Search This Blog

Apr 3, 2011

சவால்களுக்கு முகங்கொடுக்க இஸ்லாமியப் பெண்கள் வேண்டும்



மாறிவரும் உலகின் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய இஸ்லாமியப் பெண்கள் உருவாக வேண்டியது காலத்தின் தேவையாகும். என தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.பாஸில் தெரிவித்துள்ளார்.
க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டு உயர்தரத்திற்குள் நுழையவுள்ள மாணவிகளுக்கான பாடத் தெரிவு தொடர்பான கருத்தரங்கு மருதமுனை தாறுல் ஹுதா அரபு இஸ்லாமியக் கற்கைகள் மகளிர் கல்லூரியில் அதிபர் மௌலவி எம்.எல்.எம்.முபாறக் தலைமையில் நடைபெற்றபோதே விரிவுரையாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்  விரிவாக இப்பணியைச் சுமந்திருக்கும் தாறுல்ஹூதா மகளிர் அரபுக் கல்லூரியின் பணி பாராட்டத்தக்கதாகும் அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
இஸ்லாத்தையும் அதனை ஏற்றுள்ள நாடுகளையும் அழித்துவிடும் சதியில் மேற்குலகு பகடைக்காயாகி வருகின்றது. சிந்தனா சக்தியினால் முன்னேறிவரும் இஸ்லாத்தின் எழுச்சியினைத் தாங்க முடியாத மேற்கத்தைய பயங்கரவாதத்தின் ஊடுருவலைதத் தடுக்க இஸ்லாமிய உலகுகள் விழிப்படைய வேண்டும். வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய இவ்விழிப்புணர்வின் முதல் பங்குதாரர்கள் பெண்களேயாவர்.
முஸ்லிம் பெண்களின் கல்வி இன்று பெருவளர்ச்சி கண்டு வருகின்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு வரும் பெண் மாணவிகளின் எண்ணிக்கை எழுபது வீதத்தையும் தாண்டியுள்ளது. வெறுமனே இக்கல்வியானது உலகாயித நோக்கங்களைக் கொண்டதாக அமையாமல் இஸ்லாத்தின் தூய வழியினைப் புரிந்து அதனை முன்னெடுக்கும் கல்வியாக அமைய வேண்டும்.
அரபு,இஸ்லாம் ஆகிய பாடங்களைக் கற்றுக்கொண்டு வரும் மாணவர்களின் மேம்பாட்டுக்கென தனியான கல்விப்பீடம் இன்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் நியமனம், இஸ்லாமிய வங்கி முறைகள் என்பவற்றில் இணையக்கூடிய பாடத்திட்டம். இக்கற்கைகள் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தாறுல்ஹுதா மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
அம்பாறை திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.எல்.அன்வர்தீன் உரையாற்றுகையில்;
இவ்வுலகில் நாம் கற்பதன் நோக்கம் வாழ்வதற்கான தொழில் ஒன்றைப் பெறுவதற்காகவே. ஆனால்,ஒரு இஸ்லாமியனின் இலக்கு மறுமையில் ஈடேற்றம் பெற வேண்டுமென்பதே. இந்த வகையில் இவ்விரு இலக்குகளையும் ஒன்றிணைப்பதே இஸ்லாமியக் கல்விப்பீடங்களின் பணியாகும். இதனை தாறுல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரி அடைய எத்தனிப்பது சிறப்பிற்குரியது-தினக்குரல்

No comments:

Post a Comment

المشاركات الشائعة