எஸ்.எம்.எம்.பஷீர்
“மூலோபாயத்தின் மையத்திட்டம் இஸ்ரேல பிராந்திய மேலாதிக்க சக்தியாக நிலைபெற மத்திய கிழக்கின் வரைபடத்தினை மீள் வரைவதும் அராபிய தேசங்களை உடைவுறச் செய்வதுமாகும் “ ( உலக சியோனிஸ அமைப்பின் வெளியீடான கேவிநிம் (Kivunim ) எனும் இதழில் 1982 ல் ஓடேட் யிநோன் (Oded Yinon) எனும் யூதரால் சியோனிஷ்டுகளின் மத்திய கிழக்குக்கான திட்டம் என்ற தலைப்பில் விவரிக்கப்பட்ட கொள்கை திட்டத்திலிருந்து ).
பான் ஆம் (Pan –Am Flight 103) விமானம் ஸ்காட்லாந்தின் லோச்கேர்பீ மீது குண்டு வெடிப்பில் வீழ்ந்தாலும் (21/12/1988) லிபியாமீது புலனாய்வு தகவல்கள் குற்றம் சாட்டிய போது கடாபி அதனை மறுத்ததுடன் அதில் சந்தக நபர்கள் இருவரையும் விசாரணைக்காக கையளிக்கவும் மறுத்தார். எனினும். அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் ஐரோப்பிய கூட்டு நாடுகளுடன் பல்வேறு பொருளாதார அழுத்தங்களை லிபியா மீது பிரயோகித்தும் கடாபி நீண்ட காலம் தனது மறுப்பிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் உறுதியாகவிருந்தார்.
ஆனால் உலக வரலாற்றின் அரசியல் ஆதிக்க போக்கினை ஆயுத போராட்டங்களை மனித உரிமைகள் பற்றிய பரிமாணங்கள் என்று பல்வேறு சர்வதேச அரசியல் தளங்களிலும் செப்டம்பர் 2001 அமெரிக்கா மீதான தாக்குதல்கள் பின்னர் ஐரோப்பாவில் தொடர்ந்த அடுத்தடுத்த தாக்குதல்கள் ஏற்படுத்தின. லிபியா அமெரிக்காவும் அதன் நேச அணிகளும் சதாமிற்க் கெதிரான இராக்கின் மீது படையெடுத்து சதாமை பழி தீர்க்க முனைந்ததை கண்டு கடாபி கலக்கமடைந்தார். அதுவரை ஏகாதிபத்திய எதிர்ப்பும் , அதற்காக பல பொருளாதார இழப்புக்களையும் சந்தித்த கடாபி மேற்குலகின் ஏகாதிபத்தியம் மெது மெதுவாக தன்னை நோக்கி நகரும் என்பதை உணர்ந்து கொண்டு தானே முன்வந்து அணு குண்டு தயாரிக்கும் தமது முயற்சிகளை அழித்தொழிக்கவும் , லோச்கேர்பீ (Lockerbie) குற்றவாளிகளை விசாரணைக்கு ஒப்படைக்க முன்வந்தார்.
மறுபுறத்தில் அவாறான நெருக்கடியையும் அச்சத்தையும் கடாபி மீது ஏற்படுத்தி தமது ஆயுத வியாபாரங்களையும் என்னை வள அனுகூலங்களையும் சுரண்ட மேற்குலகும் திட்டமிட்டிருந்தது. அதற்கான சூழல் கனிந்த வேளை ஆயுத விமான மற்றும் பல யுத்த தளபாடங்களை விற்பதில் பிரித்தானியா இத்தாலி பிரான்ஸ் என்பன போட்டி போட்டுக்கொண்டு செயற்பட்டன. மீண்டும் கடாபியிடமுள்ள தாங்கள் விற்ற யுத்த விமானங்கள் தங்களுக் கெதிராக பாவிக்கப்படும என்ற கிலியில் உடனடியாக பரப்பற்ற மண்டலம் குறித்த ஐக்கிய நாடுகளின் தீர்மானம் மேற்கொண்ட கையேடு முதல் தாக்குதல்களை பிரான்சே ( அவ்வாறான ஆயுதங்களை விற்ற) தொடக்கி வைத்துள்ளது. கடாபிக் கெதிரான மக்கள் எதிர்ப்பு அணிகள் திரண்ட போது அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்த பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி ஒபாமாவின் லிபியாவின் மீதான நடவடிக்கைகள் எடுப்பதில் காட்டும் தாமதம் குறித்து அதிருப்தி கொண்டிருந்தார் என்பதுடன் கிளாரி கிளிங்கடனும் பரஸ்பரம் அவருடன் ஒபாமாமீதான அதிருப்தியினை பகிர்ந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. லெபனானின் ஹிஸ்புல்லா தலைவர் அரபு நாடுகள் இன்னேருக்கடியினை முறையாக கையாண்டிருக்க வேண்டும் என்றும் மீண்டும் பிரதேசங்களை மக்களை பிரித்து துண்டாடி தமது ஆதிக்க பலத்தை வலுப்படுத்த நவீன காலனித்துவம் முயற்சிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். பொருளாதார பலமுள்ள அரபுலகம் தம்மை தாமே அழித்துக் கொள்ளும் கதையின் இராக்கிற்கு அடுத்ததாக லிபியா தன்னையே அழித்துக்கொள்ள வழி சமைத்துள்ளது.
கடாபியும் அஸ்ரபும்
ஆனால் இந்த குண்டு வெடிப்பில் லிபியாமீதான வியாபார தடையை அமெரிக்கா முன்னெடுத்த போது லிபிய அரசாங்கத்தின் இலங்கை உள்நாட்டு தூதரகம் மூலம் அஸ்ரப் அதற்கெதிரான ஆர்ப்பாட்டத்தை செய்ய அணுகப்பட்டார். ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அடிப்படியில் நேரடியாக அமெரிகாவிற் கெதிரான ஆர்ப்பாட்டத்தை செய்ய விரும்பவில்லை. ஆனாலும் அதற்கு செலவாகும் நிதியினை லிபியாவிடமிருந்து பெற்று உள்நாட்டு பத்திரிகைகளில் தமிழ் உட்பட லிபியாவின் அப்பாவித்தனத்தையும் அமெரிக்க எதிர்ப்பையும் காட்டும் வகையில் முழுப்பக்க அனுபந்தங்களை வெளியிட்டு முஸ்லிம் காங்கிரஸ் பின் புலத்தில் நின்று செயற்பட்டது. முஸ்லிம் மக்களை அவர்களின் உணர்வுகளை ஒருங்கிணைக்கும் உலக போராட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள் ஆதரவு அல்லது எதிர்ப்பு பேரணிகள் என்று பொதுவாகவே அறியப்பட்ட வெள்ளிககிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் மருதானை சாஹிரா கல்லூரி ஜும்மா பள்ளிவாசலில் அமெரிக்க எதிர்ப்பு, “லிபிய அப்பாவித்தனம்” பற்றிய சுலோகங்களுடன் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. அதனை நடத்த சிலர் அறிவுறுத்தப்பட்டனர். வழக்கம்போல் லிபியா மீது ஆதரவான முஸ்லிம் மக்கள் , பொதுவாகவே காலங்காலமாக அமரிக்காவின் அடாவடித்தனங்களால் , அதன் இஸ்ரேலிய சார்பு நிலைப்பாட்டால் அமெரிக்க மீதான திரட்சிபெற்ற எதிர்ப்புணர்வையும் கொண்ட முஸ்லிம் மக்கள் மிக இலகுவில் அன்றைய அமெரிக்க எதிர்ப்பு லிபிய ஆதரவு பேரணியில் திரண்டனர். மக்களுக்கு இந்த ஆர்ப்பாட்டத்தின் அரசியல் பின்னணி தெரியவில்லை ,ஆக மொத்தத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிகரமாக லிபிய அரசு எதிர்பார்த்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி காட்டி லிபியாவின் பரிசோதனையில் வெற்றி பெற்றனர். ஆனால் மக்கள் நடந்து முடிந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைப்பாறவில்லை.
அமெரிக்காவிற்கான இலக்கை துதுவர் அஸ்ரபை தோதொலைபேசியில் அழைத்தார் அழைத்து கொழும்பு மருதானை சாஹிரா கல்லூரியில் நடைபெற்ற லிபிய ஆதரவு அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு பின்னணியில் நீங்கள் இருப்பதாக எங்களுக்கு தெரியும் என்ற போதுதான் அஸ்ரப் திகைத்துப்போனார். நேரடியாக கட்சியினரோ அல்லது கட்சியின் அங்கத்தவர்கள் என்று அறியப்பட்டவர்களோ அந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ளாத போதும் அமெரிக்க தூதரகம் தனது சொந்த புலனாய்வு மூலம் தெரிந்து கொண்டதை நேரிடையாக கூறியபோதுதான் அஸ்ரப் தாம் இதுவரை செய்துவந்த உள்நாட்டு அரசியல் இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் இந்திய தூதுவராலயத்துடன் மட்டுமே சம்பந்தப்பட்டிருந்த அரசியல் பூகோள எல்லைகளை தாண்டும் போது ஏற்படுத்தும் பரிமாணங்களை அவருக்கு உணர்த்தியிருக்கும்.
அதன் பின்னர் அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆர்ப்பாட்டங்கள் எதிலும் முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபடுவதிலிருந்து தன்னை தவிர்த்து கொண்டது. மேலும் அமெரிக்காவின் மேலும் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தின் போது ஹக்கீம் இலங்கையில் அமெரிக்க தூதுவரை சந்தித்த பின்னர் முஸ்லிம்களின் பிரச்சினைகளில் (பாதுகாப்பு உட்பட ) அக்கறை கொண்டுள்ளது என்றும் மிகுந்த நம்பிக்கை வேறு வெளியிட்டார். பின்னர் அமெரிக்கா என்ன செய்தது எவ்வாறு அக்கறை கொண்டிருந்தது என்பதெல்லாம் சகலரும் அறிந்த செய்திதானே. !!
நேஷன் ஒப் இஸ்லாம் (Nation of Islam) (கறுப்பின தேசிய வாதத்தை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய அமைப்பு ) என்ற அமெரிக்க கறுப்பின மக்களின் இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர் லூயிஸ் பாராகான் உலக இஸ்லாமிய மக்கள் தலைமைத்துவம் என்ற அமைப்புடன் இணைந்து அமெரிக்காவின் சிக்காகோ நகரில் தொன்னூற்றி ஏழு ஜூலை மாதம் உலக இஸ்லாமிய மக்கள் தலைமைத்துவ மாநாடு (World Islamic People’s Leadership )நடத்தினார். இதற்கான நிதி உதவி நிச்சயமாக கடாபியிடமிருந்து நேஷன் ஒப் இஸ்லாமுக்கு அனுப்ப பட்டிருக்கலாம். லூயிஸ் பாராகான் வழிநடத்தும் இஸ்லாம் என்பது சகல ஷியா சுன்னி முஸ்லிம் மத பிரிவினரால் மட்டுமல்ல பொதுவாக இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானதாக பிரகடனப்படுத்தப் பட்டதுடன் அதிலிருந்தே மல்கம் எக்ஸ் ( எல் சாபாஸ்) மற்றும் உலக குத்து சண்டை வீரர் முஹமது அலி கிளே ஆகியோர் மட்டுமல்ல அதன் இஸ்தாபகரான எலிசா முஹம்தின் (Elijah Muhammad) புத்திரர் , வாரித் டீன் முஹமது தனது தந்தைக்கு பின் தலைவராக இருந்து தனது தந்தையின் கொள்கை பிழை என்றும் அது இஸ்லாமிய அடிப்படை நபிக்கைகளுக்கு எதிரானதென்றும் கூறி தனது தலைமை பதவியையும் தூக்கி எறிந்துவிட்டு , நேஷன் ஒப் இஸ்லாம் அமைப்பையும் கலைத்து விட்டு வெளியேறி குரான் சுன்னா அடிப்படியிலான பிரதான இஸ்லாம் மதத்தை பின்பற்றினார்.
மல்கம் எக்ஸ்சின் (Malcolm X) சதிக்கொலையிலும் லூயிஸ் பாராகாணு சம்பந்தமுண்டு என்ற குற்றச்சாட்டு இன்றுவரை நிலவி வருகிறது. ஏன் இங்கு இதை சுட்டிக்காட்ட வேண்டி உள்ளதெனில் , அப்படியான முஸ்லிம் உலகு நிராகரித்த , எதிராக கண்ட ஒரு அமைப்பினை இஸ்லாமிய உலக தலைமைத்துவம் காணும் தனது கனவுடன் செயற்பட்ட கடாபியின் வேண்டுதலில்தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் ரவுப் ஹக்கீம் சிக்காகோவில் நடைபெற்ற லூயிஸ் பாராகனின் மாநாட்டில் (1997) கலந்து கொண்டார். எவ்வாறு இஸ்லாத்திற்கும் சோசலிசத்திற்கும் சம்பந்தமில்லை என்று வாதிட்ட அஸ்ரப் கடாபியின் சொசலிஷத்துடன் சமரசம் கண்டாரோ அவ்வாறே லூயிஸ் பாராகானின் மாநாட்டில் கலந்து கொள்ளவும் தனது கட்சியின் சார்பில் ரவுப் ஹக்கீமை அனுப்பியிருந்தார். லூயிஸ் பாராகான் ( Luis Farrakhan ) இந்த மாநாட்டுக்கு முன்னர் என்பதாம் (1980) ஆண்டு லிபியாவுக்கு சென்று கடாபியை சந்தித்திருந்தார்.. இப்போது இன்றைய கடாபிக் கெதிரான சர்வதேச சூழலிலும் பகிரங்கமாக கடாபிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சிலரில் லூயிஸ் பாராகாணும் ஒருவர்.
லிபிய அனுசரணையுடன் உலக முஸ்லிம் மக்களின் செல்வாக்குமிகு தலைமைத்துவத்துக்கான மாநாட்டினை கொழும்பில் உள்ள பண்டாரநாயக சர்வதேச கலாச்சார ஞாபகார்த்த மண்டபத்தில் கோலாகலமாக ஆகஸ்ட் மாதம் 1997 நடத்த திட்டமிடப்பட்டதுடன் அந் நிகழ்வில் கடாபி கலந்து கொள்வதுடன் அஸ்ரபும் கலந்து கொண்டு தத்தம் செல்வாக்கு மிகு தலைவர் பட்டங்களை இலங்கையில் பிரபலப்படுத்துவதுடன் அதன் மூலம் அரசியல் ரீதியில் அந்த காலகட்டத்தில் செல்வாக்கு சரிந்திருந்த அஷ்ரப் தன்னை செல்வாக்கு மிகு ஆசிய முஸ்லிம் தலைவராக, இலங்கையின் முக்கிய அமைச்சராக விருக்கும் வேளையிலே பரபரப்பாக்கி பலன் பெற எண்ணிய வேளையில் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் மீண்டும் எழுபதுக்கு பின்னர் கடாபி மீண்டும் நெருக்கமாக அறியப்படுவதற்கும் உதவுமென கருதப்பட்டது . இம்மாநாடு குறித்தும் அன்று ஆட்சியிலிருந்த சந்திரிகா அரசில் முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்களின் பரஸ்பர செல்வாக்கு போட்டாபோட்டி பற்றியும் இலங்கையின் பிரபல முஸ்லிம் எழுத்தாளர் “உமர் கய்யாம்” ( எழுத்தாளரின் புனைப்பெயர்) கூட எழுதியிருந்தார்.
எது எப்படி இருப்பினும் திட்டமிட்டவாறு அம்மாநாடு நடைபெறவில்லை. வழக்கமாக (நான்கு வருடத்துக்கு ஒருதடவை ) லிபியாவில் நடைபெறும இஸ்லாமிய அழைப்பு சங்கத்தின் நிகழ்வுகளுக்கு பாமிஸ் நிறுவன உறுப்பினர்கள் சென்று வந்தனர். பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரதிநிகளும் அழைக்கப்பட்டனர். கட்சியின் உயர்பீட அங்கத்தவர்கள் அனைவரும் செல்லும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறு சென்றவர்கள் எதோ ஒரு விதத்தில் ஒரு சவுகரியமான கைசெலவுக்கு (Pocket money) காசுடன் செல்லும் ஒரு உல்லாச பிரயானமாகவே அது பலருக்கு அமைந்தது. இது மேலும் பலருக்கு முஸ்லிம் காங்கிரசுக்கு அப்பாலும் விஸ்தரிக்கப்பட்டது.
லிபிய கடாபி தொன்னூற்று ஏழில (1997) இலங்கை வருவது ஏன் நடக்கவில்லை என்ற பின்னணியை பார்க்க வேண்டியுமுள்ளது. இலங்கையின் சர்வதேச அரசியல் நிலைப்பாடுகள் பற்றிய பின்னணியும் ஆழமாக பார்க்கப்பட வேண்டும். இது பற்றி மிக சுருக்கமாக சொல்வதானால் சிங்கள அரசியல் ஆய்வாளர் -பத்திரிக்கையாளர் –ஒருவரின் கருத்தினை மட்டும் முன்வைப்பதே போதுமானதாகும். “முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எமது அயலவர்களான பாகிஸ்தானிலிருந்து, இரான், லிபியா வரை ஏற்றுக்கொள்ளக் கூடியவராகவே இருக்கிறார். இப்போது புரட்சிக்கு பின்னரான இரானின் தீவிரப்போக்கு ; ஐக்கிய அமெரிக்கா தலைமைதாங்கும் மேற்குலக கூட்டமைப்புக்கள் வெறுக்கின்ற மனிதரான கடாபியின் தீவிரபோக்குள்ள லிபியா போலவே கொள்ளப்படலாம். ஆனால் நாங்கள் ( இலங்கை அரசு) மற்றயவர்களின் எதிரிகளை ஸ்ரீ லங்கா அறிவு பூர்வமற்று கையாளக் கூடாது . அது ஒரு தகுந்த ராஜரீய நடவடிக்கையாகவும் இருக்காது என்பதுடன் அது தேசிய பாதுகாப்பு குறித்த ஒரு வெளிப்படையான கேள்வியுமாகும்”
(“SLMC leader who is acceptable to our neighbour from Pakistan, Iran and Libya . Now Iran , after the Revolution , may be regarded as radical like Gadafi’s Libya, bête-noire of the US led Western alliance .But we have to be careful that Sri Lanka does not unwittingly take on other people’s enemies . It is no longer a matter of proper diplomacy .It is plainly a question of national security” )
அமெரிக்காவின் அடாவடித்தனங்களுக்கு அதன் பயங்கரவாதத்திற்கு அடங்காத கியுபா தலைவர் பிடல் காஸ்ட்ரோ எமது தலைமுறையில் அமெரிக்கா உட்பட சகல வல்லாதிக்கங்களுக்கும் மக்கள் ஆதரவுடன் சவால் விட்டவர், அமெரிக்காவால் அதன் சகாக்களால் செய்யப்பட்ட அனைத்து சவால்களையும் முறியடித்தவர்.
அரபுலகில் ஆப்கானிஸ்தானம் இராக் மீதான தாக்குதல்களுக்கு மேற்குலகுக்கு உதவிய ஓமான் சவூதி அரேபியா , துருக்கி குவைத் ஐக்கிய அரபு இராச்சியங்கள் போன்ற நாடுகளே மீண்டும் லிபியாவுக் கெதிராக கொடுக்கு கண்டிக் கொண்டு நிற்கிறார்கள் . ஆக மொத்தத்தில் செல்வாக்கு மிகு மக்கள் தலைவர்கள் யார் ஏகாதிபத்தியத்தின் கொடூர முகங்களுக்கு சவால்விடக்கூடிய அரபுத் தலைவர்கள் யார் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்போம் !!
No comments:
Post a Comment