Search This Blog

Mar 5, 2011

25 ஆண்டுகளின் பின்னர் மட்டகளப்பு உன்னிச்சை கிராமத்தில் முதல் ஜும்மாஹ்



மட்டகளப்பு மாவட்டம் உன்னிச்சை கிராமத்து மக்கள் 25 ஆண்டுகளின் பின்னர் தமது சொந்த மண்ணில் முதல் ஜும்மாஹ் தொழுகையை நேற்று நடத்தியுள்ளதாக எமது கிழக்கு மாகாண lankamuslim.org செய்தியாளர்கள் தெரிவித்தனர் இந்த கிராமத்து முஸ்லிம் மக்கள் 1985 ஆம் ஆண்டு புலி பயங்கரவாதத்தால் அவர்களின் சொந்த மண்ணில் இருந்து விரட்டப்பட்டனர் மட்டகளப்பு மாவட்டத்தில் மிகவும் மோசமான பயங்கரவாதத்தின் பாதிப்புகளை அனுபவித்தவர்களில் இவர்களும் முதன்மையானவர்கள்.
இவர்களின் 25 ஆண்டுகால வாழ்கையில் இது திருப்பு முனையாக அமைந்துள்ளது இவர்களில் 400 குடும்பங்களை மீள் குடியேற்ற தேவையான நடவைக்கைகள் கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது இந்த முயற்சியில் தற்போது ஒரு தொகுதியுனர் மீள் குடியேரியுள்ளதாகவும் விரிவாக அந்த கிராமத்து முஹிதீன் ஜும்மாஹ் மஸ்ஜித் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட பின்னர் நேற்று அங்கு முதல் விசேட ஜும்மாஹ் உரையும் இடம்பெற்றுள்ளது இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உன்னிச்சை கிராமத்து வெளியில் வசிக்கும் அந்த கிராமத்து முஸ்லிம் குடும்பங்களும் சென்று கலந்துகொண்டுள்ளது
எனினும் அந்த கிராமத்தில் பெரும்பாலானவர்கள் அங்கு சென்று மீள் குடியேறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதால் பல குடும்பங்கள் உன்னிச்சை கிராமத்துக்கு வெளியில் வசித்து வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் இவர்கள் தமது சொந்த பிரதேசத்தில் மீள் குடியேற தேவையான நடவடிக்கைகளை அரசியல் வாதிகள் சிலர் வவுணதீவு பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு மேற்கொண்டிருந்ததாக செய்தியாளர்கள் தெரிவித்தனர் 1985ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 திகதி உன்னிச்சை கிராமத்துத்தினுள் புகுந்த புலிகள் அந்த மக்களை துரத்தி துரத்தி வெட்டியும் சுட்டும் தாக்குதல்களை நடத்தியிருந்தனர் உயிரை மட்டும் சுமந்தவர்களாக ஊரை விட்டு  வெளியேறி கடந்த ஜனவரி மாதம் 23 திகதியுடன் 25 ஆண்டுகள் கடந்திருந்தனர் என்பது குறிபிடத்தக்கது.

No comments:

Post a Comment

المشاركات الشائعة