Search This Blog

Apr 20, 2011

நில அதிர்வு ஆய்வு நடைபெறுகின்றது


ஹம்பாந்தோட்டை, கிரிந்த பிரதேசத்தில் நில அதிர்வு உணரப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்துள்ளார் . கிரிந்த, யால சந்திக்கு அருகில் சமகி மாவத்தையில் வசிக்கும் சிலர் நேற்று முன்தினமிரவு இரவு 10.10 மணி முதல் இரவு 10.15 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இரண்டொரு வினாடிகள் இந்த அதிர்வை உணர்ந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்ட இணைப்பாளர் எம்.ஜி.ஏ. நந்தன கூறியுள்ளார்.
இந்த அதிர்வு சுமார் ஐநூறு சதுர மீற்றர்கள் பரப்பில் தான் உணரப்பட்டுள்ளது. இதனால் 8 வீடுகளின் சுவர்களில் வெடிப்புக்களும், நிலத்தில் சிறு பிளவுகளும் ஏற்பட்டுள்ளன. அதில் ஒரு வீட்டின் கொங்ரீட்டும் இடிந்து விழுந்துள்ளது. இங்கு சில வீடுகளின் நிலத்தில் சுமார் 20 சென்றி மீற்றர்கள் நீளத்திற்கு சுமார் 6 மில்லி மீற்றர்கள் அகலத்திற்கு சிறு பிளவுகளும் ஏற்பட்டுள்ளன விரிவாக இச்சமயம் வீடுகளில் சில பொருட்கள் உருண்டு விழுந்ததையும், வீடுகளின் ஜன்னல்கள் ஆடியதையும் பிரதேச வாசிகள் உணர்ந்துள்ளனர் பூகம்பம் மற்றும் நில அதிர்வுகளை பதிவு செய்யும் இயந்திரங்களில் மேற்குறிப்பிட்ட நேரத்தில் எதுவுமே பதிவாகவில்லை என்றும் தொடர்பான மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளபடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

المشاركات الشائعة