எகிப்தை தற்போது நிர்வகித்து வரும் இராணுவ நிர்வாகம் இந்த மாதம் மார்ச் 19 ஆம் திகதி உத்தேச அரசியல் யாப்பு மீதான அபிப்பிராயவாக்கெடுப்பு நடத்த தீர்மாணிதுள்ளதாக எகிப்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரிதொரு தகவலின் படி இராணுவ நிர்வாகம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மக்கள்அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றையும் ஜூன் மாதம் பாராளுமன்ற தேர்தலையும் ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதி தேர்தலையும் நடத்த தீர்மாணிதுள்ளதாக அறிவித்துள்ளது என்று தெரிவிக்கின்றது விரிவாக
அதேவேளை முபாரக் அரசினால் சிறைவைக்கப்படிருந்த இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் துணை தலைவர் பொறியலாளர் ஹைராத் அல் ஷதார் சில தினங்களுக்கு முன்னர் இராணுவ நிர்வாகத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் இவர் எகிப்தில் ஏற்பட்டு வரும் மாற்றம் தொடர்பில் இராணுவத்தை பாராட்டியுள்ளார். புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் ஷராப் இன்று 4.3.2011- வெள்ளிக்கிழமை விடுதலை சதுக்கத்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் தலைவர் ஒருவருடன் வந்து உரையாற்றியுள்ளார்
No comments:
Post a Comment