாவசியமான காரியங்களில் மட்டும் பாதுகாப்புச் செலவை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால், சர்வதேச அளவில் அமெரிக்கா நடத்தும் ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என ராப்டர்கேட்ஸ் தெரிவிக்கிறார்.

2015 ஆம் ஆண்டு தரைப்படை, கப்பற்படை வீரர்களில் 45 ஆயிரம் பேரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 600 கோடி டாலர் மிச்சமாகும். அதேவேளையில், விமானப்படையில் 3400 கோடி டாலர் செலவுக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இரண்டாக செயல்படும் ஏர் ஆபரேசன் மையங்கள் ஒன்றாக்கப்படும். அடுத்த ஐந்து வருடங்களில் தரைப்படையில் 2900 கோடி டாலரும், கப்பற்படையில் 3500 கோடி டாலரும் செலவுக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது

4 பேர் மரணம் 7 லட்சம் பேர் பாதிப்பு 50 ஆயிரம் பேர் இடம்பெயர்வு உடமைகளுக்கு பலத்த பாதிப்பு !




கண்டி, மாத்தளை, தம்புள்ளை ஆகிய பிரதேசங்களில் பல இடங்களில் மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது அந்த பகுதிகளில் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளதுடன் இன்னும் பல கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் இலங்கையின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 7 லட்சம் பேர் பாதிக்கபடுள்ளதாகவும் 50 ஆயிரம் பேர்வரை இடம்பெயர்ந்துளதாகவும் இதுவரை 4 பேர் உயிர் இழந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மட்டகளப்பு, காத்தான்குடி, கல்முனை , சாய்ந்தமருது , நிந்தவூர், பொத்துவில் ஓட்டமாவடி, திருகோணமலை கின்னியா, மூதூர் போன்ற பிரதேசங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது அங்கு கடல்படை, விமானபடை ஆகியவற்றின் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் மீட்கப்பட்டு   விரிவாக வருகின்றனர் என்று அறிவிக்கப்ட்டுள்ளது மத்திய மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் நாளை பாடசாலைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி பேராதனை இரண்டாம் ராஜசிங்க வீதியில் இடம்பெற்ற மண்சரிவில் 5 வீடுகள் புதையுண்டு இருப்பதாகும். இவற்றுள் 15 பேர் வரையிலானோர் புதையுண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் இருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் 6 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அம்பிட்டிய மொனரங்க மரியவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் பாதிக்கப்பட்ட இருவரில் 9 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும். மற்றையவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் பாரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் 90 வரையான முகாம்கள் அமைக்கபட்டு மக்கள் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
News:-Lankamuslim


சவுதி அரேபியாவில் முதிர் கன்னிகள் எண்ணிக்கை 14 லட்சம்



சவுதி அரேபியாவில் வேலை இல்லா திண்டாட்டம் அதிக அளவில் இருக்கிறது. அதோடு வீடுகளுக்கும் தட்டுப்பாடு உள்ளது. இதனால் அந்த நாட்டு ஆண்கள் திருமணத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதன் காரணமாக 32 வயதாகியும் திருமணமாகாமல் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது இந்த எண்ணிக்கை 14 லட்சம் ஆகும். அதாவது 16 பெண்களில் ஒருத்தி திருமணம் ஆகாமல் இருக்கிறார்.
இந்த எண்ணிக்கை இன்னும் 4 ஆண்டுகளில் அதாவது 2015-ம் ஆண்டில் 40 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளைகுடா நாடுகளில் பெண்கள் தகுதியான ஆண்கள் கிடைக்காமல் தவிக்கிறார்கள். ஆண்களால் திருமணத்துக்கான பணத்தை பெண்வீட்டாருக்கு கொடுக்க முடியாததது தான் காரணமாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆண்கள் வெளிநாடுகளில் உள்ள பெண்களை திருமணம் செய்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Jan 4, 2011

அடுத்து சவூதியை ஆழ்வது யார் ? ஒரு பார்வை


சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா தனது   86 வயதில் உடல் இயலாமை, சோர்வு, களைப்பு போன்ற முதுமை நிலையினாலும் முதுகுவலி, ஹெர்னியாஆகிய நோய்களினாலும் அவதியுருகின்றார் அவருக்கு பல தடவைகள் அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது இறுதியாக்    கடந்த நவம்பர் 22-ம் தேதியன்று அமெரிக்காவிற்கு சிறப்பு சிகிச்சைக்காக சென்றிருந்தார்.
அதன்போது  தற்‌காலிக மன்னர் பொறுப்பினை இளவரசர் அப்துல்  அசீஸிடம் வழங்கிச்  சென்றார். அவர் சிகிச்சை முடிந்து திரும்பினாலும் அவரின் முதுமை ,இயலாமை காரணமாக   சவூதியை அடுத்து யார்  ஆழ்வது என்ற பிரச்சினை மன்னர் குடும்பத்தில் தோன்றியுள்ளதாக கருதுரைக்கபடுகின்றது மன்னர் அப்துல்லாஹ்வுக்கு அடுத்து இரு சகோதர்கள் இருப்பினும் அவர்களும் முதுமையின் இயலாமையில் இருப்பதாக சுட்டிகாட்ட படுகின்றது விரிவாக பார்க்க Video
தற்போது மன்னர் குடும்பத்தில் குழப்பம் சூடு பிடிதுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது இஸ்லாத்தை நேசிக்கும் பைசல் போன்றவர்கள் கல்வித் தகுதியுடன் இருந்தாலும் அவர்கள் இஸ்லாத்தை  நேசிப்பவர்கள் அமெரிக்காவின் நலன்களுக்கு எதிரானவர்கள் என்பதால் பெரும்பான்மை மன்னர் குடும்பம் அவர்களை ஒதுக்குவதாகவும் கல்வித்தகுதியற்ற அமெரிக்காவை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் பலர் தமக்குள் கடும் போட்டியை எதிர்  கொள்வதாகவும் சவூதியை ஆழத் தகுதியான எவரும் இதுவரை தொன்படவில்லை என்று   தெரிவிக்கபடுகின்றது.
இது  தொடர்பாக ஈரான் பிரஸ் தொலைக் காட்சியில் நடைபெற்ற ஆங்கில கலந்துரையாடல் இங்கு பதிவு பதிவு செய்யப்படுகின்றது




கடந்த பத்தாண்டுகளில் கஷ்மீரில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 7031


கடந்த 10 ஆண்டுகளில் கஷ்மீரில் மோதல்களில் சாதாரண மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உள்பட 7031 பேர் மரணமடைந்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2001 ஆகஸ்ட் முதல் 2010 வரை ஜம்மு-கஷ்மீரில் 4812 சாதாரண மக்களும், 2219 பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். இதனை தகவல் உரிமைச் சட்டத்தின் படி அனுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது.

கஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் கல்வீச்சு, போராளிகளின் தாக்குதல், ஆயுதப் படையினர் போராளிகளுடன் நடத்தும் தாக்குதல் ஆகியன நடந்தேறியுள்ளன. இதன் பலனாக மரணிப்பதும், காயங்களை அனுபவிப்பதும் சாதாரண மக்களும், பாதுகாப்பு படையினருமாவர் என அந்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது மாநிலத்தின் கடமையாகும். கஷ்மீரில் அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

தகவல் உரிமைச் சட்டத்தின்படி 2001 முதல் ஏற்பட்ட பேரிடர்களைக் குறித்த விபரங்களை அளிக்க அஸ்வின் ஸ்ரீவஸ்தவா விண்ணப்பித்திருந்தார்

இந்தியாவிலிருந்து புறப்பட்ட நிவாரண கப்பலுக்கு காஸ்ஸாவில் நுழைய அனுமதி



கடந்த மாதம் இந்தியாவிலிருந்து புறப்பட்ட காஸ்ஸா நிவாரண கப்பலுக்கு அல் அரீஷ் துறைமுகத்தில் நங்கூரமிடவும், ரஃபா எல்லை வழியாக காஸ்ஸாவிற்குள் நுழையவும் எகிப்து அனுமதியளித்துள்ளது.

120 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஃபலஸ்தீன் எம்.பி காலித் அப்துல் மாஜிதை மேற்கோள்காட்டி அல் அஹ்ராம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளையில் ஈரான், ஜோர்டான் ஆகிய நாடுகளிலிருந்து வந்த 45 பேர்களுக்கு எகிப்து அனுமதி மறுத்தது. ஈரான் வழங்கிய 10 ஜெனரேட்டர்கள் உள்பட சில சரக்குகளை காஸ்ஸாவிற்கு கொண்டுச் செல்லவும் எகிப்து அனுமதி மறுத்தது.

'ஏசியா டு காஸ்ஸா காரவான்' என்ற நிவாரணக் குழுவில் இந்தியா, ஈரான், ஜப்பான், இந்தோனேஷியா, பாகிஸ்தான், மலேசியா, நியூசிலாந்து, குவைத் உள்பட 15 ஆசிய நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகள் அடங்கியுள்ளனர்.

டிசம்பர் 27 ஆம் தேதி காஸ்ஸாவிற்குள் நுழைய ஏற்கனவே இக்குழு திட்டமிட்டிருந்தது. புதுடெல்லியிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி புறப்பட்ட இக்குழு தற்பொழுது சிரியாவில் உள்ளது.

News:தேஜஸ் மலையாள நாளிதழ்

மின்னி மறைந்த 365 நாட்கள்



  அதிர்ச்சியும், ஆச்சரியமும், ஆனந்தமும் கலந்த நாட்களை அளித்துவிட்டு 2010 ஆம் ஆண்டு விடைப்பெற்றது.

ஃபலஸ்தீன் போராளி இயக்கமான ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹூஹ் துபாயில் வைத்து மொசாத் ஏஜண்டுகளால் கொல்லப்பட்டது முதல் வெனிசுலா நாட்டின் பிரதிநிதியின் விசாவை அமெரிக்கா ரத்துச் செய்தது வரையிலான சிறியதும், பெரியதுமான என பல சம்பவங்கள் 2010 ஆம் ஆண்டில் நிகழ்ந்தேறின.

காஸ்ஸாவில் இஸ்ரேலின் அக்கிரமமான தடையால் துயரத்தை அனுபவித்து வரும் ஃபலஸ்தீன் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அளிப்பதற்காக துருக்கியிலிருந்து புறப்பட்ட நிவாரண கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் 9 துருக்கி நாட்டைச்சார்ந்த மனிதநேய ஆர்வலர்களை படுகொலைச் செய்யப்பட்டதும், மெக்ஸிக்கோ வளைகுடாவில் பிரிட்டீஷ் எண்ணைக் கம்பெனியின் எண்ணைக் கிணறு வெடித்து சிதறியதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பும், உலக போலீஸ் வேடமிடும் அமெரிக்காவின் அதீத ரகசியங்கள் விக்கிலீக்ஸினால் அம்பலமானதும் கடந்த ஆண்டில் நமது கவனத்தை ஈர்த்த சம்பவங்களாகும்.

கால்பந்து வீரர்கள் மண்டேலாவின் நாட்டில் பந்தை உருட்டியபொழுது உலகம் ஆப்பிரிக்காவை உற்றுநோக்கியது நேற்று நடந்ததுபோல் உள்ளது.

ஹைத்தியிலும், பாகிஸ்தானிலும், சீனாவிலும், தாய்லாந்திலும் தற்பொழுது ஆஸ்திரேலியாவிலும் இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட பெரும் பாதிப்பை நாம் கண்டோம். இந்த ஆண்டின் பிந்தைய நாட்கள் நமக்கு மறக்கமுடியாத நிகழ்வுகளை அளித்துச் சென்றது.


அவற்றில் சிலஉலகம் சிரித்தது சிலியுடன்:
அதிர்ச்சியுடன் கேட்ட 
செய்திக்கு உணர்ச்சிப்பூர்வமான முடிவு. பூகம்பத்தால் தகர்ந்துபோன சிலியின் சான்ஜோஸ் சுரங்கத்தில் 33 தொழிலாளர்கள் உயிருடனிருக்கின்றார்கள் என்பதனை 17 நாட்கள் கழித்து உலகம் அறிந்தபொழுது நம்பமுடியாத செய்தியாக இருந்தது. வெளி உலகினோடு தொடர்பு கொள்ளவியலாமல் 700 மீட்டர்ஆழத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கும், மனோநிலை பாதிக்கப்படாமலிருக்கவும் அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்தினர். 69 தினங்களுக்கு பிறகு 33 தொழிலாளர்களும் சுரங்கத்தை விட்டு வெளியேறும் வரை உலகம் மனமுருகி பிரார்த்தித்தது சிலியுடன்.

ஐரோப்பாவில் தனிமனித சுதந்திரத்தின் மீது விழுந்த அடி
முஸ்லிம் பெண்கள் தங்கள் முகத்தை மறைக்குவிதமான புர்காவை அணியக்கூடாது என ஐரோப்பாவில் வலதுசாரிகள் கச்சைக்கட்டி களமிறங்கிய வருடமாக 2010 அமைந்தது.

பிரான்சிலும், ஸ்பெயினில் சில நகரங்களிலும் பெண்கள் புர்காவை அணிவது தடைச்செய்ய சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அரை நிர்வாணத்துடன் பெண்கள் சுற்றித் திரிவதை சுதந்திரம் எனக்கூறும் மேற்கத்திய உலகம் தங்களது முகத்தை தாமாகவே மறைக்க விரும்பும் முஸ்லிம் பெண்களின் தனிமனித சுதந்திரத்தில் தலையிட்டு தனது இரட்டை முகத்தை பகிரங்கப்படுத்தியது.

புர்காவை தடைச் செய்ததற்கு ஆட்சியாளர்கள் கூறிய காரணம் பொது இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு என பதிலளித்தனர்.

இத்தாலியும், நெதர்லாந்தும் பிரான்சின் முட்டாள்தனத்தை பின்பற்றியது. ஒடுக்கப்பட்ட ரோம இனத்தவரை நாடு கடத்தப் போவதாக பிரான்சு மிரட்டியது.

பார்ஸல் குண்டுகள் ஐரோப்பாவின் பல நகரங்களிலும் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பான செய்தியாக மாறியது. ஆனால், அதன் பெயரால் நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை சிறையிலடைத்து கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கு ஊடகங்கள் எவ்வித முக்கியத்துவத்தையும் அளிக்கவில்லை.

தோற்றுப்போன மேற்காசிய அமைதி முயற்சி
அமெரிக்காவின் தலைமையில் அக்டோபர் 2-ஆம் தேதி ஃபலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கிடையேயான அமைதி பேச்சுவார்த்தை வாஷிங்டனில் துவங்கியது.

இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணங்களை தொடர்ந்தால் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவோம் என ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் எச்சரிக்கை விடுத்தது எவ்வித பலனையும் தரவில்லை.

10 மாத மொரட்டோரியத்திற்கு பிறகு இஸ்ரேல் மீண்டும் குடியேற்ற நிர்மாணத்தை துவக்கியபொழுது பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது. அமைதியை விரும்பாத இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடியும் என ஏற்கனவே ஹமாஸ் முன்னறிவிப்பு செய்திருந்தது. அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சியை நிறுத்திவைப்பதாக அமெரிக்காவும் அறிவித்தது



வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான்
      


அமெரிக்காவின் ஆதரவுடன் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றபெயரில் தினந்தோறும் அப்பாவி மக்களுக்கு கொலைக் களமாகும் பாகிஸ்தானை 2010 ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ள பிரளயம் பிடித்து உலுக்கியது.

செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்த பெய்த மழையால் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். 69 ஆயிரம் சதுர கிலோமீட்டர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. இரண்டு லட்சம் கால்நடைகள் செத்து மடிந்தன. விவசாயத்துறை முற்றிலும் சீர்குலைந்த பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் உதவுமாறு ஐ.நா கோரிக்கை விடுத்தது.

சுனாமி, ஹைத்தி பூகம்பம் ஆகிய இயற்கை சீற்றங்களுக்கு உலக சமூகத்திடமிருந்து கிடைத்த ஆதரவு, பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்பிற்கு கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானதாகும்.

ஆக்கிரமிப்பின் மீதிக்கதை
2003 ஆம் ஆண்டு துவங்கிய அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பு பாதியளவு முடிவடைந்த பொழுது மீதமாக அமைந்தது அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலை. மார்ச் மாதத்தில் அதிபர் தேர்தல் முடிவடைந்த பொழுதிலும் எட்டு மாதத்திற்கு பிறகுதான் ஷியா, சுன்னி, குர்து பிரிவினர் கூட்டாக இணைந்து புதிய அரசை உருவாக்கினர்.

91 இடங்களை கைப்பற்றிய நூரி அல் மாலிகி பிரதமரானார். இயாத் அல்லாவியின் கட்சிக்கு 89 இடங்கள் கிடைத்தன. ஷியா அறிஞர் முக்ததா அல் ஸத்ரின் ஆதரவு கிடைத்ததன் மூலம் நூரி அல் மாலிகி ஈராக் அதிபராக மீண்டும் பதவியேற்றார். நவம்பரில் பதவியேற்ற அதிபர் ஜலால் தலபானி மாலிகியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுத்தார். ஆனால், ஈராக்கில் பாதுகாப்பு மேம்பட்டதாக கூறும் அமெரிக்காவின் கூற்று பொய் என்பதை நிரூபிக்கின்றன அந்நாட்டின் வீதிகளில் அடிக்கடி நடைபெறும் குண்டுவெடிப்புகள்.



அம்பலமான ரகசியங்கள்

அமெரிக்க தூதரகச் செய்திகளை ஆஸ்திரேலிய குடிமகன் ஜூலியன் அஸென்ஜே ஸ்தாபித்த விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டதை உலக போலீஸ் வேடமிடும் அமெரிக்கா அதிர்ச்சியுடன் நோக்கியது.

உலகின் ஒவ்வொரு நாடுகளில் செயல்படும் அமெரிக்க தூதரகங்கள் வழியாக அந்நாட்டின் செயல்பாடுகளை அமெரிக்கா கண்காணித்து வருகிறது என்பதுதான் விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்திகளின் சாராம்சம்.

2006 முதல் விக்கிலீக்ஸின் ரகசிய கண்கள் பல்வேறு நாடுகளின் ரகசியங்களில் நோட்டமிட்டன. பல செய்திகளையும் அவர்கள் வெளியுலகிற்கு அளித்தனர். ஆனால், 2007 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவம் ஈராக்கில் அப்பாவி மக்களை குண்டுவீசிக் கொல்வதன் வீடியோ காட்சியை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்டதுடன் விக்கிலீக்ஸ் இணையதளம் உலகின் பார்வையை தன் பக்கம் நோக்கி இழுத்தது.

ஆப்கானில் அமெரிக்காவின் செயல்பாடுகள் தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் விபரங்களை வெளியிட்டதன் மூலம் விக்கிலீக்ஸும் அதன் ஸ்தாபகர் ஜூலியன் அஸென்ஜேவும் அமெரிக்காவினால் குறி வைக்கப்பட்டனர்.

நவம்பரில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட ரகசியங்களை வெளியிட்டது விக்கிலீக்ஸ். சுவீடனில் பதிவுச் செய்யப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் ஜூலியன் கைதுச் செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டார்.

உஸாமா பின் லேடனுக்கு அடுத்து அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாதியாக ஜூலியன் அஸென்ஜே மாறியுள்ளார்.

இஸ்ரேல் நடத்திய கூட்டுப்படுகொலை 
காஸ்ஸாவில் இஸ்ரேலின் அக்கிரமமான தடையால் துயரத்தை அனுபவித்துவரும் ஃபலஸ்தீன் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அளிப்பதற்காக துருக்கியில் புறப்பட்ட நிவாரண கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் 9 துருக்கி நாட்டைச் சார்ந்த மனிதநேய ஆர்வலர்களை படுகொலைச் செய்தது இஸ்ரேல்.

சுய பாதுகாப்பிற்காக சுட்டதாக இஸ்ரேல் தனது அக்கிரம செயலை நியாயப்படுத்தியது. இஸ்ரேல் மன்னிப்புக்கோர வேண்டும் எனவும், இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் துருக்கி விடுத்த கோரிக்கையை இஸ்ரேல் மதிக்கவேயில்லை. இஸ்ரேலின் கொடூர ராணுவ நடவடிக்கையை உலக நாடுகள் கண்டித்தன.



ஹைத்தி துயரத்தின் பூமி

ஜனவரி 12 ஆம் தேதி ஹைத்தியின் தலைநகரான போர்ட்டோ பிரின்ஸில் பூகம்பம் ஏற்பட்டது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களின் உயிர் பலிவாங்கப்பட்ட ஹைத்தியில் பின்னர் நடந்த அதிபர் தேர்தலிலும் தீவிர வன்முறை வெடித்தது. சில மாதங்களுக்கு பின் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தில் பலரும் வீடுகளை இழந்தனர்.

ஹைத்தி அகதிமுகாம்களில் தூய்மையற்ற நிலையின் காரணமாக காலரா நோய் வேகமாக பரவுகிறது. நோயால் பீடிக்கப்பட்ட 3333 பேர் மரணித்ததாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா படையில் நேபாள ராணுவத்தினரிடமிருந்துதான் காலரா நோய் பரவியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடந்தது. தீரா துயரத்துடன் ஹைத்தி மக்கள் புதுவருடத்தை வரவேற்கின்றனர்.



சுற்றுச்சூழல் பாதிப்பினால் ஏற்பட்ட துயரம்



மெக்ஸிக்கோ வளைகுடாவில் கரையிலிருந்து 48 மைல்கள் தொலைவிலிருக்கும் பெயாண்ட்(beyond) பெட்ரோலியம் எனப்படும் நிறுவனத்தின் எண்ணை கிணறு கடந்த ஏப்ரல் மாதம் வெடித்தது. அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதனால் எண்ணை கசிவு ஏற்பட்டது.
தினமும் ஆயிரம் பேரல்கள் எண்ணை கசிவதாக கூறப்பட்டது. பின்னர் தினமும் ஐந்து ஆயிரம் பேரல்கள் எண்ணை கசிவதாக கூறப்பட்டது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட ஒளிப்படக் காட்சியின் அடிப்படையில் 25 ஆயிரம் முதல் 80 பேரல்கள் எண்ணை கசிவதாக கூறப்பட்டது.

இச்சம்பவம் பல நாட்களுக்கு பிறகே உலகிற்கு தெரியவந்தது. எண்ணை கசிவு கடலில் கலந்ததால் ஏற்பட்ட விஷத் தன்மையின் காரணமாக இறந்துபோன மீன்கள் அமெரிக்க கடற்கரையில் ஒதுங்கின. எண்ணை கசிவை முற்றிலும் அடைப்பதற்கு பல மாதங்கள் ஆகின. அமெரிக்க மீன்பிடித்துறை - சுற்றுலாத்துறைக்கு பலத்த அடியாக மாறியது இச்சம்பவம். பெயாண்ட் பெட்ரோல் கம்பெனி அமெரிக்காவிற்கு 2 ஆயிரம் கோடி டாலர் நஷ்டஈடு வழங்கியது.


பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடியை சந்தித்த ஐரோப்பிய நாடுகளின் பொதுக்கடனை அடைப்பதற்கு வேலைவாய்ப்பையும், சலுகைகளையும் குறைத்தது பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது.

போர்ச்சுகல், அயர்லாந்து, இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், பிரிட்டன், பெல்ஜியம் ஆகிய நாடுகள் பொதுத்துறை பணியாளர்களின் சலுகைகளை குறைத்தனர். வரியை அதிகரித்தனர். வளர்ச்சித் திட்டங்கள் முடக்கப்பட்டன.

ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட இத்தகைய பொருளாதார சீர்திருத்தங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். வீதியில் இறங்கி போராடிய மக்களை போலீஸ் எதிர்கொண்டது. இதனைத் தொடர்ந்து பொருளாதார சீர்திருத்தங்களின் கடுமைய தளர்த்த ஐரோப்பிய யூனியன் தீர்மானித்தது

المشاركات الشائعة