Search This Blog

Nov 16, 2012

இஸ்ரேல் யுத்த இயந்திரத்தால் பிராந்தியத்தில் பதட்டம், எகிப்து பிரதமர் காஸா விரைகிறார்


M.ரிஸ்னி முஹம்மட்: கடந்த ஐந்து ஆண்டுகளாக இஸ்ரேலிய முற்றுகைக்குள் வைக்கப்பட்டுள்ள காஸா மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இயந்திரம் நேற்று இரவும் தொடரான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதனால் படுகொலை செய்யப்பட்டுள்ள பலஸ்தீனர்களின் சிறுவர் சிறுமியர் அடங்களாக எண்ணிக்கை 19 தை எட்டியுள்ளதுடன் சிறுவர் சிறுமியர் அடங்களாக காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் 200 ரை கடந்துள்ளது.
நேற்று முன்தினம் புதன்கிழமை தொடக்கம்  Operation Pillar of Defenseஎன்ற பெயரில் இஸ்ரேல் காஸாவின் 350 இடம்கள் மீது நூற்றுக்கணக்கான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது . கடந்த புதன் கிழமைக்கு முன்னர் இருந்தே இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்து விட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை முற்றுகைக்குள் வைக்கப்பட்டுள்ள காஸா  இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. ஹமாஸ் தாம் 350 ரொக்கெட்டுக்களை இஸ்ரேல் மீது ஏவியதாக தெரிவித்துள்ளது. அதேவேளை இஸ்ரேல் யுத்த அமைச்சு தாம் 150 காஸா ரொக்கெட்டுக்களை தடுத்ததாக அறிவித்துள்ளது .
முதல் முறையாக காஸாவில் இருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ள டெல் அவியை ரொக்கெட்டுக்கள் தாக்கியுள்ளது. இஸ்ரேலிய தரப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டும், மூன்று சிப்பாய்கள் காயமடைந்துமுள்ளனர் .
அதேவேளை பலஸ்தீனர்களின் உரிமை பற்றி அக்கறை காட்டாத அமெரிக்கா ,தன்னை பாதுகாக்கும் உரிமையை இஸ்ரேல் கொண்டுள்ளது என்று அறிவித்துள்ளது . இஸ்ரேல் தரைவழித் தாக்குதலுக்கு தயாராகிவருவதாக இஸ்ரேலிய தகவல்கள் தெரிவிக்கிறது .
இந்த நிலையில் இன்று வெள்ளிகிழமை எகிப்தின் பிரதமர் ஹிஸாம் தலைமயிலான உயர்மட்ட குழு காஸா மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் பொருட்டும் அவர்களின் தேவைகளை கேட்டறியும் பொருட்டும் காஸா செல்கிறது. எகிப்து ஏற்கனவே இஸ்ரேலுக்கான தனது தூதுவரை திருப்பி அழைத்துள்ளது . ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்தும் முஸ்லிம் நாடுகளை இஸ்ரேலுக்கு எதிராக செயல்படத் தூண்டியும் பல நாடுகளில் பல்வேறு அமைப்புகளால் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .
இஸ்ரேலிய தாக்குதல் ஒன்றில் ஹமாஸ் இராணுவத் தளபதி அஹமட் அல் ஜபாரி சஹீத்தானார். இவரின் ஜனாஸாவில் இஸ்ரேலிய தாக்குதல் அச்சுறுத்தலையும் மீறி பெரும்தொகையனவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலில் என்ற யுத்த இயந்திரத்தால் தாக்கப்படும் காஸா

Sep 13, 2012

இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!

i'm a muslim
நான் சரியான இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறேனோ இல்லையோ ,
இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
மார்க்க சம்பந்தமான அறிவு எனக்கு இருக்கிறதோ இல்லையோ ,
இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
என் மனைவி – மக்கள்இ குடும்பத்தினருக்கு நான் இஸ்லாத்தைப் பற்றி கூறி நல்வழிப் படுத்துகிறேனோ இல்லையோ, இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
எனது இல்லத்தில் இஸ்லாத்திற்கு மாறான செயல்கள் நடப்பதைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறேன், இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
மறுமை நாளைக்காக நான் எதை சேர்த்து வைத்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்க இந்த அவசர கால உலகத்தில் எங்கே முடிகிறது இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
ஐந்து வேளைத் தொழுவது கடமை என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வேலைப் பளுவினால் என்னால் தொழமுடியவில்லை,இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
ரமலானில் நோன்பு வைப்பது கட்டாயம் என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். இருப்பினும் பசி தாகம் சமாளிக்க.. நோன்பு வைக்க என்னால் முடியவில்லை, இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
என் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எனினும் கணக்குப் பார்த்து ஜகாத் கொடுத்திட மனம் இடம் தரவில்லை, இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
என் வாழ்நாள் முழுவதும் ஓடி ஓடி உழைத்து ஓரளவு என் குடும்பத்திற்காக உழைத்து சேர்த்து ஓய்ந்து விட்டேன். இப்போது ஹஜ் செல்லும் அளவுக்கு என் உடலில் தெம்பு இல்லை இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி கோருகிறோம்! என்று தொழுகையில் ஓதிவிட்டு அவ்லியாக்கள், பெரியார்களிடம் உதவி தேடுவது என் இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது, இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
பால்கிதாப்-பில்லி-சூனியம்-ஏவல்-தகடு-தட்டு-தாயத்து-பேய்-பிசாசு-ஆவி எல்லாம் நம்புகிறேன், இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
புனை குறுக்கே செலவது, பல்லி தலையிலே விழுவது, ஆந்தை அலருவது, காகம் கரைவது, ஸஃபர் பீடை மாதம்-கெட்ட சகுனம் என எல்லாம் பார்த்து பார்த்து ஒவ்வொரு வேலையும் செய்கிறேன், இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
பலர் பாராட்ட கத்னா-பூப்புனித நீராட்டு விழாவை விமரிசையாக நான் நடத்துகிறேன்இ இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
புதுமனை புகுவிழாவிற்கு பால் காய்ச்சி விழா நடத்துகிறேன். குழந்தைக்கு தர்காவில் சென்று முடி இறக்கி மொட்டை போடுகிறேன். அவ்லியா சன்னிதானத்தில் ஆடுஇ சேவல் பலி தருகிறேன்இ இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
என் அம்மாவின் கடைசி ஆசைக்காகத்தான் மஹர் கொடுத்து மணம் புரியாமல் வரதட்சணை வாங்கிக் கொண்டு திருமணம் செய்தேன். என் மனைவியின் ஆசைக்காகத்தான் சுன்னத்தான தாடியை சிரைத்துவிட்டேன்இ இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
என் தந்தையின் வற்புறுத்தலால் என் மகன் திருமணத்தை மேள தாளத்துடன் யானை ஊர்வலத்துடன் மிக ஆடம்பரத்துடன் நடத்துகிறேன்இஇருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
வட்டி வாங்கக்கூடாது என்று வான் மறைக்கூறினாலும் கூட என் தொழில் வளர்ச்சிக்காக குறைந்த வட்டியில் வீடுகட்ட, கடை ஆரம்பிக்கஇ பைக் சவாரிக்காக வட்டி வாங்க வேண்டிய நிர்பந்தம். என்ன செய்வது?இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
லாட்டரி சூதாட்டம்தான். அரசு அதனை தடை செய்திருந்தாலும் என்ன? நான் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கி மறைத்து விற்பனை செய்து வருகிறேன், இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
குடி குடியைக் கெடுக்கும்! மது ஹராம்தான், ஆனால் எனக்கு டாஸ்மார்க் கம்பெனியில்தான் வேலை கிடைத்தது. கைநிரைய சம்பாதிக்கிறேன், இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
சினிமா பார்க்கக் கூடாதாம்! இந்த காலத்தில் நடக்கக்கூடிய காரியமா என்ன? பேரும் புகழும் பேரின்பமும் பெற்றுத் தரும் கனவுத் தொழிற்சாலையல்லவா அது! பாம்பு மட்டும்தான் படம் எடுக்குமா? மக்கள் பாராட்டும் விதமாக நான் கூட படம் எடுக்கிறேன், இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
அளவு நிலுவையில் மோசடி கூடாதாம். வியாபாரத்தில் பொய் கூடாதாம். (பரக்கத்) இறையருள் கிடைக்காதாம். பொய் சொல்லாமல்இ மோசடி செய்யாமல் எப்படி விரைவில் பணக்காரன் ஆவதாம்? இருந்தாலும்…நான் ஒரு முஸ்லிம்!
ஒரு சாண் நிலம் ஆக்கிரமிப்பு செய்தாலும் மறுமையில் ஒரு பூமி அளவு நிலத்தை நான் சுமக்க வேண்டுமாம். பலரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த, அந்த நிலத்தை திரும்பக் கொடுத்து விட்டு என் பிள்ளைகளுக்கு எதைக் கொடுத்துவிட்டுப் போவதாம்? இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கூடாதாம். பிறகு எதற்கு உலகத்தில் வாழ்வதாம்? இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
கடவுள்இ பாவம், புண்ணியம், நீதி, நியாயம், உண்மை என்கிறவற்றில் நம்பிக்கை கிடையாது. ஏதோ உலகத்திலே பிறந்துட்டோம். முளைக்கிற செடி வளர்ந்து மரமாகிற மாதிரி நாமும் வளர்ந்துட்டோம். ஏதோ வாழந்துட்டு இருக்கிறோம். ஊரோடு இணைந்து போகத்தானே வேண்டும். இஸ்லாமிய அடிச்சுவட்டில் இக்காலத்தில் வாழ்ந்தால் உலகம் நகைக்காதா? இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
வாக்காளர் அட்டையிலும்இ பள்ளி கல்லூரி சான்றிதழ்களிலும் மட்டுமே முஸ்லிமாக வாழ்பவர்களே! சிந்தியுங்கள். நமது வாழ்வும். மரணமும் தூய இஸ்லாத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்திட வேண்டும் என்பதை உள்ளத்தில் பதித்துக் கொள்ளுங்கள்.
thanks: vok

Sep 11, 2012

தற்போதைய அரசியல் சூழலை எதிர் கொள்ளத் தடுமாறும் ரவூப் ஹகீம்


அப்துல் ரசாக் (லண்டன்)
மலை ஏறி ஒருவன் தனது மூட்டை முடிச்சிகளை முதுகிலே சுமந்து கொண்டு மலையின் உச்சிக்கு ஏறி வெற்றிக் கம்பத்தை அடைய எவ்வளவு சங்கடமும் தங்கடமும் அடைவானோ அவ்வாறே முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹகீம், நீதி அமைச்சுப் பதவியையும் தனது முதுகிலே சுமந்து கொண்டு கிழக்கின் உச்சியிலே இருக்கின்ற முதலமைச்சர் பதவிக்காகாவும் அரசுடன் போராட வேண்டும்.
அந்த மலையேறி மலையின் உச்சியை அடைகின்றானோ  அல்லது சறுக்கியே விழுகின்றானோ  ஆனால், தன் முதுகிலே தொங்குகின்ற மூட்டை முடிச்சை மட்டும் இழக்க மாட்டான். அவ்வாறே,  தலைவர் ரவூப் ஹக்கீமும் தனது முதுகிலே அமைச்சும் பதவியையும் சுமந்து கொண்டு ஒருக்காலமும் முதலமைச்சர் பதவியை அரசிடமிருந்து  வென்று எடுக்க மாட்டார்   என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.
தேர்தலுக்குப் பின் இந்த சங்கடம் மு.கா.வுக்கு ஏற்படும் என்பதை முன் கூட்டியே அறிந்ததால்தான் தவிசாளர் பசீர் சேகு தாவூது தனது பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தார். அரசியல் களமாட வருபவர்கள் இந்த வியூகங்களை வகுக்கத் தெரிந்த வித்தகர்களாக இருக்க வேண்டும். இக்கட்டான ஒரு அரசியல்  சூழ் நிலையில்  ஜனாதிபதியை சந்திக்கும் போது ஒரு சமூகத்தின் தலைவன் என்ற அடிப்படையில் நிலைப்பாடுகளை பேச  வேண்டுமே தவிர “அரசுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்போம்” என்ற ஜால்ரா அடிக்கும் பாணியில் அல்லது தனது முதுகிலே சுமக்கும் ஒரு பொதியாக இருந்து வருகின்ற அமைச்சுப் பதவியை காப்பாற்றும் போக்கில் அரசியல் நகர்த்தல்கள் ஒரு போதும் அமையக்கூடாது.
ஆதலால், தலைவர் ஹகீம், கிழக்கில் தனித்து தேர்தலில் குதித்ததன் மர்மம் ஜனாதிபதி மாளிகையிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் வெளியே வர ஆரம்பித்துள்ளது. அதாவது, வெறும்  காஸி நீதிபதிகளையும் சமாதான நீதிபதிகளையும் வழங்குகின்ற நீதித் துறை அமைச்சுக்குப் பதிலாக ஆளுமை மிக்க வேறொரு அமைச்சுப் பதவி இவருக்குத் தேவைப்படுகிறது. அதனை முஸ்லிம் மக்களிடமிருந்து ஒரு ஆணையாகப் பெற்று ஜனாதிபதியிடம் பேரம் பேசிப் பெற்றுக் கொள்வதற்கான அடுத்த கட்ட நாடகத்தின் அரங்கேற்றமே “தனித்து தேர்தல்” மர்மம் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றார்கள்.
அரசிடம்  முதலமைச்சர் பதவியை வெள்ளலமா ?
14 ஆசனங்களை வைத்துக் கொண்டிருக்கும் அரசாங்கக் கூட்டமைப்பிடம் 07 ஆசனங்களை கொண்டிருக்கும் மு.கா. கண்களை மூடிக் கொண்டு எவ்வாறு முதலமைச்சர் பதவியைக் கோரமுடியும் என்பது நீதி அமைச்சருக்குத் தெரியாத  நீதி நியாயங்களல்ல.  மத்திய அரசில்  சக்தி மிக்க அமைச்சு மண்டலங்களைப் பெற்றுக் கொண்டு  முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்தாலும், அந்தப் பதவிக்காக பிள்ளையானை அல்லது முஸ்லிம் காங்கிரசின்  அல்லது அதன் தலைவரின்  பரம அரசியல் விரோதிகளான அரச அணியில் உள்ள முஸ்லிம் தோழமைக் கட்சிகளின் உறுப்பினரை எவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் அனுமதிக்கப் போகின்றது என்பதுதான் இன்று அரசியல் அரங்கில் கேட்கப்படும் மிகப் பெரிய கேள்விகளாகும்.
ஆகவேதான், தலைவர் இப்போது தடுமாறுகிறார். சக்திமிக்க அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு எவ்வாறு கிழக்கின் முதலமைச்சர் பதவியைத் தாரை வார்த்துக் கொடுப்பது அரசியல் ஆணையை வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களிடம் எவ்வாறு சாட்டுப் போக்குச் சொல்வது என்பது தெரியாமல் தலைவர் ததி மிதிப் பட்டுத் திரிகின்றார் என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஆகவே தலைவர் ஹகீம் அவர்கள் அமைச்சுப் பதவியை தனது முதுகிலே சுமக்கின்ற ஒரு சுமையாக தக்க வைத்துக் கொள்ளும் வரை அவர் முஸ்லிம் சமூகத்துக்கு எதனையும் சாதிக்க மாட்டார் என்றே பலரும் கருதுகின்றனர். பேரின வாதிகளும் இவரின் பலம் பலயீனம் என்பதையெல்லாம் நன்கு அறிந்து வைத்துக் காய் நகர்த்துகின்றார்கள் என்பது போகப் போக தெரியும் என்பதும் சிலரின் கருத்தாக இருக்கின்றது.

Thanks:  kattankudi.info 

Sep 5, 2012

தொடரும் முர்சியின் அதிரடி: 70 இராணுவ ஜெனரல்களுக்கு ஓய்வு

mursi
எகிப்து ஆயுதப் படைகளைச் சேர்ந்த 70 ஜெனரல்களுக்கு அந்நாட்டு அரசு ஓய்வு அளித்துள்ளது. ஜனாதிபதி மொஹமட் முர்சி, பலம்வாய்ந்த பாதுகாப்பு மற்றும் இராணுவ கவுன்ஸில் தலைவருக்கு ஓய்வுவழங்கி ஒரு சில வாரங்களிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆயுதப் படைகளின் உயர் மட்ட குழுவான இராணுவ கவுன்ஸிலின் 6 ஜெனரல்கள் தமது பதவியை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
இதில் ஜனாதிபதி முர்சி, எகிப்தில் தொடரும் அதிகார போட்டியில் இராணுவத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர். ஜனாதிபதி முர்சியால் கடந்த மாதம் நியமிக்கப்பட்ட புதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் அப்துல் பதாஹ் அல் சிசி இந்த ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

ரொஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்றக் கோரி மியன்மாரில் துறவிகள் ஊர்வலம்

protest against Muslims in Myanmar


ரொஹிங்கியா முஸ்லிம்களை வேறொரு நாட்டுக்கு அனுப்பும் மியன்மார் ஜனாதிபதி செயினின் திட்டத்திற்கு ஆதரவளித்து நூற்றுக்கணக்கான பெளத்த துறவிகள் ஊர்வலம் நடத்தியுள்ளனர்.
மியன்மாரின் இரண்டாவது மிகப் பெரிய நகரான மன்டலெயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த பிரமாண்ட ஊர்வலம் இடம்பெற்றது. இதன் மூலம் மியன்மாரில் ரொஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் அந்நாட்டு பெளத்தர்களுக்கு இடையிலான இன முறுகல் மேலும் தீவிரம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜுனில் இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் பலர் கொல்லப்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.
இந்நிலையில் ஊர்வலத்தில் பங்கேற்ற பெளத்த துறவிகள், ‘ஜனாதிபதிக்கு ஆதரவளித்து எமது தாய் நாட்டை பாதுகாருங்கள்’ என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
இந்த ஊர்வலத்திற்கு தலைமை தாங்கிய விரது என்ற பெளத்த துறவி ஏ.எப்.பி. செய்தி சேவைக்கு கூறும் போது, ‘இந்த ஊர்வலத்தின் மூலம் ரொஹிங்கிக்கள் மியன்மார் இனக் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை உலகுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம்’ என்றார். மேற்படி பெளத்த துறவி இஸ்லாமிய எதிர்ப்பு பிரசுரங்களை விநியோகித்ததற்காக கடந்த 2003 ஆம் ஆண்டு 25 ஆண்டு சிறைத் தண்டனைக்கு உள்ளானார்.
எனினும் கடந்த ஜனவரியில் அவர் பொதுமன்னிப்பு பெற்று விடுதலையானார். இந்த ஊர்வலம் தொடர்ந்து மூன்று தினங்களுக்கு நடத்தப்படும் என்றும் அதில் பல மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். பங்காளி மொழி பேசும் ரொஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷில் இருந்து வந்த சட்ட விரோத குடியேற்ற வாசிகள் என மியன்மார் அரசு கூறி வருகிறது. அவர்களை வேறொரு நாட்டுக்கு அனுப்புவதுதான் தீர்வு என மியன்மார் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால், பங்களாதேஷ¤ம் அவர்களை ஏற்க மறுக்கிறது.
உலகில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் இனமாக ரொஹிங்கியா முஸ்லிம்களை ஐ.நா. சபை அடையாளப்படுத்தியுள்ளது.

Jun 9, 2012

சம்பிக்க , எல்லாவல,விமல் ,குணதாச ஆகியோர் நாட்டை நாசமாக்கி படுகுழியில் தள்ளுகிறார்கள்

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சம்பிக்க ரணவக்க, மேதானந்த எல்லாவல, தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் குணதாச அமரசேகர ஆகிய நால்வரும் நாட்டை நாசமாக்கி படுகுழியில் தள்ளுகிறார்கள். நாட்டின் தேசிய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களை சிறுமைப்படுத்துவதையே இவர்கள் நால்வரும் தமது நாளந்த நடவடிக்கைகளாக கொண்டுள்ளார்கள்.
இந்த நாட்டில் இன்று நடக்கும், தமிழ்-முஸ்லிம் இனத்தவர்களுக்கும், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தவர்களுக்கும் எதிரான அனைத்து இனவாத, மதவாத நடவடிக்கைகளுக்கும் இந்த நால்வரும்தான் பொறுப்பு கூற வேண்டும். இந்த நாட்டில் மத, இன நல்லிணக்கம் ஏற்படுத்தும் எண்ணம் இருக்குமானால் இந்த நால்வரையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாடு மீளவே முடியாத படுபயங்கர அதள பாதாளத்தில் விழும் நாள் மிகத்தொலைவில் இல்லை. இந்த கருத்தை நமது கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கட்சியின் கொழும்பு மாவட்ட மாகாணசபை, கொழும்பு மாநகரசபை, கொலொன்னாவை நகரசபை உறுப்பினர்களின் குழுக்கூட்டம் கட்சி தலைமைமையகத்தில் இன்று நடைபெற்றபோது, உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
பல மொழிகள் பேசி, பல மதங்களை கடைப்பிடித்து, பல இன மக்கள் சேர்ந்து வாழும் இந்த நாட்டை சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரிய நாடாக்க வேண்டும் என்பதே இந்த நால்வரின் கூட்டுத்திட்டம்.
அதி தீவிர தமிழ், முஸ்லிம் தேசியவாதங்கள் எப்படி தமிழ், முஸ்லிம் மக்களை நாசாமாக்குகின்றதோ, அதைவிட அதிகமாக இந்த சிங்கள பெளத்த தீவிரவாதம், முழு நாட்டையுமே நாசமாக்குகின்றது. இதன் காரணம் சிங்கள பெளத்த தீவிரவாதம், இராணுவ பலத்துடன் சேர்ந்து கொண்டுள்ளது. புலிகளின் இராணுவ தோல்வியை, தமிழ் பேசும் மக்களின் தோல்வியாக மாற்றிக்காட்டி, முழு நாட்டையும் சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரிய நாடாக்குவது என்ற திட்டம் வெற்றிகரமாக இன்று முன் கொண்டு செல்லப்படுகிறது.
ஒரு முழு தேசத்திற்கும் தலைமை தாங்கக்கூடிய ஒரு தேசிய கட்சியின் பிரபல தலைவன், சிங்கள மக்கள் மத்தியில் தூரதிஷ்டவசமாக இன்று இல்லை. சிறிய தேசிய இனங்கள், மத-மொழி சிறுபான்மை மக்கள் தொடர்பான விடயங்களை கையாள்வதில், நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, விளாடிமிர் லெனின், ஆப்ரஹாம் லிங்கன் ஆகியோர் பக்கத்தில் அல்ல, தூரத்தில் வைக்கக்கூட இங்கு எவரும் கிடையாது.
இனங்களுக்கு மத்தியிலான பிரச்சினைகள் என வரும் பொழுது அனைவரும் நழுவல் அரசியல்தான் செய்கிறார்கள். கடந்த கால தமது பேரினவாத குற்றங்களை சுட்டிக்காட்டி சிங்கள மக்களுக்கு உண்மையை எடுத்து சொல்லும் எந்த ஒரு பிரபல சிங்கள தலைவனும் இங்கு இன்று இல்லை. அனைத்து இனங்களையும் அரவணைத்து செல்லும் அரசியல் இங்கு இல்லை. அதிகாரத்தையும், இறைமையையும் பகிந்துகொள்வதில் உள்ள நன்மைகளை சிங்கள மக்களுக்கு எடுத்து கூறும் ஒரு தலைவன் இங்கு இல்லை. இது மிகவும் வெட்ககேடான, கேவலமான நிலைமையாகும்.
தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் சிங்க கொடியை கையில் எடுத்து, நாம் ஐக்கிய இலங்கைக்குள் வாழத்தயார் என சூடம் கொளுத்தி சத்தியம் செய்தாலும்கூட இவர்கள் நம்ப தயார் இல்லை. அதற்கும் ஆயிரம் காரணங்கள் சொல்லி, அந்த நல்லெண்ண சமிக்ஞையை புறக்கணித்துள்ளார்கள்.
இந்த நிலையில் தமிழர்களும், முஸ்லிம்களும் நமது ஜனநாயக போராட்டத்தை, முற்போக்கு சிங்கள சக்திகளுடன் இணைந்து, உலக சமுதாயத்தின் ஆதரவுடன் முன்னெடுப்பதை தவிர வேறு வழி இல்லை.
இந்த இனவாத அரசாங்கத்திற்கு தன்மானமுள்ள நாம் ஒருபோதும் ரகசிய ஒத்துழைப்பு வழங்க முடியாது. அதேவேளையில் நாம் வானத்தில் கோட்டை கட்டவில்லை, நாம் யதார்த்த அரசியலும் செய்ய தயார் என்பதையும் மக்களுக்கு விளக்க வேண்டும். அரசாங்கம் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முன்வருமானால், ஏனைய எதிர்கட்சிகளுடன் இணைந்து, கூட்டாக அரசியல் ரீதியாக ஒத்துழைப்பு வழங்குவதில் எந்த சிக்கலும் கிடையாது. இது எமது பகிரங்க நிலைப்பாடு. இவற்றை மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.
Thanks:lankamuslim:

Jun 7, 2012

இலங்கை அரசியலிலும் தாக்கம் செலுத்தப் போகும் கலாநிதி முஹம்மது முர்ஸியின் வெற்றி


அபூ காஸி
எகிப்தில் இரண்டாம் கட்ட ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16, 17 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில்  வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள வேட்பாளராக இஹ்வான்களின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி மீண்டும் பிரகாசிக்கிறார் . இவரின் வெற்றி புதிய எகிப்தியர்களுக்கு மட்டுமல்ல இலங்கை போன்ற நாடுகளில் அரசியலிலும் பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை , முர்ஸியின் வெற்றி இலங்கை தம்புள்ளை வரையிலும் அதன் தாக்கத்தை கொண்டிருக்கும் என்பது மிகைப்படுத்தப் பட்ட கூற்றல்ல.அந்த வகையிலும் முர்ஸி பற்றி தெரிந்து கொள்வது இலங்கை அரசியலிலும் முக்கியத்துவம் பெறுகிறது .
எகிப்தில் கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் எவருக்கும் 50 வீதத்திக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்க வில்லை. 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இஹ்வான்களின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி பல முன்னணி சர்வதேச நோக்கர்களின் எதிர்வு கூறல்களை பொய்ப்பித்து வேட்பாளர்களில் அதிகூடிய வாக்குகளை பெற்றார் . தேர்தலில் முஹம்மது முர்ஸி 58 லட்சம் வாக்குகளை பெற்று முதல் இடத்தை பெற்றார் . இரண்டாவது இடத்தை முபாரக் ஆட்சியின் இறுதிக் காலகட்டத்தில் பிரதமர் பதவி வகித்த அஹ்மத் ஷபீக் எவரும் எதிர்பார்க்காத விதமாக 55 லட்சம் வாக்குகளை பெற்றுகொண்டார் . அதேவேளை முன்னாள் இஹ்வான் உயர் மட்ட உறுப்பினரான அப்துல் முன்இம் அபுல் புதூஹ்வுக்கு 41 லட்சம் வாக்குகளை பெற்றுகொண்டார் .மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரபு லீக்கின் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா 5வது இடத்திற்கு தள்ளப்பட்டார். மூன்றாவது இடத்தை 48 லட்சம் வாக்குகளை பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹம்தீன் ஸபாஹி பெற்றுள்ளார் .
மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்ட எகிப்து ஜனாதிபதி தேர்தலில் எவரும் ஐம்பது வீத பெரும்பான்மையை பெறவில்லை இதில் முதல் இரண்டு இடங்களை பெற்றவர்களான இஹ்வான்களின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி , முபாரக் ஆட்சியின் இறுதிக் காலகட்டத்தில் பிரதமர் பதவி வகித்த அஹ்மத் ஷபீக் ஆகிய இருவரும் க்க வில்லை போட்டியிடவுள்ளனர் .
இரண்டாம் கட்ட தேர்தலில் 58 லட்சம் வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கும் இஹ்வான் வேட்பாளர் முஹம்மது முர்ஸிக்கு சலபிகள்  அமைப்பு தமது ஆதரவை தெரிவித்துள்ளது . அதேவேளை 41 லட்சம் வாக்குகளை பெற்ற முன்னாள் இஹ்வான் உயர் மட்ட உறுப்பினரான அப்துல் முன்இம் அபுல் புதூஹ்வும் தனது ஆதரவை முஹம்மது முர்ஸிக்கு வழங்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் எகிப்திய மக்கள் எழுச்சியின் வேட்பாளராக முஹம்மது முர்ஸியை தாங்கள் கருதுவதாக பொது வாலிப எழுச்சி அமைப்புகள் அறிவித்துள்ளது. அதேவேளை அஹ்மத் ஷபீக்கை எகிப்திய சர்வாதிகார ராஜாங்கத்தின் எச்சம் என்றும் அந்த அமைப்புக்கள் வர்ணித்துள்ளது .
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப் பட்டுள்ள ஆயுள் தண்டனையை அந்த அமைப்புகள் ”இது நீதிமன்றத்தின் தீர்ப்பல்ல இது ஒரு அரசியல் தீர்ப்பு” என்று தெரிவித்துள்ள . முஹம்மது முர்ஸி அதிகாரத்தை கைப்பற்றினால் மீண்டும் ஹுஸ்னி முபாரக் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு ”நீதிமன்ற தீர்ப்பு” வழங்கப் படவேண்டும் என்று அந்த அமைப்புக்கள் கோரிவருகிறது . இதற்கு முஹம்மது முர்ஸியும் உடன்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலில் இடம்பெறவுள்ளது . இது தொடர்பாக நான் கடந்த மாதம் 15 ஆம் திகதி தொகுத்து விடிவெள்ளி பத்திரிகையில் வெளியான ஆக்கத்தை lankamuslim.org க்கு சில மாற்றங்களுடன் தருகிறேன் .
எகிப்து இஹ்வான்களின் ஜனாதிபதி வேட்பாளரான முஹம்மத் முர்ஸி இன்றை எகிப்து ஜனாதிபதி தேர்தல் களத்தில் அதிகள் பேசப்படும் நபர். எகிப்து அரசியல் வெளியில் மின்னும் தாரகை. இவர் எகிப்தில் மட்டுமல்ல முஸ்லிம் உலகில் பரவலாக எதிர்பார்க்கப் படும் எகிப்தின் எதிர்கால ஜனாதிபதி. மீண்டும் எகிப்து ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16 ,17 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில் இவரை பற்றி சற்று தெரிந்து கொள்வோம்.
கலாநிதி முஹம்மது முர்ஸி , இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான கட்சியின் தலைவராவார். இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் வழிகாட்டல் பிரிவில் முன்னாள் உறுப்பினரான இவர் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் மிக முக்கிய அரசியல் பிரமுகர்களில் ஒருவர். கலாநிதி முஹம்மது முர்ஸி 2000-2005 ஆண்டுகால பகுதில் பாராளுமன்ற மக்கள் சட்டமன்றத்தில் இஹ்வான் அணியின் பாராளுமன்ற தலைவராக கடமையாற்றியுள்ளார்.
இவர் எகிப்து சகஜிக் (Zagazig University) பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் பருப்பொருள் அறிவியல் துறையின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளதுடன் ஆய்வு அறிவியல் துறைக்கு பெரிதும் பங்காற்றியுள்ளார் .
முஹம்மத் முர்ஸி ஈஸா அல் இயாத் என்பது அவரது முழுப் பெயர் எகிப்தின் ஷர்க்கிய்யா மாகாணத்தின் அத்வா எனும் கிராமத்தில் 1951 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். அவர் 1975 ஆம் ஆண்டில் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளங்கலை பட்டத்தை பெற்றார். அதன்பின்னர் 1978 இல் அதே பல்கலை கழகத்தில் இருந்து உலோக தொழிற்கலை பொறியியல் முதுகலைப்பட்டம் (Master of Engineering degree in Metallurgy) பெற்றார். அவர் மேற்கொண்டு, 1982 இல் அமெரிக்க தெற்கத்திய கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் டாக்டர் (PhD) பட்டத்தை பெற்றுக்கொண்டார்.
இவர் ஒரு சிறந்த விரிவுரையாளராகவும், ஒரு ஆசிரியர் உதவியாளராகவும் , கெய்ரோ பல்கலைக்கழகத்திலும் ஐக்கிய அமெரிக்காவின் தெற்கத்திய கலிஃபோர்னியா பல்கலைக்கழக பொறியியல் பீடத்திலும் கடமையாற்றியுள்ளார். 1982 மற்றும் 1985 க்கு இடைபட்ட காலத்தில் கலிஃபோர்னியா வட ரிட்ஜ் (North Ridge in California) பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகவும் (Assistant Professor) பணியாற்றியுள்ள இவர் 1985 இலிருந்து 2010 ஆண்டுவரை சாகஜிக் (The University of Zagazig) பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூலப்பொருள்கள் பொறியியல் துறையின் பேராசிரியராகவும், தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். அந்த காலப்பகுதியில் அவர் சாகஜிக் பல்கலைக்கழகத்தில் ஆசிரிய பணியாளர்கள் கிளப் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் எண்பதுகளில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிழும் (NASA) கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிட்டு சொல்லக்கூடியது.
இவர் பேராசிரியராக கடமையாற்றிய போது அரசியல் கட்சிகள் மற்றும் நிறுவனங்களின் சர்வதேச மாநாடு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார். எகிப்திய சியோனிச திட்டங்களை எதிர்க்கும் அமைப்பின் இஸ்தாபக -உறுப்பினராகவும் விளங்கும் இவர் தான் வகித்த ஒவ்வொரு பொறுப்பிலும் தனது கடின உழைப்பினால் சிறந்து விளங்கியுள்ளார்.
கலாநிதி முஹம்மது முர்ஸி பல்வேறு அறிவியல் துறைகளில் இருந்து தனது சிறப்பான திறமைகள் மற்றும் திறன்களை நிரூபித்து அதன் மூலம் ஒரு உறுதியான ஆற்றல் மிக்க , தீர்க்கமான இஸ்லாமிய அரசியல் முற்போக்கு தலைவவராக உருவாகியுள்ளார் . இவர் நடைமுறை உற்பத்தி தீர்வுகள் (practical production solutions) தொடர்பாக எகிப்தில் தொழில் துறையின் பல முக்கிய பிரிவுகளில் ஆராய்ச்சிகளை செய்துள்ளார் என்பது சிறப்பம்சமாகும் .
அவர் ஆரம்ப எண்பதுகளில் விண்கலம் இயந்திரங்கள் மேம்பாட்டியல் அறிவியல் துறையில் நாசாவில் பணியாற்றிய போது “உலோகங்களில்”, “metal surface treatment” என்ற துறையில் அதிகமான ஆய்வுகள் செய்துள்ளார். .
அதேவேளை சர்வாதிகார அடக்குமுறைகளையும் மற்றும் தூக்கியெறியப்பட்ட ஆட்சியின் அடக்குமுறை நடவடிக்கைகளையும் தொடர்ந்து உறுதியாக எதிர்த்து வந்துள்ளார் .இந்த நிலைப்பாடு காரணமாக, கலாநிதி முஹம்மது முர்ஸி பல முறை கைது செய்யப்பட்டு சிறை வாழ்க்கையையும் அனுபவித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு தேர்தலில் பின்னர், கலாநிதி முஹம்மது முர்ஸி அப்பட்டமான தேர்தல் மோசடி எதிராக சுதந்திரம் கோரிய நீதிபதிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் வழிநடத்தினார். இதன் விளைவாக, இவர் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க 500 உறுப்பினர்களுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார். மத்திய கெய்ரோவின் வட கெய்ரோ நீதிமன்றம் மற்றும் அல் ஜலா கோர்ட் வளாகம் முன் எதிர்ப்பு ஆர்பாட்டயங்களில் இஹ்வானுல் முஸ்லிமீன் ஈடுபட்டபோது மே 18, 2006 காலை இவர் கைது செய்யப்பட்டு . சிறையில் ஏழு மாதங்கள் அடைக்கப்பட்டார்.
எகிப்து முழுவதும் முன்னாள் சர்வாதிகாரிக்கு எதிரான ஆர்பாட்டங்களை அடக்க ‘கோபத்தின் வெள்ளியன்று’ “Friday of Anger” இஹ்வான்கள் ஆர்பாட்டங்களில் பங்கு பற்றுவதை தடுக்க ஆட்சியாளர் இவர்களை மீண்டும் சிறையில் அடைத்தனர். பல சிறைச்சாலைகளில் ஆர்பாட்ட காரர்களால் உடைக்கப்பட்டன பல கைதிகள் தப்பி சென்றனர். ஆனால் எப்போதும் எல்லாவற்றிலும் ஒழுங்குகளை பேணும் முஹம்மது முர்ஸி அவரது சிறை கூடத்தில் இருந்து வெளியேற மறுத்துவிட்டார். நீதித்துறை அதிகாரிகள் சிறைக்கு வந்து சிறையில் முஸ்லீம் சகோதரத்துவ தலைவர்கள் எந்த சட்ட காரங்களுகாக கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை விளக்க வேண்டும் என்று செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்கள் மூலம் கோரிக்கை முன்வைத்தார். ஆனால் எவரும் அங்கு சென்று பார்கவில்லை.
கலாநிதி முஹம்மது முர்ஸி பல வதைகளை அனுபவித்தார். அவர் மட்டுமல்ல. சர்வாதிகார ஆட்சியாளர் ஹுசனி முபாரக்கின் அநியாயம் அவரது குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை . அவரது மகன், டாக்டர் அஹமத் , 2000 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் தனது தந்தை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் தனது தந்தை ‘மக்கள் சட்டமன்றத்தில்’ ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது 3 முறை கைது செய்யப்பட்துள்ளார் .
கலாநிதி முஹம்மது முர்ஸி பாராளுமன்றத்தில் ஐந்து ஆண்டு காலத்தில் சிறப்பான அரசியல் சேவையை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் அவர் இஹ்வான் இயக்கத்தின் வழிகாட்டல் பிரிவின் உறுப்பினராக அதன் சூரா சபையால் தெரிவு செய்யப்பட்டார். ஜனவரி 25 புரட்சிக்கு பின்னர், இஹ்வான்களினால் சுதந்திரதற்கும் நீதிக்குமான அரசியல் கட்சி நிறுவப்பட்டது போது அதன் தலைவராக அவர் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் சூரா அவையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2000 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கலாநிதி முஹம்மது முர்ஸி இஹ்வான் அமைப்பின் பாராளுமன்ற குழு தலைவராக மிகவும் தாக்கமுள்ள ,செல்வாக்குள்ள முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் . மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளார் . இதன் காரணமாக சர்வதேச அரங்கில் இவர் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டுவரையான காலத்திற்கான சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். .
கலாநிதி முஹம்மது முர்ஸி இஹ்வான்களின் அரசியல் திட்ட முகாமையில் அளப்பெரிய பங்காற்றியுள்ளார் . 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இயக்க மறுசீரமைப்பு பணியில் இவரின் பங்களிப்பு பெரிதும் பேசப்படுகிறது. 2007ஆம் ஆண்டு இஹ்வான்கள் வெளியிட்ட அரசியல் வேலைத்திட்ட அறிக்கையிலும் இவரின் பங்களிப்பு பெரிதும் இருந்துள்ளது.
இன்று மீண்டும் எகிப்தில் சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தலில் களத்தில் பிரகாசமாக மின்னும் தாரகையாக கலாநிதி முஹம்மது முர்ஸி வெளிப்படுகிறார். இன்னும் இரு வாரங்களில் நடைபெறபோகும் ஜனாதிபதி தேர்தலில் பின்னர் இவர் பற்றிய வெற்றி அறிவிப்பை இஸ்லாத்தின் ஒரு கட்ட அரசியல் வெற்றியாக கண்டுகொள்ள முடியும் – என்பதுடன் இலங்கை அரசியலிலும் அவரின் வெற்றி தாக்கம் கொண்டதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்ஷா அல்லாஹ்.
Thanks: Lankamuslim.

May 15, 2012

நீ ஒரு முஸ்லிமாக ,தமிழனாக , பரங்கியனாக ,சிங்களவனாக இருந்தாலும் நீ ஒரு இலங்கையன் !


ஏ.அப்துல்லாஹ்: இலங்கையில் முப்பதாண்டு கால பயங்கரவாத போர் முடிவுற்ற மூன்றாவது ஆண்டு நிறைவு நாள் இம்மாதம் 19ஆம் திகதியாகும். அதனை முன்னிட்டு பாதுகாப்புச் செயலாளர் Business Today ஆங்கில இதழின் உதேனி அமரசிங்கவுக்கு அளித்த பேட்டியில் ஒருபகுதி
பேட்டி: இன்று குறித்த சிலர் சமூகங்கள் மத்தியில் பிளவுகளை தூண்டி விடுகின்றனர் .அத்தகைய நடவடிக்கைகள் அவசியமற்றவை.  நாம் எந்த இனம் ,மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாம் கண்டிப்பாக நினைவில் கொள்ளவேண்டியது 30 ஆண்டுகால யுத்தத்தை அனுபவித்திருக்கிறோம் அதேபோன்று ஒன்று மீண்டும் ஏற்பட நாங்கள் சந்தர்ப்பம் வழங்கக் கூடாது என்பதுதான் .
இது மிகவும் முக்கியமானது . மக்கள் வதந்திகளை நம்பக் கூடாது. இன்று வதந்திகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த தேவையுள்ளவர்களினால் உருவாக்கப்படுகிறது. அவற்றை மக்கள் நம்பக் கூடாது மக்கள் அவ்வாறான சந்தர்பங்கள் ஏற்படுவதற்கு அனுமதிக்கக் கூடாது .
இந்த நாட்டில் நீ ஒரு முஸ்லிமாக ,தமிழனாக , பேகராக ,சிங்களவனாக இருந்தாலும் நீ ஒரு இலங்கையன். இதுதான் மிக பிரதான விடயம். நீங்கள் அனாவசியமான பிரச்சினைகளில் ஈடுபடக் கூடாது .இனம் , மதம் அது முக்கியமானது அல்ல .நீ ஒரு இலங்கையன் என்பதுதான் முக்கியமானது .
இன்று நாங்கள் அதற்கான சந்தர்பத்தை பெற்றுள்ளோம் அதற்கான சந்தர்பம் அனைவருக்கும் இருக்கிறது . அது உண்மை இல்லை என்று யாரும் கூறமுடியாது கொழும்பை அல்லது நாட்டின் ஏனைய பகுதிகளை எடுத்துப் பாருங்கள் அங்கு அதிகமான முன்னணி தமிழ் வர்த்தகர்களை காணலாம் , அதேபோன்று தமிழ்தொழில்சார் நிபுணர்கள் , மருத்துவர்கள் , பொறியலாளர்கள் ,சட்டத்தரணிகள் , கட்டடநிர்மாணிகள் என்பவர்களை காணலாம். யாருக்காவது சொல்லமுடியுமா அவர்களுக்கு சந்தர்ப்பம் வாய்ப்பு வழங்கப் படவில்லை என்று ? – அவர்களுக்கு காணிகளை எங்குவேண்டுமானாலும் வாங்க முடியும் வாங்குவதற்கு எந்த தடைகளும் இல்லை. அவர்கள் -தமிழர்கள் – நாட்டின் முழு பகுதியிலும் வாழுகிறார்கள் .
முஸ்லிம் சமூகத்தை பார்த்தாலும் அவர்கள் வர்த்தகம் செய்ய சுதந்திரமாக விடப் பட்டுள்ளார்கள் . இந்த நாட்டில் அதிகமான முன்னணி முஸ்லிம் வர்த்தகர்கள் இருகின்றார்கள் என்ற உண்மை. அவர்களுக்கு எந்த தடையும் இல்லை என்பதற்கு ஆதாரம் என்று தெரிவித்துள்ளார் .
அந்த பேட்டியின் முழுமையான ஆங்கில வடிவத்தை பார்க்க

கடனால் ஏற்படும் இன்னல்கள்


ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;. எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்;. எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்;. அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும். அல்குர்ஆன் 2:282
இந்த வசனத்தின்படி கடன் கொடுப்போரும் கடன் வாங்குவோரும் நடந்து கொண்டால் எவ்வித பிரச்னையும் ஏற்படாது. ஆனால் நடைமுறையில் இருக்கும் விஷயங்கள் நேர்மாறானவை. கடன் வாங்கும்போது இனிக்க இனிக்கப்பேசி வாங்கிப் போவார்கள். கடனை திருப்பி கேட்டால் காரமாக பேசுவார்கள். உங்க பணத்தை எடுத்துக்கொண்டு எங்கும் ஓடிப்போய்விட மாட்டேன் தருகிறேன் என்பார்கள். எப்போது என்பதை மட்டும் சொல்ல மாட்டார்கள். வற்புறுத்திக் கேட்டால் ஒரு நாளை சொல்வார்கள். அந்நாளில் போனால் அலைகழிப்பார்கள். இவர்களின் எண்ணம் கடன் வாங்கிய பணத்தை அல்லது பொருளை மோசம் செய்து விட வேண்டும் என்பதே. இவர்கள் எதை செய்யப் போனாலும் விரித்தியாவதில்லை. திருப்பி கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் கடன் வாங்குவார்கள். அவர்களுக்கு முடியாதபோது அவர்கள் அறியாத விதத்தில் அல்லாஹ் அக்கடனை அடைத்து விடுவான். இதைத்தான் இந்த ஹதீஸும் சொல்கிறது.
எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை பாழாக்கும் நோக்கத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை பாழாக்கி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி
வசதி மிக்கவர்கள் வியாபாரிகளிடம் கடன் வாங்கி வைத்துக்கொண்டு இழுத்தடிப்பார்கள். இப்படி செய்வதை கெளரவமாக நினைப்பவர்களும் உண்டு. இது அநியாயமாகும். வியாபாரம் செய்பவர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.
வசதியுள்ளவர் (கடனை) இழுத்தடிப்பது அநியாயமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: திர்மிதி
வசதி இருந்தும் கடனை அடைப்பதில் அக்கரை காட்டாதவர்களை வேண்டுமென்றே தாமதம் செய்பவர்களை கடுமையான வார்த்தையைக் கொண்டு கடனை வசூலிப்பதற்கு உரிமையுண்டு.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைக் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். எனவே, நபித்தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள், அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.
நபித்தோழர்கள், ‘அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களிடம் இருக்கிறது” என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள், ‘அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்” என்று கூறினார்கள். நூல்: புகாரி
சிறந்த முறையில் கடனை அடைப்பதன் மூலம் நாமும் சிறந்த மனிதனாகிறோம். வசதி குறைந்தவர்களுக்கு கடன் கொடுப்பவர்களுக்கு கொஞ்சம் அதிகப் படியாகவே கால அவகாசம் தரலாம். அந்த அவகாச காலத்தில் கடனை செலுத்த முடியாத நிலையேற்பட்டால் வசதி குறைந்தவரின் கடனை தள்ளுபடி செய்து விடுவது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய கூலியை பெற்றுத்தரும். எந்த நிழலும் இல்லாத அந்நாளில் அல்லாஹ் தன் நிழலில் இடம் தருவான்.
யாரேனும் சிரமப்படுபவருக்கு அவகாசம் வழங்கினால் அல்லது அவரது கடனைத் தள்ளுபடி செய்தால் எந்த நிழலும் இல்லாத இறுதி நாளில் அர்ஷின் நிழலின் கீழ் அவருக்கு அல்லாஹ் நிழல் தருவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:திர்மிதி
மற்றொரு ஹதீதில்
ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), ‘நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்” என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி
ஒருவர் முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்த்து கொள்வது நல்லது. . கடன் வாங்கிய பிறகு அதனை நிறவேற்ற முடியாமல் கடன் கொடுத்தவரிடம் கொடுத்த வாக்கை மீறுவதும் பொய்யும் கூறுவது அவனில் ஏற்படுகிறது. இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கடனை விட்டும் பாதுகாப்பு தேடியிருக்கிறார்கள்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார். “இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களை விட்டும் கடனை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்தவார்கள். ‘தாங்கள் கடனை விட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?’ என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது ‘ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள். நூல்: புகாரி
கடனால் ஏற்படும் இன்னல்களை விட்டும் நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவோமாக!
source-readislam

A.R ரஹ்மானுக்கு சவுதி அரபியாவிலுருந்து……..


- குளோபல் இஸ்லாம் பேஸ்புக் பக்கம் - 
சவுதி அரேபியாவுக்கு சென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜித்தாவில் உற்சாக வரவேற்பு, ‘புனித பூமியில் பிறந்தநாள் கொண்டாடிய இசைமேதை’ என்றெல்லாம் சில தினங்களுக்கு முன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. அதுபற்றி தெளிவுபடுத்த விரும்பியதன் விளைவே இந்த கட்டுரை.
ஆஸ்கார் விருது பெற்றபோது எல்லா புகழும் இறைவனுக்கே! என்று மிகத் தெளிவாக அறிவித்து எங்களைப் போன்றவர்களை வியப்பில் ஆழ்த்தினீர்கள்.
இஸ்லாத்தில் இசை என்பது தடுக்கப்பட்டது. ஒரு சாராயக்டையை அல்லது ஒரு விபச்சார விடுதியை நடத்தி அதன் மூலமாக வரும் கோடிக்கணக்கான வருமானத்தை ஒருவன் ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்தாலும் அவன் செய்யும் வியாபாரம் ஹலாலாக ஆகிவிடாது.
தடுக்கப்பட்டதை செய்து மக்களை வழிகெடுத்ததற்கான தண்டனையை அவன் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது இஸ்லாமிய நியதி. உங்களது இசையும் அது போன்றதே! நீங்கள் அமைக்கும் இசையானது வெறும் இசையுடன் மட்டுமின்றி ஆபாசக்காட்சிகளுடன் வெளியிடப்படுகின்றன.
அந்நியர்களுடன் சரச சல்லாபத்தில் ஈடுபடுவதும் அங்க அவயங்களை மாற்றாருக்கு காண்பிப்பதும் இஸ்லாத்தில் மிகப்பெரும் தவறு என்பதை தாங்கள் அறியாமலிருந்தால் அதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகின்றேன். ஒரு தீமையை செய்ததற்காக கிடைத்த விருதை நீங்கள் பெற்றபோது ‘எல்லா புகழும் இறைவனுக்கே! என நீங்கள் விளித்தது ‘நன்மையும் தீமையும் இறைவனிடத்தில் இருந்து வருபவை’ என்ற இஸ்லாமிய கோட்பாட்டின் படி மட்டுமே சரியானது. ஆனால் தீமை செய்ததற்கான தண்டனையை மறுமையில் அனுபவித்தே ஆக வேண்டும்.
ஒருவன் பிற மதத்திலிருந்து இஸ்லாத்தை தேர்ந்தெடுத்து வந்தால் அவனது முந்தைய பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுகின்றான் என நமது வழிகாட்டியாகிய நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வாறு அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்ட நீங்கள் மீண்டும் தர்ஹாக்களுக்கு சென்று இணைவைப்பு எனும் பாவத்தை சம்பாதித்து வருகின்றீர்கள்.
காத்ரீனா கைஃப், ஷில்பா ஷெட்டி போன்றவர்களெல்லாம் தலையில் பூக்கூடை அணிந்தவர்களாக அஜ்மீர் தர்ஹாவுக்கு செல்கிறார்கள் என்றால் அது பிழைப்புக்காக! முஸ்லிம் ரசிகர்களும் படம் பார்க்க வரவேண்டும் என்ற நப்பாசையும் தனது படம் நிறைய நாள் ஓடவேண்டும் என்ற சுயலமும் தான் அதற்கு காரணம். அவர்களை பொறுத்தவரை அது பத்தோடு பதினொன்று. கோவிலுக்கும் செல்வார்கள், சர்ச்சுக்கும் செல்வார்கள், தர்ஹாவுக்கும் செல்வார்கள்.
இறைவனைத் தவிர வேறு எவராலும் நமக்கு எதையும் தந்திட முடியாது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. ‘எம்மதமும் சம்மதம்’ என்று சொல்பவன் ஏக இறைவனை வணங்கக் கூடியவனாக இருக்க முடியாது. பல தெய்வ கொள்கைகளை தகர்த்து ஏக தெய்வ கொள்கையை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
அப்படியிருக்க கல், மண், கப்ரு, மகான் என்பனவற்றிற்கு சக்தி எங்கிருந்து வரும். அவைகளால் திரைப்படம் அதிக நாள் ஓடும் என நீங்கள் நம்பினால் நீங்கள் இஸ்லாத்திலிருந்து விலகி விட்டீர்கள் என்றே அர்த்தம். உங்களை ஒரு இஸ்லாமியராக உலகம் பார்ப்பதால் தர்ஹாக்களுக்கு நீங்கள் செல்வதை இஸ்லாமிய வழிபாட்டில் ஒரு பகுதியாக சிலர் எண்ணும் வாய்ப்புகளுண்டு. அது களையப்பட வேண்டும்.
ஆனால் இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், உங்களை ஜித்தாவில் வரவேற்றவர்கள் இசை என்பது ஹராமென்றோ, தர்ஹாக்களிடம் கையேந்துவது மிகக் கொடிய பாவம் என்றோ தங்களுக்கு ஏன் சொல்லவில்லை என்பது தான். உங்களை வரவேற்ற முஸ்லிம் பெயர்தாங்கிகள் அனைவருமே ஒரு பிரபலத்துடன் போஸ் கொடுக்க வேண்டும் என்ற நினைப்புடன் நடந்துள்ளார்கள் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
மக்காவில் உம்ரா செய்ய வேண்டுமென்று வந்ததாகவும் அந்த புண்ணிய பூமியில் தங்களது பிறந்தநாளை கொண்டாட வேண்டுமென்றும் விரும்பியதாக தாங்கள் பேட்டியளித்துள்ளீர்கள். அஜ்மீர் தர்ஹா, கடப்பா தர்ஹாவிற்கு சென்று பிரார்த்திப்பது போன்றதல்ல மக்காவுக்கு செல்வது என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எண்ணப்படி தான் செயல்கள் அமையும் என்பது புகாரி ஹதீஸ் புத்தகத்தில் வரும் முதலாவது ஹதீஸ். இதுவரை நீங்கள் படிக்காமலிருந்தால் இன்றே அதை புரட்டுங்கள். ஒருவன் தனது நாட்டை, குடும்பத்தை, செல்வத்தை விட்டு அடுத்த நாட்டுக்கு ஹிஜ்ரத் செய்யும் போது அங்கே இருக்கும் அழகான பெண்களைதிருமணம் செய்ய வேண்டும் என எண்ணி இருந்தால் அது நிறைவேறும். ஆனால் இறைவனின் பொருத்தத்தை அடைய முடியாது என்பது அந்த ஹதீஸின் அர்த்தம்.
பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்ற அர்த்தத்தில் நீங்கள் வந்திருந்தால் அது நிறைவேறிவிட்டது, உம்ரா இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது சந்தேகமானதே! அதை இறைவன் ஒருவனே அறிவான்.
பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை, நாம் போற்றும் நபிகளார் பெருமானார் (ஸல்) அவர்கள் தனது எந்த பிறந்தநாளுக்கும் கேக் வெட்டியதில்லை, இன்று என்னுடைய பிறந்தநாள், எனவே விழா எடுங்கள் என்றோ சொன்னதில்லை, அவர்களது காலத்தில் பாசத்திற்குரிய குழந்தைளுக்கும் அன்பிற்குரிய மனைவிகளுக்கும் நேசத்திற்குரிய தோழர்களுக்கும் பிறந்தநாள் கொண்டாடியதில்லை, அதை அனுமதிக்கவுமில்லை.
ஆனால் அறியாமையால் நீங்கள் கேக் வெட்ட முனைந்த போது தங்களுடன் இருந்த எவருமே தடுக்காதது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். அந்த இடத்தில் அது தவறு என்பதை தங்களுக்கு அவர்கள் உணர்த்தி இருந்தால் தாங்களும் அதை உணர்ந்து அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பீர்கள். அதன் மூலமாக தமிழ் முஸ்லிம்களிடத்தில் அது பற்றிய ஒரு விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கும். தாங்கள் செய்த அச்செயல் இன்று ஒரு முன்னுதாரணமாக மாறிவிடுமோ என்ற கவலையே என்னுள் எழுகின்றது.
பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவது இஸ்லாமிய கலாச்சாரமல்ல! அதுவும் சவுதி அரேபியாவில் அதை அனுமதித்த ஜித்தா நண்பர்கள் மிகப்பெறும் தவறிழைத்துவிட்டார்கள். அவர்கள் தங்களை இஸ்லாமியனாக பார்க்கவில்லை. உடன் நின்று போட்டோ எடுக்கும் பிரபலமாகத் தான் பார்த்திருக்கின்றார்கள். இல்லையேல் உம்ரா செய்யும் போது மொட்டை அடிப்பது தான் சிறந்தது என்பதை சொல்லி தந்திருப்பார்கள்.
ஏனெனில் உம்ரா செய்துவிட்டு முடிகளை விரலளவு களைவதை இஸ்லாம் கற்றுத்தரவில்லை. மொட்டையடிப்பதை சிறந்ததாக கூறுகிறது. மொட்டையடித்தவர்களுக்காக நபிகள் பெருமானார் மூன்று முறை பிரார்த்தனை செய்துள்ளார்கள் என்பதை உங்களது வழிகாட்டிகள் உங்களுக்கு சொல்லித்தரவில்லை. அவர்களுக்கும் தெரிந்திருக்குமோ என்பதும் சந்தேகமே!
சரி! தங்களது பிறந்தநாளில் என்ன வித்தியாசத்தை நீங்கள் பார்த்தீர்கள். வயதை அளவிடும் ஒரு நாளே தவிர எந்த சிறப்பும் அதற்கு இல்லை. ஆண்டுக்கொருமுறை தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்பதை எதன் அடிப்படையில் தீர்மானித்தீர்கள். வருடத்திற்கொருமுறை ஏன் அந்த நாளை கொண்டாட வேண்டும். மாதத்திற்கொரு முறை கொண்டாடலாமே? ஒவ்வொரு மாதமும் 6ம் தேதி கொண்டாடலாமே? ஏன்? கிழமையை கணக்கிட்டு வாரத்திற்கொருமுறை கூட கொண்டாடலாமே? நீங்கள் பிறந்தது திங்கள்கிழமை என்றால் இன்று அது வியாழக்கிழமை! பின் எவ்வாறு பிறந்தநாள் கொண்டாட முடியும். எனவே சிந்தியுங்கள்!
நம்மை பொறுத்தவரை வாழ்க்கை என்பது இந்த உலகத்துடன் முடிந்து விடுவதில்லை. மறுமை உலகம் என்ற மாபெரும் பேறு நமக்காக காத்திருக்கின்றது. அதில் நாம் வெற்றியடைய வேண்டுமாயின் அதற்கான தேர்வுக்கூடம் தான் இது. உங்களை புகழ்ந்து கொண்டும் உங்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பவர்களும் மறுமையில் உங்களுக்கு துணையாக வரமாட்டார்கள். மறுமை நாளிலே இந்த கூட்டமெல்லாம் உங்களை வரவேற்க வராது, உதவிகள் செய்யாது. நீங்கள் மட்டும் தனித்து விடப்படுவீர்கள். மரணிக்குமுன் நீங்கள் தவறுகளுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டுவிட்டால் அவன் நாடினால் மன்னித்துவிடுவான்.
இறுதியாக, தமிழகத்திலோ அல்லது வடமாநிலங்களிலோ இந்த பிறந்தநாளை நீங்கள் கொண்டாட திட்டமிட்டிருந்தால் திரையுலகமும் ஆட்சியாளர்களும் திரண்டு ஊரே கோலாகலமாக இருந்திருக்கும்.
ஆனால் அதைவிட புனித பூமியான மக்காவிற்கு செல்வதை நீங்கள் சிறந்ததாக கருதியதிலிருந்து அந்த புகழாரத்தை விட மக்காவின் அமைதியை நீங்கள் விரும்பியுள்ளீர்கள் என்பது தெளிவாகின்றது. எனவே தங்களை சுற்றியுள்ள கூட்டமே தங்களை முழுமையாக இஸ்லாத்தில் நுழையவிடாமல் தடுக்கின்றன என்பதை என்னால் உணர முடிகின்றது.
ரசிகர்கள் கூட்டத்தை கண்டு புளகாங்கிதம் அடையாமல் மறுமையை பற்றிய தேடுதலை அதிகப்படுத்துங்கள். அப்போது மிகப்பெரிய மாற்றத்தை காண்பீர்கள். உங்களது தேடுதலில் இறைவனை பற்றிய அறிவை நீங்கள் பெற்றுவிட்டால் கல்லை, கபரை, மனிதனை வணங்க கூடாது என நீங்கள் முடிவெடுத்து விடுவீர்கள். ஆனால் அதை அறிவித்து விட்டால் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள்.
எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும். இசை, பாடல்களின் மூலம் கிடைத்த புகழாரம் மற்றும் வருமானம் நின்று போகும். உங்களின் இசை, ஆடல், பாடல்களை ரசித்து உங்களை சுற்றிலும் இருப்பவர்கள் உங்களை வெறுக்க ஆரம்பித்து விடுவர். நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். இந்த விளைவுகளுக்கு நீங்கள் தயாராக இருந்தால் இன்றே தங்களது தேடுதலை துவக்குங்கள்.
அன்பிற்குரிய ரஹ்மான்!
நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதும் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டதை போல இணைவைப்பிலிருந்து விலகி தவ்பா செய்தால் மீண்டும் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக மாறுவீர்கள், மாறவேண்டும் என்பதே எனது அவா. ஏனெனில் மறுமை நன்மைக்காகத் தான் நீங்கள் உம்ராவுக்கும் வந்தீர்கள்.
மதீனாவிலிருந்து ஜித்தா செல்ல பிளைட்டுக்கு நேரமாவதைக் கூட உணராமல் பிரார்த்தனையில் லயித்ததாகவும் அதனால் பிளைட்டை தவற விட்டுவிட்டு காரில் ஜித்தா செல்லும் நிலை எற்பட்டதாகவும் செய்தி அறிந்தேன்.
பிரார்த்தனையில் இத்தனை நிகழ்வுகள் நிகழும் போது மறுமையில் கேள்விக்கணக்கு நாளில் நமது நிலை என்னவாக இருக்கும்! அங்கு தனித்து விடப்படுவதை காட்டிலும் இவ்வுலகில் தனித்து விடப்படுவது துன்பம் தரும் விஷயமல்ல. மரணத்திற்கு பின் இருப்பதே நிலையான வாழ்க்கை!!!

May 14, 2012

இதுவல்ல பௌத்தம் சொல்லும் புனிதத்தன்மை


காமினி வியங்கொட :தமிழில்: அபூ ஷாமில்:

புத்தரின் வாரிசுகள் என்று கூறிக் கொள்ளும் பிக்குகள் குழுவினால் அண்மையில் தம்புள்ளையில் முஸ்லிம் பள்ளியொன்று சேதமாக்கப்பட்டும் இந்துக் கோவிலொன்று பலாத்காரமாக அகற்றப்படும் என்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தரின் வாரிசுகளில் ஒருவர் தனது காவியுடையை களைந்து, குதித்துக் கூத்தாடி இந்த வன்முறைக்கு மக்களை உசுப்பேற்றினார். அட்டகாசத்தின் முடிவில் பிக்குகள் பிரித் ஓதினார்கள். மக்களும் ‘சாது’ சொன்னார்கள்.
சாதாரண வாழ்க்கையில் எப்படி நடந்து கொண்டாலும், கெமராவின் முன்னால் நடந்து கொள்ளும்போது காவியுடையை களைவது, கட்புல ஊடகங்களில் பதிவுசெய்யப்பட்டு விடும் என்பதை இவர்கள் அறியாமல் இருக்கவே முடியாது.
ஆனாலும், அறிவு ஞானம் படைத்தவர்கள், மதகுருக்கள் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள், இனத்திலும், மொழியிலும் ஒழுங்கமைக்கப்பட்டவர்களாக தம்மை கருதிக் கொள்பவர்கள். புத்தர், புத்தரது போதனைகளை விட தமது பாரம்பரியம் மேலானது எனக் கருதுபவர்கள், கெமராவுக்கு முன்னால் மட்டுமல்ல, புத்தரின் திருவிழிகளுக்கு முன்னாலேயே இப்படி நடந்து கொண்டார்கள். ஏனெனில், புத்தர் சிங்களவரல்லவே. ‘உலகிலேயே தூய தேரவாத பௌத்தம்’ என சிலரால் அறியப்படுவது இந்த முரட்டு புத்த தர்மத்தைத்தான்.
இந்தியாவில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நடைபெற்ற இந்து-முஸ்லிம் மோதல்களில் பல்லாயிரக் கணக்கா னோரை பலியெடுத்த நினைவுகளைத் தான் இந்தக் காட்சிகள் ஞாபகப்படுத்துகின்றன. இலங்கையில் பிக்குகளின் இந்த வழிமுறை இன்னொரு இந்தியாவை நோக்கியோ, தாலிபானை நோக்கியோ எம்மை வெகுவிரைவில் இட்டுச் சென்றாலும் ஆச்சரியப்படுவ தற்கில்லை.
பயங்கரவாதத்தை வேரோடழிப்பது என்ற வர்த்தக விளம்பரத்திற்குப் பின்னாலிருந்து யுத்த வெற்றியென்பது, சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதுதான் என்பது, இந்த நிகழ்வின் மூலம் பட்ட வர்த்தனமாகத் தெரிகிறது.
நடந்து முடிந்த மொத்த நிகழ்வையும் முன்னின்று நடத்தியவர் தம்புளு விகாராதிபதி இனாமலுவே சுமங்கல தேரர். பொலிஸாருடனும் பிரதேச செயலாளருடனும் இவர் நடந்து கொண்ட விதம், காவியுடை தரித்த மேர்வின் சில்வாவைப் பார்ப்பது போலிருந்தது.
தனது உத்தரவை பிரதேச செயலாளர் மீறினால், அவரை மரத்திலே கட்டி விடுவேன் என்று எச்சரிப்பது போல, அவரது கடும் தோரணை அமைந்திருந்தது. சமாதானப்படுத்த வந்த பொலிஸாரை நோக்கி அவர் சொன்ன வார்த்தை, “இதற்கு (பள்ளியை அகற்றுவதற்கு) நிறைய பணம் தேவைப்படும். நாங்கள் சிரமதானத்தின் மூலம் இதனைச் செய்து அரசுக்கு உதவி செய்யத்தானே வந்திருக்கிறோம். நீங்கள் ஏன் உதவாமல் இருக்கிறீர்கள்?”
தமது சண்டித்தனத்தால் பள்ளியை அல்லது கோவிலை சிரமதானம் மூலம் அழித்துவிடுவதை வீண்விரயத்தைக் குறைக்கின்ற ஒரு செயலாகத்தான் கருதுகின்றார்களா? ஜனநாயக முறைமைகளைவிட மேலானது என்றா இவர் கூறுகிறார்?
“கோவிலை நீங்கள் அப்புறப் படுத்தி விடுங்கள். அல்லது நாங்கள் வந்து உங்களது வீடுகளையும் அப்புறப்படுத்தி விடுவோம். உங்களது கடவுளை விரும்புகிற வேறிடத்துக்கு தூக்கிச் செல்லுங்கள்.” இது இடையில் அகப்பட்ட இந்துப் பெண்ணிடம் சொன்ன ஈவிரக்கமற்ற வார்த்தைகள்.
சாதாரண பௌத்தர் கூட நடந்து கொள்ள முடியாத வெறுக்கத்தக்க விதத்தில் பௌத்த பிக்கு நடந்து கொள்ளக் காரணம், தம்புள்ளை பௌத்தர்களின் புண்ணிய பூமி என்பதாலா அல்லது பௌத்த பூமியில் ஏனைய மதங்களின் மதஸ்தலங்கள் இருக்கக் கூடாது என்று பௌத்தமே சொல்லாத தர்மத்தினாலா?
மதங்களின் அடிப்படையில் பார்க்கும்போது பௌத்த பிக்குவின் இந்த நடவடிக்கை முற்றிலுமே பௌத்தத்துக்கு விரோதமானது. புத்தரின் வாழ்க்கை வழிமுறை இதற்கு முற்றிலும் மாறுபட்டது.
புத்தர் தங்கியிருந்த ஜேதவனாராமயவுக்கு அடுத்த நிலம், பன்றிகள் கொல்லப்படும் ஒரு பன்றி மடுவம். சுந்தஜூகர என்ற இந்த மடுவத்தின் உரிமையாளர், தமது வாழ்நாளில் ஒருமுறையேனும் புத்த போதனைகளைக் கேட்டதேயில்லை. பன்சலயிற்குப் பக்கத்தில் இருந்தும் உயிர்களைக் கொல்லும் தமது தொழிலை விட்டுவிடவுமில்லை.
அப்படியிருந்தும், தானிருக்கும் புண்ணிய பூமியிலிருந்து இந்தப் பன்றி மடுவத்தை அகற்றுமாறு உரிமையாளரையோ, அன்றைய மன்னர்களையோ புத்தர் கோரவில்லை.
இந்த ஜேதவனாராமயவின் அடுத்த பக்கத்தில் இருந்த துறவிகளின் ஆசிரமத்தில் நடக்கின்ற பூஜைகளின் சத்தத்தினால் தமது நிஷ்டைக்கு களங்கம் ஏற்படுகிறது என சீடர்கள் புத்தரிடம் முறையிட்ட போது, இதனை உரிய நிர்வாகிகளிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்றுதான் புத்தர் சொன்னாரே தவிர, அவர்களது ஆசிரமத்தை தரைமட்ட மாக்குமாறு தமது சீடர்களை புத்தர் உசுப்பேற்றவில்லை.
யாழ்ப்பாணத்தில் இந்துச் சூழலில் புதிதாக பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பது போன்ற ஏனைய மதத்தவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக நடந்து கொள்வதானது, மதங்கள் எப்படிப் போனாலும் நவீன யுகத்தின் மானிடப் பண்புக்கே உசிதமானதல்ல.
ஆனால், தம்புள்ளை பள்ளி புதிதாக நிர்மாணிக்கப்பட்டதல்ல. இருந்தும், இது இப்போது ஏன் திடீரென இவர்களது கண்களில் பட்டது. ஏனென்றால், சிங்கள பௌத்தர்களுக்கு உரித்துக் கொண்டாடுபவர்களின் யுத்த வெற்றியினால் வந்த போதைதான் இது.
இந்தப் ‘புனித பூமி’ கோட்பாடு கூட நகைப்புக்கிடமானது. இலங்கையில் உள்ள பெரும்பாலான பௌத்த ஆசாரமல்லாத கேந்திரம் பார்த்தல், சூனியம் மந்திரித்தல், நேர்ச்சை, தேங்காய் உடைத்தல் போன்ற பல விடயங்கள் பௌத்த விகாரைக்குள்ளேயே நடக்கின்றன.
இனாமலுவே சுமங்கல தேரரின் தம்புளு விகாரையிலும் இப்படித் தான். விஷ்ணு, பிள்ளையார் சிலைகள் கொண்ட இந்துக் கோவில் அவரது விகாரைக்குள்ளே இருக்கிறது. இந்துப் பாரம்பரியத்திற்கேற்ப தேங்காய் உடைக்கின்ற இடமும் அங்கு காணப்படுகிறது. தனது விகாரைக்குள்ளேயே இந்துக் கோவிலை வைத்துக் கொண்டு, தம்புள்ளையை புண்ணிய பூமியாக்குவதோடு, விகாரைக்கு வெளியே உள்ள கோவில் அகற்றப்பட வேண்டும் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?.
உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்று சொல்லுகின்ற இந்த புனிதத் தன்மை என்பது, தற்போதைய அரசியல் மனோபாவம் வேண்டுகின்ற முரட்டுத்தனமேயன்றி, எவ்விதத்திலும் பௌத்தம் சொல்லுகின்ற புனிதத் தன்மையல்ல.
இந்த அரசியல் மனோபாவத்தில் பௌத்தரல்லாத சிங்களவர்களுக்கும் குறிப்பாக, தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எஞ்சியிருப்பது நாற்புறமும் நெருக்கடியால் சூழப்பட்ட ஒரு வாழ்க்கையன்றி வேறில்லை.
நன்றி: ராவய
Thanks:Lankamuslim

المشاركات الشائعة