Search This Blog

Apr 3, 2011

அமெரிக்காவில் அல் குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டமையை எதிர்த்து ஆப்கானில் மூன்றாவது நாளாக ஆர்பாட்டம்



கடந்த வெளிகிழமை தொடக்கம் அமெரிக்காவின் புளோரிடா கிறிஸ்தவ தேவாலயத்தில் அல் குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டமைக்கு ஆப்கான் மக்கள் தமது எதிர்ப்பை காட்டும் முகமாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இன்று அந்த ஆர்ப்பாட்டம் கந்தகாரில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரின் தலைமையில் அல் குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டது புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலய பாதிரியார் Terry Jones இதற்கு முன்னரும் பல தடவைகள் அல் குர்ஆன் பிரதிகளை எரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றனர். 
இவர் அண்மையில் அல் குர்ஆனை எரிக்கும் நாள் ஒன்றை பிரகடனப்படுத்தி அந்த தினத்தில் அல் குர்ஆனை எரிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார் பின்னர் பகிரங்கமாக எரிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்ட பின்னர் மீண்டும் இவர் கடந்த மார்ச் மாதம் ௨௦ ஆம் திகதி மீண்டும் அல் குர்ஆன் பிரதிகளை எரித்துள்ளார்
சம்பவத்திற்கு தமது எதிர்ப்பைக் காட்டும் முகமாக ஆப்கான் மக்கள் வட ஆப்கான் நகரான மஷார்-ஹீ-சரீப் நகரில் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் கடந்த வெள்ளிகிழமை ஈடுபட்டுள்ளனர் ஐநா அலுவலகத்தை சூழ இடம்பெற்ற இந்த அமைதியான ஆர்பாட்டத்தை கலைக்க போலீஸ் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் அதன்போது ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியுள்ளது.
இந்த சம்பவத்தில் சிலர் ஐநா அலுவலகம் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர் இந்த சம்பவத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் 10 பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றது இந்த சம்பவத்தில் ஐவர் நேபாளிகள் எனவும் மற்றையவர்கள் நோர்வே சுவீடன், ரஸ்யா, ரோமானியா மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.Video

No comments:

Post a Comment

المشاركات الشائعة