இலங்கையில் இஸ்லாமிய பொருளாதார மாதிரிகள் சில இலங்கையில் தனியார் வங்கி துறை மற்றும் அரச வங்கி துறை ஆகியவற்றில் பின்பற்ற பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது இந்த நிலையில் அடகு வைத்தல் என்பது முற்றிலும் வட்டியை அடித்தளமாக கொண்டுள்ள பொருளாதார முறை தான் இலங்கை முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த வட்டியை கொண்டுள்ள அடகு முறைக்கு வறுமை காரணமாகவும் இன்னும் பல காரணங்களினாலும் முஸ்லிம்களும் சிக்குண்டுள்ளனர் இதை தவிர்க்கும் முகமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹகீம் வட்டி இல்லாத இஸ்லாமிய அடகு முறையை இலங்கையில் அறிமுகபடுத்த முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
அதற்கான விருப்பத்தை அமைச்சர் ரவுப் ஹகீம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் முன்வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது இது தொடர்பாக lankamuslim.org க்கு கருத்துரைத்துள்ள அமைச்சர் ரவுப் ஹகீமின் நெருங்கிய அதிகாரி இந்த முயற்சிகளில் அமைச்சர் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதகவும் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment