Search This Blog

Apr 28, 2011

‘படை முகாம்களில் வதிவிட பயிற்சி; முஸ்லிம் மாணவிகளுக்கு பிரச்சினை’


2011ஆம் கல்வி ஆண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ள மாணவர்களுக்காக உயர்கல்வி அமைச்சு முப்படைகளின் நெறிப்படுத்தலின் கீழ் படை முகாம்களில் நடத்தப்படவுள்ள மூன்று வார வதிவிட தலைமைத்துவ பயிற்சிநெறி கலாசார ரீதியில் முஸ்லிம் மாணவிகளுக்கு பல்வேறு பிரச்சiனைகளை ஏற்படுத்தும் என மாற்றுக் கொள்கைக்கான பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் சஹ்பி எச். இஸ்மாயில் தெரிவித்தார்.
தமது கலாசாரத்தை இறுக்கமாக பின்பற்றும் முஸ்லிம் பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகளை இவ்வாறான பயிற்சி நெறியை தொடர்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என அவர் குறிப்பிட்டார்.
இத்தலைமைத்துவ பயிற்சிநெறி அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதனால் முஸ்லிம் மாணவிகள் தமது பல்கலைக்கழக கல்வியை கைவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என சஹ்பி எச். இஸ்மாயில் கூறினார்.
எனவே, முஸ்லிம்களின் கலாசாரத்தை கவனத்திற் கொண்டு குறித்த தலைமைத்துவ பயிற்சிநெறியிலிருந்து முஸ்லிம் மாணவிகளுக்கு விதிவிலக்கு அளிக்குமாறு மாற்றுக் கொள்கைக்கான பல்கலைக்கழக மாணவர் சங்கம் உயர்கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.-தமிழ் மிரர் றிப்தி அலி

No comments:

Post a Comment

المشاركات الشائعة