Search This Blog

Apr 20, 2011

யாழ் மீள்குடியேற்றம் இஸ்லாமிய மீள்குடியேற்றமாக அமைய வேண்டும்


கடந்த ஞாயிற்று கிழமை லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது என்று லண்டனில் இருந்து அலி ரிஸான் lankamuslim.org க்கு தெரிவித்துள்ளார் 20 ஆண்டுகளின் பின்  தாயக மண்ணில் குடியேறுவதில் ஏற்படும் சவால்கள் , பிரச்சினைகள் அவற்றை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் மற்றும் வெளிநாடுகளில் குறிப்பாக பிரிட்டனில் வாழும் யாழ் முஸ்லிம்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்புகள் தொடர்பான அந்த கலந்துரையாடலுக்கு பிரதம அதீதியாக யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி எம் .எம் .எம் ரமீஸ் கலந்து கொண்டுள்ளார்.
 இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து ஏற்பாடுகளையும் லண்டன் யாழ்ப்பாண முஸ்லிம் அசோசியேசன்- Jaffna Muslim Association- மேற்கொண்டுள்ளது யாழ்ப்பாண முஸ்லிம் அசோசியேசன் செயலாளர் பாசில் தலைமயில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர்  விரிவாக  ரமீஸ் 9000ஆயிரம் யாழ் முஸ்லிம் குடும்பங்கள் புத்தளம் , நீர் கொழும்பு, கொழுப்பு ஆகிய பிரதேசங்களில் செறிந்து வாழ்வதாகவும் இவர்களில் 400 குடும்பங்கள் மட்டும் தற்போது மீள் குடியேறி யுள்ளதாகவும் மீள் குடியேற்றம் சவால் நிறைந்ததாக உள்ளதாகவும் முஸ்லிம் வர்த்தகர்களின் உதவியால் இதுவரை 35 வீடுகள் கட்டப்பட்டும் மேலும் பல வீடுகள் திருத்தபட்டும் உள்ளதாகவும் மீள் குடியேற்றதுக்கு அரசு உதவிகளை செய்யவில்லை என்றும் அரசு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொண்டாலும் அவை நேரடியாக யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு உதவவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் வெறும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றமாக இருக்கக்கூடாது அது இஸ்லாமிய மீள்குடியேற்றமாக அமைய வேண்டும் மீள் குடியேற்றத்துக்கு உதவுவது வாஜிப் என்றும் தெரிவித்துள்ளார் மேலும் அவர் உரையாற்று கையில் யாழ்ப்பாணத்திலும் அதற்கு வெளியிலும் இயங்கும் 13 அமைப்புகளை கொண்ட கூட்டமைப்பு ஒன்று உருவாக்கபட்டுள்ளதால் அதன் ஊடாக பல சாதகமான விடையங்கள் மேற்கொள்ளபடுவதாகவும்  யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் உடனடியாக இடம்பெறும் என்பதை எதிர்பார்க்க முடியாது என்றும் கடந்த 20 வருடங்களாக வேறு பிரதேசங்களில் வாழந்து வருபவர்கள் உடனடியாக மீள் குடியேற வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது ஆனால் அதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் இடம்பெறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி லண்டன் லூட்டன் பகுதியிலும் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது
யாழ்பாணத்தில் 20 ற்கும் அதிகமான மஸ்ஜிதுகளும் பல பாடசாலைகளும் உள்ளது எனினும் சில மஸ்ஜிதுகளும் ஒரு பாடசாலையும் மட்டும் இயங்கும் நிலையில் உள்ளது முஸ்லிம் சமூகம் தான் இழந்த பூமியை மீட்பதும் அதனை மீண்டும் இயக்குவதும் இஸ்லாம் போதிக்கும் முக்கிய கடமைகளில் ஒன்றாகும் என்பதும் முஸ்லிம் சமூகம் தனது இருப்பை இஸ்திரப்டுத்த தேவையான மக்கள் தொகையுடன் மீள் குடியேறவேண்டும் என்பதும் தற்போது இருக்கும் பிரதேசங்களும் பாதுகாக்க பட்டதாக இருக்கவேண்டும் என்பது இஸ்லாம் வலியுறுத்தும் கடமையாகும்.
யாழ்பாணத்தில் தற்போது வர்த்தகத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களை விடவும் அதிகமான எண்ணிக்கையில் வெளி மாவட்ட முஸ்லிம்கள் குறிப்பாக அக்குரணை, கண்டி , காத்தான்குடி , கல்முனை முஸ்லிம் வர்த்தகர்கள் வெற்றிகரமான வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது சிறப்பம்சமாகும்.

No comments:

Post a Comment

المشاركات الشائعة