Search This Blog

Mar 19, 2011

லிபியா கடாபி படைகள் மீது தாக்குதல் நடத்த ஐநா அனுமதி !

 ஐநா பாதுகாப்பு சபை இன்று லிபியாவின் மக்களை பாதுகாக்க தேவையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது இந்த சட்ட அனுமதி மூலம் லிபியாவின் விமானப்டை மற்றும் ஏனைய படைகள் மீதும் மற்ற நாடுகள் தாக்குதல் நடத்த அனுமதி வழங்கியுள்ளது இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் இன்னும் சில மணிகளில் தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
பிரிட்டன் ,பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் வழிகாட்டலில் லிபியா கடாபி படைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்க படுகின்றது இதில் பல அரபு முஸ்லிம் நாடுகள் கலந்து கொள்ளும் என்று தெரிவிக்கபட்டுள்ளதுகிழக்கின் மக்கள் படைகளிடம் இருந்த எண்ணெய் வளம் கொண்ட பிரதேசங்கள் கடாபிக்கு விசுவாசமான படைகள் கைப்பற்றி வருகின்றன விரிவாக லிபியாவில் கடுமையான தொடர் சண்டை நடந்து வருகின்றது லிபியாவின் முக்கிய எண்ணெய் கிணறுகளை கொண்ட கிழக்கின் எண்ணெய் நகர்களான ரஸ் லணுப் பகுதி மற்றும் பின் ஜவாத் உட்டபட பல பிரதேசங்களில் கடுமையான சண்டை நடைபெற்று கடாபிக்கு விசுவாசமான படைகள் உள்நுளைந்துள்ளன என்பது குறிபிடத்தக்கது.

காடாபியின் யுத்த நிறுத்தம் :
ஐநா தீர்மானத்தை தொடர்ந்து கடாபி நிர்வாகம் உடனடியான யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது கடாபி நிர்வாகத்தின் வெளிநாட்டு அமைச்சர் மூஸா கூஸா தமது நாடு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் யுத்த நிறுத்தத்தை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் தனது விமானங்களை லிபியா நோக்கி அனுப்பியுள்ளதாக தெரிவித்து சில நிமிடங்களில் இந்த கடாபியின் அறிவிப்பு வெளிவந்துள்ளது எனினும் இந்த யுத்த நிறுத்த அறிவிப்பு மேற்கு நாடுகளின் ‘-யுத்த- விமானங்கள் பறக்கமுடியாத பிராந்தியம்’ என்ற நடவடிக்கைகளை நோக்கிய நகர்வுகளை எந்த வகையிலும் பாதிக்காது என்று மேற்கு நாடுகள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அந்த நாடுகள் தெரிவித்துள்ள தகவல்களில் கடாபியின் வார்த்தைகளை பார்க்கமுடியாது அவரின் நடவடிக்கைகளைத்தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளன ஆனாலும் ஐநாவின் தீர்மானம் அறிவிக்கப்பட்ட பின்னரும் கடாபி லிபியாவுக்கு வரும் ஆக்கிரமிப்பாளர்கள் நரகத்துக்கு அனுப்பபடுவர் என்றும் ஐநாவின் தீர்மானம் இனவாதம் கொண்டது, முட்டாள் தனமானது என்றும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை துருக்கி தான் இராணுவம் தலையிடுவதை  விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளதுடன் பிரதான சர்வதேச இஸ்லாமிய இயக்கங்களும் மேற்கு நாடுகளின் இராணுவம் தலையிடுவதை தாம் எதிர்பதாகவும் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

المشاركات الشائعة