என்னிடம் வழமையாக கேட்கும் கேள்விகளின் பின்னணியில் சர்வதேச புலனாய்வு இருப்பதாகத் தெரிகின்றது நீதியமைச்சர் ரவூப் ஹகீம்:
வெளிநாட்டு தூதுவர்கள் தன்னை சந்திகும்போதெல்லாம் இலங்கையின் அரபு மதரஸாக்களில் போதிக்கும் ஆசிரியர்கள் எந்த நாட்டில் இருந்து வருகின்றனர் மதரஸாக்களுக்கு பணம் எங்கிருந்து வருகின்றது என்ற கேள்விகளையே தொடர்ந்தும் கேட்டு வருவதாக நீதியமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ள கருத்தில் இலங்கையில் அரபு மதரஸாக்கள் படும் பாடு எமக்குத்தான் தெரியும் அவற்றை நிர்வகிக்க தேவையான பொருளாதார உதவிகள் இன்றி அவர்கள் கஷ்டபடுவதை நாம் அறிவோம் ஆனால் வெளிநாட்டு தூதுவர்களோ எமது மதரஸாக்களுக்கு வேறு நாடுகள் உதவி செய்வதாக அல்லது பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கின்றார்கள் அதனை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே இந்த கேள்வியை என்னிடம் திரும்ப திரும்ப கேட்கின்றார்கள்.
வெளிநாட்டு தூதுவர்கள் என்னிடம் வழமையாக கேட்கும் கேள்விகளின் பின்னணியில் சர்வதேச புலனாய்வு இருப்பதாகத் தெரிகின்றது குறிப்பாக சில ஊடகங்கள் இவ்வாறான விடையங்களை கற்பனையில் எழுதி பிரச்சனைகளை உருவாக்க விரும்புகின்றன அதன் ஒரு விளைவாகவே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையான உறவின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருப்பதாக தற்போது புதிய கதைகள் கட்டவிழ்த்து விடப்படிருகின்றது எனவே ஊடகங்களும் ஊடகவியாலர்களும் இவ்வாறான சந்தர்பத்தில் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார்