Search This Blog

Apr 1, 2011

புகுஷிமா அணு உலை: மண்ணில் புதைக்க ஜப்பான் அதிரடி முடிவு



ஜப்பானில் கடந்த மார்ச் 11 ம் திகதி நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் 27652 பேர் பலியானார்கள்.
மேலும் அவற்றின் தாக்குதலால் புகுஷிமாவில் உள்ள அணு மின் நிலையத்தில் 4 அணு உலைகள் வெடித்து சிதறின. அதில் இருந்து கதிர்வீச்சு வெளியேறியது.
அந்த கதிர்வீச்சு மக்களை தாக்கியது. மேலும் குடிநீர், பால் மற்றும் உணவு பொருட்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வெடித்து சிதறிய அணு உலைகளை குளிர்வித்து கதிர்வீச்சு வெளியேறுவதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து அணு உலைகளின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தியும் சுத்தமான தண்ணீரை ஊற்றி குளிர்வித்தும் வருகின்றனர். இருந்தும் கதிர்வீச்சு பரவுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஜப்பானில் வெளியேறிய கதிர்வீச்சு தென் கொரியா, சீனா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு காற்றில் பரவி வருகிறது.
எனவே கதிர்வீச்சை முற்றிலும் தடுக்க ஜப்பான் அரசு அதிரடி முடிவை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதன்படி புகுஷிமாவின் அணு உலைகளை சிமெண்ட் கான்கிரீட் மூலம் மூடி அதை அப்படியே மண்ணில் புதைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐப்பான் பிரதமர் நேட்டோ கான் இதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த முடிவை அணுவியல் நிபுணர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தற்போது அதை மூடுவதற்கான தொழில் நுட்ப சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகின்றனர். இதற்கிடையே உலக அளவில் அணு கொள்கைகளை சீரமைப்பது குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான கூட்டத்தை பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி நடத்துகிறார். அக்கூட்டம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

المشاركات الشائعة