வன்னி மாவட்டத்தில் மன்னார், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, இடம்பெயர்ந்து புத்தளத்தை அண்டிய பிரதேசங்களிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் மீண்டும் தங்கள் முன்னைய வசிப்பிடங்களில் தேர்தல் இடாப்புகளில் தமது பெயர்களை பதிவு செய்து கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு உரிய தீர்வுகளை காணும் முகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியின் பிரதிநிதிகள் நேற்று திங்கட்கிழமை தேர்தல் ஆணையாளர் திரு மஹிந்த தேசப்பிரியவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாரூக், பிரதித்தலைவர் பாரூக் மஜீத், அரசியல் பீட உறுப்பினர் சட்டத்தரணி மில்ஹான், முல்லைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பீட உறுப்பினர் நஜாத் ஆகியோரும் இடம்பெற்றனர்.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களின் மேன்முறையீடுகளை சீர்தூக்கி பார்க்குமாறு தாம் விடுத்த வேண்டுகோளை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக் கொண்டதாக கூறிய நீதியமைச்சர் ஹக்கீம், பல பெயர்கள் தேர்தல் இடாப்புகளில் இருந்து நீக்கப்படுகின்ற நிலைமை தோன்றுகின்ற சூழ்நிலையில் அதுபற்றி மீள் பரிசீலனை செய்யுமாறு தாம் விடுத்த வேண்டுகோளையும் கவனத்திற் கொள்வதாக அவர் உறுதியளித்துள்ளார்.
வாக்காளர் இடாப்பில் பெயர் நீக்கப்பட்ட வர்களின் பெயர்களை மீண்டும் சேர்ப்பதற்காக குறிப்பிட்ட சில தினங்களை அதற்காக ஒதுக்கி விசாரணை மேற்கொள்ளவும் தேர்தல் ஆணையாளர் இணக்கம் தெரிவித் திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
அதேநேரம் ஏற்கனவே மன்னாருக்கு வந்து உரிய விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின்னர் தமது வசிப்பிடத்தை சரிவர உறுதிப்படுத்துவதற்கு தேவையான போதிய ஆவணங்கள் இல்லாத கார ணத்தால் தமது பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் அங்கு சென்று விசாரணைக்கு தோற்றுவது அவசியமில்லை என்றும், கிராம சேவை அலுவலர்களை கொண்டு அத்தகையோரின் பெயர்களை அத்தாட்சிப் படுத்திக் கொள்ள முடியும் என்றும் தேர்தல் ஆணையாளர் அங்கீகாரம் அளித் ததாகவும் அமைச்சர் கூறினார்.
அந்த அடிப்படையில் 2010ம் ஆண்டு தேர்தல் இடாப்பில் தமது பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் உள்வாங்கப் படுவதற்கு ஓரளவு வாய்ப்பு ஏற்பட்டுள்ள போதிலும், இதே நியதி அடுத்தடுத்த தேர்தல்களிலும் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நியதி இருக்கின்ற காரணத்தினால் எல்லா பிரதான அரசியல் கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகளை அழைத்து, இனி மேல் இதனை எவ்வாறு கையாளலாம் என்பது குறித்து விரைவில் ஒரு பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தேர்தல் ஆணை யாளர் முன்வந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வன்னியில் தேர்தல் இடாப்புகளில் பெயர்களை பதிவு செய்து கொண்ட பின்னர் அங்கு நிரந்தரமாக பிரசன்னமாயிராது தொழில் போன்ற காரணங்களின் நிமித் தம் வேறு மாவட்டங்களில் வசிக்கும் அப்பகுதி மக்கள் தமது வாக்குகளை வன்னி தேர்தல் மாவட்டத்தில் செலுத்துவதற்கு முடியும் எனவும் தேர்தல் ஆணையாளர் கூறினார்.
வன்னி மாவட்ட தேர்தல் இடாப்புகளில் பெயர்களை பதிவு செய்து கொள்வதில் தலைதூக்கியுள்ள சிக்கல்களை சீர்செய்து கொள்ளும் நோக்கத்தில் தாம் பிரதி தேர்தல் ஆணையாளர் முஹம்மது அவர் களை அங்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் மன்னார், உதவித் தேர்தல் ஆணையாளர் கருணாநிதி, புத்தளம் உதவித் தேர்தல் ஆணையாளர் நபீல் ஆகியோருக்கு அது தொடர்பாக உரிய பணிப்புரை விடுத் திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
-தினகரன்
No comments:
Post a Comment