நாட்டின் ஆட்சி நிர்வாகத்தில் அரசக் குடும்பத்தைச் சாராதவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க ஒமான் மன்னர் சுல்தான் காபூஸ் பின் ஸைத் தீர்மானித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக சட்ட நிர்ணய அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மன்னர் நியமிக்கும் உறுப்பினர்கள் அடங்கு கமிட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் விவகாரங்களில் பங்களிப்பு, வேலையில்லாத் திண்டாட்டத்தை கவனத்தில் கொள்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒமானின் சில பகுதிகளில் போராட்டங்கள் நடந்திருந்தன. இதன் தொடர்ச்சியாகத்தான் மன்னர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
அமைச்சரவையை கலைக்கப் போவதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய சிவில் சர்வீஸ் நியமனங்கள் நடத்தப்படும் எனவும் மன்னர் அறிவித்துள்ளார். சட்ட நிர்மாணத்திற்கு இரண்டு கமிட்டிகளிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்ட பொழுதிலும் மன்னருக்கான வீட்டோ அதிகாரம் உண்டுமா என்பதுக் குறித்து தற்பொழுது உறுதிச் செய்யப்படவில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
No comments:
Post a Comment