Search This Blog

Apr 30, 2011

குவாண்டனாமோ சிறையில் அப்பாவிகள் சித்திரவதை


சிறைக்கைதிகளை சித்திரவதை செய்வதில் உலகப் புகழ் பெற்ற குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரில் பெரும்பாலானோர் நிரபராதிகள் என்பது அமெரிக்காவிற்கு தெரியும் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் அமெரிக்கா 780 பேரை சிறையிலடைத்து சித்தரவதைக்குள்ளாக்கி வருகிறது. இவர்களில் 220 பேரை ஆபத்தானவர்கள் என்ற பட்டியலிலும், 150 பேரை நிரபராதிகள் என்ற பட்டியலிலும் அமெரிக்கா உட்படுத்தியுள்ளது. 380க்கும் மேற்பட்டவர்கள் சாதாரண போராளிகள் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஏறத்தாழ 759 கேபிள் ஆவணங்களை விக்கிலீக்ஸ் மூலம் கார்டியன் மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. இரகசிய ஆவணங்கள் கசிந்தது துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்த பெண்டகன் தீவிரவாதத்திற்கு எதிரான முயற்சிகளில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
குவாண்டனாமோவில் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை சித்திரவதை செய்யும் முறைகளைக் குறித்தும், விசாரணை நடத்தும் வழிமுறைகளைக் குறித்தும் சிறிய விபரங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன குவாண்டனாமோவில் நிரபராதிகளை அமெரிக்கா மிக மோசமாக சித்திரவதை செய்கிறது என குற்றச்சாட்டுகள் ஏற்கனவே எழுந்துள்ளன.
ஆனால், முதன் முதலாக இந்த சித்திரவதைகள் குறித்து, நிரபராதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்தும் அமெரிக்காவிற்கு நன்றாக தெரியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குவாண்டனாமோ சிறையில் தற்பொழுது 172 பேர்கள் மட்டுமே அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 100 பேர் அளவில் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனா. 33 பேர் வோர் கிரிமினல் குற்றங்களுக்காக விசாரிக்கப்படுகிறார்கள். 48பேர் எந்தவித விசாரணைகள் ஏதுமின்றி நிரந்தரமாகவே குவாண்டனாமோ சிறையில் தங்கவைக்கப்படவுள்ளனர்.

Apr 28, 2011

மஸ்ஜித்துகள் முன்பாக பெரஹரா எவ்வாறு செல்லும் ?


மஸ்ஜிதுகள் முன்பாக பெளத்த மத ஊர்வலமான பெரஹரா செல்லும்போது பறை,மேளம் அடித்தும் குழல் ஊதியும் செல்வது தொடர்பாக முஸ்லிம்களின் கருத்தை அறிவதற்கான கூட்டம் திக்குவல்லை வெவுருகன்னல ரஜமஹா விகாரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது .
இங்கு உரையாற்றிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும பெரஹரா பொது வீதியால் செல்லும் போது எவரது அனுமதியையும் பெறத் தேவையில்லை. மகிந்த சிந்தனையின் கீழ் சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள மதவழிபாட்டுத் தலங்களின் முன்பாக பெரஹரா செல்வது தொடர்பாக அவர்களின் கருத்துக்களை அறியவேண்டியுள்ளது என்றும் அதன்காரணமாக திக்குவல்லை பகுதியில் முஸ்லிம்களின் கருத்துக்களை அறிவதற்காக இக்கூட்டத்தை நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அங்கு பலரும் தமது கருத்துகளை தெரிவித்துள்ளனர் அங்கு கருத்துரைத்துள்ள தென்மாகாண மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் சமானுதீன் 1915 ஆம் ஆண்டு கண்டியில் பள்ளிவாசல் முன்பாக பெரஹரா ஊர்வலம் மேளம் அடித்துச் சென்றதால்தான் சிங்கள,முஸ்லிம் கலவரம் ஏற்பட்டது. அதன் பின்னர் நாட்டில் ஒரு மதத்தினரின் வழிபாட்டுத் தலத்துக்கு முன்பாக வேறு மதத்தினரின் ஊர்வலம் வரும்போது சத்தம் இட்டு வருவதில்லை என்று தெரிவித்துள்ளார்
அத்போன்று திக்குவல்லை மின்ஹாத் தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.எச்.எம்.நியமதுல்லாஹ் கருத்துரைக்கையில்நீண்டகாலமாகவே சிங்களவர்களும் முஸ்லிம்களும் சகோதரர்களாகவும் ஐக்கியமாகவும் புரிந்துணர்வுடனும் வாழ்ந்து வருகின்றனர். எனவே இதில் களங்கம் ஏற்படுத்துவதற்கு எவராலும் முடியாது.
நீண்டகாலமாகவே பெரஹரா பள்ளிவாசல் முன்பாகச் செல்லும் போது பறை,மேளம் அடிப்பதில்லை. இந்த நடவடிக்கை பள்ளிவாசலுக்கும் முஸ்லிம்களுக்கும் செய்யும் மரியாதையும் கௌரவமுமாகும். இது குறித்து திக்குவல்லை முஸ்லிம்கள், முஸ்லிம் மதப் பிரமுகர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடிய பின்னரே எமது அபிப்பிராயத்தைத் தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக கண்டி மஸ்ஜிதுக்களின் நிர்வாக சபைகள் , கண்டி மாவட்ட ஜம்மியதுல் உலமா ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

கிண்ணியா ஆதார வைத்தியசாலை புறக்கணிக்கப்பட்டுள்ளதா ?


கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் போதாமையால் பொதுமக்கள் சுகாதார சேவைகளை பெறமுடியாது பெரும் அவதியுறுவதாக சுட்டிகா ட்டப்பட்டுகிறது. 80 ஆயிரம் வரையான மக்கள் வாழ்கின்ற கிண்ணியாவின் ஆதார வைத்தியசாலையில் 8 வைத்தியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர் இந்த வைத்தியர்களுக்குத் 32 டாக்டர்கள் தேவை உள்ளபோதும் . நீண்ட காலமாக இவ் வெற்றிடங்கள் நிரப்பப் படாமலேயே காலம் கடத்தப்படுவதாகவும் இதனால் பொது மக்கள் பெருஞ் சிரமங்களை அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை 55 ஆயிரம் மக்களைக் கொண்ட தெஹியத்த கண்டியவின் வைத்தியசாலையில் 85 வைத்தியர்களும், 46 ஆயிரம் மக்களைக் கொண்ட கந்தளாய் வைத்தியசாலையில் 65 வைத்தியர்களும் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது விரிவாக   கிண்ணியாவின் ஆதார வைத்தியசாலையில் 8 வைத்தியர்களே வெளிநோயாளர் பிரிவு, வாட் சுற்று , சத்திர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு என எல்லாப் பகுதிகளையும் கவனிக்க வேண்டிய நிலையில் டாக்டர்களும் பெரிதும் கஷ்டங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கபடுகின்றது

‘படை முகாம்களில் வதிவிட பயிற்சி; முஸ்லிம் மாணவிகளுக்கு பிரச்சினை’


2011ஆம் கல்வி ஆண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ள மாணவர்களுக்காக உயர்கல்வி அமைச்சு முப்படைகளின் நெறிப்படுத்தலின் கீழ் படை முகாம்களில் நடத்தப்படவுள்ள மூன்று வார வதிவிட தலைமைத்துவ பயிற்சிநெறி கலாசார ரீதியில் முஸ்லிம் மாணவிகளுக்கு பல்வேறு பிரச்சiனைகளை ஏற்படுத்தும் என மாற்றுக் கொள்கைக்கான பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் சஹ்பி எச். இஸ்மாயில் தெரிவித்தார்.
தமது கலாசாரத்தை இறுக்கமாக பின்பற்றும் முஸ்லிம் பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகளை இவ்வாறான பயிற்சி நெறியை தொடர்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என அவர் குறிப்பிட்டார்.
இத்தலைமைத்துவ பயிற்சிநெறி அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதனால் முஸ்லிம் மாணவிகள் தமது பல்கலைக்கழக கல்வியை கைவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என சஹ்பி எச். இஸ்மாயில் கூறினார்.
எனவே, முஸ்லிம்களின் கலாசாரத்தை கவனத்திற் கொண்டு குறித்த தலைமைத்துவ பயிற்சிநெறியிலிருந்து முஸ்லிம் மாணவிகளுக்கு விதிவிலக்கு அளிக்குமாறு மாற்றுக் கொள்கைக்கான பல்கலைக்கழக மாணவர் சங்கம் உயர்கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.-தமிழ் மிரர் றிப்தி அலி

Apr 23, 2011

பிரான்சின் பெண் உரிமை மீறலை எதிர்த்து புத்தளத்தில் கண்டன கூட்டம்


பிரான்சில் முஸ்லிம் பெண்களின் உடை உரிமைகளை மறுக்கும் சட்டத்துக்கும் , முகத்தை மூடி உடையணிந்தால் அந்த பெண்களை குற்றவாளியாக பார்க்கும் அரச சட்டத்தையும் எதிர்த்து இன்று புத்தளத்தில் பெண்கள் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்த கூட்டமும் அமைதி எதிர்ப்பும் இடம்பெற்றுள்ளது என்று எமது lankamuslim.org செய்தியாளர் தெரிவிக்கின்றார்

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி உடையணிவது கடமை என்ற நிலை இல்லாதபோதும் பலர் விரும்பி அதை அணியும் போது அதை தடுப்பதும் அதை சட்ட படி குற்றமாக சட்டம் அமுல்படுத்துவதும் அவர்களை குற்றவாளிகளாக கையாண்டு சிறையில் அடைப்பதும், நடு வீதில் வைத்து அவர்களின் உடையை அகற்றுவதும் பெண்கள் மீதான அப்பட்டமான உரிமை மீறல் என்பதற்கும் மேலாக முஸ்லிம் பெண்கள் மீதான பயங்கரவாதம் என்று அமைதி ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர் விரிவாக
அந்த கூட்டமும் அமைதி எதிர்ப்பும் புத்தளம் முஸ்லிம் கலாச்சார மண்டபத்தில் இன்று மாலை 4:30 அளவில் இடம்பெற்றுள்ளது  புத்தளம் அன்பா பெண்கள் அமைப்பின் தலைவி சித்தி சலீமா தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம் பெற்றதாகவும் கூட்டத்தில் புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் மற்றும் முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இல்யாஸ் ஆகியோரும் கலந்து கொண்டார் என்று அறிய முடிகின்றது என்று எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்
கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் பிரான்ஸ் நிகாப் உடைக்கு தடை விதித்துள்ளது பிரான்ஸில் அலுவலகங்களில் நிகாப்பை மற்றும் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் அணியும் ஹிஜாப் போன்ற இஸ்லாமிய உடைகளை தடை செய்யும் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது அந்த சட்டத்தை மேலும் விரிவாகியுள்ள பிரான்ஸ் அனைத்து பொது இடங்களிலும் நிகாப்பை -முகத்தை மூடி அணியும் உடை- அணிவதை தடை செய்யும் சட்டம் ஒன்றை அமுல் படுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.
பிரான்ஸ் நிகாப் உடைக்கு தடை சட்டம் முதல் நாள் :

குஜராத் படுகொலை : “துணைநின்றார் மோடி”


குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி, கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரத்துக்கு துணை நின்றதாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சஞ்சீவ் பட் என்ற அந்த அதிகாரி, கோத்ரா கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட எஸ்.ஐ.டி. எனப்படும் சிறப்புப் புலனாய்வுக் குழு மீது நம்பிக்கையில்லாத காரணத்தால்தான் தான் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார் -இந்த திட்ட மிட்ட பயங்கரவாத படுகொலைக்கு சுமார் 3000 தொடக்கம் 5000 வரையான முஸ்லிம்கள் கொல்லபட்டுள்ளனர் .
கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ராவில் நடந்த கலவரம் தொடர்பாக முதலமைச்சர் மோடியின் வீட்டில் நடந்த கூட்டத்தில், உளவுத்துறை அதிகாரி என்ற முறையில் தானும் கலந்துகொண்டதாக சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.
குஜராத்தில் மதக்கலவரங்களைக் கையாள்வதைப் பொறுத்தவரை, குஜராத் போலீசார் நடுநிலையோடு செயல்பட்டு வருகிறார்கள். இந்த முறை முஸ்லிம்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று போலீஸ் அதிகாரிகளிடம் நரேந்திர மோடி அறிவுறுத்தியதாக சஞ்சீவ் பட் தனது மனுவில் புகார் கூறியுள்ளார்.
இந்துக்கள் அச்சமயம் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதால், அவர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதை அனுமதிக்க வேண்டும் என்றும் மோடி கூறியதாக சஞ்சீவ் பட் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் உத்தரவை உயர் போலீஸ் அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றியதாகவும் பட் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஆமதாபாத் கொண்டுவருவதும், விசுவ ஹிந்து பரிஷத் திட்டமிட்ட கடையடைப்புப் போராட்டத்துக்கு பாஜக ஆதரவளிப்பதும் ஆமதாபாத்திலும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கலவரத்துக்கு வழிவகுக்கும் என்றும் அதை சமாளிக்கும் அளவுக்கு போலீஸ் பலம் இல்லை என்றும் மோடிக்கு அறிவுரை கூறியபோதிலும், அவர் அதை நிராகரித்துவிட்டதாக பட் கூறியுள்ளார்.
மேலும் கோத்ராவில் கரசேவகர்களைக் கொல்வதைப் போன்ற நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மோடி கூறியதாக போலீஸ் அதிகாரி தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த விவரங்களை கடந்த 2009-ம் ஆண்டு நடந்த விசாரணையின்போது, சிறப்புப் புலனாய்வுக் குழுவுடன் தான் பகிர்ந்து கொண்டதாகவும், ஆனால் அந்தத் தகவல்களின் அடிப்படையில் மோடி மற்றும் அவரது அமைச்சர்களுக்கு கலவரத்தில் உள்ள தொடர்பு குறித்து ஆராயாமல், சிறப்புப் புலனாய்வுக்குழு தனது கருத்துக்களைப் புறந்தள்ளிவிட்டதாக சஞ்சீவ் பட் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, உண்மையை மறைக்க முயன்றதே தவிர, கோத்ரா கலவரத்தின் பின்னணியில் உள்ள சதியை வெளிச்சத்துக்குக் ண்டுவரத் தயாராக இல்லை. அதனால், அந்தக் குழுவின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டேன் என்று சஞ்சீவ் பட் கூறியுள்ளார் -தகவல்  BBC

Apr 21, 2011

ஜெருசலத்தின் கீழ் தோண்டப்பட்டுள்ள சுரங்கங்களை இஸ்ரேல் ஒன்றாக இணைக்கின்றது


இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு ஜெருசலம் பிரதேசத்துக்கு கீழாக கடந்த 40 ஆண்டுகளாக பலஸ்தீனர்களின் குடியிருப்புக்கள் , மஸ்ஜிதுகள்போன்ற வற்றுக்கு கீழால் நிலத்தை அகழ்ந்து வருகின்றது இதுவரை அகழபட்டுள்ள சுரங்கங்களை ஒன்றாக இணைத்து ஒரு சுரங்க வலையமைப்பை ஒன்றை துறக்க தற்போது  ஏற்பாடுகளை செய்து வருகின்றது.
இந்த சட்டவிரோத நிலஅகழ்வு மஸ்ஜிதுல் அக்ஸா பகுதியையும் விட்டுவைக்கவில்லை இந்த அகழ்வினால் மஸ்ஜிதுல் அக்ஸா பகுதியில் ஆபத்தான நில வெடிப்புகளும் குழிகளும் ஏற்பட்டு வருகின்றது தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு மஸ்ஜிதுல் அக்ஸாவின் அருகிலும் 65 மற்றும் 22 மீட்டர் அகலம் கொண்ட இரு நிலச் சுரங்க வழிகளை இஸ்ரேல் ஏற்கனவே அகழ்ந்துள்ளது.
அந்த வழிகளினூடாக அல்ஷரப் மாவட்டத்தை அல்புர்கா சதுக்கத்துடனும், அக்ஸா மஸ்ஜிதின் அல்மகர்பா வாயிலுடன் மற்றும் ஏனைய சுரங்க பாதைகளையும் இணைக்கவும் கடந்த 40 வருடங்களாக ஜெருசலம் பிரதேசத்தில் தோன்றியுள்ள சுரங்க பாதைகளை ஒன்றாக இணைக்கும் முயற்சியை தற்போது இஸ்ரேல ஆக்கிரமிப்பு அரசு தொடங்கியுள்ளது
இந்த அகழ்வுகள் முயற்சிகள், குடியேற்ற நகரசபை, யூத தாயக பாதுகாப்பு அபிவிருத்தி நிறுவனம், தொல்பொருள் ஆராய்ச்சி அதிகார சபை, மற்றும் தேசிய காப்புறுதி நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடனும், யூத பயங்கரவாத அமைப்பான பரூச் க்லெய்னின் நிதியுதவியுடனும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கைகளை இஸ்லாமிய கல்வியியல், அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (ISESCO) உட்பட பல பொது அமைப்புகள வன்மையாகக் கண்டித்து வந்துள்ளது இஸ்ரேல் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணரான Yoram Tseverir மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு அடியில் அகழ்வது தவறானது என்று குறிபிட்டுள்ளார்.

ஐ. நா. நல்லிணக்க செயற்பாட்டை குழப்பக் கூடாது: ரஷ்ய தூதுவர்


நீண்ட கால மோதலினால் ஏற்பட்ட காயங்களை இலங்கை தேற்றி வரும் இச்சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகள் சபையானது தேவையேற்படின் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டு மேயொழிய இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்கச் செயற்பாடுகளை குழப்பாமலிருப்பதே சிறந்ததென தாங்கள் நம்புவதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விலடிமிர் பி. மிக்கைலொவ் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை கடந்த வாரம் ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டு ள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக ரஷ்ய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்திருப்ப தாவது :-
நிபுணர்கள் குழு சமர்ப்பித்திருக்கும் இவ்வறிக்கையை ஐ. நா. அறிக்கையென கூற முடியாது. இதனை ஐ. நா.வின் எந்தவொரு அமைப்பினரோ அல்லது அதன் வேண்டுகோளுக்கு இணங்கவோ தயாரிக்கப்பட்டதல்ல. இது ஐ. நா. செயலாளர் நாயகத்தின் தனிப்பட்ட விருப்பத்தின் பெயரில் தயாரிக்கப்பட்டதொன்றாகும்.
நிபுணர் குழு தொடர்பாக ரஷ்ய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சு கடந்த வருடம் ஜூன் 24 இல் ஊடக அறிக்கையொன்றி னூடாக வெளியிட்டிருந்தது
ஐ. நா. தகவல்களை கொண்டு பார்க்கையில் இந்த நிபுணர் குழுவானது மனிதாபிமான சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுவது குறித்து ஆராய்ந்து அதன் செயலாளர் நாயத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட தேயொழிய அவை எவ்வாறு இடம்பெற்றன என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கல்ல.
இருப்பினும் தலைமைப் பதவி வகிப்பவர் எனும் வகையில் ஐ. நா. செயலாளர் நாயகம், இவ்விவகாரம் குறித்து பாதுகாப்புச் சபையிடமோ அல்லது பொதுச் சபையிடமோ கருத்து கேட்டிருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. அதனைத் தவிர இத்தீர்மானமானது இறைமையுடைய நாட்டினதும் இலங்கைக்கான ஐ. நா. தூதுவரினதும் நிலைப்பாட்டினையும் மீறி எடுக்கப்பட்டதாம்.
இதேவேளை நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழுவானது துரதிஷ்டவசமாக தனது எல்லைகளை மீறி செயற்பட்டுள்ளது. இதனை நியூயோர்க்கிலுள்ள எமது ஐ. நா. பிரதிநிதியும் உறுதிப்படுத்தியு ள்ளாரெனவும் அவர் கூறியுள்ளார்.

Apr 20, 2011

நில அதிர்வு ஆய்வு நடைபெறுகின்றது


ஹம்பாந்தோட்டை, கிரிந்த பிரதேசத்தில் நில அதிர்வு உணரப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்துள்ளார் . கிரிந்த, யால சந்திக்கு அருகில் சமகி மாவத்தையில் வசிக்கும் சிலர் நேற்று முன்தினமிரவு இரவு 10.10 மணி முதல் இரவு 10.15 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இரண்டொரு வினாடிகள் இந்த அதிர்வை உணர்ந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்ட இணைப்பாளர் எம்.ஜி.ஏ. நந்தன கூறியுள்ளார்.
இந்த அதிர்வு சுமார் ஐநூறு சதுர மீற்றர்கள் பரப்பில் தான் உணரப்பட்டுள்ளது. இதனால் 8 வீடுகளின் சுவர்களில் வெடிப்புக்களும், நிலத்தில் சிறு பிளவுகளும் ஏற்பட்டுள்ளன. அதில் ஒரு வீட்டின் கொங்ரீட்டும் இடிந்து விழுந்துள்ளது. இங்கு சில வீடுகளின் நிலத்தில் சுமார் 20 சென்றி மீற்றர்கள் நீளத்திற்கு சுமார் 6 மில்லி மீற்றர்கள் அகலத்திற்கு சிறு பிளவுகளும் ஏற்பட்டுள்ளன விரிவாக இச்சமயம் வீடுகளில் சில பொருட்கள் உருண்டு விழுந்ததையும், வீடுகளின் ஜன்னல்கள் ஆடியதையும் பிரதேச வாசிகள் உணர்ந்துள்ளனர் பூகம்பம் மற்றும் நில அதிர்வுகளை பதிவு செய்யும் இயந்திரங்களில் மேற்குறிப்பிட்ட நேரத்தில் எதுவுமே பதிவாகவில்லை என்றும் தொடர்பான மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளபடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாய்ந்தமருதில் கவர்ச்சி நடனம் அமைச்சர் திட்டினார்


சாய்ந்தமருதில் நடைபெற்ற இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் நிகழ்ச்சியொன்றின்போது கவர்ச்சி நடனங்கள் நடத்தப்பட்டமை குறித்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உத்தயோகஸ்தர்களை கடுமையாக திட்டியுள்ளார்.
அண்மையில், கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் கிழக்கு மாவட்ட நிலையம் என்பன இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.
இந் நிகழ்ச்சிக்காக வருகை தந்தவர்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் இடைக்கிடையில் கவர்ச்சியான உடையணிந்த யுவதிகளின் நடனங்களும் நடத்தப்பட்டன.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசத்தில் இவ்வாறான கவர்ச்சி நடனங்கள் நடத்தப்பட்டமை குறித்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனது அமைச்சு அதிகாரிகளை கடுமையாக திட்டியதாக அமைச்சரின் ஊடக செயலாளர் சட்டத்தரணி எவ்.எம். ஹென்ரிக்ஸ் இன்று தெரிவித்தார்.
“சாய்ந்தமருது பிரதேசம் பூரணமாக ஒரு முஸ்லிம் கிராமம். அத்துடன் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெரும்பாலானோர் முஸ்லிம்கள்; என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அங்கு முஸ்லிம்களின் கலாசாரத்திற்கு முரணான வகையில் நிகழ்ச்சி நடத்தியமை குறித்து தன் செயலாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களை திட்டினார்.
அத்துடன் இனிமேல் அமைச்சின் கீழ் நடைபெறும் எவ்வித வைபவங்களின் போது நாட்டின் கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுமாறும் உத்தரவிட்டார். அமைச்சரின் இந்த உத்தரவு குறித்து அப்பிரதேசத்தின் முஸ்லிம் தலைவர்கள் பலர் பாராட்டு தெரிவித்தனர் எனவும்” அவர் குறிப்பிட்டார்.- தகவல் தமிழ் மிரர்

யாழ் மீள்குடியேற்றம் இஸ்லாமிய மீள்குடியேற்றமாக அமைய வேண்டும்


கடந்த ஞாயிற்று கிழமை லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது என்று லண்டனில் இருந்து அலி ரிஸான் lankamuslim.org க்கு தெரிவித்துள்ளார் 20 ஆண்டுகளின் பின்  தாயக மண்ணில் குடியேறுவதில் ஏற்படும் சவால்கள் , பிரச்சினைகள் அவற்றை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் மற்றும் வெளிநாடுகளில் குறிப்பாக பிரிட்டனில் வாழும் யாழ் முஸ்லிம்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்புகள் தொடர்பான அந்த கலந்துரையாடலுக்கு பிரதம அதீதியாக யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி எம் .எம் .எம் ரமீஸ் கலந்து கொண்டுள்ளார்.
 இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து ஏற்பாடுகளையும் லண்டன் யாழ்ப்பாண முஸ்லிம் அசோசியேசன்- Jaffna Muslim Association- மேற்கொண்டுள்ளது யாழ்ப்பாண முஸ்லிம் அசோசியேசன் செயலாளர் பாசில் தலைமயில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர்  விரிவாக  ரமீஸ் 9000ஆயிரம் யாழ் முஸ்லிம் குடும்பங்கள் புத்தளம் , நீர் கொழும்பு, கொழுப்பு ஆகிய பிரதேசங்களில் செறிந்து வாழ்வதாகவும் இவர்களில் 400 குடும்பங்கள் மட்டும் தற்போது மீள் குடியேறி யுள்ளதாகவும் மீள் குடியேற்றம் சவால் நிறைந்ததாக உள்ளதாகவும் முஸ்லிம் வர்த்தகர்களின் உதவியால் இதுவரை 35 வீடுகள் கட்டப்பட்டும் மேலும் பல வீடுகள் திருத்தபட்டும் உள்ளதாகவும் மீள் குடியேற்றதுக்கு அரசு உதவிகளை செய்யவில்லை என்றும் அரசு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொண்டாலும் அவை நேரடியாக யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு உதவவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் வெறும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றமாக இருக்கக்கூடாது அது இஸ்லாமிய மீள்குடியேற்றமாக அமைய வேண்டும் மீள் குடியேற்றத்துக்கு உதவுவது வாஜிப் என்றும் தெரிவித்துள்ளார் மேலும் அவர் உரையாற்று கையில் யாழ்ப்பாணத்திலும் அதற்கு வெளியிலும் இயங்கும் 13 அமைப்புகளை கொண்ட கூட்டமைப்பு ஒன்று உருவாக்கபட்டுள்ளதால் அதன் ஊடாக பல சாதகமான விடையங்கள் மேற்கொள்ளபடுவதாகவும்  யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் உடனடியாக இடம்பெறும் என்பதை எதிர்பார்க்க முடியாது என்றும் கடந்த 20 வருடங்களாக வேறு பிரதேசங்களில் வாழந்து வருபவர்கள் உடனடியாக மீள் குடியேற வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது ஆனால் அதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் இடம்பெறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி லண்டன் லூட்டன் பகுதியிலும் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது
யாழ்பாணத்தில் 20 ற்கும் அதிகமான மஸ்ஜிதுகளும் பல பாடசாலைகளும் உள்ளது எனினும் சில மஸ்ஜிதுகளும் ஒரு பாடசாலையும் மட்டும் இயங்கும் நிலையில் உள்ளது முஸ்லிம் சமூகம் தான் இழந்த பூமியை மீட்பதும் அதனை மீண்டும் இயக்குவதும் இஸ்லாம் போதிக்கும் முக்கிய கடமைகளில் ஒன்றாகும் என்பதும் முஸ்லிம் சமூகம் தனது இருப்பை இஸ்திரப்டுத்த தேவையான மக்கள் தொகையுடன் மீள் குடியேறவேண்டும் என்பதும் தற்போது இருக்கும் பிரதேசங்களும் பாதுகாக்க பட்டதாக இருக்கவேண்டும் என்பது இஸ்லாம் வலியுறுத்தும் கடமையாகும்.
யாழ்பாணத்தில் தற்போது வர்த்தகத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களை விடவும் அதிகமான எண்ணிக்கையில் வெளி மாவட்ட முஸ்லிம்கள் குறிப்பாக அக்குரணை, கண்டி , காத்தான்குடி , கல்முனை முஸ்லிம் வர்த்தகர்கள் வெற்றிகரமான வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது சிறப்பம்சமாகும்.

Apr 19, 2011

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தேர்தல் ஆணையாளர் சந்திப்பு


வன்னி மாவட்டத்தில் மன்னார், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, இடம்பெயர்ந்து புத்தளத்தை அண்டிய பிரதேசங்களிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும்  வசிக்கும் மக்கள் மீண்டும் தங்கள் முன்னைய வசிப்பிடங்களில் தேர்தல் இடாப்புகளில் தமது பெயர்களை பதிவு செய்து கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு உரிய தீர்வுகளை காணும் முகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியின் பிரதிநிதிகள் நேற்று திங்கட்கிழமை தேர்தல் ஆணையாளர் திரு மஹிந்த தேசப்பிரியவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாரூக், பிரதித்தலைவர் பாரூக் மஜீத், அரசியல் பீட உறுப்பினர் சட்டத்தரணி மில்ஹான், முல்லைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பீட உறுப்பினர் நஜாத் ஆகியோரும் இடம்பெற்றனர்.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களின் மேன்முறையீடுகளை சீர்தூக்கி பார்க்குமாறு தாம் விடுத்த வேண்டுகோளை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக் கொண்டதாக கூறிய நீதியமைச்சர் ஹக்கீம், பல பெயர்கள் தேர்தல் இடாப்புகளில் இருந்து நீக்கப்படுகின்ற நிலைமை தோன்றுகின்ற சூழ்நிலையில் அதுபற்றி மீள் பரிசீலனை செய்யுமாறு தாம் விடுத்த வேண்டுகோளையும் கவனத்திற் கொள்வதாக அவர் உறுதியளித்துள்ளார்.
வாக்காளர் இடாப்பில் பெயர் நீக்கப்பட்ட வர்களின் பெயர்களை மீண்டும் சேர்ப்பதற்காக குறிப்பிட்ட சில தினங்களை அதற்காக ஒதுக்கி விசாரணை மேற்கொள்ளவும் தேர்தல் ஆணையாளர் இணக்கம் தெரிவித் திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
அதேநேரம் ஏற்கனவே மன்னாருக்கு வந்து உரிய விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின்னர் தமது வசிப்பிடத்தை சரிவர உறுதிப்படுத்துவதற்கு தேவையான போதிய ஆவணங்கள் இல்லாத கார ணத்தால் தமது பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் அங்கு சென்று விசாரணைக்கு தோற்றுவது அவசியமில்லை என்றும், கிராம சேவை அலுவலர்களை கொண்டு அத்தகையோரின் பெயர்களை அத்தாட்சிப் படுத்திக் கொள்ள முடியும் என்றும் தேர்தல் ஆணையாளர் அங்கீகாரம் அளித் ததாகவும் அமைச்சர் கூறினார்.
அந்த அடிப்படையில் 2010ம் ஆண்டு தேர்தல் இடாப்பில் தமது பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் உள்வாங்கப் படுவதற்கு ஓரளவு வாய்ப்பு ஏற்பட்டுள்ள போதிலும், இதே நியதி அடுத்தடுத்த தேர்தல்களிலும் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நியதி இருக்கின்ற காரணத்தினால் எல்லா பிரதான அரசியல் கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகளை அழைத்து, இனி மேல் இதனை எவ்வாறு கையாளலாம் என்பது குறித்து விரைவில் ஒரு பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தேர்தல் ஆணை யாளர் முன்வந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வன்னியில் தேர்தல் இடாப்புகளில் பெயர்களை பதிவு செய்து கொண்ட பின்னர் அங்கு நிரந்தரமாக பிரசன்னமாயிராது தொழில் போன்ற காரணங்களின் நிமித் தம் வேறு மாவட்டங்களில் வசிக்கும் அப்பகுதி மக்கள் தமது வாக்குகளை வன்னி தேர்தல் மாவட்டத்தில் செலுத்துவதற்கு முடியும் எனவும் தேர்தல் ஆணையாளர் கூறினார்.
வன்னி மாவட்ட தேர்தல் இடாப்புகளில் பெயர்களை பதிவு செய்து கொள்வதில் தலைதூக்கியுள்ள சிக்கல்களை சீர்செய்து கொள்ளும் நோக்கத்தில் தாம் பிரதி தேர்தல் ஆணையாளர் முஹம்மது அவர் களை அங்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் மன்னார், உதவித் தேர்தல் ஆணையாளர் கருணாநிதி, புத்தளம் உதவித் தேர்தல் ஆணையாளர் நபீல் ஆகியோருக்கு அது தொடர்பாக உரிய பணிப்புரை விடுத் திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
-தினகரன்

Apr 18, 2011

காத்தான்குடியில் அரபுமொழி: BBC



இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியின் நகர சபையின் ஆளுமைக்கு உட்பட்ட வீதிகள் மற்றும் ஒழுங்கைகளின் பெயர்ப் பலகைகளில் “அரபு “மொழிக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நூறு வீதம் முஸ்லிம்கள் மட்டும் வாழும் பிரதேசம் காத்தான்குடி பிரதேசமாகும்.
தமது பிரதேசத்திற்கு தப்லீக் ஜமாத் மற்றும் தஹ்வா அமைப்புகள் என வருகை தரும் அரபியர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாகவும், வீதிகளை இலகுவாக அவர்கள் அடையாளம் காண்பதற்காகவே சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளுக்கு மேலதிகமாக நான்காவது மொழியாக அரபு மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக நகர சபையின் தலைவர் எஸ்.எச்.மொகமட் அஸ்பர் கூறுகின்றார்.
இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படாத மொழியொன்று பெயர்ப் பலகையில் இடம் பெற்றிருப்பதை சர்ச்சைக்குரிய விடயமாக தான் கருதவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
நான்காவது மொழியாக அரபு மொழி இடம்பெறுவதற்காக மத்திய மற்றும் மாகாண உள்ளுராட்சி அமைச்சுகளிடமிருந்து எவ்வித அனுமதியையும் தான் கோரவில்லை என்றும் நகரசபைத் தலைவருக்குரிய அதிகாரத்தை தான் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கும் அவர், காத்தான்குடி நுழைவாயிலில் அமைந்திருந்த வரவேற்பு வளைவில் கூட ஏற்கனவே அரபு மொழிக்கும் இடமளிக்கப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.-BBC

சோனகர் என்றோர் இனமுண்டு!

என் அம்மாவின் இயற்பெயர் “நாச்சியா(ர்)”, என்ன அழகான தமிழ் பெயர்? “தலைவி” என்ற பொருள்பட அப்படி இடப்பட்டதாம். பெயரை மாத்திரம் பார்த்து இது சுத்த தமிழ்பெயர் எனவே இவர் இப்போது இல்லாவிட்டாலும் இவரின் பரம்பரை தமிழர் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று இனம் பிரிக்கும் தன்மை தமிழரிடையே காணப்படுவது கண்கூடு. இந்த அடிப்படையில்தான் இரண்டாம் புவனேகபாகுவின் வாரிசு “கலே பண்டார” அல்லது ” வத்ஹிமி” என்பவனின் பெயரை வைத்து அவன் சிங்களவன் என்ற முடிவுக்கு வருவதும் பிழையாகிவிடும். ஏனெனில் அந்த அரசன் “சோனகர்” இனத்தை சேர்ந்தவன். இப்படியாக அடிப்படை விடயங்களில் தெளிவில்லாமல் குழப்பங்களுக்கு மத்தியில் அரைத்த மாவை மீண்டும் மீண்டும் அரைப்பது போல இந்த சர்ச்சைக் குரிய “சோனகர்” இனம் பற்றி மிண்டும் பேச வேண்டியுள்ளதாக தேசம்நெற் கருதுவதால் மிண்டும் உங்களோடு.



இந்த சோனகர் என்ற வரையறைக்குள் வருபவர்கள் அனேகமா “இஸ்லாம்” என்ற சமயத்தை பின்பற்றுவதால், அவர்கள் சமய அடிப்படையில் “முஸ்லிம்” என்ற பெயரையும் பெறுகின்றனர். இந்த முஸ்லிம் என்ற வார்த்தை எல்லைகள், மொழிகள், கலாச்சாரங்களை கடந்த பெயர். அதாவது யார் இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றுகிறார்களோ அவர்களைக் குறிக்கும் சொல். அவர் எங்கு இருக்கிறார், என்ன மொழி பேசுகிறார், என்ன நிறத்தையுடையவர் என்ற கேள்விகளை எல்லாம் தாண்டிய ஒரு அடையாளம். ஆனாலும் இலங்கையை பொறுத்தவரை தெரிந்தோ தெரியாமலோ இதுதான் அது, ஆகவே அதுதான் இது என்ற ஒரு குழப்பத்துக்குள் தமிழர் மாத்திரமல்ல, இந்த சோனகரும் மூழ்கிவிட்டனர்.

இனம் என்பது மொழிவாரியாகத்தான் இருக்க வேண்டும் என்று பலர் வாதிட்டாலும் இனத்துக்கான வரைவிலக்கணம் “ஒரு சமயத்தை பின்பற்றும் அல்லது குறிப்பிட்ட கலாச்சார தன்மைகளை கொண்டுள்ளோரும் கூட தனியான இனமாக வகைப்படுத்தப்படலாம் ” என்கிறது. ஆகவே சமய ரீதியில் முஸ்லிம்கள் என்போர் “தனியான இனம்” என்று வாதிடுவதற்கு இது வழிவகுக்கின்றது. ஆனால் உலகலாவிய ரீதியில் “முஸ்லிம்” என்பவர் ஒரு இனமாக பார்க்கப்படாமையால் இலங்கையில் மாத்திரம் அப்படி பார்க்கப்பட வேண்டும் என்பது பல சிக்கல்களை அரசியல் ரீதியில் உருவாக்கக் கூடியது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
மனிதன் இயற்கையாகவே இப்படியான வேறுபட்ட அடையாளங்களை கொண்டிருக்கும் போது அவனை ஒற்றை சொலுக்குள் அடக்குவது, பாரதியாரின் ஆண், பெண் தவிர இனங்கள் வேறெதுவுமிலலை என்ற நிலைப்பாட்டை ஒத்ததாகும். ஆனால் நடைமுறையில் காரியங்கள் அப்படி நடந்தேறுவதுமில்லை. மனிதன் ஒரு சமூக பிராணி என்பதால் சமூக வாழ்வியல் சூழலில் அவனுக்கு பல அடையாளங்கள் தேவைப்படுகிறன அல்லது அப்படியான அடையாளகள் தேவைகருதி கொடுக்கப்படுகிறன. இந்த அடிப்படையில் சமயம் சார்ந்த அடையாளமாக “முஸ்லீம்” அல்லது “இஸ்லாமியர்” என்ற போதிலும் எமக்கு இன்னும் பல அடையாளங்கள் தேவைப்படுகிறன. அதில் முக்கியமானது “இலங்கையர்” என்பது.

இந்த இலங்கையர் என்ற பதப் பிரயோகம் “அமெரிக்கர்” என்ற பதப் பிரயோகத்தின் தன்மையை ஒத்தல்ல. எழுதப்படாத பல கட்டுப்பாடுகள், சட்டங்கள் மறைமுகமாகவும், சிலவேளை வெளிப்படையாகவும் நடைமுறைப் படுத்தப்பட்டாலும் அரம்பத்தில் அடிமைகளாக அமெரிக்காவுக்குள் கொண்டுவரப்பட்ட கறுப்பினத்தவன், கலப்பினத்தவன் அமெரிக்க ஜனாதிபதியாக முடியுமாய் இருப்பது ஒருவகை அமெரிக்க தன்மை(Americanism) எனலாம். அத்தகைய வாய்ப்பு வசதிகளோ, அரசியலமைப்பு ஏற்பாடுகளோ, வளர்ச்சியடந்த சிந்தனை போக்குகளோ இல்லாத ஒரு நாட்டில் அதுவும் உலகத்தின் தனித்த ஒரு இனத்தையும், தனித்த ஒரு மொழியையும் பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டில் அங்கே உள்ள சிறுபாமையினர் தொடர்பாக எழும் காரணமற்ற ஆனால் அனுபவரிதியில் ஏற்படும் நியாயமான பயத்தின் அடிப்படையில் பெருன்பான்மை சமூகத்தின் அரசியல் நகர்வுகள் வடிவமைக்கப்படும் என்பதில் புதுமை ஒன்றுமில்லை.

இந்த அடிப்படையில் சிறுபான்மையினருக்கு “இலங்கையர்” என்ற அடையாளம் மாத்திரம் அரசியல் ரீதியில் போதுமானதல்ல. ஆகவே இந்த சிறுபான்மையினாரில் ஒரு பிரிவினர், பெருன்பன்மையோரின் அரசியல் நகர்வினாலும், சிறுபான்மையோரில் பெரும் பன்மையாக இருக்கும் தமிழரின் அரசியல் நகர்வுகளினாலும் ஏற்படும் பயத்தின் காரணமாக தங்களுக்கு இருக்கும் அனைத்து அடையாளங்களையும் பாவனையில் வைத்திருப்பது பிழையான அம்சமாக இருக்கப் போவதில்லை. மாறாக இது ஒருவகை பாதுகாப்பு ஏற்பாடகவே அமையும். சிங்களவரையும், தமிழரையும் பொறுத்தவரை மொழிசார்ந்த, இனம் சார்ந்த, சமயம் சார்ந்த அடையாளங்கள் பாவனையில் இருக்கும் போது, முஸ்லிம்கள் என்ற மத அடையாளத்தைக் கொண்டுள்ள இஸ்லாமியர்கள் தமது இன அடையாளத்தை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயமாகும். இந்த உரிமை பிரச்சினை என்பது புதிய பிரச்சினைகளை உருவாக்குவதற்கல்ல, புதிதான பிரச்சினைகளின் சாத்தியபாடுகள் மிக அதிகமாகவே உள்ளதால் அவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டுமாயின் நாம் இலங்கையர் என்ற உரிமையோடு, அது பல்லின மக்கள் வாழும் இலங்கை என்ற விடயத்தை அச்சமின்றி, தெளிவாக நிலைநிறுத்த எமது இந்த “சோனகர்” என்ற இன அடையாளம் மிக இன்றியமையாததாகும்.

பிரதேசங்கள் எல்லை இடப்படுவதும், எல்லை இடப்பட்ட பிரதேசங்கள் பெயரிடப்படுவதும் அவற்றை “நாடுகள்” என்று நாம் அழைப்பதும் புதுமையான விடயங்கள் அல்ல. அதேபோல் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் மக்கள் மீள் பகுப்புக்குள்ளாவது ஏற்றுக் கொள்ளப்படுகின்ற ஒரு விடயமாகவே காணப்படுகின்றது. எனவே ஏதோ ஒரு அடிப்படையில் மக்கள் குழுக்களாக, குலங்களாக, கோத்திரங்களாக, இனங்களாக, தேசியங்க்களாக பிரிவடைவதை நாம் மறுதலிக்க முடியாது. அனால் இந்த பிரிவின் அடிப்படையில் ஒருவர் மற்றவரைவிட உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்ற நிலைவரும் போது அல்லது ஒருவர் தன் போன்ற மற்றவர்களுடனான கூட்டுக்கு தடை ஏற்படும் போது அங்கே பிரச்சினைகள் எழுவது தவிர்க்க படமுடியாதுள்ளது.
வரலாறுகள் தோறும் நமக்கு போதுமான படிப்பினைகள் இருப்பினும், இத்தகைய பிரச்சினைகள் பூதாகாரமாகி மனித குலம் அழிவை சந்தித்ததற்கு நாம் சாட்சிகளாக இருந்தபோதும் அதன் பாரதூரம் இன்னும் சரியாக அறியப்பட்டதற்கான அறிகுறிகள் மிக சொற்பமாகவே காணப்படுகின்றன. யூத இனத்துக்கு எதிரான ஆரிய ஹிட்லரின் இன அழிப்பும், ரூவெண்டா நாட்டில் ஹூட்டு, டுட்சி இனங்களுக்கிடையிலான இனவழிப்பு நடவடிக்கைகளும், சூடானில் பூர்விக மகளுக்கும் ஜஞ்சூவின் அறபு நாடோடிகளுக்கும் இடையிலான அழிப்பு நடவடிக்கைகளும், சேர்பியாவில் பொஸ்னிய இன அழிப்பு செய்யற்பாடும், இலங்கையிலே அரசாங்கம், புலி என்ற போர்வைக்குள் பலியாக்கப்பட்ட மக்களும் இந்த பரிதாப நிலையின் சான்றுகள். இத்தகைய அநாகரிகங்களின் அடிப்படை இரண்டு விடயங்களே. ஓன்றில் ஒரு இனம் மற்றைய இனத்தை தாழ்வாகக் கருதுவது, மற்றயது ஒருவரின் அடையாளத்தை மற்றவர் மறுக்க முற்படுவது.

இந்த அடிப்படையிலேயே “இலங்கை சோனகர்” பற்றிய எனது பார்வை அமைந்திருக்கிறது. இலங்கை “பல்லின மக்கள்” வாழும் நாடு. இந்த “பல்லினம்” என்ற வார்த்தை குழப்பமே இந்த விடயத்தை சிக்கலாக்கியுள்ளதாக நான் கருதுகிறேன். சுதந்திரத்துக்கு பின்னான இலங்கையில் தமிழர்களின் “வட்டுக்கோட்டை தீர்மானம்” என்ற தனி நாட்டுக்கான அடித்தளம் இடப்பட்டபோது இலங்கையில் சிங்களம், தமிழ் என்ற இரண்டு மொழிசார் இனங்கள் தான் இருப்பதாகவும் எனவே இலங்கை பெளதிக ரிதியாக இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பது தமிழ் அரசியல்வாதிகளின் ஆசையாக இருந்தது. அங்கே தமிழை அதிகமாக பேசும் ஒருசாரார் (சோனகர்) பற்றியோ, அல்லது சிங்களமும், தமிழும் பேசும் இன்னொரு சாரார்(பறங்கியர்) பற்றியோ பேசப்படவிலை. ஆனால் இங்கிலாந்தில் உருக்கொண்ட ஒரு தீவிரவாத / போராட்ட தமிழ் அமைப்பு “இஸ்லாமியர்”, “தோட்ட தொழிலாளர்”, ஏனைய சிறு இனத்தினரையும் இந்த தமிழ் போராட்டம் உள்ளடக்க வேண்டும், அப்படி இல்லாவிட்டால் தமிழரின் சுதந்திர போராட்டம் வெற்றி பெறாது, வெற்றி பெற்றாலும் நிறைவு பெறாது என்று எதிர்வு கூறினர். அவர்கள் தங்கள் போராட்ட வடிவத்தை இப்போது மாற்றிவிட்டனர் என்றாலும், இஸ்லாமியர், தோட்டத்தொழிலாளர் என்பதோடு பறங்கியர் விடயத்திலும் அவர்களின் கருத்து அவ்வாறே இன்றும் உள்ளது.
ஆனாலும் அவர்கள் சொல்லும் “இஸ்லாமியர்” என்ற பதப்பிரயோகம் அரசியல் ரிதியில் தூர நோக்கு கொண்டதாகக் காணப்படவிலை. ஆகவேதான் அதற்கான மாற்றிடாக , சரியான இன அடையாயளமாக நாம் “சோனகர்” என்ற பதத்தை பிரயோகிப்பதற்கான தேவையை உணர்த்தி நிற்கின்றோம். இந்த சோனகர் என்ற விடயம் வசதிகருதிய புதிய கண்டுபிடிப்போ அல்லது இலங்கையின் அரசியல் சூழ் நிலையை என்றும் குழப்பம் நிறைந்ததாக வைப்பதுவுமாக அமையக் கூடியதல்ல, மாறாக அது இஸ்லாமியர் அல்லது முஸ்லீம் என்ற மத அடையாளத்தில் நாம் எதிர் நோக்கக் கூடிய சாத்தியமான ஆபத்துக்களை விட, சோனகர் என்ற இனஅடையாளதில் சற்று பாதுகாப்பை பெறலாம் என்ற நிலைப்பாடே. எனது இந்த வாதத்தை பிழையாக அர்த்தப்படுத்தி விடக்கூடாது, அதாவது எமது அரசியல் இருப்புக்காக நாம் சோனகர் என்ற இனப் பெயரை முதன்மை படுத்துவதே ஒழிய எந்தக் காரணம் கொண்டும் எமது மத அடையாளத்தையோ அல்லது மதத்தையோ விட்டு விடுவதற்கான யோசனையல்ல, இது என்பதை முதலில் சோனகர் உணர வேண்டும். அடுத்ததாக இந்த பெயரை மீள் நிலை நிறுத்த முயல்வதென்பது ஏனைய இனங்களின் உரிமைகளில் தலையிடும் விடயமும் அல்ல என்பதும் குறிப்பாக தமிழ் இனத்தினரால் உணரப்பட வேண்டும்.

சாதுவான தமிழர்கள் போர்க் குணம் கொண்டோராக மாற்றப்பட்டதும், அதன் தாக்கத்தை நேரடியாக பெரும்பான்மை சிங்கள அரசாங்கதின் மேல் பாய்ச்சி அது மறைமுகமாக சிங்கள இனத்தினை கிலிகொள்ளச் செய்ததும், அதே நேரம் சக மொழி பேசுவோர், இரண்டறக் கலந்து வாழ்ந்தோர் என்றும் பாராமல் அவர்களையும் பயமுறுத்தி தம் கீழ் வைத்திருக்க புலி பயங்கர வாதிகள் எடுத்த முயற்சி, முழு தமிழினத்தின் நிலைப்பாடாக கொள்ளமுடியாது என்றாலும், இலங்கையின் அரசியல் சூழ் நிலையானது குழகப்பரமானதாகவே செல்வதற்கு ஏதுவாக அரசியல் அமைப்பு திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையிலும், இன வாத சிங்கள், தமிழ் அரசியல்வாதிகள் அத்தகைய ஒரு அடிப்படையிலேயே தமது அரசியலை முன் நடத்தி செல்ல முயல்வதாலும் அப்படியான நிலைமைகளுக்கு உறுதியாக நின்று முகம் கொடுக்கவுமே நாம் எமது இனத்தின் அடையாளத்தை தெளிவாக முன்வைக்க வேண்டும் என்பது எனது நிலப்பாடு.

வட்டுக்கோட்டை திர்மானத்துக்கு முன்பிருந்த காலத்திலும், புலி பயங்கரவாத காலத்திலும், அதற்கு பின்பும், கடந்த பொது தேர்தல் காலங்களிலும் தமிழர்களை பெருவாரியாக பிரதி நிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் இலங்கையில் இரண்டு இனங்கள் உள்ளதாகவே பேசின, பேசுகின்றன. அதே போல் இவர்களுடன் சம்பந்தமில்லாத சுயபிரகடனம் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரான திரு. வி. உருத்திரகுமரன் மே/ஜூன் 2010 தில் புதிய திசைகளின் வானொலி அரசியல் ( லண்டன் சூரியோதயம் வானொலியூடாக) கலந்துரையாடல் ஒன்றில் கூறிய ஒரு விடயம் மிகவும் கவனிக்கத்தக்கது. அதாவது இந்த பிரதமர்(?) நாடு கடந்த தமிழீழ அரசு பற்றி விளக்கமளித்தபோது நம்மால் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த அரசு பற்றி இலங்கையில் வாழும் தமிழரின் விருப்பம் அறியப்பட்டதோ இல்லையோ நான் அறியேன், இருந்தம் உங்கள் உத்தேச தமிழீழ ஆட்சிக்குள் வரவிருக்கும் சோனகரிடம் அவர்களின் விருப்பு பற்றி அறியப்பட்டதா? என்ற கருவை உள்ளடக்கியதே அந்தக் கேள்வி. அதற்கான அவரின் பதில்,” இந்தியாவின் தமிழ் நாட்டில் ஒரு முஸ்லிம் பிரமுகர் இந்த நாடு கடந்த தமிழீழ அரசை ஆதரித்துளார்” என்பதே. ஆகவே இப்படியான ஒரு ஏமாற்று போக்கு இந்த தமிழ் அரசியல் வாதிகளிடம் இருக்கும் வரை நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டியது எமது கடமையே ஒழிய அது தமிழரின் பிரச்சினை கூட இல்லை. நாம் நம் இனத்தை இது வென்று சொல்லும் போது அதை ஆதாரங்களோடு பிழையென நிறுவுவது வேறு. ஆனால் காரணங்கள் இல்லாமலே அதை தந்திரமாக முறியடிக்க முற்படுவது கேவலமானது. இலங்கை சோனகரை தமிழர் என்று குறிப்பிடுவது விருப்பம்மில்லாத ஒருவரை பலாத்கார கலியாணத்துகு ஒப்புதல் அளிக்க செய்யும் முயற்சி போன்றது. அது ஒரு இனத்துக் கொதிரான உரிமை மீறல். இதைவிட வேறு வார்த்தைகளால் இந்த நிலைப்பாட்டை விளங்கவைக்க முடியாது.

தொலமியின் இலங்கை



இனி இந்த “சோனகர்” ரின் வரலாற்றைப் பார்ப்போம். மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் இந்தியா நோக்கிய தம் பார்வையை செலுத்தமுன்பே அரேபியர் தெற்கு, தென்கிழக்காசிய பிராந்தியத்தில் தமது குடியிருப்புக்களை நிறுவியுள்ளனர். இந்த வகையில் கி.மு. 310 ஆண்டளவில் மடகஸ்கார் தீவுக்கும் சுமாத்திரா தீவுக்கும் இடையிலான வியாபாரபாதையின் கடல் வழி இணைப்பு இலங்கையூடாகவே இடம் பெற்றுள்ளது. எகிப்திய பல்கலை வல்லுனர் க்ளோடியுஸ் தொலமி(Claudius Ptolemy) கி.பி. 150களில் இலங்கை பற்றிய வழங்கிய தகவல்கள் அவர் அறேபியரிடம் இருந்து பெற்றதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த தொலமி வரைந்த இலங்கை படத்தில் நதிகள் புலூவியஸ்(Fluvius) என்று கூறப்படுகிறன. அதன் அடிப்படையில் மன்னாரின் தென் புறத்தில் ஓடும் நதி “பாசிஸ் புலூவியஸ்” அதாவது பாரசிகர் நதி, அதாவது அப்பிரதேசத்தில் பாரசிகர் அதிகம் வாழ்ந்ததால் அப்பெயர் வழங்கப் பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இந்த நதி இன்று அருவி ஆறாக பெயர் பெற்றுள்ளது, (மகாவழி கங்கை ஓரத்திலும் பாரசீகர் வாழ்ந்ததாக காணக்கிடைகின்றது). இந்த நதிக்குக் கீழ் இன்றைய புத்தளம் நகருக்கு வடக்காக “சோனா புலூவியஸ்” (Soana Fluvious) என்ற நதியை அவர் வரைந்துள்ளார். சோனகர் நதி என்பதை அது குறிக்கிறது. அதாவது சோனகர் அதிகம் வாழ்ந்த இடமாக அது அடையாளப் படுத்தப்படுகிறது. இந்த நதியினை இன்றும் புத்தள பிரதேச மக்கள் “பொன்பரப்பி ஆறு”, அல்லது “காலாவி ஆறு” என்றழைகின்றனர். இது சிங்களதில் “கலா ஒய” என்றழைக்கப் படுகின்றது. இந்த நதி தீரங்களுக்கே இன்றும் புத்தளம் வாழ் மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று குடிசை(tent)அடித்து, இரவு வேளைகளில் வேட்டையாடி தமது கோடைகாலத்தை கழிக்கும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர். இது ஆற்றங்கரையில் வாழ்ந்தோரின் பழக்க வழக்கங்களின் மிச்சசொச்சங்கள்.
இதே நேரம் கி.மு. 327-326 இடைப்பட்ட காலத்தில் மகா அலெக்ஸ்சந்தரின் கட்டளை பிரகாரம் இலங்கையின் புவி வரை படத்தைத் தந்த கிரேக்க மாலுமி ஓனொஸ் கிறிட்டோஸ்( Oneus Crites ) புத்தளத்திளும் அதைச் சுற்றியுள்ள அயல் பாகங்களுடன் நிலத்தொடர்புடைய பகுதிகளிலும் “சோனகர்”களின் குடியேற்றம், விஜயன் இலங்கைக்கு வர முன்னரே அதிகம் காணப்பட்டதாக குறிப்பிடுகின்றார். அதே நேரம் இந்த பொன்பரப்பி ஆற்றை “சோனாள் பொட்டமஸ்” என்று குறிப்பிட்டுள்ளார். “சோனாள்” என்பது “சோனகரையும்”, “பொட்டமஸ்” என்பது ஆற்றையும் குறிக்கும். இந்த பிரதேசம் தான் அதாவது அருவி ஆற்றுக்கும், மாயன் ஆறு என்றழைக்கப்படும் தெதுறு ஒயாவுக்கும், அதாவது இன்றைய சிலாபத்துக்கு வடக்கே பாயும் தெதூறு ஓயாவில் இருந்து மன்னாருக்கு தெற்காகவுள்ள குதிரைமலைக்கும் இடைப் பட்ட பிரதேசமே “சோனகம்” என்ற பிரதேசமாகவும் இந்த மாலுமி சித்தரிக்கின்றார். இந்த பகுதியை, அதாவது அரிப்பு, பொன்பரப்பு, புத்தளம் பிரதேசத்தை “Igona Civitas” ,அதாவது அறேபிய பழங்குடிகள் வாழ்ந்த இடமாகும் என J.R. Sinnathamby என்ற ஒரு ஆய்வாளரும் குறிப்பிடுகின்றார்.
இன்றைய 21ம் நூற்றாண்டில் நாம் காணும் நாடுகள், கண்டங்களின் அமைவுகள், சமுத்திரங்கள், மலைகள் எல்லாம் உலகம் தோன்றிய நாள் தொட்டு இப்படியே இருக்கவில்லை என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம். இதற்கு “கண்ட நகர்வு”(continental drift) களே காரணமாகும் என்பது நிலவியலாளர் கூற்று. இந்த அடிப்படையில் இன்றைய இந்தியா, அவுஸ்திரேலியா, அண்டார்டிக்கா முனை இதற்கிடையில் உள்ள தீவுகள் எல்லாம் ஓன்றாக இருந்த பகுதியை “கொண்ட்வானா லேண்ட்”(Gondwana Land) என்றழைப்பர். இந்து மாசமுத்திரத்தில் மூழ்கிப் போன பெரும் பகுதி “லெமுரியா கண்டம்” (Lemuria Continent) என அழைக்கப் பட்டதும் நாம் அறி ந்ததே. இந்த கடற்கோளின் விளைவே தென்பகுதி காணாமல் போக வடபகுதி இமய மலையாக நிமிர்ந்து நிற்பதைக் காணலாம். பின்னர் ஏற்பட்ட சிறிய கடற்கோள்களின் விளைவாக இந்திய நிலப்பரபில் இருந்து இலங்கை பிரிந்து சென்றது என்பதற்கு சான்றுகள் அதிகம் உள்ளன. அதே நேரத்தில் க்ளோடியுஸ் தொலமி(Claudius Ptolomy)யின் பிரகாரம் “தப்ரபேன்” (Taprobane) என்று அழைக்கப்பட இலங்கை இன்றை இலங்கையை விட பல மடங்கு விசாலமானது என்கின்றார். அதன் படி “க்கிறினிச்” (Greenwich) 75வது பாகை இன்றைய இலங்கையின் மேற்கு கரையில் இருந்து சுமார் 400 மைல் தூரத்தில் பண்டைய இலங்கையை ஊடறுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. ஆகவே அன்றைய இலங்கை இன்றைய இலங்கையைவிட விசாலமானது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இத்தகைய புதிய நில அமைவுகளுக்கு முன் இலங்கை இந்தியாவுடன் நிலத்தால் இணைந்திருந்த பகுதி என்பதிலும் யாருக்கும் சந்தேகங்கள் எழ நியாமமிருக்காது.


இந்த இணைபின் மூலம் புத்தளம் பிரதேசத்தில் வட மேற்கில் பாய்ந்தோடும் “சோனகர் நதி” யினதும் அதற்கு எதிராக, அதாவது இந்தியாவின் தென் கிழக்கில் காயல்பட்டிணத்தின் கடலில் சங்கமிக்கும் “தாமிரவருணி ஆறு” (அல்லது பொதிகை நதி(?)) என்றழைக்கப்படும் ஆறும் ஓரே நதியே. இந்த நதியையும் “தப்ரபேன்” என்றே அழைத்துள்ளனர். அந்த காலத்தில் ‘சோனகர்” வாழ்ந்த இடமும் அதுவே. சோனகர் பிரதேசத்தைப் பிரிப்பது “தாமிர வருணீ” என்ற நதியே என்றும் கூறப்பட்டுள்ளது. தாமிரவருணி ஆற்றுப் படுக்கைகளில் வாழ்ந்த மக்களின் பழக்க வழக்கங்க்கள், குணாதிசங்கள், உடல் அமைப்பு, நிறம், அவர்கள் பேசும் மொழியின் தன்மை(dialact), அவர்கள் வைத்துக் கொள்ளும் பெயர்கள், தாழி அடக்க முறை என்பதெல்லாம் ஓன்றையே சுற்றி நிற்கின்றது. அதுதான் சோனகர் என்ற இனத்தையும், அது காலங்காலமாக வாழ்ந்த இன்றும் வாழ்ந்து வரும் பிரதேசத்தையுமாகும்.
மேலும், இந்தியாவின் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தின் தெற்கு சுவற்றில் உள்ள கல்வெட்டில் இந்த” சோனகம்” பற்றிய தகவல் பெறமுடியும். தமிழ் நாட்டு பேரசர்கள் வெற்றி கொண்ட பிரதேசங்களில் ஒன்றாக “சோனகம்” குறிப்பிடப் பட்டுள்ளதானது அந்த பிரதேசத்தின் இருப்பையும், முக்கியத்துவத்தையும் உணர்த்துவதா உள்ளது. இதே போலவே போர்த்துகேயர்களின் இலங்கை வருகைக்குமுன் மொரோக்கோ நாட்டின் யாத்ரீகர் இபுனு பதுதா(Ibn Batuta) 1345 ஆண்டு 9ம் மாதம் 12ம் திகதி “பத்தள” என்று அழைக்கப்பட்ட புத்தளத்தின் துறைமுகத்தில் தன் தோழர்களுடன் வந்திறங்கியதாக தனது “The travels of Ibn Batuta” என்ற நூலில் அதன் ஆசிரியர் சாமுவேல் லீ குறிப்பிடுகின்றார். இப்னு பதுதா, பாவாதமலையை தரிசிக்க புத்தளத்தில் வந்திறங்கியபோது அங்கு ஒரு பாரசிக மொழி பேசக்கூடிய பாண்டிய மன்னன் ஆட்சி செய்ததாகவும் குறிப்பிடுகின்றார். இந்த பாண்டிய மன்னனாக வருணிக்கப்பட்டவனே “தக்கியூதீன்” என்று இனங்காணப்பட்டான். தக்கீயுதீன் அடிப்படையில் ஒரு பாரசிகன் என்றும் பாண்டிய மன்னனின் படையில் தளபதியாக இருந்தவன் என்பதும் அவன் பாண்டிய மன்னனின் மகள் ஒருவரை திருமணம் முடித்திருந்தான் என்பதும் வரலாறு. ஆகவே இலங்கையின் புராதன துறைமுகங்களில் ஒன்றான புத்தளத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்து அதை தன் நிருவாகதில் வைத்திருக்க தக்கியுதீன் நியமிக்கப்பட்டிருப்பத்ற்கான வாய்ப்புகள் அதிகம்.




இந்த ”சோனகர்” என்ற இனம் ஒரு கலப்பு இனம். இந்த இனத்தின் தோற்றத்துக்கு பல மூலங்கள் உள்ளன. இருப்பினும் அனைத்து மாறுபட்ட மூலத்திலும் ஒரு அசைக்க முடியாத, மாறாத மூலமாக காணப்படுவது அதன் “அரபு” இரத்த கலப்பு. இந்த அரபுக்கள் முதலில் தென் அறேபியாவில் இருந்து, அதாவது இன்றைய யெமனில் (Yemen)இருந்து ஏடன் (Aden) துறைமுகம் ஊடாக வந்தவர்கள் (என் தாயின் தந்தையின் பேரன் ஒரு யெமனி). அவர்களைத் தொடர்ந்து, ஏற்கனவே கிழக்கு ஐரோப்பிய அரபு கலப்பால் உருவாகிய “மூர்”(Moors)கள், பிற்பாடு பாரசீகர், அவர்களுடன் அபிசினியர்கள் (எகிப்து நாட்டவர்), பிற்பாடு தமிழ் நாட்டு சோனவர்கள், இன்றைய கேரளா அதாவது மலையாளிகள் பிற்பாடு வட அறேபியா, அதாவது பாலைவனத்து அரபிகள் என்று இலங்கை சோனகர் இனத்தின் மூலங்கள் பிரிந்து செல்கின்றன. இந்த மூலத்தின் தன்மைக் கேற்பவே இலங்கை ”சோனகர்” பலவித உடல், நிற அமைப்புகளைக் கொண்டுள்ளனர்.


சபாயீன், அதாவது தென் அறேபியர்கள் கி.பி. 7ம் நூற்றாண்டில் தம் அரசியல், சமய செல்வாக்கை வட அறேபியர்கள், அதாவது பாலைவனத்து அறேபியரிடம் இழக்கும் வரை கடல் மூலமான இந்து சமுத்திர வாணிப சாம்ராஜ்யம் அவர்கள் கையிலேயே இருந்தது. இந்த அறபுக்கள் தான் தென் இந்திய கரைகளிலும் வடமேற்கு இலங்கை கரைகளிலும் சங்கு, முத்து குளிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். இவர்களின் வருகை இந்தியாவிலும், இலங்கையிலும் வியாபார நோக்கமாகவே இருந்தது. பிற்காலத்தில் சமய பரப்பலும் அதில் காணப்பட்டது. ஆனால் தென் இந்தியாவிலும், இலங்கையிலும் அறேபியரின் வருகை, வட இந்தியாவுக்கான அவர்களின் அரசியல் அடிப்படையிலான( நாடு பிடித்தல்) வருகையை விட வித்தியாசமானது. அதுவும் கி.பி. 7ம் நூற்றாண்டளவிலேயே இஸ்லாம் என்ற மதம் இந்த வட அறேபிய முஸ்லீம்களால் இலங்கை சோனகர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றது. எனவே இஸ்லாமியர் அல்லது முஸ்லீம் என்ற சமய அடியாளம், சோனகர் என்ற இன அடையாளத்துக்கு மிகவும் பிற்பட்டது. அதாவது சோனகர் என்ற அடையாளம் கி.மு.4ம் நூற்றாண்டுக்கும் முற்பட்டது. சேர் அலெக்ஸாந்தர் ஜொன்ஸ்டன் (Sri Alexander Johnston), இலங்கையின் முதல் பிரதம நீதியரசர், இவரும் இலங்கை சோனகர்கள் அறபுக்களின் வழித் தோன்றல்கள் என்பதை திட்டவட்டமாகக் கூறுகின்றார். முஸ்லீம் என்ற சமய அடையாளத்துடன் இலங்கைக்குள் பிரவேசித்த வட அறேபியர்கள் அனேகமாக அரசியல் அகதிகளாக பிரவேசித்தவர்கள். இவர்கள் அறேபியாவில் இருந்து வெளியேறி, இன்றைய ஈராகின் யூப்ரிடீஸ், டைக்கிறிஸ் நதியூடாக இந்தியாவின் தென் பகுதியிலும், இலங்கைத் தீவிலும், மலாக்காவிலும் குடியேறினர். இந்த அடிப்படையில் இலங்கையில் ஏற்கனவே அறேபிய தொடர்புடைய மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் இவர்கள் குடியேறினர். இதில் பிரதான இடங்களாகக் கருதப்படுவது, புத்தளம், கல்பிட்டி, குதிரை மலை, மாந்தோட்டம், மன்னார், யாழ்ப்பாணம், திருக்கோணமலை, மாத்தறை, வெளிகம, காலி, பேருவளை, கொழும்பு, கம்பொலை, ரத்தினபுர என்பனவாகும். மிக பின்னய காலத்தில் போர்த்துக்கேயரின் அச்சுறுத்தளினாலும் துறைமுகப்பட்டணங்களில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டதினாலும் இங்கு வாழ்ந்துவந்த சோனகர்கள் உற்புர கிராமங்களுக்கும், மலை நாட்டு பிரதேசங்களுக்கும் குடியேறினர்.


இரண்டாம் புவனேகபாகுவின் வாரிசு கலேபண்டார (வத்ஹிமி)” ஹஸ்த்தி சைலாபுரம்” என்ற பெயர் கொண்ட ”சோனக” அரசன் இன்றைய குருணாகல் பகுதியை ஆட்சி செய்துள்ளான். அரசனாக இருக்க அடிப்படை தகுதி “பெளத்தன்” ஆக இருத்தல் என்ற அன்றைய, அப்பிரதே மேல்மட்ட அரசியல் வாதிகளின் போக்கினால், இந்த அரசன் எத்துக்கல் மலை உச்சியில் இருந்து வீழ்த்தப்பட்டு கொலை செய்யப்படும் வரை அரசாட்சியிலேயே இருந்துள்ளான். இதைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கும் மன்னனின் எதிர்பாளர்களுக்கும் இக் கொலை தொடர்பாக ஆங்காங்கே கலவரம் நடந்தாக அறியப்படுகின்றது. ஆகவே இந்த விடயமும் இலங்கை சோனகரின் நீண்ட வரலாற்றை கூறுகிறது.


பிற்காலத்தில் இலங்கை கோட்டை, யாழ்ப்பாணம், கண்டி என்ற மூன்று இராச்சியங்களாக பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்ட போதும், இவற்றுக்குப் புறம்பாக ”வன்னிமை” அரசுகளும் இருந்தன. இவை இந்த இராஜதானிகளுக்கு புறம்பாக நிருவாக அதிகாரம் வழங்கப்பட்ட பிரதேசங்களாகும். இதில் முக்கியமானவை கிழக்கில் மட்டக்களப்பு, கொட்டியாரமும், வடமேற்கில் புத்தள பிரதேசமுமாகும். ஆனால் இந்த புத்தள பிரதேசம் ஒருகாலத்தில் கண்டி இராச்சியத்தின் கீழும், இன்னொரு காலத்தில் கோட்டை எல்லைக்கும் உற்பட்டிருந்திருந்தாக அறியக்கிடைக்கின்றது. ஒரு போதும் யாழ் இராஜ்சியதுக்கு கட்டுப்பட்டிருக்கவில்லை. புத்தளத்தில் ஆட்சியை தம் கையில் வைத்திருந்தவன் “தக்கியு தீன்” என்ற பாரசீக தொடர்பும், பாண்டிய மன்னனின் ஆதரவும் கொண்டவனாக சொல்லப்படுகிறது. கண்டி இராஜ்சியத்தின் வெளிநாட்டு வியாபாரம் புத்தளம், கல்பிட்டி துறைமுகம் ஊடாகவே நடைபெற்றுள்ளது. புத்தள நகரின் மேற்கே உள்ள “பெரு வழி ஆறு”, மீ ஒயா என சிங்களத்தில் அழைக்கப்படும், ஆறு புத்தளத்தில் இருந்து, மாத்தளை, அக்குரணை வரையும் செல்கிறது. இந்த ஆற்றோர பாதையை “கண்டிப் பெருவழி” என்றும் அழைப்பர். இந்த ஆற்றங்கரை பாதையில் புத்தளம் முதல் கண்டிவரையும் ஆங்காங்கே இருக்கும் முஸ்லிம்களை அதிகம் கொண்ட சோனக கிராமங்கள், சிறிய நகரங்கள் இன்றும் இருப்பதைக் காணலாம். “பெரு வழி ஆறு” தவளம் எனப்படும் பெருள்காவும் முறை அதாவது கூட்டம், கூட்டமாக மாடுகளின் மேல் பாரமான பொருள்கள் ஏற்றிச் செல்லும் முறைக்கு பெயர் பெற்ற பிரதேசமாகும். கண்டிப்பிரதேசத்தில் இருந்து கண்டிராஜ்ய வெளிநாட்டு ஏற்றுமதி பொருட்கள் புத்தளம், கல்பிட்டி துறைமுகங்கள் வரை கொண்டுவரப்பட்ட முறையும் இதுவாகும். அதேபோல் புத்தள துறைமுகத்திலும், குதிரை மலை துறைமுகத்திலும் இருந்து பொருட்கள் இந்த தவள முறையிலேயே மலைநாடு நோக்கி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.


இலங்கையில் ஆரம்பகால சோனகர் பற்றிய தவல்கள் ஒன்று பின்வரும் செய்தியையும் தருகின்றது. அதாவது கி.பி 437-407 பராக்கிரமபாகு காலத்தில், அநுராதபுரத்தில் “யொனாஸ்’ என்று குறிப்பிட்டு ஒரு பகுதி “சோனவர்”களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாம். இன்றும் சிங்களவர் இலங்கை சோனகரை “யொன்னு” என்றும் அழைக்கின்றனர். இந்த “யொன்னு” என்ற சொல் பாளி மொழியின் “யொன்ன” என்பதன் திரிபாகக் கொள்ளப்படுகிறது. ஆனாலும் “யோனக்க” என்ற சிங்கள சொல்லாலேயே பொதுவாக இன்று ”சோனகர்” அழைக்கப்படுகின்றனர். “மரக்கல” எனும் காரணப் பெயர், அதாவது மரக் கப்பல்களில் இலங்கை வந்த “அரபிகள்” என்று பொருள்படவும் இவர்கள் அழைக்கப்பட்டாலும், இலங்கையின் “மலாய்”, “போரா”, மேமன் முஸ்லிம்கள் தவிர, ஏனைய முஸ்லிம்களின் இனப் பெயராக அவர்களின் பிறப்புசாட்சி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் “சோனகர்” (தமிழ்) ” யோனக்க” (சிங்களம்) என்பதே. ஆனாலும் இவர்களை இஸ்லாம் என்ற சமையத்துடன் அடையாளப்படுத்தியே, அதாவது 95% மேல்பட்ட சோனகர்கள் இஸ்லாமியர்களாக இருப்பதால் அவர்களை குறிக்கும் முகமாகவே இன்றைய இலங்கை கொடியில் “பச்சை” நிறம் தரப்பட்டுள்ளது. இலங்கைக் கொடியின் சிங்க அடையாலமே அரபியர்களின் அன்பளிப்பென்பது வேறுமொரு கதை.


இதைவிடவும் இன்னுமொரு வரலாறு இந்த “சோனவர்”ருக்கு உண்டாம். அதாவது இது மனித வரலாற்றின் ஆரம்பத்துக்கே செல்கின்றது. நாம் ஏற்கனவே பார்த்த இலங்கையும், இந்தியாவும் இன்னும் பல பிரதேசங்களும் ஓன்றிணைந்த காலப்பகுதி அது. அப்போது முதல் மனிதன் “ஆதம்” என்பவர் படைக்கப்படுகின்றார். அவர் இலங்கையின் பாவாதமலை (Adam’s Peak) அல்லது “சமனல கந்த” என்று சிங்களத்தில் சொல்லும் மலை உச்சியில் சுவனத்தில் (Paradise) இருந்து இறக்கப்படுகிறார். அவரின் காலடி அடையாளம் அந்த மலை உச்சியில் இன்றும் யாத்திரிகர்களால் தரிசிக்கப் படுகின்றது. டார்வின்னின் கூர்ப்பு கொள்கையை நம்புவோர்களைவிட மீதிபேர், அல்லது ஆகக் குறைந்தது மதங்களை நம்புவோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்ட விடயம் மனிதன் இறைவனால் படைக்கப்பட்டான் என்பதே. அப்படியானால் உலகத்தில் ஏதோ ஓர் இடத்தில் முதல் மனிதனின் சஞ்சாரிப்பு இருந்திருக்க வேண்டும். ஆப்ரஹாமின் வழி வந்த மதங்களான யூதமும், கிறிஸ்தவமும், இஸ்லாமும் அந்த முதல் மனிதன் “ஆதாம்” என்றே சொல்கின்றன. உலகத்தின் எந்த இடத்திலும் “Adam’s Peak” என்ற இடம் இல்லாமல் அது இலங்கையில் இருப்பதென்பது சிந்தனைக்கு எடுக்க வேண்டிய முதல் விடயமாகும். அதேநேரம் ஐரோப்பியர்தான் இந்த மலைக்கு அப்படி ஒரு பெயர் வைத்தனர் என்பது ஒரு பொய்யான வாதமாகும் என்பதோடு அப்படித்தான் அவர்கள் அம்மலைக்கு பெயர் வைத்தனர் என்றாலும் அது ஒரு தற்ச்செயலான விடயமாக இருக்க முடியாது. ஐரோப்பியரின் இலங்கைக்கான் வருகை ஆரம்பிக்க முன்னரே பல வெளி நாட்டார் இந்த “ஆதம் மலை”யை தரிசிக்கவென்று வந்துள்ளனர். அதில் பிரதானமானவர் நாம் ஏற்கனவே கண்ட மொரோக்கோ நாட்டைச்சேர்ந்த இப்னு பதுதா ஆவார்.


இந்த ஆதாம் சுவனத்தில் இருந்து வந்த படியால்(மதவாதிகளின் நம்பிக்கைப்படி) அவரின் வழிதோன்றகள் “சுவனர்” என அழைக்கப்பட்டனராம். இந்த அடிப்படையிலேயே சுவனர் திரிபடைந்து “சோனகர்” என்றறியப்பட்டனராம். ஆனால் இந்த சோனகரில் பலர் காலவோட்டதின் பிரகாரம் தமது கடவுள் நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டுள்ளனர். அது சிதறியும், திரிபடைந்தும் “நாகர்” என மாற்றம் அடைந்ததாகவும், இதன் அடிப்படையில் பாம்பை வழிபடும் “நாகர்”இனம் தோன்றியதாகவும், பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட கடற்கோள்களினால் இலங்கை இந்தியாவில் இருந்து பிரிந்து செல்ல நாகர்கள் இலங்கையின் வடக்கிலும், இந்தியாவில் பெங்களுரை அண்டிய பகுதியிலும், நாகர்லாந்து என்ற பிரதேசத்திலும் அதிகம் காணப்பட, சோனகர் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும், தென் இந்தியாவின் கீழைக்ரை, காவிரி பூம்பட்டிணம், வேலூர் பகுதிகளிலும் இன்றும் சோனகர்களாகவே காணப்படுகின்றனர். இந்த வரலாறு இன்னும் ஐயந்திரிபர நிறுவப்படாமல் இருக்க, சோனகர் அறபு கலப்புடைய இனமாக இந்தியாவிலும் இலங்கையிலும் இன்னும் சில இடங்களிலும் உருப்பெற்று அந்தந்த இடங்களில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே வாழ்ந்து வந்துள்ள வரலாறு சந்தேகங்களுக் கப்பால் நிருபிக்கப்பட்டுள்ள விடயமாகும்.


இருப்பினும் இந்த சோனகர் காலாகாலமாக வாழ்ந்த பிரதேசம் இன்று வரலாற்றில் இருந்து மறைக்கப்படுவதற்கான முயற்சியாகவே புலிகளின் “தமிழீழ வரைபடம்” அமைந்துள்ளது. அதயே இன்று அடிப்படை ஏதும் இல்லாத நாடுகடந்த தமிழீழ அரசு “தமிழீழம்” என்றும், அது தமிழர் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் பூர்வீக பூமியாகவும் சித்தரிக்கின்றது. இதையே இன்றும் புலம் பெயர் தமிழரும் (புலி ஆதரவு, தமிழ் பேசும் முஸ்லிம் என்ற கொள்கை ஆதரவு) ஒரு வேதவாக்காக காவித்திரிகின்றனர். இதைவிடவும் மோசமான விடயம் என்னவென்றால் சுமார் 225 வருட காலமாக இலங்கையின் மலை நாட்டு பகுதிகளில் வாழ்ந்துவரும் இந்திய தமிழர்களை இலங்கை பிரசைகளாக ஏற்றுக் கொள்ளும் சில இலங்கை தமிழர், கி.மு.னான காலப்பகுதியில் இருந்தே இலங்கையில் வாழ்ந்துவரும் “சோனகர்”களை அப்படியாரும் இல்லையென்றும், அவர்கள் சைவத் தமிழர்களாக இருந்து இஸ்லாமியத் தமிழர்களாக மாறியவர்கள் என்றும் எனவே அவர்கள் இன அடிப்படையில் “தமிழர்” என்ற அடையாளத்துடன் மெளனித்து இருக்கும்படியும், அப்படி இல்லாவிட்டால் நாடோடிகளாக இங்கு வந்த மாதிரி திரும்பிப் போய்விடவேண்டும் என்று கூறுவது ஒரு இனத்துக் கெதிரான உரிமை மீறலாகும். படுமோசமான, மட்டரகமான இனத் துவேசமாகும். அது இப்போதே கலைந்தெறியப் படாவிட்டால், இந்த நிலைப்பாட்டில் இருக்கும் தமிழர்களே எம் இனத்தின் முதல் எதிரிகளும் ஓன்றுபட்ட இலங்கையினதும் எதிரிகளாவார்கள்.


எனவே நான் மேலே நிறுவியது இலங்கையின் சோனகர் என்ற இனத்தின் இருப்பை மாத்திரமல்ல, அவர்களுக்கோர் வரையறுக்கப்பட்ட இடமும் இருந்தது என்பதையுமே. சோனகர்களுக்கு ஒர் இடம் இருந்தது என்பது ஆண்டபரம்பரை மீண்டும் ஆள வேண்டும் என்ற த.வி.கூ யின் அசட்டுத்தனமான கூக்குரல் போன்றதொரு கொள்கையை முன்வைத்து முழு சோனகர் இனத்தையும் அழித்தொழிக்கவுமல்ல. மாறாக யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு அதாவது இலங்கை சிங்களவர்களை பெரும்பான்மையாக் கொண்ட பல்லின மக்கள் வாழும் நாடு. அதில் ஒவ்வொரு இனத்தின் உரிமைகளும் மதிகப்பட்டு ஓன்றுபட்ட இலங்கையாக அது இருக்க 21ம் நூற்றாண்டின் வளர்ச்சியில் நாம் தவர விடப்பட்டாமல் இருக்க வேண்டும் என்ற எனது நிலைபாட்டை ஐயந்திரிபர நிறுவவுமே.
கடைசியாக இது ஒரு ஆராய்ச்சி கட்டுரையாக வடிவமைக்கப்படாததால் இதற்கான உசாத்துணை நூல்கலின் விபரம் தரப்படவில்லை. இருந்தும் இந்த தலைப்பில் கலந்துரையாட விரும்புவோர் உங்கள் நியாயனாம் சந்தேகங்களை, தெளிவின்மைகளை, மேலதிக விளக்கங்களை பகிர்ந்து கொள்ள முனைந்தால் இது ஒரு ஆரோகியமான அடுத்த கட்டத்துக்கு எம்மை இட்டுச் செல்லும். மாறாக இதற்குள் மதங்களை இழுத்து அல்லது தேவையிலாமல் வேறு கருத்துக்களை புகுத்தி இதை குழப்ப முற்படுவது நாகரிகமற்ற செயலாகும் என கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
- SR Mohamed Nisthar










ஒரு இஸ்லாமிய இணையத்தின் குரல் !



இலங்கையில் தமிழ் மொழி இணையத்தளங்களில் முஸ்லிம்களின் குரல் மிகவும் அரிதாகவே ஒலித்து வருகின்றது என்ற நிலைதான் இன்றும் தொடர்ந்தாலும் அண்மைகாலமாக இலங்கை முஸ்லிம்களில் மத்தியில் இணையத்தள பயன்பாடு சற்று முன்னேற்றம் கண்டுவருகின்றது குறித்த சில முஸ்லிம் பிரதேசங்களில் அந்த பிரதேச செய்திகளை தாங்கியதாக இணையத்தளங்கள் தோன்றியுள்ளன இவை பாராட்டுக்குரியவை.
Lankamuslim.org, lankamuslim.com, OurUmmah.org, Lankamuslim.info ஆகிய எனது இணையத்தளங்கள் இலங்கை முஸ்லிம்களின் தேசிய செய்திகள் , பிராந்திய செய்திகள் ,செய்தி கட்டுரைகள் , விமர்சன கட்டுரைகள் அரசியல் ஆய்வுகள், சர்வதேச செய்திகள், ஆய்வு கட்டுரைகள்,மொழி மாற்று கட்டுரைகள் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடராக முன்வைத்து வரும்போது பிராந்திய இணையதளங்கள் தமது பிரதேச நடப்புகளை செய்திகளாக பதிவு செய்து முஸ்லிம் சமூகத்துக்கு முக்கிய பங்காற்றி வருகின்றது இந்த வகையில் http://puttalamonline.com/ என்ற பிரதேச இணையத்தளம் தனது ஆசிரியர் கருத்தாக பதிவு செய்துள்ள இஸ்லாத்தின் குரலை lankamuslim.org இங்கு பதிவு செய்கின்றது .
அல்லாஹ்வின் திருநாமத்தால்…
இஸ்லாமியத்தை அத்திபாரமாகக் கொண்டெழுகின்ற சமூக மாற்றம் என்ற சிந்தனைக்கு புத்தளத்துள் புதிய அங்கீகாரம் கிடைத்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!
தனிப்பட்ட, குடும்ப, சமூக மேம்பாடு என்பது இஸ்லாமியத்தைத் தவிர்த்துக் கொண்டு உருவாக முடியாது என்ற பற்றுறுதி வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது இஸ்லாமிய வாழ்க்கை நெறியின் ஒரு வகையான சுற்றி வளைப்புக்குள் புத்தளம் மெல்ல மெல்ல வந்துள்ளது. பள்ளிவாயலை மதத் தலமாக மட்டும் கருதுகின்ற மனப் பதிவு நீங்கிச் சென்று அதனை சமூகப் புனரமைப்பின் கேந்திர நிலையமாக புத்தளம் ஏற்று அங்கீகரித்துள்ளது. இந்நிலை முதிர்ச்சியடைந்து கனிந்து பலன் தர வேண்டும் என்று இறைவனிடம் இரு கரம் ஏந்திய நிலையில்….
“ஒரு சமூகத்தின் தராதரம் வெறும் பௌதிக வளங்களை மட்டும் வைத்து மதிப்பீடு செய்யப்படுவதில்லை. அதனது சிந்தனா சக்தியைக் கொண்டுதான் யதார்த்தமாக மதிப்பிடப்படுகிறது” என்பது அல்ஜீரிய சிந்தனையாளர் மாலிக் பின் நபியின் கூற்றாகும்.
இவ்வகையில் புத்தளம் தனது சிந்தனாத் தரத்தை இமயம் காணச் செய்ய வேண்டும். இதனது தொடக்க நிலை ஆரோக்கியமான சமூக மாற்றம் குறித்த பேசுபொருளாக அமைய வேண்டும். சமூக மாற்றம் பற்றி தற்போது நிலவுகின்ற தரக்குறைவான கருத்துக்கள் மாற்றம் காண வேண்டும். வெடிப்பு ஏற்பட்டால் ஒட்டு வேலை (patch-work) பார்த்து பூசி மெழுகி அலங்காரம் செய்து வைத்தல் என்பதே மாற்றம் எனக் கருதப்படுகிறது. இந்தக் கண்ணோட்டத்தினால், சாண் ஏறி முழம் சறுக்கிய நிலையிலேயே நாம் தொடர்ந்தும் இருந்து வருகிறோம். அறிவுபூர்வமாக ஆழமாக விஞ்ஞான ரீதியாக சிந்திக்கின்ற பான்மை எமது வழக்காறாக மாற வேண்டும். உணர்ச்சியின் அடிப்படையில் செயற்படும் சமூகம் எதையோ சாதித்திருக்கும்; எனினும் சாதிக்க வேண்டியதை சாதித்திருக்க மாட்டாது.
புத்தளம் பௌதிக வளங்களும், மனித வளங்களும் நிரம்பப் பெற்ற ஒரு நகர். இத்தகைய வளங்கள் இறைவனின் பேரருளாகும். இவற்றின் ஆழ அகலங்களை பின்னர் தரவுகளுடன் ஆய்வு செய்வோம். இந்த அருட் கொடைகளுக்கு எமது நன்றிக் கடன் எவ்வாறு அமையப் போகின்றது? மனிதனது சுபிட்சமான வாழ்வுக்கு இத்தகைய அருட்கொடைகள் பேருதவி செய்ய வேண்டும். சௌஜன்யமான வாழ்வுக்காக இத்தகைய பேரருளைப் பிரயோகித்து சமூக மாற்றம் காணாத சமூகம் இறைவனுக்கு நன்றி செலுத்தாத சமூகமே!
புத்தளம் மார்க்கப் பற்றுள்ள நகர். இது முழு இலங்கைக்கும் மார்க்க அறிவை வழங்கிய பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. எப்போதும் அரசியல் மற்றும் சன்மார்க்கத் தளத்தில் புத்தளம் இஸ்லாத்தின் தனிச் சிறப்பம்சமான சமநிலைத் தன்மையோடு கூடிய நடுநிலைமைப் பண்பையே ஆதரித்து வந்திருக்கிறது. தீவிரவாதச் சிந்தனையை மேலதிகச் சுமையாகக் கருதி புறக்கணித்திருக்கிறது. பல்வேறு சிந்தனா முகாம்களினது சுயாதீனமான தொழிற்பாட்டுக்கு புத்தளம் அங்கீகாரம் வழங்கியிருப்பது வரலாற்றுத் தவறு என்று குறிக்க முடியாது. மாறாக இஸ்லாமிய சிந்தனையின் வியாபகமான வளர்ச்சிக்கு தளம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான குறியீடாகும். சடங்கு சம்பிரதாயங்களின் கூட்டுக்கலவையினால் சுற்றிவளைக்கப்பட்டு இறுக்கமான கட்டுக் கோப்புக்குள் தொடர்ந்து இருந்து வரும் நகரங்களோடு அல்லது கிராமங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது புத்தளத்தின் பண்பு சார் நிலையை இது தொடர்பில் தனித்துவப்படுத்தி விளங்கிக் கொள்ள முடியும்.
புத்தளம் தகுதி காண் உலமாக்களை கொண்டுள்ள நகர். உலமாக்களை மதித்து, அவர்களது கண்ணியம் காத்து அவர்களது கருத்துக்களுக்கு உரிய இடம் வழங்குகின்ற ஊர் புத்தளம். அரசியல் வாதிகளும், அறிஞர் பெருமக்களும், துறைசார் நிபுணர்களும், சிவில் நிர்வாகிகளும், உலமாப் பெருமக்களும் ஒரே அணியாக நின்று சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண கருத்து ரீதியாக ஒன்றுபட்டமைக்கான சான்றாதாரங்ளை இந்த ஊரில் காண முடிகின்றது. இவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் பெரும் கருத்து மோதலாக மாறி சிந்தனாச் சிக்கலைத் தோற்றுவித்தது கிடையாது. அப்படியான ஒரு ஆரோக்கியமற்ற நிலை இருந்திருக்குமேயானால் புத்தளம் பெரிய பள்ளிவாயல் இந்த ஊருக்கு ஒரு தலைமையை வழங்கி இருக்க முடியாது. அது பைத்துஸ் ஸகாத் என்னும் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தையும் தோற்று வித்திருக்க முடியாது. அவ்வப்போது ஏற்படுகின்ற கருத்து வேறுபாடுகள் ஆன்மீக பண்பாட்டுப் பெறுமானங்கள் மூலம் நிறுக்கப்பட்டு பொது முடிவு எய்தப்பட்டமை புத்தளத்துக்கே உரிய தனிச் சிறப்பம்சமாகும்.
இதை விட மேலாக ஒன்றை இங்கு பத்திவைக்க ஆசைப்படுகின்றோம்.
புத்தளம் வந்தோரை வாழவைத்த பூமி! இனி வரும் காலங்களிலும் அது அவ்வாறான மண்வாசனை கொண்ட பூர்வீகப் பூமியாக இருக்க வேண்டும் என்பது எங்களது வேணவா!! வந்தோருக்கும் இருந்தோருக்கும் இடையிலே ஏற்பட்ட நியாயமான சில கருத்து வேறுபாடுகளும், விகற்பங்களும் ஆழ் மனதில் பதிந்துள்ள இஸ்லாமிய சகோதரத்துவத்தை பெயர்த்துவிடவில்லை என்பதையும் இங்கு பதிக்க விரும்புகிறோம்.
புத்தளம் இனங்களுக்கிடையிலான நல்லுறவை தொடர்ந்தும் பாரமரித்து வருகிறது. சர்வ மதங்களுக்கிடையிலான கருத்தாடல்கள், சிநேகபூர்வமான தொடரான சந்திப்புக்கள் மூலம் மதச்சகிப்புத் தன்மை தொடர்ந்தும் பேணப்பட்டு வருகிறது. எனவேதான் 1976 ஆம் ஆண்டு புத்தளம் சந்தித்த துரதிருஷ்டவசமான அசம்பாவிதத்திற்குப் பிறகு வேறொரு அசம்பாவித நிகழ்வை இந்த மண் சந்திக்க வில்லை.
தொடர்ந்தும் புத்தளம் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை இழந்து அவலத்தைச் சுமந்து வாழ்ந்த காலத்தே உள்ளூராட்சி மன்ற முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் அது இழந்து விடுமோ என்ற அச்ச நிலை தொடர்ந்தும் இருந்து வந்தது.
அல்ஹம்துலில்லாஹ்! புத்தளம் மீண்டும் உள்ளூராட்சி மன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துள்ளது. சமூக மாற்றம் என்பது ஒரு சிலர் சமூகத்துக்க வெளியே நின்று ஏதோ ஒன்றை செய்ய அநேகர் கைகட்டிப் பார்த்துக்கொண்டு பார்வையாளர்களாக நிற்பதல்ல! முழுச் சமூகத்தின் சரி அரைவாசிக்கும் அதிகமானோர் மாற வேண்டும் – அதுவே சமூக மாற்றம்!!
நாம் ஏற்கனவே சொன்னதைப் போல் புத்தளம் சமூக மாற்றத்திற்காக ஈந்து கனிந்துள்ளது! இது ஒரு நல்ல சகுணம்!!
ஏன் அரசியல் தலைமையும் சன்மார்க்கத் தலைமையும் சமூகமாற்றத்திற்காக இஸ்லாமியம் என்னும் நேர்கோட்டில் சந்தித்திட, டயலொக் ஒன்றை நடாத்திட முயற்சிக்கக் கூடாது….?!
ஓர் அறிஞனின் கருத்துடன் விடை பெறுகிறோம்;
உயர்ந்த உள்ளம் கருத்துக்களை விமர்சிக்கும்!
சராசரி உள்ளம் நிகழ்வுகளை விமர்சிக்கும்!!
தாழ்ந்த உள்ளம் தனிமனிதர்களை விமர்சிக்கும்!!!

Apr 17, 2011

அரிகோனி படுகொலையை ஹமாஸ் மற்றும் இஹ்வானுல் முஸ்லிமீன் வன்மையாக கண்டித்துள்ளன


S.M.மஸாஹிம்-(இஸ்லாஹி)
 இத்தாலி நாட்டை சேர்ந்த விட்டோரியோ அரிகோனி -Vittorio Arrigoni, 36- என்ற மனித உரிமை செயல்பாட்டாளர் பலஸ்தீனின் காஸாவில் இயங்கும் சிறிய தீவிரவாத முஸ்லிம்  குழு ஒன்றினால்  கடத்தப்பட்டு கொல்லபட்டுள்ளார் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது இந்த படுகொலை பயங்கரவாதத்தை ஹமாஸ் மற்றும் எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் ஆகிய அமைப்புகள் கடுமையாக  கண்டித்துள்ளன.

விட்டோரியோ அரிகோனி இத்தாலி நாட்டை சேர்ந்தவர் இவர் பலஸ்தீனியில் ஊடகவிளாளராகவும் எழுத்தாளராகவும் மற்றும் பலஸ்தீன் மனித உரிமை செயல்பாட்டாளருமாக செயல்பட்டு வந்துள்ளார் என்றும் குறிப்பாக காஸா மீனவர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலைகளை கண்காணிக்க படகு ஒன்றை கடலில் தயார் செய்து வந்துள்ளார் என்று பலஸ்தீன் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இவரின் பலஸ்தீன மக்களின் விடுதலை மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான கருத்துகளினால் இத்தாலி மக்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்டவர் என்பதுடன் இவரின் கருத்துகள் இத்தாலியில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவான களம் ஒன்றை உருவாக்கி இருந்தது என்று தெரிவிக்கபடுகின்றது இந்த கடத்தில் மற்றும் கொலையுடன் இஸ்ரேல் தொடர்பு பட்டுள்ளதாக ஹமாஸ் மறைமுகமாக தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.
விட்டோரியோ அரிகோனி பலஸ்தீனியில் இயங்கி வரும் the International Solidarity Movement -ISM- என்ற பலஸ்தீன் மக்கள் சார்பான அமைப்பு ஒன்றின் உருப்பினராகும் இவரின் கொலையுடன் அந்த அமைப்பின் மூன்று உறுபினர்கள் இது வரை பலஸ்தீனியில் கொல்லபட்டுள்ளனர். கொல்லபட்டுள்ள மற்ற இரு உருபினர்களும் இஸ்ரேலின் இராணுவத்தால் நேரடியாக கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
விட்டோரியோ அரிகோனி கடந்த பத்து வருடங்களாக பலஸ்தீன விடையத்தில் ஈடுபாடு கொண்டுள்ளதாகவும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக காஸாவில் பலஸ்தீன ஆதரவு செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் the International Solidarity Movement -ISM- தெரிவித்துள்ளது
இவர் கடத்தப்படுவதற்கு பிரதான காரணமாக முஸ்லிம் தீவிரவாத அமைப்பு ஒன்றின் தலைவர் அபூ வாலித் அல்மக்தாஸ் என்பவர் ஹமாஸ் நிர்வாகத்தாள் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார் அவரை ஹமாஸ் கடந்த வெள்ளிகிழமை மாலை ஐந்து மணிக்கு முன்னர் விடுவிக்கவேண்டும் அல்லது விட்டோரியோ அரிகோனி கொல்லப்படுவார் என்று அந்த குழு அறிவித்த போதும் விடுதலைக்கான கால எல்லை முடிவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் விட்டோரியோ அரிகோனி கொல்லபட்டுள்ளார் என்று பலஸ்தீன் தகவல்கள் தெரிவிக்கின்றது .
இந்த கடத்தலுடன் தொடர்பு பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படும் இருவரை ஹமாஸ் கைது செய்துள்ளது விட்டோரியோ  கொல்லபடுவதற்கு முன்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது ஆனால் குற்றாம் சட்ட பட்டுள்ள குழுக்கள் இந்த கொலையை தாம் செய்யவில்லை என்று மறுத்துள்ளது .
பலஸ்தீன் காஸாவிலும், மேற்கு கரையிலும் இவர் கொல்லப்பட்டமையை கண்டித்து ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது இதில் திரளான மக்கள் பங்குகொண்டுள்ளனர் .இந்த கடத்தல் கொலையுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்க படுவார்கள் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளதுடன் விட்டோரியோ அரிகோனி பலஸ்தீனர்களின் நண்பன் என்று தெரிவித்துள்ளது.
இவரை கடத்தியதாக தெரிவிக்கப்படும் அந்த சிரிய குழு இவரை கடத்திய பின்னர் பதிவு செய்த Youtube வீடியோ ஒன்றில் இத்தாலியை சேர்ந்த இவர் பலஸ்தீனியில் குழப்பம் விளைவித்தார் என்றும் இத்தாலி எதிர் நாடு என்றும் தெரிவித்துள்ளதுடன் இவர் உளவாளி என்று குற்றம் சாட்டவில்லை,  இவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் காஸாவில் வீடு  ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கபட்டார் என்பது குறிபிடத்தக்கது.
இஸ்ரேலில் படுகொலை செய்த  Rachel Corrie, இவர் ஒரு அமெரிக்கன்,  படுகொலை March 16, 2003, இவரும்   the International Solidarity Movement (ISM) என்ற அமைப்பின் உறுப்பினர்
இஸ்ரேலில் படுகொலை செய்த Tom Hurndall , இவர் ஒரு பிரிட்டிஷ், படுகொலை April 11, 2003, இவரும்   the International Solidarity Movement (ISM) என்ற அமைப்பின் உறுப்பினர்.
பலஸ்தீன தீவிரவாத குழு ? படுகொலை செய்த Vittorio Arrigoni, இவர் ஒரு இத்தாலியன் , படுகொலை Apral 14, 2011, இவரும் the International Solidarity Movement (ISM) என்ற அமைப்பின் உறுப்பினர்.

المشاركات الشائعة