ஆபூ அய்யூப் முகம்மது இஸ்மாயில் -நளீமி-
OurUmmah: முஸ்லிம் பெண்களின் ஆடைகளில் ஒன்றான நிகாப் அணிவதற்கு தடையை பிரான்சு அரசாங்கம் கொண்டுவந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் சகோதரி உம்முமர்யாமின் முஸ்லிம் பெண்கள் எதிர் நோக்கும் சவால்களும் அவற்றைத் தீர்பதற்கான வழிமுறைகளும் என்ற உரையிலிருந்து சில விடயங்களைப் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நாடுகிறேன்.
OurUmmah: முஸ்லிம் பெண்களின் ஆடைகளில் ஒன்றான நிகாப் அணிவதற்கு தடையை பிரான்சு அரசாங்கம் கொண்டுவந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் சகோதரி உம்முமர்யாமின் முஸ்லிம் பெண்கள் எதிர் நோக்கும் சவால்களும் அவற்றைத் தீர்பதற்கான வழிமுறைகளும் என்ற உரையிலிருந்து சில விடயங்களைப் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நாடுகிறேன்.
நான்கு முறை பிரித்தானியாவின் பிரதமராக பதவி வகித்த வில்லியம் கிலாட்ஸ்டோன் 1894ம் ஆண்டு பாராளுமன்றத்திலே ஆற்றிய உரையொன்றின்; ஒரு பகுதியில் சொன்னார் “ முஸ்லிம் பெண்களிடமிருந்து அவர்களது ஹிஜாப்பை பறித்து அதனை குர்ஆனை மூடிவைக்கும் ஒரு துணியாக மாற்றாத வரைக்கும் கிழக்கிலே (அதாவது உத்மானிய கிலாபத்திலே)எமது நிலை மேம்பட மாட்டாது” ,
பிரித்தானிய பிரதமரின் மிகவும் வெளிப்படையான இந்தக்கூற்று எமக்கு வலியுறுத்துவது என்ன? முதலாவது : மேற்குலகின் இஸ்லாத்திற்கு எதிரான போராட்டத்தில் முஸ்லிம் பெண்களுக்கு எதிரான அவர்களது ஆடைக்கு எதிரான போராட்டம் என்பது காலங்காலமாக தொடர்ந்து வந்த ஒன்று என்பதும் .
இரண்டாவது : இஸ்லாத்துக்கெதிரான போராட்டத்தில் முஸ்லிம் பெண்களுக்கெதிரான தாக்குதல் மிகவும் முக்கியம் பெறுகிறது என்பதுமாகும். இதே தொடரில்; தான் இஸ்லாமிய எழுச்சியின் முக்கிய அடையாளமாக முஸ்லிம் பெண்ளும், அவளது ஆடையும் இஸ்லாத்தின் எதிரிகளால் நோக்கப்படுகிறது. இதனால் தான் இஸ்லாத்திற்கு எதிரான அவர்களது முயற்சியில் பெண்களும் அவர்களது ஹிஜாபும் பலமாக சாடப்படுவதைக் காண்கிறோம். இன்றைய உலகில் நாங்கள் தான் நாகரீகம் அடைந்தவர்கள் என்று வாதாடுபவர்கள் முஸ்லிம் பெண்களை பிற்போக்கு வாதிகளாகவும்., நாகரீகம் தெரியாதவர்களாகவும்., சமூகத்துக்கு எந்த வித பங்களிப்பும் செய்யத் தகுதி அற்றவர்களாகவுமே சித்தரிக்க முயற்சிக்கின்றார்கள்..
இஸ்லாத்தின் எதிரிகள் இப்படி எதிர்ப்பது ஒரு பக்கம் இருக்க.. மறு பக்கத்தில் இஸ்லாத்தைத் தமது வாழ்வு நெறியாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களில் பலர் முஸ்லிம் பெண் என்பவள் வீட்டிற்குள் முடங்கிக்கிடப்பவள், சமைத்துத்தருபவள், வீட்டின் பணிகளை மட்டும் மேற்கொள்பவள், பிள்ளைகளை வளர்ப்பதில் தனது வாழ்நாளை கழிப்பதற்காக படைக்கப்பட்டவள் போன்றதொரு தோரணையில் அவளை நடாத்தி வருவதைப் பெரும் பாலும் காண்கிறோம்.
அண்மைக்கால அனுபவங்களைப் நாம் நன்கு அறிவோம் முஸ்லிம் பெண்ணுக்கும் அவளது; ஆடைக்கும் எதிரான போர் அதன் உச்ச கட்டத்தை அடைந்து விட்டது என்பதை பிரான்சின் அதிபா நிக்கொலா சர்கோசி தமது நாட்டின் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது. அவர் தனது உரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் ‘முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிவது மார்க்க அடையாளமல்ல அடிமைத்தனத்தின் அடக்குமுறையின் அடையாளம் இழிவு தாழ்வின் அடையாளம் எமது நாட்டில் சகல விதமான சமூக வாழ்விலிருந்தும் தன்னை ஒதுக்கிக் கொண்டு திரைக்குப் பின்னால் பெண்கள் சிறை வைக்கப்படுவதை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.’
இது போன்ற தாக்குதல்களின் விளைவு பொது இடங்களில் ஹிஜாப் அணிவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டு விட்டது. பிரித்தானியா உட்பட ஐரோப்பாவின் ஏனைய நாடுகளிலும் இத்தகைய தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற பேச்சுக்கள் மிகவும் வலுப்பெற்று வருவதும் இங்கே மறுப்பதற்கில்லை.
எனவே இங்கே ஒரு முக்கிய விடயத்தை நாம் மிகத்தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அதாவது முஸ்லிம் பெண்களுக்கு எதிரான, குறிப்பாக அவர்களின் ஆடைக்கு எதிரான இத்தகைய தாக்குதல்கள் இஸ்லாத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு முக்கிய பரிமாணமே ஒழிய அது ஒரு தனிமைப்பட்ட விடயமல்ல.
இத்தகைய தாக்குதல்களை முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் பெண்களும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதை புரிவதற்கு இத்தகைய தாக்குதல்களின் பின்னணியில் காணப்படும் அவர்களின் நோக்கங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றில் பிரதான முன்று காரணங்கள் இருக்கின்றன. ஓன்று: மேற்குலகப் பெண்கள் விடுதலையும் சுதந்திரமும் அடைந்துள்ளார்கள். இவர்களைப் போலவே முஸ்லிம் பெண்களும் சுதந்திரம் பெற வேண்டும் என்ற மேற்கின் போலித்தனமான கோஷமே முதலாவது காரணம். அதாவது பெண்ணியம் அல்லது பெண் விடுதலை என்ற பேரில் மேற்குலகப் பெண்களின் வாழ்க்கை எந்த சந்தேகமுமின்றி சீரழிந்து அதல பாதாளத்தில் கிடக்கிறது.இதனை நடுநிலையாக நின்று பார்ப்பவர்கள் எவரும் மறுக்க மாட்டார்கள்.
இத்தகைய அசிங்கமான பாதையிலேயே முஸ்லிம் பெண்களையும் அழைத்துச்சென்று அவர்கள் இஸ்லாமிய விழுமியங்களையும், ஒழுக்கங்களையும் தவிடுபொடியாக்கி தமது சமூகச் சீரழிவுகளை மறைக்க நினைக்கின்றார்கள். இவர்களின் திட்டங்கள் மேற்குலக அரசுகளாலும், மீடியாக்களாலும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. இது முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் முக்கிய சவாலாகும்.
மேற்கு விரும்புகின்ற பெண் விடுதலை எவ்வளவு தூரம் மனித வாழ்வை சீரழித்துள்ளது என்பதை அவர்களின் புள்ளிவிபரங்களிலிருந்தே நாம் தெளிவாக காணக்கூடியதாக உள்ளது.
பெண்களை மோகப்பொருளாகப் பயன்படுத்தி இளம்யுவதிகளை யெல்லாம் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி போதைப் பொருளுக்கு அடிமையாக்கி பலரும் பணம் சம்பாதிப்பதை அறிவோம். இந்த நிலைக்கு நமது பெண்களையும் இழுத்துச் செல்வது அவர்களின் நோக்கம்..எமது பெண்களிடம் இருக்கின்ற இஸ்லாம் என்கின்ற அடையாளத்தை விட்டும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுவதற்கு பயன் படுத்துகின்ற வார்த்தை ஜாலமே பெண் விடுதலை பெண் சுதந்திரம் என்பதாகும்.
முஸ்லிம் பெண்களை நோக்கிய அவர்கள் பயன்படுத்தும் இரண்டாவது யுக்கிதான் கிழக்கிலே அதாவது எமது முஸ்லிம் நாடுகளில் எமது முஸ்லிம் பெண்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை அடக்குமுறைகளை காரணங்காட்டி அவற்றை தந்திரமாக இஸ்லாத்துடன் இணைத்து போலிப்பிரச்சாரகம் செய்கின்றனர். துரதிஸ்டவசமான இந்நிலைக்கு எமது நாடுகளில் முஸ்லிம் சமூகம் இஸ்லாத்திற்கு முரணாக பின்பற்றி வரும் விடயங்கள் காரணமாக அமைந்து விடுகின்றன.
உதாரணமாக: ‘தலபுல் இல்மி பரீளதுன் அலா குள்ளி முஸ்லிமின்’ ‘அறிவைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை’ என்று நபிகளார் கூறினார்கள்.
அறிவைத் தேடுவதை ஆணுக்குப்போலவே பெண்ணுக்கும் இஸ்லாம் கடமையாக்கி இருந்தாலும் கல்வித்துறையில் பெண்களை மிகவும் பின் தங்கியவர்களாக வைத்துக் கொண்டிருப்பதும் கனவனின் கைக்குள் அடிமையைப் போல் இருப்பதே நல்ல மனைவிக்கு அடையாளம் என்று தவறான கருத்தில் பெண்களை அதட்டி வைத்துக் கொண்டிருப்பதும் வரதட்சனைக் கொடுமை சிறு வாய்த் தர்க்கத்திற்கெல்லாம் தலாக் சொல்லும் துஷ் பிரயோகமும் பலதார மணம் என்ற அனுமதியை மிகவும் துஷ்பிரயோகம் செய்வதும் சமூகப்பணியில் பங்கேற்க அனுமதிக்காதிருப்பதும் பொறுத்தப்பாடு பார்க்காது வற்புறுத்தல் திருமணங்கள் செய்விப்பதும் honor killing எனப்படும் கௌரவக் கொலைகள் புரிவதும் பார பட்சம் காட்டி பிள்ளைகளை வளர்ப்பதும் முறை தவறிவிட்ட மஹர் கொடுப்பனவும் என பல பிரச்சினைகளைக் காணலாம்.
இவ்வாறு நமது நாடுகளில் முஸ்லிம் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு இஸ்லாம்தான் காரணம் என அவர்கள் நிறுவ முற்படுகிறார்கள். இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்பே தனது ஆட்சியாளரை தெரிவுசெய்யும் உரிமையிலிருந்து, தனது கனவனை விரும்பினால் தலாக் செய்யும் உரிமை வரைக்கும் பெண்களுக்கான உரிமைகளை வழங்கியிருந்தும் எமது சமூகத்தில்; இஸ்லாத்தை முழமையாக பின்பற்றாமலும், அறியாமையாலும் அவர்களுக்கு இஸ்லாம் வழங்கிய பல உரிமைகளை பறித்து வைத்துள்ளோம்.
இந்நிலை பெண்களை மோகப்பொருளாக தரம் தாழ்த்தியும், விலைமாதுகளாகவும், வியாபாரப்பொருட்களாகவும் பார்த்து வருகின்ற மேற்குலகிற்கு சாதாகமான சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறது. நாம் எமது நாடுகளில் முஸ்லிம் பெண்களை அவர்களுக்குரிய அந்தஸ்த்தில் வைத்து பாதுகாக்காமைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
ஓன்று இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை முழுமையாக எமது சமூகம் வழங்கத் தவறியிருப்பதும் இரண்டாவது இஸ்லாம் என்று எண்ணிக் கொண்டு கிழக்கின் பிற மத கலாச்சாரங்களைப் இது நாங்கள் காலங்காலமாக பின்பற்றி வருகின்ற கலாசாரங்கள் என்று பிதற்றிக்கொண்டு பின்பற்றி வருகின்றைமையும் பிரதானமாக காரணங்களாகும்.
இப்படி முஸ்லிம் பெண்களை முஸ்லிம் நாடுகள் நடத்துகின்ற விதத்தைப் பார்க்கின்ற மேற்குலகு இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று தமது வாதத்தை உறுதிப்படுத்த பயன்படுத்தி வருகிறது. இந்த நிலைமை எமது நாடுகளில் தொடரும் காலம் எல்லாம் மேற்குலகின் இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரத்துக்கு நாமே எண்ணை ஊற்றி வருகின்றோம் என்பதே உண்மை.
மூன்றாவது காரணம் மேற்கு விரும்புகின்ற வாழ்வு முறையைப் புறக்கணித்து விட்டு கிழக்கில இருக்கினற் மரபு முறை கலாச்சார வாழ்வு முறையையும் ஒதுக்கி விட்டு இஸ்லாம் பெண்களைப் பார்க்கின்ற விதத்தில் தூய இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றமை யாலும் தாக்கப்படுகிறாள்.
அதி வேகமாக இஸ்லாம் வளர்ந்து வருகின்றமையும் அதன் எழுச்சியும் இன்று மேற்கிற்கு இருக்கின்ற முழுமுதற் பிரச்சனை. அவ்வாறெனில் இஸ்லாமிய எழுச்சியின் மிக முக்கிய பௌதீக அடையாளமாக ஆண்களை விட பெண்களே விளங்குவதால் அவளை தாக்குவதை இஸ்லாமிய அடையாளத்தை தாக்குவதாகவே இஸ்லாத்தின் எதிரிகள் கருதுகிறார்கள். எனவே அதன் காரணமாகவும் அவர்கள் அவளை எதிர்க்க நினைக்கிறார்கள்.
முஸ்லிம் பெண்கள் தமது கலாசார ஆடைகளிலிருந்து விடுபட்டு தற்போது இஸ்லாமிய ஆடைகளை அணிகின்ற வீதம் முஸ்லிம் உலகில் மட்டுமல்ல மேற்குலகிலும் மற்றும் கிழக்கு தேசங்களிள எல்லாம் அதிகரித்து வருகின்றமை முஸ்லிம் சமூகத்தின் அல்லது இஸ்லாத்தின் பிரசன்னத்ததை உலகிலே பட்டவர்த்தனமாகக்காட்டப்படும் காட்சியாக அவர்கள் காண்கின்றார்கள். முஸ்லிம் உலகில் ஆழமாக இஸ்லாத்தை பின்பற்றி ஒழுகுகின்ற இஸ்லாமிய குடும்பங்கள் உருவாகி வருகின்றமையும் அதற்கு முஸ்லிம் பெண்களின் பங்களிப்பும் குழந்தை வளர்ப்பும் இஸ்லாமிய சமூக எழுச்சிக்கு முக்கிய பங்களித்து வருகின்றமை மேற்குலகால் தீவிரமாக நோக்கப்படுகின்றது.
இவ்வாறு இன்றைய உலகில் உம்மத் எதிர்நோக்கும் முக்கிய சவால்களில் முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் மிகப்பெரிய பங்கை வகிக்கின்றது. எனவே இந்த நிலையிலிருந்து மீண்டு வருவதற்கான மிகமுக்கிய தேவை ஒட்டு மொத்த முஸ்லிம் உம்மத்திற்கும் இருக்கின்றது. அதிலும் குறிப்பாக எமக்கெதிராக முன்வைக்கப்படுகின்ற சிந்தான ரீதியான, கலாசார ரீதியான மற்றும் பௌதீக ரீதியான தாக்குதல்களிலிருந்து நாம் விடுதலையாவதற்கும் – எமது கண்ணியம் காக்கப்படுவதற்கும் நாம் என்ன செய்தாக வேண்டும் என்பதை நாம் மிகத்தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
உலகில் பெண்களுடைய உரிமைகளும் கண்ணியமும் பாதுகாக்கப்பட்ட நிலையில் பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்தோம். ஆட்சியாளனும் ஆட்சியும் பலவீனமாக இருந்தாலும் பெண்களுடைய உரிமைகளும் கண்ணியமும் அவர்களால் பாதுகாக்கப்பட்டதைக் கண்டோம்.
முஃதஸிம் பில்லாஹ் என்ற கலீபாவின் ஆட்சியின் போது ஒரு காபிர் ஒரு முஸ்லிம் பெண்ணை அவமதித்தான் என்பதற்காக..அவர் தனது படையைத் திரட்டி காபிர்களோடு போராடி முஸ்லிம் பெண்களுடைய உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாத்தமை மிக அழகிய முன்மாதிரியாகும். இன்று பலஸ்தீனிலும் காஷ்மீரிலும் ஈராக்கிலும் அப்கதானிஸ்த்தானிலும் முஸ்லிம் பெண்கள் எதிர் நோக்கும் சவால்கள் ஒன்றிரண்டல்ல.
மேற்கிலே இஸ்லாமிய எதிர்ப்பு அலைகள் கருத்தாக மட்டுமில்லாமல் தாக்குதல்களாக உருப்பெற்றிருப்பதைக் காண்கிறோம். இந்தப் பெண்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாக்கப்பது யார்? நுபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இன்னமல் இமாமு ஜுன்னா’ நிச்சியமாக ஆட்சியின் தலைவர் தான் கேடயம். மேலும் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல் இமாமு ராஇன் வஹவ மஸ்ஊலுன் அன் ரஇய்யதிஹி’ ஆட்சியின் தலைவர் பொறுப்பு தாரி அவர் அவரது பொறுப்பு பற்றி கேட்கப்படுவார்.
இப்படியான ஆட்சியும் ஆட்சித்தலைவரும் உலகிலிருந்து நீக்கப்பட்டு 86 வருடங்கள் ஆகின்றன முஸ்லிம் ஆட்சியாளர்கள் என கூறக்கூடிய எவரும் முஸ்லிம் பெண்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாப்பது ஒரு புறம் இருக்கட்டும் அவர்கள் தான் இஸ்லாத்தின் எதிரிகளின் இஸ்லாத்துக்கு எதிரான திட்டங்களை நடைமுறைப்படுத்தக கூடியவர்களாக உளளனர்.
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்கின்ற அரசாங்கம் இல்லாததன் காரணமாக முஸ்லிம் பெண் தொடர்ந்தும் அவமதிக்கப்படுகிறாள் எனவே இந்த இஸ்லாமிய ஆட்சியை மீண்டும் உலகில் நிலைநாட்டுவதற்காக வேலை செய்வது எம்மீது கட்டாயக் கடமையாகிறது இஸ்லாமிய ஆட்சிக்காக எப்படி வேலை செய்வது?
இஸ்லாத்தை சமூக அரங்கிலே நிலை நாட்டுவதற்கு சகாபாப் பெண்மணிகளைப் போல் பாடுபடவேண்டும் அதறகான நடை முறை சாத்தியமான செயற்திட்டமாக பின்வரும் அம்சங்களை கூறலாம்.
1. இஸ்லாமிய கிலாபா ஆட்சியால் மாத்திரமே பெண்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாக்க முடியும்.
இந்த யதார்த்தத்தை உண்மையை அறிவு பூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் விளங்கிக் கொள்ளுதல்.. 2. அறிவு தேடுவது எமது கடமை என்பதை உணர்ந்த பின்பு வெறுமனே தனிப்பட்ட இபாதத்துக்காக மட்டும் அதனைத் தேடாது சம்பூரணமாக இஸ்லாத்தைப் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு தேடிக் கற்க வேண்டும். இஸ்லாமிய பொருளாதாரம் சமூகவியல் குற்றவியல் அரசியல் என எல்லா வற்றையும் ஆழமாக கற்க வேண்டும். 3. இஸ்லாத்தின் பால் அழைப்பது எமது கடமை என்பதை உணர்த த பிறகு பிறரைச் சந்திக்கின்ற எல்லா சந்தர்ப்பத்திலும் இஸ்லாத்தை அழகிய வாழ்வு முறையாக சமூகத்திலே நடை முறைப்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி பேசுவதும் அதற்காக பாடுபடுவதும் அவசியமாகும். 4. இறுதியாக சஹாபாப் பெண்மணிகளே எமது உதாரண புருஷிகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த யதார்த்தத்தை உண்மையை அறிவு பூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் விளங்கிக் கொள்ளுதல்.. 2. அறிவு தேடுவது எமது கடமை என்பதை உணர்ந்த பின்பு வெறுமனே தனிப்பட்ட இபாதத்துக்காக மட்டும் அதனைத் தேடாது சம்பூரணமாக இஸ்லாத்தைப் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு தேடிக் கற்க வேண்டும். இஸ்லாமிய பொருளாதாரம் சமூகவியல் குற்றவியல் அரசியல் என எல்லா வற்றையும் ஆழமாக கற்க வேண்டும். 3. இஸ்லாத்தின் பால் அழைப்பது எமது கடமை என்பதை உணர்த த பிறகு பிறரைச் சந்திக்கின்ற எல்லா சந்தர்ப்பத்திலும் இஸ்லாத்தை அழகிய வாழ்வு முறையாக சமூகத்திலே நடை முறைப்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி பேசுவதும் அதற்காக பாடுபடுவதும் அவசியமாகும். 4. இறுதியாக சஹாபாப் பெண்மணிகளே எமது உதாரண புருஷிகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தை பூரணமாக நடை முறைப்படுத்தும் பணியில் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களுக்கு எல்லாச் சந்தர்ப்பத்திலும் பக்க பலமாக இருந்த கதீஜாவைப் போல் பூரண இஸ்லாமிய அறிவைப் பெற்று அதனைப 50 வருடங்களுக்கு மேலாக போதித்து வந்த ஆஇஷாவைப் போல் பல யுத்தங்களில் கலந்து போராடிய வீரத் தாய் உம்மு அம்மாராவைப் போல் இஸ்லாத்தில் இறைபாதையில் கொல்லப்பட்ட முதலாவது நபர் தியாகிகளின் தாய் சுமைய்யாவைப் போல் வயோதிப வயதிலும் இஸ்லாமிய அழைப்பில் மும்முரமாக ஈடுபட்டு வந்த அஸ்மா பின்தி அபீ பக்ரைப் போல்
நாம் ஒவ்வொருவரும் இன்ஷா அல்லாஹ் மாற வேண்டும்
தலைவர்களையும் வீரர்களையும் அழைப்பாளர்களையும் அறிஞர்களையும் உருவாக்குகின்ற முஸ்லிம் மகளாகவும் மனைவியாகவும் தாயாகவும் மாற வேண்டும் என்ற ஆசையையும் ஆர்வத்தையும் வளர்ப்போமாக.
நாம் ஒவ்வொருவரும் இன்ஷா அல்லாஹ் மாற வேண்டும்
தலைவர்களையும் வீரர்களையும் அழைப்பாளர்களையும் அறிஞர்களையும் உருவாக்குகின்ற முஸ்லிம் மகளாகவும் மனைவியாகவும் தாயாகவும் மாற வேண்டும் என்ற ஆசையையும் ஆர்வத்தையும் வளர்ப்போமாக.
No comments:
Post a Comment