மஸ்ஜிதுகள் முன்பாக பெளத்த மத ஊர்வலமான பெரஹரா செல்லும்போது பறை,மேளம் அடித்தும் குழல் ஊதியும் செல்வது தொடர்பாக முஸ்லிம்களின் கருத்தை அறிவதற்கான கூட்டம் திக்குவல்லை வெவுருகன்னல ரஜமஹா விகாரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது .
இங்கு உரையாற்றிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும பெரஹரா பொது வீதியால் செல்லும் போது எவரது அனுமதியையும் பெறத் தேவையில்லை. மகிந்த சிந்தனையின் கீழ் சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள மதவழிபாட்டுத் தலங்களின் முன்பாக பெரஹரா செல்வது தொடர்பாக அவர்களின் கருத்துக்களை அறியவேண்டியுள்ளது என்றும் அதன்காரணமாக திக்குவல்லை பகுதியில் முஸ்லிம்களின் கருத்துக்களை அறிவதற்காக இக்கூட்டத்தை நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அங்கு பலரும் தமது கருத்துகளை தெரிவித்துள்ளனர் அங்கு கருத்துரைத்துள்ள தென்மாகாண மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் சமானுதீன் 1915 ஆம் ஆண்டு கண்டியில் பள்ளிவாசல் முன்பாக பெரஹரா ஊர்வலம் மேளம் அடித்துச் சென்றதால்தான் சிங்கள,முஸ்லிம் கலவரம் ஏற்பட்டது. அதன் பின்னர் நாட்டில் ஒரு மதத்தினரின் வழிபாட்டுத் தலத்துக்கு முன்பாக வேறு மதத்தினரின் ஊர்வலம் வரும்போது சத்தம் இட்டு வருவதில்லை என்று தெரிவித்துள்ளார்
அத்போன்று திக்குவல்லை மின்ஹாத் தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.எச்.எம்.நியமதுல்லாஹ் கருத்துரைக்கையில்நீண்டகாலமாகவே சிங்களவர்களும் முஸ்லிம்களும் சகோதரர்களாகவும் ஐக்கியமாகவும் புரிந்துணர்வுடனும் வாழ்ந்து வருகின்றனர். எனவே இதில் களங்கம் ஏற்படுத்துவதற்கு எவராலும் முடியாது.
நீண்டகாலமாகவே பெரஹரா பள்ளிவாசல் முன்பாகச் செல்லும் போது பறை,மேளம் அடிப்பதில்லை. இந்த நடவடிக்கை பள்ளிவாசலுக்கும் முஸ்லிம்களுக்கும் செய்யும் மரியாதையும் கௌரவமுமாகும். இது குறித்து திக்குவல்லை முஸ்லிம்கள், முஸ்லிம் மதப் பிரமுகர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடிய பின்னரே எமது அபிப்பிராயத்தைத் தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக கண்டி மஸ்ஜிதுக்களின் நிர்வாக சபைகள் , கண்டி மாவட்ட ஜம்மியதுல் உலமா ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
No comments:
Post a Comment