ஜப்பானில் 8.9 ரிச்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பம் சில தினங்களுக்கு முன்னர் நியூஸிலாந் கிறிஸ்ட்சேர்ச் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தை விடவும் 8 ஆயிரம் மடங்கு பெரியது என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன ஜப்பானில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தாலும் அதன் காரணமாக ஏற்பட்ட பாரிய சுனாமியாலும் காணாமல் போன மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை 1200 என்று ஜப்பான் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது வரை 398 உடல்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளது 805 பேர் காணாமல் போயுள்ளனர் இவர்களில் சுமார் 80 பேரை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டடுள்ளது. ஐந்து அணு ஆலைகள் மூடப்பட்டுள்ளது ஒரு மின்சார உற்பத்தி அணு ஆலையில் ரேடியோ கதிர்கள் அதிகமாக வெளிவருவது பதிவாகியுள்ளது விரிவாக
இந்த சுனாமியால் கரையோர கிராமங்கள் பல முற்றாக அழிந்துள்ளதாகவும் குறைந்தது பெரிய நகர் ஒன்று பாரிய சேதத்துக்கு உட்படுள்ளதகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 6 தொடக்கம் 10 மீற்றர் உயரமான சுனாமி ஜப்பானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியைத் தாக்கியதில் பல ஆயிரம் வீடுகள், வாகனங்கள் என்பன அழிவடைந்து கடலுக்கு இழுத்து செல்லப்பட்டுள்ளது ஜப்பான் பூகம்ப பதிவுகளில் இதுதான் மிகவும் பாரியதாக பதிவாகியுள்ளது.
ஜப்பான் பூகம்பங்களுக்கு ஈடுகொடுக்கூடிய கட்டட மாதிரிகளை கொண்ட நாடு என்பது குறிபிடத்தக்கது இலங்கையை சேர்ந்த அதிகமானவர்கள் ஜப்பானில் தொழில் புரிந்து வருகின்றமை குறிபிடத்தக்கது இது தொடர்பான புதிய Video களை இங்கு பார்க்கலாம்.
அதேவேளை ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இலங்கையிலும் உணரப்பட்டதாக புவியியல் மற்றும் சுரங்க ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது என்று செய்திகள் தெரிவிகின்றனர் அனுராதபுரம் மாவட்டம், பல்லேகல நிலையத்தில் இந்த அதிர்வுகள் பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது
அதிர்ச்சி தரும் Video :
No comments:
Post a Comment