Search This Blog

Apr 13, 2011

முஸ்லிம் காணிகள் பறிபோகும்போது முஸ்லிம் அரசியல் வாதிகள் மௌனம் ?



அம்பாறை மாவட்டத்தின் முஸ்ஸிம் மக்களுக்குச் சொந்தமான பெருமளவான நிலப்பரப்புகள் பெரும்பான்மை இனத்தவர்களால் அப கரிக்கப்பட்டுள்ளன எனவும் இதனைக்கூட தட்டிக்கேட்க முடியாத நிலையிலேயே ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்ஸிம் அரசியல் வாதிகள் உள்ளனர் என்பதனையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவத்துள்ளார்.
பொத்துவில் முஸ்லிம்கள் பெரும் தொகை நிலங்களை இழந்து வருகின்றனர் அதேபோன்று அட்டாளச்சேனை அஸ்ரப் நகர் முஸ்லிம்கள் தமது காணிகளை பறிகொடுத்துள்ளனர் இவைகள் பற்றி எதிர் தரப்பில் இருந்து குரல் எழுப்பிய முஸ்லிம் அரசியல் வாதிகள் இன்று ஆளும் தரப்புடன் இருப்பதால் விரிவாக இவைகள் பற்றி இன்று பேசுவதில்லை என்று சுட்டிகாட்ட படுகின்றது என்பது குறிபிடத்தக்கது
மேலும் மன்னார் மாவட்டம் தொடர்பாக கருத்துரைத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்டத்தின் தெற்குப் பக்க எல்லைப் பகுதியில் அரசாங்கத்தின் அனுசரணையுடன் பெரும்பான்மை இன மக்கள் மிக வேகமாகக் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களால் கூடத்தட்டிக் கேட்க முடியாத நிலையில் மரமுந்திரிச் செய்கைக்குப் பெயர்பெற்ற கொண்டாச்சிப் பகுதி உட்பட வளம் நிறைந்த பிரதேசங்கள் படைத்தரப்பினரின் உதவி ஒத்தாசையுடன் அபகரிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார் என்று தகவலகள் தெரிவிகின்றன .

No comments:

Post a Comment

المشاركات الشائعة