இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் புத்தளம் கிளை இன்று புத்தள நகர சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள், வாக்காளர்கள் ஆகியோருக்கான இஸ்லாமிய வழிகாட்டல் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து தற்போது புத்தளம் ஹுதா மஸ்ஜித் மைதானத்தில் நடத்திகொண்டிருகின்றது என்று எமது lankamuslim.org புத்தளம் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசியல் வாதிகள் , மற்றும் வாக்காளர்களுக்கான இஸ்லாமிய வழிகாட்டல் பொதுக்கூட்டம் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் புத்தளம் கிளையின் புதிய ஒரு முயற்சியாகும் என்றும் இதற்கு முன்னர் தேர்தல் காலங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் இவ்வாறான வழிகாட்டல் சந்திப்புகளை செய்து வந்துள்ள ஜமாஅதே இஸ்லாமி இந்த முறை முதல் தடவையாக பொதுக்கூட்டம் என்று களம் இறங்கியுள்ளது என்றும் இந்த பொதுக்கூட்டத்தில் இஸ்லாமிய நோக்கியில் அரசியல் வழிகாட்டல்கள் அடங்கிய கைநூல் பிரசுரம் ஒன்றும் விநியோகிக்கப்பட்டுள்ளது, அரசியலை இபாதத்தாக கொள்வோம் என்றும் இஸ்லாம் இல்லாத அரசியல் ஜாஹிலியத் என்றும் விரிவாக
புத்தள நகரசபையை இலங்கைக்கு முன்மாதியாக நகரமாக மாற்றுவோம் அதற்கான தூய இஸ்லாமிய எண்ணத்துடன் தேர்தலை சந்திக்கவேண்டும் என்றும் துருக்கி வடிவிலான இஸ்லாமிய அரசியலை முன்மாதிரியாக கொள்வோம் என்றும் உருவாக போகும் முஸ்லிம் நகர சபை முழு நாட்டுக்கும் முன்மாதிரி மிக்க நகரசபையாக மாறவேண்டும் என்றும் வேட்பாளர்கள் தேசிய கட்சிகளை திருப்தி படுத்தும் நோக்கில் செயல்படக் கூடாது என்றும் அங்கு பேசிய பேச்சாளர்கள் உரையாற்றி உள்ளனர் ஆரோக்கியம் ,சுத்தம் , அமைதி ஆகியவற்றை கொண்ட நகர் என்ற கருப்பொருளுடன் உரையாற்றி வருகின்றனர் விவரண ஆவணம் ஒன்றும் அந்த பொதுகூட்டத்தில் திரையிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment