Search This Blog

Apr 1, 2011

சிரியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்: தாக்குதலுக்கான முன் ஆயத்தம்


சிரியாவில் இருக்கும் அமெரிக்கர்களை அங்கிருந்து 
உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் நாட்களில் அங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லிபியா மீதான தாக்குதல்களை ஆரம்பிக்க முன்பும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இதே போன்றதொரு அறிக்கையின் மூலம் லிபியாவில் இருந்த அமெரிக்கர்களை வெளியேறுமாறு கோரியிருந்தது.
அந்த வகையில் சிரியா மீதும் எதிர்வரும் நாட்களில் அமெரிக்கத் தாக்குதல் இடம்பெறும் வாய்ப்புள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதே நேரம் சிரியாவின் உள்நாட்டுக் கிளர்ச்சி தற்போதைக்கு கடும் தீவிரமடைந்து பெரும் போராக வெடிக்கும் அபாய கட்டத்துக்கு நகர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

المشاركات الشائعة