எகிப்து ஆயுதப் படைகளைச் சேர்ந்த 70 ஜெனரல்களுக்கு அந்நாட்டு அரசு ஓய்வு அளித்துள்ளது. ஜனாதிபதி மொஹமட் முர்சி, பலம்வாய்ந்த பாதுகாப்பு மற்றும் இராணுவ கவுன்ஸில் தலைவருக்கு ஓய்வுவழங்கி ஒரு சில வாரங்களிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆயுதப் படைகளின் உயர் மட்ட குழுவான இராணுவ கவுன்ஸிலின் 6 ஜெனரல்கள் தமது பதவியை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
இதில் ஜனாதிபதி முர்சி, எகிப்தில் தொடரும் அதிகார போட்டியில் இராணுவத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர். ஜனாதிபதி முர்சியால் கடந்த மாதம் நியமிக்கப்பட்ட புதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் அப்துல் பதாஹ் அல் சிசி இந்த ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.
No comments:
Post a Comment