Search This Blog

Apr 7, 2011

பிரான்ஸ் புதிய அமெரிக்காவாக உருவெடுத்துள்ளது: நிபுணர்கள் குற்றச்சாற்று


பிரான்ஸ் புதிய அமெரிக்காவாக மாறி வருகிறது. பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி போரை தூண்டும் நபராக உருவெடுத்துள்ளார் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேற்கத்திய நாடுகளில் போரை அதிகம் தூண்டி விடும் நாடாக பிரான்ஸ் கருதப்படுகிறது. இந்தப் போர் நடவடிக்கைகள் குறித்து சர்கோசி கூறுகையில்,"ஜனநாயகத்தின் பேரிலேயே இது போன்ற தாக்குதல்" என்று சமாதானம் தெரிவித்தார். சர்கோசியின் இந்த நடவடிக்கைகள் அவருக்கு எதிராக அமைந்து விடும் என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரெஞ்சு ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது: உள்நாட்டு விவகாரத்தில் காலனி ஆதிக்கம் ஈடுபடாது என்றார். துனிஷியாவின் நாட்டு கலவரத்தின் போது சர்கோசி இவ்வாறு கூறினார்.
இரண்டு மாதங்களுக்கு பின்னர் சர்கோசி தனது நிலைப்பாட்டை எந்த வித கூச்சமும் இல்லாமல் மாற்றிக் கொண்டார். இந்த மாற்ற நடவடிக்கை காரணமாக, பிரான்சின் முன்னாள் காலனி ஆதிக்கப் பகுதியாக இருந்த ஜவரிகோஸ்ட் நாட்டின் ஜனாதிபதி அரண்மனையில் பிரான்ஸ் படைகள் தாக்குதல் நடத்தின.
ஜவரிகோஸ்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் அலசானே குவாட்டாரா வெற்றி பெற்றார். இருப்பினும் தற்போதைய ஜனாதிபதி லாரண்ட் காக்போ பதவி விலக மறுத்து வருகிறார். இதனால் அங்கு உள் நாட்டு போர் மூண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு ஐ.நா படைகள் முகாமிட்டுள்ளனர். இந்த கூட்டுப் படையில் இடம் பெற்றுள்ள பிரான்ஸ் ஜவரிகோஸ்ட்டை அழித்து வருகிறது.

No comments:

Post a Comment

المشاركات الشائعة