ஏமன் நாட்டில் அமைதியான அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.
அதே நேரத்தில் ஏமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேவை எதிர்த்து பல ஆயிரம் போராட்டக்காரர்கள் சானா நகரிலும், இதர முக்கிய நகரங்களிலும் எதிர்ப்பு போராட்டம் மேற்கொண்டனர்.
ஏமன் நாட்டில் கடந்த 2 மாதமாக ஆட்சியாளர்களுக்கு எதிராக தீவிரமான போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். புரட்சியாளர்களின் எதிர்ப்பை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள ஏமன் நிர்வாகம் உரிய மாற்றத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளது.
இது குறித்து பிரான்ஸ் அயல்துறை அமைச்சக பெர்னார்டு வாலரே கூறுகையில்,"அந்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படுவதைத் தவிர வேறு நிலைக்கான வாய்ப்பு இல்லை" என்றார்.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் அப்துல்லா சலே எதிர்ப்பாளர்கள் சானா பல்கலைகழகத்திற்கு அருகே முகாமிட்டுள்ளனர். அங்கு பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி அப்துல்லா சலே தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில்,"எனது மக்களுக்காக என்னைத் தியாகம் செய்ய தயாராக உள்ளேன். மக்களுக்காக எனது ரத்தம் உள்பட அனைத்தையும் இழக்கத் தயாராக உள்ளேன்" என்று முழங்கினார்.
ஏமன் நாட்டின் தெற்குப் பகுதியில் சலேவுக்கு எதிராக பெருந்திரளாக மக்கள் கூடி இருந்தனர். செங்கடலின் ஹொடிடா பகுதியில் மோதல் வெடித்தது. சலேவை பதவியில் இருந்து நீக்குவது குறித்து அமெரிக்க அச்சம் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment