நாட்டின் பல முஸ்லிம் பிரதேசங்களில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் பலர் தாம் தேர்தலில் எந்த வன்முறைக்கும் இடம்கொடுக்காமல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடபோவதாக இஸ்லாமிய அமைப்புகளிடம் வாக்குறுதி வழங்கியுள்ளனர் புத்தளம் நகர சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலான முஸ்லிம் வேட்பாளர்கள் தாம் ஒருபோதும் வன்முறைகளுக்கு இடம் வளங்கபோவதிலை என்று தெரிவித்துள்ளனர்
புத்தளம் ஜமாஅதே இஸ்லாமி கடந்த புதன் கிழமை புத்தள நகர சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள், வாக்காளர்கள் ஆகியோருக்கான இஸ்லாமிய வழிகாட்டல் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து தேர்தல் தொடர்பான இஸ்லாமிய வழிகாட்டல்களை வழங்கியதுடன் தேர்தல் வழிகாட்டல் அடங்கிய நூல் ஒன்றையும் வெளியிட்டமை குறிபிடத்தக்கது விரிவாக
அதேபோன்று ஓட்டமாவடி பிரதேச சபை தேர்தலில் எவரும் தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுவதில்லையென கல்குடா ஜம்இய்யத்துல் உலமா சபை முன்னிலையில் வேட்பாளர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
கண்டி அக்குரணை நகரசபைக்கு போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் வன்முறையற்ற அரசியலுக்கு அக்குரணையில் முன்மாதிரியை ஏற்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளனர் குறிப்பாக முன்னாள் அக்குரணை நகரசபை தலைவர் கடந்த முறையைபோன்று உலமாக்களின் வழிகாட்டலில் எந்த வன்முறையும் அற்ற தேர்தலை அக்குரணையில் நடத்தி காட்டவேண்டும் என்று தெரிவித்துள்ளார்,
அதேபோன்று மாவனல்லை நகர சபை, மாத்தளை நகர சபை ஆகியவற்றுக்கு போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் தாம் வன்முறைகளை வெறுப்பதாகவும் வன்முறை நிகழ்வதற்கு எந்த சந்தர்பத்தையும் வளங்கபோவதிலை என்றும் தெரிவித்துள்ளார் என்று எமது பிரதேச செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் எனினும் நாட்டின் சில முஸ்லிம் பிரதேசங்களில் நேற்று முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது கிழக்கு மாகாணத்தின் அக்கரைபற்று , காத்தான்குடி ஆகிய இடங்களில் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடியில் ஏற்பட்ட முறுகலில் போலீஸ் தலையிட்டுள்ளது அக்ரைபற்றின் இரு முஸ்லிம் ஆளும்தரப்பு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில் போலீஸ் மற்றும் ராணுவம் தலையிட்டு முறுகலை நிலையை தனித்துள்ளது
இந்த முறை பல முஸ்லிம் பிரதேசங்களில் வன்முறையற்ற தேர்தல் என்ற கோசங்கள் மேடைகளில் முழங்கப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் நாடு பூராவும் நூற்றுக்கும் அதிகமான தேர்தல் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment