M.ரிஸ்னி முஹம்மட்: கடந்த ஐந்து ஆண்டுகளாக இஸ்ரேலிய முற்றுகைக்குள் வைக்கப்பட்டுள்ள காஸா மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இயந்திரம் நேற்று இரவும் தொடரான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதனால் படுகொலை செய்யப்பட்டுள்ள பலஸ்தீனர்களின் சிறுவர் சிறுமியர் அடங்களாக எண்ணிக்கை 19 தை எட்டியுள்ளதுடன் சிறுவர் சிறுமியர் அடங்களாக காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் 200 ரை கடந்துள்ளது.
நேற்று முன்தினம் புதன்கிழமை தொடக்கம் Operation Pillar of Defenseஎன்ற பெயரில் இஸ்ரேல் காஸாவின் 350 இடம்கள் மீது நூற்றுக்கணக்கான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது . கடந்த புதன் கிழமைக்கு முன்னர் இருந்தே இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்து விட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை முற்றுகைக்குள் வைக்கப்பட்டுள்ள காஸா இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. ஹமாஸ் தாம் 350 ரொக்கெட்டுக்களை இஸ்ரேல் மீது ஏவியதாக தெரிவித்துள்ளது. அதேவேளை இஸ்ரேல் யுத்த அமைச்சு தாம் 150 காஸா ரொக்கெட்டுக்களை தடுத்ததாக அறிவித்துள்ளது .
முதல் முறையாக காஸாவில் இருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ள டெல் அவியை ரொக்கெட்டுக்கள் தாக்கியுள்ளது. இஸ்ரேலிய தரப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டும், மூன்று சிப்பாய்கள் காயமடைந்துமுள்ளனர் .
அதேவேளை பலஸ்தீனர்களின் உரிமை பற்றி அக்கறை காட்டாத அமெரிக்கா ,தன்னை பாதுகாக்கும் உரிமையை இஸ்ரேல் கொண்டுள்ளது என்று அறிவித்துள்ளது . இஸ்ரேல் தரைவழித் தாக்குதலுக்கு தயாராகிவருவதாக இஸ்ரேலிய தகவல்கள் தெரிவிக்கிறது .
இந்த நிலையில் இன்று வெள்ளிகிழமை எகிப்தின் பிரதமர் ஹிஸாம் தலைமயிலான உயர்மட்ட குழு காஸா மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் பொருட்டும் அவர்களின் தேவைகளை கேட்டறியும் பொருட்டும் காஸா செல்கிறது. எகிப்து ஏற்கனவே இஸ்ரேலுக்கான தனது தூதுவரை திருப்பி அழைத்துள்ளது . ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்தும் முஸ்லிம் நாடுகளை இஸ்ரேலுக்கு எதிராக செயல்படத் தூண்டியும் பல நாடுகளில் பல்வேறு அமைப்புகளால் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .
இஸ்ரேலிய தாக்குதல் ஒன்றில் ஹமாஸ் இராணுவத் தளபதி அஹமட் அல் ஜபாரி சஹீத்தானார். இவரின் ஜனாஸாவில் இஸ்ரேலிய தாக்குதல் அச்சுறுத்தலையும் மீறி பெரும்தொகையனவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலில் என்ற யுத்த இயந்திரத்தால் தாக்கப்படும் காஸா
No comments:
Post a Comment