Search This Blog

Apr 13, 2011

யாழ் புதிய சோனகர் தெரு புனரமைக்கப்படுகின்றது



யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட யாழ் முஸ்லிம் பகுதியில் ஒன்றான புதிய சோனகர் தெரு -பொம்மைவெளி- பகுதியை மாநகர சபையினால் கடந்த பெப்ரவரி மாதம் முதல் வீதி புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது என்று அறிய முடிகின்றது பல முஸ்லிம் குடும்பங்கள் மீள் குடியேறியுள்ள நிலையிலும் மிகவும் நீண்ட காலம் புனரமைக்கப்படாது இருந்த அந்த பகுதி கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் புனரமைக்கப்பட்டு வருவதாக தெரிகின்றது
இந்த நடவடிக்கையின் கீழ் ஒரு சமாந்தர வீதியும் , ஒன்பது குறுக்கு வீதிகளும் உள்ளடங்கலாக 1.25 கி.மீ வீதியும் 8 மதகுகளுடன் வடிகால்களும் இத்திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது விரிவாக இத்திட்டத்திற்கு 16.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு-கிழக்கு புனர் நிர்மான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் நிதியில் யாழ் மாநகரசபையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ள படுகின்றது

No comments:

Post a Comment

المشاركات الشائعة