Search This Blog

Apr 21, 2011

ஜெருசலத்தின் கீழ் தோண்டப்பட்டுள்ள சுரங்கங்களை இஸ்ரேல் ஒன்றாக இணைக்கின்றது


இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு ஜெருசலம் பிரதேசத்துக்கு கீழாக கடந்த 40 ஆண்டுகளாக பலஸ்தீனர்களின் குடியிருப்புக்கள் , மஸ்ஜிதுகள்போன்ற வற்றுக்கு கீழால் நிலத்தை அகழ்ந்து வருகின்றது இதுவரை அகழபட்டுள்ள சுரங்கங்களை ஒன்றாக இணைத்து ஒரு சுரங்க வலையமைப்பை ஒன்றை துறக்க தற்போது  ஏற்பாடுகளை செய்து வருகின்றது.
இந்த சட்டவிரோத நிலஅகழ்வு மஸ்ஜிதுல் அக்ஸா பகுதியையும் விட்டுவைக்கவில்லை இந்த அகழ்வினால் மஸ்ஜிதுல் அக்ஸா பகுதியில் ஆபத்தான நில வெடிப்புகளும் குழிகளும் ஏற்பட்டு வருகின்றது தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு மஸ்ஜிதுல் அக்ஸாவின் அருகிலும் 65 மற்றும் 22 மீட்டர் அகலம் கொண்ட இரு நிலச் சுரங்க வழிகளை இஸ்ரேல் ஏற்கனவே அகழ்ந்துள்ளது.
அந்த வழிகளினூடாக அல்ஷரப் மாவட்டத்தை அல்புர்கா சதுக்கத்துடனும், அக்ஸா மஸ்ஜிதின் அல்மகர்பா வாயிலுடன் மற்றும் ஏனைய சுரங்க பாதைகளையும் இணைக்கவும் கடந்த 40 வருடங்களாக ஜெருசலம் பிரதேசத்தில் தோன்றியுள்ள சுரங்க பாதைகளை ஒன்றாக இணைக்கும் முயற்சியை தற்போது இஸ்ரேல ஆக்கிரமிப்பு அரசு தொடங்கியுள்ளது
இந்த அகழ்வுகள் முயற்சிகள், குடியேற்ற நகரசபை, யூத தாயக பாதுகாப்பு அபிவிருத்தி நிறுவனம், தொல்பொருள் ஆராய்ச்சி அதிகார சபை, மற்றும் தேசிய காப்புறுதி நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடனும், யூத பயங்கரவாத அமைப்பான பரூச் க்லெய்னின் நிதியுதவியுடனும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கைகளை இஸ்லாமிய கல்வியியல், அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (ISESCO) உட்பட பல பொது அமைப்புகள வன்மையாகக் கண்டித்து வந்துள்ளது இஸ்ரேல் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணரான Yoram Tseverir மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு அடியில் அகழ்வது தவறானது என்று குறிபிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

المشاركات الشائعة