ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுள்ள செச்னியாவின் விடுதலை போராளிகள் அமைப்பின் தலைவரான டோகா உமரோ கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா-ரஷ்யா டுடே- தெரிவித்துள்ளது ரஷ்யாவின் உளவு மற்றும் யுத்த விமானங்கள் இன்று செச்னியா காட்டு பகுதி ஒன்றில் நடாத்திய தாக்குதலில் 17 போராளிகள் கொல்லபட்டுள்ளனர் அவர்களில் தலைவரான டோகா உமரோ -அபூ உஸ்மான்- உட்பட முக்கிய தலைவர்களான சுபியான், ஹம்சத் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த தகவல் தொடர்பாக செச்னியா போராளிகள் அமைப்பு எந்த செய்திகளையும் வெளியிடவில்லை ரஷ்யாவின் வேறு செய்திகள் கொல்லப்பட்ட 15 போராகளில் டோகா உமரோ இல்லை என்றும் சுபியான், ஹம்சத் ஆகிய தளபதிகள் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது விரிவாக
பல நூற்றாண்டுகளாக செச்னியா முஸ்லிம்கள் கம்யூனிஸத்துகு முன்பும் பின்பும் ரஷ்யாவுக்கு எதிரானபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பல நூற்றாண்டுகளாக அடகு முறைகளை சந்தித்த இந்த செச்னியா மக்கள் 1991 ம் ஆண்டில் கம்யூனிஸ சோவியத் யூனியன் சிதறிய பிறகு சோவியத் ஒன்றியத்தின் அழிவுடன் சுதந்திர செச்னியா என்ற தமது இஸ்லாமிய சுதந்திர தாகத்தை நிறைவேறுவதற்கான வாய்ப்பாக செச்னியா முஸ்லிம்கள் கருதினர்.
ஆனால் போரிஸின் மற்றும் விளாடிமிர் பூட்டின், டிமிட்ரி மெட்வடே ஆகியோரின் ஆக்கிரமிப்புக் கொள்கை அதற்குத் அனுமதிக்கவில்லை மேற்கு நாடுகளுக்கு ஈராக்கை போன்று ரஷ்சியாவுக்கு மிக அதிகமான எண்ணை வளமிக்க நாடான செச்னியா கிடைத்துள்ளது செச்னியாவை தனது ஆக்கிரமிப்பில் வைத்திருக்க செச்னியாவின் சுதந்திரப் பிரகடனத்தை அதன் முனைப்புகளை ரஷ்யா கொடூரமாக ஒடுக்கிவந்துள்ளது .
ரஷ்யா 1994-தொடக்கம் 1996 வரை . ரஷ்யா மிக கொடூரமாக யுத்தம் ஒன்றை நடத்தியது ஷாமில், அஸ்லான் மாஸ்ஹடோவ் போன்ற போராளிகளால் வழி நடத்தபட்ட இந்த முதல் கட்ட இரண்டு வருட எதிர் சமரில் 75,000 ரஷிய இராணுவ ஆக்கிரமிப்ளர்கள் கொல்லப்பட்டும் , 15,000 வரை போராளிகள் சஹீதாகியும் பொதுமக்கள் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுமுள்ளனர்.
போராளிகளில் ஒரு பகுதியினர் தற்போது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் செச்னியா ரஷ்யாவுடனான உடன்படிக்கையின் கீழ் நிர்வாகம் செய்து வருகின்றனர் ஆனால் டோகோ உமரோ தலைமையினான போராளிகள் விடுதலை என்ற இலக்குடன் தொடராக போராடிவருகின்றனர் கடந்த ஜனவரி மாதம் மொஸ்கோவில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு இந்த அமைப்பு உரிமை கோரியிருந்தது என்பது குறிபிடத்தக்கது இவர்கள் போராட்டத்துக்கு கையாளும் சில வழிமுறைகள் கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இன்று வரை தொடராக போராடிவரும் செச்னிய போராளிகள் பல தலைவர்களை ஒன்றன்பின் ஒன்றாக இழந்துள்ளனர் தற்போது மிகவும் கூடிய நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றனர் தற்போது இந்த போராட்டம் டோகா உமரோ என்பவரினால் வழிநடாத்தப்பட்டு வருகின்றது என்பது குறிபிடத்தக்கது.
இது தொடர்பாக இன்று ரஷ்யாவின் ஊது குழலான ‘ரஷ்யா டுடே’ ஒளிபரப்பிய செய்தி
Thanks : OurUmmah
No comments:
Post a Comment