கடந்த கல்வி பொது சாதாரண தர பரீட்சையில் கொழும்பு மாவட்டத்தில் குறிப்பிட்ட பாடசாலைகளில் முஸ்லிம் மாணவ, மாணவிகள் பெளத்த பாடம், கத்தோலிக்க பாடம் ஆகியவற்றில் ‘ஏ’ சித்திகளை பெற்றுள்ளனர் கொழும்பு மாளிகாவத்தை கோமாலி பெளத்த பாடசாலையில் பல முஸ்லிம் மாணவிகள் இஸ்லாம் பாடத்தை எடுக்காது பெளத்த பாடத்தை சாதாரண தர பரீட்சையில் தெரிவு செய்துதுள்ளனர் இவர்களில் 30முஸ்லிம் மாணவிகள் பெளத்த பாடத்தை தெரிவு செய்து பரீட்ச்சையில் ‘ஏ’ சித்திகளை பெற்றுள்ளனர்.
அதேபோன்று ராஜகிரிய ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கத்தோலிக்க பாடத்தில் 15 முஸ்லிம் மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாகவும் பிரதி கல்வி பணிப்பாளர் அலவி தெரிவித்துள்ளார் மேல் மாகாண பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக மேல் மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார் விரிவாக
கடந்த கல்வி பொது சாதாரண தர பரீட்ச்சையில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று கொண்ட குருநாகல் மாவட்டத்தை சேர்ந்த ரிஸ்வான் என்ற மாணவனும் பெளத்த பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்றிருந்தார் என்பது குறிபிடத்தக்கது குறித்த பாடசாலைகளில் இஸ்லாம் பாட ஆசிரியர்கள் இல்லாமை இஸ்லாம் போதிக்கப்படமை இதற்கான பிரதான காரணமாக சுட்டிக்காட்டப்படுவதுடன் எதிர்காலத்தில் ஆரோக்கியமற்ற முஸ்லிம் தலைவர்கள் உருவாக காரணமாக அமையும் என்றும் சுட்டிகாட்டப்படுகின்றது
No comments:
Post a Comment