இலங்கையில் வெளிநாட்டு இஸ்லாமிய போதகர்கள், ஆசிரியர்கள் , பேராசிரியர்கள் வதிவிட விசாக்களை பெற்றுகொள்ளவும், அவற்றை நீடிக்கவும் முஸ்லிம் மத கலாச்சார திணைகளத்தின் பரிந்துரைக்கு மேலதிகமாக குறித்த பிரதேசத்தின் பிரதேச செயலாளரின் பரிந்தரை கடிதம் தேவை என்று புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சு கோரியுள்ளது இது தொடர்பாக மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்
கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி இந்தியாவை சேர்ந்த மௌலான மௌலவி சைத்து முஹமத் சாலிஹு பாபுல் ஹுதா என்ற ஹன்தஸ்ச மின்ஹாஜியா அரபிக் கல்லூரி அதிபருக்கு வதிவிட விசா நீடிப்பு தொடர்பாக முஸ்லிம் மத கலாச்சார திணைகளத்தின் ஊடாக கோரப்பட்டபோது விரிவாகபுத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சு வதிவிட விசாவை நீடிப்பதற்கு குறித்த கிராம அதிகாரி மற்றும் பிரதேச செயலாளரின் பரிந்துரை கடிதங்களை கோரியுள்ளது என்று அறிய முடிகின்றது
முஸ்லிம் மத கலாச்சார திணைக்களம் இலங்கையில் உள்ள மஸ்ஜிதுகள், தக்கியாக்கள் மதரஸாக்கள் என்பனவற்றை அந்த திணைக்களம் உருவாக்கபட்ட 1980 ஆம் ஆண்டில் இருந்து கண்காணித்து வரும் நிலையில் பிரதேச செயலாளரின் பரிந்துரை கடிதம் கோரப்பட்டுள்ளது அனைத்து மஸ்ஜிதுகளும் , நிறுவனங்களும் இந்த முஸ்லிம் மத கலாச்சார திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் இருக்கும் போது அந்த திணைக்களத்தின் பரிந்துரை கடிதத்தின் பிரகாரமே அரசின் ஏனைய திணைக்களங்கள் செயல்பட்டு வந்துள்ளது இந்த நிலையில் பிரதேச செயலாளரின் பரிந்துரை கடிதம் கோரப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது
இந்த விடையம் தொடர்பாக மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் முஸ்லிம் மத கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் இஸ்லாமிய நிறுவங்களை கண்காணித்து வருவதுடன் அவைகளின் அரசின் திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்கள் ஆகிய வற்றினுடனான தொடர்புகளுக்கும் உதவி வருகின்றார் தற்போது அமைச்சின் அதிகாரிகள் வதிவிட விசா நீடிப்புக்கு கிராம அதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள் ஆகியோரின் பரிந்துரை கடிதங்களை கோருவதை காண்கின்றேன் அந்த அதிகாரிகளில் அதிகமானவர்கள் மஸ்ஜிதுகள் நிறுவனங்கள் தொடர்பான எந்தவொரு தகவலும் தெரியாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.