Search This Blog

Mar 2, 2011

முஸ்லிம்களின் முதுகில் குத்திவரும் இந்திய நீதிமன்றங்கள்


M.ரிஸ்னி முஹம்மட்
இந்திய குஜராத் மாநிலத்தின் கோத்ராவில் 2002 ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதியன்று  நிகழந்த ரயில் தீ விபத்தை ஒரு முஸ்லிம் பயங்கரவாதமாக திட்டமிட்டு சித்தரித்து முஸ்லிம்களின் மீது பழிபோட்டு “சபர்மதி எக்ஸ்பிரசை எரிக்க நான் தான் பெட்ரோல் வழங்கினேன் ” என ஒரு முஸ்லிம் வாலிபரை மிரட்டி வாக்குமூலம் கொடுக்க வைத்தது பெட்ரோல் நிலையத்தில் வேலைசெய்யும் ஊழியர் ஒருவருக்கு பணம் கொடுத்து 140 லீட்டர்களை அந்த முஸ்லிம் வாலிபன் வாங்கினான் என்று சாட்சியை போலியான உருவாக்கியது உள்ளிட்ட படுபயங்கர சதித்திட்டங்களை இரு ஆண்டுகளுக்கு முன் தெஹல்கா ஏடு அம்பலப்படுத்தியது.
ஆனாலும் 2002 ஆம் ஆண்டு  சபர்மிதி எக்ஸ்பிரஸ் எரிக்கப்பட்டது 59 பேர் கொல்லப்பட்டனர் என்று தொடரப்பட்ட வழக்கில் 250 வரையான முஸ்லிம்கள் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்றது இதில் நேற்று அந்த வழக்கில் குஜராத் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வெளியிட்டது அதில் 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து குஜராத் சிறப்பு கோர்ட் தீர்ப்பை வெளியிட்டது. இந்த தீர்ப்பை ஏற்கமுடியாது என்று முஸ்லிம் தரப்பும் சட்டத்தரணிகளும் தெரிவித்துள்ளதுடன் மேல்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளனர் விரிவாக
இந்திய குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு திட்டமிட்டு நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை பயங்கரவாதத்துடன் நரேந்தி மோடி நேரடி தொடர்பு இருப்பதாக  ‘தெஹல்கா’ என்ற இந்திய சுதந்திர ஊடகம் அம்பலப்படுதியது எனினும் அவை இந்திய சட்டங்களின் பிரகாரம் நடவடிகளை எடுக்க போதுமானது இல்லை என்ற சாட்டு போக்கு முன்வைக்கப்பட்டு அரச அதிகார வர்க்கத்தினால் முஸ்லிம்கள் மீதான இரட்டை நிலைப்பாடு கடைபிடிக்கப்பட்டது.
குஜராத் இனகலவரம் என்று தெரிவிக்கபட்டாலும் உண்மையில் நரேந்திர மோடி அரசினால் திட்டமிடப்பட்ட அரச பாசிச பயங்கரவாதம் இந்த முஸ்லிம்களின் மீதான வெறியாட்டத்துக்கு 3000 பேர் படுகொலையானதாவும் மற்றுமொரு தகவலின் பிரகாரம் 5000 பேர் படுகொலையானதாவும் தெரியவருகின்றது தெஹல்கா நடத்திய இரகசிய ஊடக புலனாய்வுகளில் கொலைகளை செய்த காவி பயங்கரவாதிகள் தாம் செய்தவற்றை பெருமையுடன் இவர்களை ஊடகவிலாளர்கள் என்று தெரியாமல் கக்கியவைகள் தெஹல்கா வெளியிட்டு உலகின் அதிர்வலை ஒன்றை ஏற்படுத்தியது.
அதில் ‘ முஸ்லிம் பெண்கள் பழங்கள் போல் இருந்தார்கள் அவர்களை நாங்கள் சளைக்காமல் ருசித்தோம், பின்னர் உயிருடன் எரித்தோம்’ என்றும் கிராமம் கிராமமாக சென்று ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை தொடரான வன்புணர்ந்து பின்னர் மார்பகங்களை அறுத்து சித்திரவதை செய்து கொலைசெய்தோம் என்றும் மஸ்ஜிதுகளில் கூட்டம் கூட்டமாக முஸ்லிம்களை குவித்து கொலைசெய்து விட்டு பெட்ரோல் பவுசர்கள் மூலம் அவர்களை மஸ்ஜிதுகளுடன் எதிர்த்தோம் என்றும் தமது வீர சாகசங்களை பெருமையுடன் கூறினர் நரேந்தி மோடியின் காவி பயங்கரவாத வெறியர்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினருக்கு கூட ஜனநாயக இந்தியாவில் எந்த பாதுகாப்பும் இருக்கவில்லை.
உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன்னாள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இஹ்சான் வீட்டுக்குள் தஞ்சமடைந்த முஸ்லிம் சிறுவர், சிறுமியர், பெண்கள் வயோதிபர் என்ற பாகுபாடு இன்றி அந்த பாராளுமன்ற உறுப்பினர் உட்டபட 72 பேரை பயங்கரமான முறையில் ஜனநாயக இந்தியாவில் போலீஸ் படையின் உதவியுடன் காவி பயங்கரவாதிகள் கொன்று குவித்தனர் இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் இஹ்சானின் உறவினர்கள் இந்திய உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தனர் தொடுத்த வழக்கை அடுத்து
உச்சநீதி மன்றம் கலவர வழக்கை – முஸ்லிகள் மீதான அரச பயங்கரவாத வழக்கை- விசாரணைக்கு எடுத்துக்கொண்டு SIT  என்னும் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்தக்குழு விசாரணை நடத்தி 600 பக்க அறிக்கையை  உச்சநீதி மன்றத்தில் மே 2010ல் ஒப்படைத்துள்ளது .
இந்த அறிக்கை நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட மறுநாள் மோடி குற்றமற்றவர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக பாஜகவினர் காவி பயங்கரவாதிகள் பொய்ப்பிரச்சாரம் செய்தனர்.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட 600 பக்க அறிக்கையை தெஹல்கா இணையதளமும் ஹெட் லைன் டுடே தொலைக்காட்சியும் அதன் நகலை வெளியுட்டுள்ளனர்.  நரேந்திர மோடிக்கு கலவரத்தில் பங்கு உண்டு என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பதுடன் 13 ஆதாரங்களையும் SIT வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர் வரும் நான்காம் திகதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மோடியை கைது செய்யகோரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது இந்திய நீதிமன்றங்களும் முஸ்லிம்களின் முதுகில் தொடர்ந்தும் குற்றிவருகின்றது ஆனால் பாவன் இந்திய முஸ்லிம்கள் இன்றும் நீதிமன்றங்களை நாடிநிற்கின்றார்கள்

ஆர்ப்பாட்ட கோசம்
தூக்கிலிடு! தூக்கிலிடு!
நரேந்திர மோடியை தூக்கிலிடு!
மரண வியாபாரி மோடிக்கு
உதவியாக இருந்தவர்கள்
குஜராத் அரசு செயலர்கள்
காவல்துறையின் ஓநாய்கள்
அத்தனை பேரையும் உடனடியாய்
பதவி நீக்கம் செய்து விடு!
சட்டப் படியாய் அவர்கள் மீது
வழக்குப் பதிவு செய்து விடு!
கயவர்கள் சேர்ந்த சொத்தை எல்லாம்
உடனே ஜபதி செய்திடு!
காவி கும்பலின் ரவுடித்தனத்தால்
வெட்கிக் குனியுது மனிதஇனம்!
பசுவதைக்கெதிராய் கோஷம் போட்டு
மனிதனைக் கொல்லும் பாதகனே!
இரக்கமற்ற அரக்கனே! இரக்கமற்ற அரக்கனே!
இரக்கம் என்பது மனிதப் பண்பு
மிருகத்திற்கும் அது உண்டு
நீ மனிதனுமில்லை மிருகமுமில்லை
என்ன இனம் நீ சொல்லடா?
கயவர் குலம் தான் உன் குலமா?
மௌனமென்ன மௌனமென்ன?
ஜெயலலிதா அம்மையே
போயஸ் தோட்டம் அழைத்து வந்து
விருந்து கொடுக்கப் போறாயா?
மௌனமென்ன மௌனமென்ன?
கருனாநிதி முதல்வரே
டெல்லி சென்று மோடியோடு
போஸ்கொடுக்க தெரியுதோ?
எமதருமை ஹிந்து மக்களே! எமதருமை ஹிந்து மக்களே!
காவி என்ற சொல்லுக்கு
களங்கம் சேர்க்க விடவேண்டாம்
சாது என்ற பேரிலே சூது செய்ய விடவேண்டாம்
டிஸ்மிஸ் செய்! டிஸ்மிஸ் செய்!
மத்திய அரசே டிஸ்மிஸ் செய்!
அரசியலமைப்பிற் கெதிராய் நடந்த
மோடி அரசை டிஸ்மிஸ் செய்!
சுப்ரீம் கோர்ட்டே! சுப்ரீம் கோர்ட்டே!
வெட்கமாக இல்லையா?
எட்டு ஆண்டு ஆன பின்னும்
விசாரணை இன்னும் முடியலையா?
ரகசியம் என்ன ரகசியம் என்ன?
சுப்ரீம் கோர்ட்டே ரகசியம் என்ன?
சிறப்பு புலனாய்வு அறிக்கையை
மறைக்கும் அளவிற்கு ரகசியம் என்ன?
நீதியும் உண்மையும் ரகசியத்தோடு
ஒன்று சேர முடியாதே!
முஸ்லீம்கள் மீது எத்தனையோ
பொய்வழக்கு போட்டீர்கள்
அத்தனை வழக்கிலும் உடனடியாய்
கைது செய்து அடைத்தீர்கள்!
மோடி என்றால் தனிநீதி
முஸ்லீம்களுக்கு எது நீதி!
அத்துல் பிஹாரி வாஜ்பாயி
அத்வானி, மோடி, கட்காரி
ஆர் எஸ் எஸ் அயோக்கியர்கள் அனைவரும்
இரத்தம் குடிக்கும் கட்டேரி!
வேதம் ஓதும் சாத்தான்கள்
சுப்ரமனிய சாமியே, இரட்டை வேட சோவே
எரிக்கபட்ட உயிர்களுக்கும்
துடிதுடித்த உயிர்களுக்கும்
பரிதவித்த உறவினருக்கும்
பதில் சொல் பதில் சொல்
பயங்கரவாத அமெரிக்காவே
உன்னை பயங்கரவாதி என்றதுவே
வெட்கமாக இல்லையா வெட்கமாக இல்லையா
திருப்பி அனுப்பட்டாயே
அனுமதி மறுக்கப்பட்டாயே
செருப்படிகள் பட்டாயே
வெட்கமாக இல்லையா வெட்கமாக இல்லையா?

No comments:

Post a Comment

المشاركات الشائعة