Search This Blog

Apr 7, 2011

ஜப்பானில் மீண்டும் பூமி அதிர்ச்சி



ஜப்பானில் சற்று முன்னர் ஏற்பட்ட பூமி அதிர்வால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த அதிர்வு சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், சுனாமி மற்றும் தொடர் பூமி அதிர்வுகளால் பாதிக்கபட்ட பகுதியிலேயே மீண்டும் ஏற்பட்டுள்ளது.
கடந்த சுனாமி அனர்த்தம் அணு உலைகளை பெரிதும் பாதித்துள்ள நிலையில் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளது .ஜப்பானின் வட கிழக்கு கடற்கரை பகுதியான ஹோன்சு பகுதியை குலுங்க வைத்த இந்த பூமி அதிர்ச்சி, ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி இருந்ததாகவும் இந்த அதிர்வினால் டோக்கியோவின் கட்டங்கள் அதிர்ந்ததாகவும், ஜப்பான் அறிவித்து உள்ளது.
உலகில் இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம் என்று பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் நிபுணர்கள் குழு தெரிவித்திருந்தது குறிபிடதக்கது ஏப்ரல் 3ம் நாளுக்கும் 10ம் நாளுக்கும் இடையில் ஜப்பானிலும், ஏப்ரல் 6ம் நாளுக்கும் 10ம் நாளுக்கும் இடையில் சீனாவிலும், ஏப்ரல் 10ம் நாளுக்கும் 15ம் நாளுக்கும் இடையில் துருக்கி, ஈரான், நியுசிலாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளையும் பூகம்பங்கள் தாக்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்திருந்தமையும்
இந்த ஆறு பூகம்பங்களில் ஒன்று இந்தோனேசியாவில் ஏற்படலாம் என்றும், அது இலங்கைலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

المشاركات الشائعة