Search This Blog

Sep 11, 2012

தற்போதைய அரசியல் சூழலை எதிர் கொள்ளத் தடுமாறும் ரவூப் ஹகீம்


அப்துல் ரசாக் (லண்டன்)
மலை ஏறி ஒருவன் தனது மூட்டை முடிச்சிகளை முதுகிலே சுமந்து கொண்டு மலையின் உச்சிக்கு ஏறி வெற்றிக் கம்பத்தை அடைய எவ்வளவு சங்கடமும் தங்கடமும் அடைவானோ அவ்வாறே முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹகீம், நீதி அமைச்சுப் பதவியையும் தனது முதுகிலே சுமந்து கொண்டு கிழக்கின் உச்சியிலே இருக்கின்ற முதலமைச்சர் பதவிக்காகாவும் அரசுடன் போராட வேண்டும்.
அந்த மலையேறி மலையின் உச்சியை அடைகின்றானோ  அல்லது சறுக்கியே விழுகின்றானோ  ஆனால், தன் முதுகிலே தொங்குகின்ற மூட்டை முடிச்சை மட்டும் இழக்க மாட்டான். அவ்வாறே,  தலைவர் ரவூப் ஹக்கீமும் தனது முதுகிலே அமைச்சும் பதவியையும் சுமந்து கொண்டு ஒருக்காலமும் முதலமைச்சர் பதவியை அரசிடமிருந்து  வென்று எடுக்க மாட்டார்   என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.
தேர்தலுக்குப் பின் இந்த சங்கடம் மு.கா.வுக்கு ஏற்படும் என்பதை முன் கூட்டியே அறிந்ததால்தான் தவிசாளர் பசீர் சேகு தாவூது தனது பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தார். அரசியல் களமாட வருபவர்கள் இந்த வியூகங்களை வகுக்கத் தெரிந்த வித்தகர்களாக இருக்க வேண்டும். இக்கட்டான ஒரு அரசியல்  சூழ் நிலையில்  ஜனாதிபதியை சந்திக்கும் போது ஒரு சமூகத்தின் தலைவன் என்ற அடிப்படையில் நிலைப்பாடுகளை பேச  வேண்டுமே தவிர “அரசுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்போம்” என்ற ஜால்ரா அடிக்கும் பாணியில் அல்லது தனது முதுகிலே சுமக்கும் ஒரு பொதியாக இருந்து வருகின்ற அமைச்சுப் பதவியை காப்பாற்றும் போக்கில் அரசியல் நகர்த்தல்கள் ஒரு போதும் அமையக்கூடாது.
ஆதலால், தலைவர் ஹகீம், கிழக்கில் தனித்து தேர்தலில் குதித்ததன் மர்மம் ஜனாதிபதி மாளிகையிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் வெளியே வர ஆரம்பித்துள்ளது. அதாவது, வெறும்  காஸி நீதிபதிகளையும் சமாதான நீதிபதிகளையும் வழங்குகின்ற நீதித் துறை அமைச்சுக்குப் பதிலாக ஆளுமை மிக்க வேறொரு அமைச்சுப் பதவி இவருக்குத் தேவைப்படுகிறது. அதனை முஸ்லிம் மக்களிடமிருந்து ஒரு ஆணையாகப் பெற்று ஜனாதிபதியிடம் பேரம் பேசிப் பெற்றுக் கொள்வதற்கான அடுத்த கட்ட நாடகத்தின் அரங்கேற்றமே “தனித்து தேர்தல்” மர்மம் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றார்கள்.
அரசிடம்  முதலமைச்சர் பதவியை வெள்ளலமா ?
14 ஆசனங்களை வைத்துக் கொண்டிருக்கும் அரசாங்கக் கூட்டமைப்பிடம் 07 ஆசனங்களை கொண்டிருக்கும் மு.கா. கண்களை மூடிக் கொண்டு எவ்வாறு முதலமைச்சர் பதவியைக் கோரமுடியும் என்பது நீதி அமைச்சருக்குத் தெரியாத  நீதி நியாயங்களல்ல.  மத்திய அரசில்  சக்தி மிக்க அமைச்சு மண்டலங்களைப் பெற்றுக் கொண்டு  முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்தாலும், அந்தப் பதவிக்காக பிள்ளையானை அல்லது முஸ்லிம் காங்கிரசின்  அல்லது அதன் தலைவரின்  பரம அரசியல் விரோதிகளான அரச அணியில் உள்ள முஸ்லிம் தோழமைக் கட்சிகளின் உறுப்பினரை எவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் அனுமதிக்கப் போகின்றது என்பதுதான் இன்று அரசியல் அரங்கில் கேட்கப்படும் மிகப் பெரிய கேள்விகளாகும்.
ஆகவேதான், தலைவர் இப்போது தடுமாறுகிறார். சக்திமிக்க அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு எவ்வாறு கிழக்கின் முதலமைச்சர் பதவியைத் தாரை வார்த்துக் கொடுப்பது அரசியல் ஆணையை வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களிடம் எவ்வாறு சாட்டுப் போக்குச் சொல்வது என்பது தெரியாமல் தலைவர் ததி மிதிப் பட்டுத் திரிகின்றார் என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஆகவே தலைவர் ஹகீம் அவர்கள் அமைச்சுப் பதவியை தனது முதுகிலே சுமக்கின்ற ஒரு சுமையாக தக்க வைத்துக் கொள்ளும் வரை அவர் முஸ்லிம் சமூகத்துக்கு எதனையும் சாதிக்க மாட்டார் என்றே பலரும் கருதுகின்றனர். பேரின வாதிகளும் இவரின் பலம் பலயீனம் என்பதையெல்லாம் நன்கு அறிந்து வைத்துக் காய் நகர்த்துகின்றார்கள் என்பது போகப் போக தெரியும் என்பதும் சிலரின் கருத்தாக இருக்கின்றது.

Thanks:  kattankudi.info 

1 comment:

  1. இன்றோ நாளையோ SLMC தங்களின் முடிவுகளை அறிவிக்க இருக்கும் இன் நிலைமை அரசியல் அரங்கில் மட்டுமல்ல கிழக்கு முஸ்லிம்களின் மத்தி இலும் பாரிய மாற்றங்களை உண்டுபண்ணும் என்பது அறிந்த விடயமே ..... இருந்தும்கிழக்கிலுள்ள அரசியல் வாதிகளின் நிலைமை அவர்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கும்!! எடுக்க இருக்கும் முடிவுகள் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணும் என்பது மறைமுகமானதே..........
    ................................ITK........................................
    உடன் சேரும் பட்சத்தில் மத்திய அரசில் இருந்து விலக வேண்டும்.அவ்வாறு நடக்கும் பட்சத்தில் சகோதரர் கரீஸ்MP, பைசால் காசிம்MP ஆஹியோருக்கே அதிக தாக்கம் ஏட்படும்.... அதுமட்டுமல்ல நிந்தவூரில் ஆரிப் சம்சுதீன் இனுடைய அரசியல் பிரவேசம் நிந்தவூர் தவிசாளர் அச்ஷ்ரப் அவர்களின் எதிர்கால அரசியலிலும் பாதிப்பை ஏட்படுத்தும்.... இதட்கு இங்குள்ள அரசியல் வாதிகளிடியே ஒற்றுமை இன்மையும் ஒரு காரணம்.....SLMC சமூகம் சமூகம் என்று இருக்க கட்சியன் எதிரி எனப்படும் அதாவுல்லாஹ் வின் கட்சி உறுப்பினர்கள் அபிவிருத்தி என்ற போர்வை இணை மக்களுக்கு போற்ற முன்வருவார்கள் ..கடைசியில் சமூகம் சமூகம் என்றிருக்கும் கட்சிக்கு அரசியல் களத்தில் வைத்து கலுத்தருப்பர்கள்....என்ன செய்துள்ளது சமூகத்துக்கு என்ன அபிவுருத்தி செய்துள்ளனர் என கேட்பார்கள்........

    தட்போதைய சூழலில் ITK உடன் சேரும் பட்சத்தில் அபிவிருத்திக்கு இடமில்லை என்றே SLMCகட்சி இருக்க வேண்டும்...அது எதிர்கால எமது கட்சியன் அரசியலுக்கு எந்த விதத்திலும் பொருந்தாது... மக்கள் தட்போது முஸ்லிம் முதலமைச்சர் முதலமைச்சர் என்கின்றனர் ஆனால் காலப் போக்கில் முதலமைச்சராகி என்ன செய்தனர் என்பார்கள் ..... எதிர்தரப்பில் இருக்கின்ற பேரே மிஞ்சும் ......முஸ்லிம் முதலமைச்சரி விட எதிர்கால கட்சியன் நிலமயே தட்போதைய தேவை... ஆளும் மஹிந்த அரசு ஒரு போதும் முதலமைச்சு தராது கேட்கவும் முடியாது......தருமானால் அது முஸ்லிம்களுக்கு அரசு தரும் அன்பான பரிசாகவே இருக்கும்.. அதட்கு கூட இருக்கும் அதாவுள்ளவோ ஹிஸ்புல்லாவோ விடமாட்டார்கள் ......ஆயினும் அரசுடன் பேரம் பேச முடியும். முஸ்லிம்களின் பல தேவைகளை ..அதட்கு மக்களின் ஆதரவு எந்த அளவு கிடைக்கும் என்பதும் கேள்விக்குறி .... முஸ்லிம் முதலமைச்சு பெறக்கூடிய ய சந்தர்பம் சென்ற மாகான சபை தேர்தலே ..இந்த முறை முஸ்லிம் முதலமைச்சு என்பதும் பகல் கனவாகவே இருக்கும்..
    ITK உடன் சேர்ந்தால்
    1..சுழட்சி முறையில் கிடைக்கும் முதலமைச்சு 2வருடமாகத்தான் இருக்கும் அது எந்த விதத்தில் பயனுள்ளதாக இருக்கும் கிழக்கு மக்களுக்கு???
    2..ஆளும் அரசாங்கம் கிழக்குக்கு வரும் நிதிகளையும் அபிவிருத்திகளயும் முடக்கும் ..... இதனால் பாதிக்கப் படுவது மக்களும் எமது கட்சியும் தான்.........

    ஆக கடைசில 2தோனிள்ள கால் வைத்த கதைதான் வந்து சேரும்........

    வரலாற்றில் முஸ்லிம் முதலமைச்சு என்று ஒன்று பதியப் படும் .வரலாற்றில் இடம் பிடிப்பதால் ஒன்றும் சாதித்து விட முடியாது...
    அல்லாஹ் நாடினா என்றோ ஒருநாள் எமது கட்சியன் பேர் கிழக்கில் எழுதப் படும் ...மக்கள் தெளிவாகாதே பட்சத்தில் அதுவும் இடம்பெறும் என்பது கனவே .............

    தலைவர் ஹக்கீம் துறைமுகம் கேட்டாத்தான் உங்களுக்கு என்ன பாதுகாப்பு கேட்டாத்தான் உங்களுக்கு என்ன அரசியல்ன என்னனு தெரிந்துக்கொங்க அப்போ விளங்கும்... பேரம் பேசுரனா அப்புடித்தான் பேசுவாங்க அத நீங்க கண்டுக்க தேவ இல்ல ....அதாவுல்லாவ அமைச்சுப் பதவினை விட்டு விட்டு ஒருதடவ வெளிய வந்து சமூகத்துக்காக முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்க சொல்லுங்க அப்போ நீங்க எல்லோரையும் சொல்றத கேட்குறோம் ..உன்கும்மா உம்மா என்கும்மா சும்மாவா ங்குற கதவாக்குல இல்ல உங்க இருக்கு..... அவங்க அமைச்சுப் பதவிக்கு ஓட்டிட்டு இருக்குறப்போ நாங்க எவ்வளவு ஆட்டம் போடணும்....பொய் சூ பென்ச்சிட்டு படுங்க நாங்க எந்தப் பக்கம்னு சொல்ற வரைக்கும்............

    ReplyDelete

المشاركات الشائعة