கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் போதாமையால் பொதுமக்கள் சுகாதார சேவைகளை பெறமுடியாது பெரும் அவதியுறுவதாக சுட்டிகா ட்டப்பட்டுகிறது. 80 ஆயிரம் வரையான மக்கள் வாழ்கின்ற கிண்ணியாவின் ஆதார வைத்தியசாலையில் 8 வைத்தியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர் இந்த வைத்தியர்களுக்குத் 32 டாக்டர்கள் தேவை உள்ளபோதும் . நீண்ட காலமாக இவ் வெற்றிடங்கள் நிரப்பப் படாமலேயே காலம் கடத்தப்படுவதாகவும் இதனால் பொது மக்கள் பெருஞ் சிரமங்களை அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை 55 ஆயிரம் மக்களைக் கொண்ட தெஹியத்த கண்டியவின் வைத்தியசாலையில் 85 வைத்தியர்களும், 46 ஆயிரம் மக்களைக் கொண்ட கந்தளாய் வைத்தியசாலையில் 65 வைத்தியர்களும் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது விரிவாக கிண்ணியாவின் ஆதார வைத்தியசாலையில் 8 வைத்தியர்களே வெளிநோயாளர் பிரிவு, வாட் சுற்று , சத்திர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு என எல்லாப் பகுதிகளையும் கவனிக்க வேண்டிய நிலையில் டாக்டர்களும் பெரிதும் கஷ்டங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கபடுகின்றது
No comments:
Post a Comment