மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் இஸ்லாம் பாடத்தை பயிலுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் ஞாயிற்று கிழமைகளில் அஹதியா வகுப்புகளை நடாத்த அனுமதி மறுக்கபடுகின்றமை , தமிழ் மொழி பாடசாலைகளில் இஸ்லாம் பாட ஆசிரியர்கள் , மௌலவி ஆசிரியர்கள் இல்லாமை ஆகிய விடையங்கள் பற்றி முஸ்லிம்கள் தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் மேல் மாகாண முதலமைச்சரும் மேல் மாகாண கல்வியமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவுடன் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
அங்கு உரையாற்றியுள்ள பிரதி கல்வி பணிப்பாளர் அலவி கடந்த கல்வி பொது சாதாரண தர பரீட்சையில் 30 முஸ்லிம் மாணவிகள் இஸ்லாம் பாடத்தை தெரிவு செய்யாது பெளத்த பாடத்தை தெரிவு செய்து பரீட்ச்சையில் ‘ஏ’ சித்திகளை பெற்றுள்ளனர் அதேபோன்று ராஜகிரிய ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் 15 முஸ்லிம் மாணவர்கள் கத்தோலிக்க பாடத்தில் சித்தி பெற்றுள்ளனர் இது போன்று பல சவால்களும் பிரச்சினைகளும் மேல் மாகாணத்தில் விரிவாக உள்ள பல பாடசாலைகளில் உள்ள மாணவ மாணவியருக்கு உள்ளது இந்த நிலையை மாற்றியமைக்க சமுகத்தில் உள்ளவர்கள் ஆகக் குறைந்தது அஹதியா பாடசாலை வகுப்புகளை கட்டாயமாக மேல் மாகாணத்தில் நடைமுறைபடுத்த வேண்டும் இதற்கான பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் அஹதியா வகுப்புகளை நடாத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும்
மேல் மாகாணத்தில் முஸ்லிம்கள் சிதறி வாழ்வாதாலேயே தமது வீட்டுக்கு அண்மையில் உள்ள சிங்களமொழி மூல பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்த்து விடுகின்றனர் இம் மாணவர்கள் தமது பாடசாலையில் ஆரம்ப பிரிவில் இருந்து உயர் தரம் வரை பௌத்தம் அல்லது கத்தோலிக்கம் கற்பிக்க படும்போது அதையே இம் மாணவர்களும் கற்று வருகின்றனர் இறுதியில் அப் பாடத்தையே அவர்கள் சாதாரண தர அல்லது உயர் தர பரீட்சையில் பாடமாக எடுக்கவேண்டிய கட்டாயமும் ஏற்படுகின்றது ஆனால் இந்த பாடசாலைகளில் இஸ்லாம் பாடத்தினை கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை முஸ்லிம்கள மேல் மாகாணத்தில் ஆசிரியர்களாக நியமனம் பெறுவது மிகக் குறைவாகவே காணப்படுகின்றது கொழும்பு மாவட்டத்தில் ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இங்கு கருத்துரைத்துள்ள மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க அடுத்த இரண்டு மாதங்களுக்குள் கல்வி அமைச்சினால் புதிய ஆசிரியர்கள் நியமனம் வழங்கப்படவுள்ளது அதன்போது ஆசிரியர்களை பெற்று கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் மேலும் மேல் மாகாணத்தில் உள்ள 110 தமிழ் மொழி பாடசாலைகளில் 60 முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன இப் பாடசாலைகளில் ஞாயிற்று கிழமைகளில் அஹதியா வகுப்புகளை நடாத்த நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார் ஹம்பகா மாவட்டத்தில் முஸ்லிம் பாடசாலைகளில் ஞாயிற்று கிழமைகளில்அஹதியா வகுப்புகளை நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment