Search This Blog

Apr 7, 2011

மன்னாரில் ஓகஸ்ட் மாதம் மூன்று எண்ணெய் கிணறுகள் தோண்டப்படும்



மன்னார் பிரதேசத்தில் எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் எண்ணெய் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் கனிய வளங்கள் அமைச்சு அறிவித்துள்ளது மன்னார் பிரதேசத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் கொண்ட எட்டு இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன பிரதேசத்தில் எண்ணெய் வளப்படுகையை பொருத்து மேலதிக கிணறுகள் தோண்டப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அவைகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒப்பந்த அடிப்படையில் ஆய்வு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளன முதல் கட்டமாக மூன்று எண்ணெய் கிணறுகள் தோண்டபடவுள்ளது இந்த பணியை இந்தியா நிறுவனமான கெயிர் மேற்கொள்ளவுள்ளது என்று அறிய முடிகின்றது .
இதேவேளை மன்னார் கடல் பிரதேசத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு நடவடிக்கைகளை இவ்வருட இறுதியில் ரஷ்யா மேற்கொள்ளவுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்ய எண்ணெய் கம்பனிகளுடன் நடத்தியுள்ளார்
மன்னார் பிரதேசத்தில் இவ்வருடம் ஜூலை மாதம் எண்ணெய் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கெயிர் இந்தியா நிறுவனம் முன்னர் அறிவித்திருந்தது என்பது குறிபிடத்தக்கது எண்ணெய் அகழ்வுக்கான கப்பல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாய்வு நடவடிக்கைகள் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தது.

No comments:

Post a Comment

المشاركات الشائعة