டாக்டர் யூசுப் அல் கர்ழாவி ஜனவரி 25 ஆம் திகதி புரட்சியின் தோற்றத்தை சிதைக்க மேற்கொள்ளபட்ட ஒரு சதிதான் கிறிஸ்தவ தேவாலையம் தீக்கிரையாக்க பட்டமை என்று தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வகுப்புவாதம், புரட்சிக்கு எதிரான ஒரு திட்டமிட்ட சதி என்றும் எகிப்தில் அதிகாரத்தில் இருந்த NDB கட்சி கலைக்கப்பட்ட நாட்டின் பாதுகாப்பு தரப்பினரால் வேளைக்கு அமர்த்தப்பட்ட காடையர்கள் துணையுடன் இந்த சதிக்கு பின்னால் கட்டிப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கவிழ்க்கப்பட்ட ஊழல் அரசாங்கத்தின் எச்சசொச்சங்கள்தான் தமக்கு தேவையானபோது இந்த மத கலவரங்களை தூண்டி பிரிவினையை உருவாக்க காரணமாக உள்ளது அதற்கான ஆவண ஆதாரங்கள் புரட்சியாளர்களினால் கைப்பற்றபட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் மேலும் அவர் எகிப்தின் புதிய இடைக்கால பிரதமர் அஸ்ஸாம் சாரப் அரசாங்கத்துக்கு மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
எகிப்தில் கடந்த கிழமை கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது இதை தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலையம் ஒன்று தீக் கிரையாக்கப்பட்டது இந்த கலவரத்தை இஸ்லாமிய அமைப்புகள் வன்மையாக கண்டித்தன எகிப்து இராணுவ நிர்வாகம் எரிக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலையத்தை கட்டிகொடுக்க தீர்மானித்துள்ளது
No comments:
Post a Comment